ilakkiyainfo

ilakkiyainfo

கழிப்பிடத்துக்குள கூட்டிச்சென்று 17 வயதான பிக்குவை துஷ்பிரயோகம் செய்தவர் விளக்கமறியலில்

கழிப்பிடத்துக்குள  கூட்டிச்சென்று 17 வயதான பிக்குவை துஷ்பிரயோகம் செய்தவர் விளக்கமறியலில்
January 10
21:49 2018

அனுராதபுரம் பஸ்தரிப்பிடத்தில் இருந்த 17 வயதான பிக்கு ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் சந்தேகநபர் ஒருவர் எதிர்வரும் 16ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அனுராதபுரம் பொலிஸ் தலைமையகத்தின் சிறுவர் மற்றும் மகளிர் விவகார பிரிவினரால் கைதுசெய்யப்பட்ட இவர் அனுராதபுரம் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் பிக்குவின் வைத்திய அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு சிறுவர் மற்றும் மகளிர் விவகார பிரிவினருக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை அனுராதபுரம் – கும்பிச்சன்குளம் பகுதியைச் சேர்ந்த 52 வயதான ஒருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

மேலும் 17 வயதான குறித்த பிக்கு குருநாகலில் கல்வி பயின்று வருவதாகவும்,  கடந்த 5ம் திகதி விடுமுறைக்காக தனது வீட்டுக்கு செல்ல அனுராதபுரம் நோக்கி அவர் பயணித்துள்ளதாகவும் நீதிமன்றத்தில் தகவலளித்த பொலிஸார் கூறியுள்ளனர்.

அத்துடன் அனுராதபுரம் நகரில் இருந்து தனது வீட்டுக்கு செல்வதற்காக இரவு 08.00 மணியளவில் பஸ்சுக்காக அவர் காத்திருந்துள்ளார்.

இந்தநிலையில் பொதுக் கழிப்பிடம் எங்குள்ளது என அவர் சந்தேகநபரிடம் வினவிய நிலையில் அவர் பிக்குவை புதிதாக அமைக்கப்பட்டு வரும் (இன்றும் திறக்கப்படாத) பஸ்தரிப்பிடம் நோக்கி அழைத்துச் சென்றுள்ளார்.

அங்கு யாரும் இல்லாத இடத்தில் வைத்து பிக்குவை சந்தேகநபர் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இதேவேளை இந்த விடயம் தொடர்பான விசாரணைகள் இன்னும் முற்றுப் பெறாததால் சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடக் கோரி பொலிஸார் நீதிமன்றத்திடம் கோரியுள்ளனர்.

இதனையடுத்து அவரை விளக்கமறியிலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

December 2018
M T W T F S S
« Nov    
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

Latest Comments

அருமை மேலும் தகவல் இருந்தால் பதிவிdavum [...]

இன்றும் அணு சோதனை நடத்தி உள்ளார் , ஒரு மயிரையும் அமெரிக்கா புடுங்க முடியாது, , ஹிட்லருடன் இவரை [...]

UNP ஒரு ரவுடி கட்சி , 1983ல் தமிழர்களுக்கு எதிராக இனக்கலவரத்தை நடத்தி பல [...]

சில நாடுகளில் தேச நலனை கருத்தில் கொண்டு ராணுவம் அரசை கைப்பற்றி அடுத்த தேர்தல் வரை ஆடசி [...]

இந்த அலோலோயா மதமாற்றுக்கார CIA ஏஜென்ட் , உடனடியாக கைது செய்ய பட வேண்டும் [...]

இலங்கை பத்திரிகைகள்

English News