ilakkiyainfo

ilakkiyainfo

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுடன் நல்லூர் ஆலய நிர்வாகத்தினர் அடாவடி!! – (காணொளி இணைப்பு)

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுடன் நல்லூர் ஆலய நிர்வாகத்தினர் அடாவடி!! – (காணொளி இணைப்பு)
July 09
01:07 2018

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் வவுனியாவில் முன்னெடுத்து வரும் கவனயீர்ப்புப் போராட்டம் 500 ஆவது நாளை எட்டியுள்ள நிலையில் நேற்று சனிக்கிழமை(07) யாழ். நல்லூர்க் கந்தசுவாமி ஆலய வளாகத்தில் முற்பகல்-10.30 மணியளவில் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் இடம்பெற்றது.

இந்தப் போராட்டத்தில் வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள எட்டு மாவட்டங்களையும் சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கலந்து கொண்டனர் .

நேற்றைய அடையாள உண்ணாவிரதப் போராட்டம் காலை-09 மணிக்கு ஆரம்பமாகும் என்று முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் போராட்ட ஏற்பாடுகளில் ஏற்பட்ட காலதாமதம் காரணமாக முற்பகல்-10.30 மணிக்கே போராட்டம் ஆரம்பமாக வேண்டியேற்பட்டது.

அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தின் ஒரு கட்டமாக காணாமல் ஆக்கப்பட்ட தங்கள் உறவுகளை வெளிப்படுத்தித் தருமாறு முருகப்பெருமானிடம் கோரி 50 தீச்சட்டிகளைத் தம் கைகளில் ஏந்தி ஆலய முன்றலில் 108 தேங்காய்கள் உடைக்கப்பட்டு நேர்த்திக்கடன் செலுத்துவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் மற்றும் நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் நேற்று காலை முதல் நல்லூர் ஆலய முன்றலில் ஒன்றுகூடியிருந்தனர்.

இதன்போது முற்பகல்-09.45 மணியளவில் திடீரென அப்பகுதிக்கு வந்த நல்லூர்க் கந்தசுவாமி ஆலய நிர்வாகத்தினர் நீங்கள் இங்கே போராட்டம் மேற்கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தினர்.

இதற்குப் பதிலளித்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் நாங்கள் எங்கள் உறவுகளுக்கு நீதி வேண்டி முருகப்பெருமானுக்கு நேர்த்திக்கடன் செய்து வழிபடுவதற்குத் தீர்மானித்தே இப்பகுதியில் ஒன்றுகூடியுள்ளோம் என்றனர்.

நீங்கள் நேர்த்திக்கடனை விரைவில் செய்துவிட்டு வெளியே செல்லுங்கள். ஒரு சிலருக்கு மட்டும் இடம் கொடுத்தால் எல்லோரும் வந்து இங்கே நிற்பாங்கள் என ஆலய நிர்வாகத்தினர் பதிலளித்தனர்.

af காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுடன் நல்லூர் ஆலய நிர்வாகத்தினர் அடாவடி!! – (காணொளி இணைப்பு) காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுடன் நல்லூர் ஆலய நிர்வாகத்தினர் அடாவடி!! – (காணொளி இணைப்பு) af

ஆலய நிர்வாகத்தினர் எனத் தங்களை அடையாளப்படுத்திக் கொண்ட இருவரில் ஒருவரை நோக்கி நீங்கள் யார்? உங்கள் பெயர் என்ன? எனக் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் வினாவிய போது எனது பெயரை உங்களுக்குச் சொல்ல வேண்டிய அவசியமில்லை எனக் குறித்த நிர்வாகத்தவர் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை உதாசீனப்படுத்தும் வகையில் நடந்து கொண்டார்.

நிர்வாகிகளின் உதாசீனமான செயற்பாட்டால் கொதித்தெழுந்த அங்கு கூடியிருந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் “தமிழனுக்கு கேட்பதற்கு உரிமையிருக்கிறது…” என உரத்த தொனியில் தெரிவித்ததைத் தொடர்ந்து ஆலய நிர்வாகிகள் அங்கிருந்து ஆலயத்திற்குள் தப்பியோடினர்.

இதனைத் தொடர்ந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கருத்துத் தெரிவிக்கையில்,தமிழனே தமிழனுக்கு எதிராகக் காணப்படுவது கவலையளிக்கிறது. எங்களின் பூர்வீக மண்ணில் எங்களது நேர்த்திக் கடனை நிறைவேற்றுவதற்கே உரிமையில்லையாயின் சிங்களவன் எங்களுக்கு எப்படி உரிமை தரப் போகிறான்?

நாங்கள் எங்களுக்குச் சொத்துச் சுகம் வேண்டுமென்பதற்காகப் போராடவில்லை. காணாமல் ஆக்கப்பட்ட எங்கள் உறவுகளைக் கண்டுபிடித்துத் தருமாறு கோரியே போராடுகின்றோம். எங்களின் துன்ப நிலையைக் கண்டு இவங்களுக்கு இரக்கமே வரவில்லையா?

முருகன் மீது நேர்த்தி வைத்து வழிபாடு செய்ய வந்த எங்களை வெளியே கலைக்குமாறு முருகன் இவங்களுக்குச் சொன்னவாரா? இப்படியொரு நிர்வாகம் எங்களுக்குத் தேவையா? எனவும் கண்ணீருடனும், கவலையுடனும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சாரமாரிக் கேள்வியெழுப்பினர்.

af1 காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுடன் நல்லூர் ஆலய நிர்வாகத்தினர் அடாவடி!! – (காணொளி இணைப்பு) காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுடன் நல்லூர் ஆலய நிர்வாகத்தினர் அடாவடி!! – (காணொளி இணைப்பு) af1

ஆலய நிர்வாகத்தவர்களுக்கும், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளுக்கும் ஏற்பட்ட கடும் முறுகல் நிலை காரணமாக சில நிமிடங்கள் குறித்த பகுதியில் பதற்றம் நிலவியது.

இதேவேளை, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் உணர்வுகளை மதிக்காமல் அநாகரிகமாக நடந்து கொண்ட நல்லூர்க் கந்தசுவாமி ஆலய நிர்வாகத்தினரின் செயற்பாட்டிற்கு எதிராகப் பலரும் கடும் விசனங்கள் வெளியிட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

February 2019
M T W T F S S
« Jan    
 123
45678910
11121314151617
18192021222324
25262728  

விறுவிறுப்பு தொடர்கள்

    ராஜிவ் காந்தியை  படுகொலை  செய்ய “சிவராசன்”  மரகதம் சந்திரசேகரின் தொகுதியான   ஸ்ரீபெரும்புதூரை தேர்ந்தெடுத்தது ஏன்??: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: –10)

ராஜிவ் காந்தியை படுகொலை செய்ய “சிவராசன்” மரகதம் சந்திரசேகரின் தொகுதியான ஸ்ரீபெரும்புதூரை தேர்ந்தெடுத்தது ஏன்??: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: –10)

0 comment Read Full Article
    “கையெழுத்து வைச்சிட்டு வந்திட்டன், இனிமேல்த்தான் பிரச்சனையே இருக்குது” : 2002 இல் போர் நிறுத்த உடன்படிக்கையில் கையொப்பமிட்ட தலைவர் பிரபாகரன் கூறியது!!  (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -18)

“கையெழுத்து வைச்சிட்டு வந்திட்டன், இனிமேல்த்தான் பிரச்சனையே இருக்குது” : 2002 இல் போர் நிறுத்த உடன்படிக்கையில் கையொப்பமிட்ட தலைவர் பிரபாகரன் கூறியது!! (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -18)

0 comment Read Full Article
    நந்திக்கடல் வழியாக தலைவர் வெளியேறும் திட்டத்தில் பெண் போராளிகள்   எவரையேனும்  இணைத்துக்கொள்ளவில்லை!!   (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -17)

நந்திக்கடல் வழியாக தலைவர் வெளியேறும் திட்டத்தில் பெண் போராளிகள் எவரையேனும் இணைத்துக்கொள்ளவில்லை!! (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -17)

1 comment Read Full Article

Latest Comments

இனி விண் வெளியிலும் பயங்கரவாதிகளா ??? பொறுக்க முடியவில்லை , பல கொடூர தட் கொலை [...]

புலிகளால் கடத்த பட்டு கொடூர மான சித்திரவதை செய்து கொல்ல [...]

புலி வாழ பிடித்தவர் போல் இவரின் பின்னணி தெரிகின்றது, நல்ல பிள்ளையாக நடப்பர் என [...]

வாழ்த்துகள் , மற்றைய சவூதி பெண்களும் இவரை பின் பற்றி , காட்டு மிராண்டி கொலை [...]

அருமை மேலும் தகவல் இருந்தால் பதிவிdavum [...]

இலங்கை பத்திரிகைகள்

English News