ilakkiyainfo

ilakkiyainfo

கள்­ளக்­கா­தலி வேறொரு நப­ரு­டன் சென்­றதால் கள்­ளக்­கா­த­லியின் நண்பி கொலை

கள்­ளக்­கா­தலி வேறொரு நப­ரு­டன் சென்­றதால் கள்­ளக்­கா­த­லியின் நண்பி கொலை
January 04
18:20 2017

கள்ளக்காதலி தன்னை ஏமாற்றிவிட்டு வேறொருவருடன் சென்றதால் அவரது தோழியை இளைஞர் ஒருவர் வெட்டிக் கொலை செய்த சம்பவம் தமி­ழ­கத்தில் இடம்­பெற்­றுள்­ளது.

சென்னை கொருக்குப் பேட்டையைச் சேர்ந்தவர் ராணி (47).( பெயர் மாற்­றப்­பட்­டுள்­ள­து) இவரது கணவர் சேகர். சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார்.

ராணி, தனது தாய் மேன­காவுடன் (பெயர் மாற்­றப்­பட்­டுள்­ள­து) வசித்து வந்தார். இருவரும் அதே பகுதியில் பூ வியாபாரம் செய்து வந்தனர். மேலும் ராணி சிலருக்­கு வட்டிக்கு பணம் கொடுத்துள்ளார்.

இந்நிலையில், மேன­­கா பூ வியாபாரம் செய்துகொண்டிருந்தார். அப் போது வீட்டிலிருந்த ராணி திடீரென இரத்தக் காயங்களுடன் அலறி யபடி வெளியே ஓடிச்­சென்­­றுள்­ளார்.

இதைப் பார்த்து அக்கம் பக்கத்தினர் அதி­ர்ச்­சி­ய­டைந்து வைத்­தி­ய­சா­லைக்கு கொண்டு சென்­­றனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராணி இறந்தார்.

இதைத் தொடர்ந்து, ரா­ணியின் உறவினர்கள் பொலிஸ் நிலை­யத்தை முற்­று­கை­யிட்டு ராணியை கொலை செய்­த­வர்­களை உட­­ன­டி­யாக கைது செய்­யு­மாறு கூறி­யுள்­ளனர்.

இத­னை­ய­டுத்து பொலிஸார் கொலை நடந்த இடத்துக்கு சென்று பார்­வை­யிட்டனர். இதன்­போது ராணியின் வீட்டுக்கு வெளியே கிடந்த செல்போனை கைப்பற்றினர்.

விசாரணையில், சி­வ­நேசன் (பெயர் மாற்­றப்­பட்­டுள்­ள­து) என்பவருக்கு சொந்தமான செல்போன் என்பது தெரிய வந்தது.

இதனையடுத்து, பொலி­ஸாரின் விசாரணையில் தெரி­­ய­வந்­துள்­ள­தாவ­து, கிடைத்த ராஜபாளையத்தை சேர்ந்தவர் ­சி­வ­நே­­சன் (32). தங்கி அப் பகுதியில் உள்ள இரும்பு கடையில் வேலை பார்த்து வருகிறார்.

இவருக்கும் புதுவண்ணாரப் பேட்டையை சேர்ந்த செல்­வி (பெயர் மாற்­றப்­பட்­டுள்­ள­து) என்ற பெண்ணுக்கும் கடந்த ஒரு வருடமாக கள்ளத் தொடர்பு இருந்துவந்தது.

செல்­வியும் ராணி­யும் நெருங்கிய தோழிகளாக இருந்துள்ளனர். தான் சம்பாதித்த பணத்தை எல்லாம் செல்­வி­யிடம் சி­வ­நே­­சன் கொடுத் துள்ளார்.

இந்நிலையில், சி­வ­நே­­சனை விட்டுவிட்டு வேறு ஒருவருடன் செல்­வி நெருங்கிப் பழகியுள்ளார். இந்­நி­லையில் குறித்த நப­ருடன் செல்வி தலைமறைவாகியுள்­ளார்.

இதனால் செல்­வி மீது கணேசன் கடும் கோபத்தில் இருந்துள்ளார். இது குறித்து ராணி­யை அடிக்கடி சந்தித்து சி­வ­நே­­சன் முறையிட்டுள்ளார். இந்நி­லை­யி­லே­யே ராணி­யை சி­வ­நே­­சன் பின் தொடர்ந்து சென் றுள்ளார்.

அங்கு செல்­வி குறித்­து பேசியுள்ளார். அப்போது ராணி­க்கும் சி­வ­நே­­சனுக்­கு­மிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. செல்வி வேறொரு நப­ருடன் சென்ற தகவல் எதையும் ராணி சொல்ல மறுத்துள்ளார்.

எனவே, கடும் ஆத்திரமடைந்த சிவ­நே­­சன் தன்னிடம் இருந்த கத்தியால் ராணியை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் ராணி படுகாயமடைந்துள்ளார்.

இரத்த வெள்ளத்தில் அலறியடித்து வெளியே ஓடி வந்த ராணி­யை அக்கம்பக்கத்தினர் மீட்டு வைத்­தி­ய­சா­­லைக்கு அனுப்பி வைத்­துள்­ளனர்.

அங்கு அவர் பரிதாபமாக உயிரிழந்தமை தெரியவந்துள்ளது. இதை யடுத்து சி­வ­நே­­சனை கைது செய்து பொலி­ஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுதொடர்பாக, தலைமறைவாகியுள்ள அவரது கள்ளக்காதலி செல்­வி­யை­யும் தேடி வருகின்றனர். இக் கொலை சம்பவத்தால் அப் பகுதி யில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

May 2018
M T W T F S S
« Apr    
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

Latest Comments

North korea not Americas slave Toilet India, any ways what happend in syria ? are [...]

பின் லாடன் உயிருடன் உள்ளார், இதை சொல்வது நான் இல்லை , புலன் பெயர் முடடாள் புலிகளின் [...]

உலகம் சமாதானமாக இருக்க வேண்டியது அவசியம் , ஆனால் கபடத்தனமான அமெரிக்கா [...]

இது கக்கூசு தமிழ் நாட்டில் புலி பினாமிகளால் தயாரிக்க பட்ட 18.05.2009 என்ற பிரச்சார படத்தில் [...]

நெடுமாறனுக்கு பணம் தேவைப்படுகிறது. யாரையோ குஷிப்படுத்துவதற்காகவும் தனது பணத் தேவையை பூர்த்தி செய்வதற்காகவும் விடப்படும் செய்தி. இவரிடம் [...]

இலங்கை பத்திரிகைகள்

English News