ilakkiyainfo

ilakkiyainfo

காத­லுக்கு இடை­யூறாய் இருந்த தாதியை தீர்த்­துக்­கட்­டிய கொடூரன்!- வசந்தா அருள்ரட்ணம்

காத­லுக்கு இடை­யூறாய் இருந்த தாதியை தீர்த்­துக்­கட்­டிய கொடூரன்!- வசந்தா அருள்ரட்ணம்
March 22
20:36 2015

 

வர்க்­கத்தின் மிகப் பெரிய சக்­தி­யான பெண்­ணி­யத்தின் பெரு­மையை எடுத்­துக்­கூறும் சர்­வ­தேச பெண்கள் தினக் கொண்­டாட்­டங்கள் நிறை­வ­டைந்த அடுத்த நாள். சரி­யாக மார்ச் 9ஆம் திகதி இரவு கலைந்து, புதி­ய­தொரு விடியல் பர­வ­ச­மூட்­டி­யது.

சூரி­யனின் வரு­கை­யினால் இலை­க­ளிலும், புற்­க­ளிலும் படுத்­து­றங்­கிய பனித்­து­ளிகள் மெல்ல மெல்ல விலக ஆரம்­பித்த நேர­மது.

வது­பி­டிய சுதந்­திர வர்த்­தக வல­யத்தில் பணி­பு­ரியும் தொழி­லா­ளர்கள் ஞாயிறு விடு­முறை தினத்தை கழித்து அந்தப் புதிய வாரத்­துக்­கான எதிர்­பார்ப்­புக்­க­ளுடன் தமது வேலைத்­த­லத்தை நோக்கி வந்து கொண்­டி­ருந்­தார்கள்.

நேரம் காலை 7.15 மணி­யி­ருக்கும். வது­பி­டிய சுதந்­திர வர்த்­தக வல­யத்தின் பெண்கள் விடு­தி­யி­லி­ருந்து கேட்ட பெண்­களின் அலறல் சத்தம் வது­பிட்­டிய பிர­தேச மக்­களைப் பெரும் அதிர்ச்­சிக்­குள்­ளாக்­கி­யது.

அடுத்த கணமே மக்கள் கடல் அலை போல் குறித்த பெண்கள் விடு­தியை நோக்கி படை­யெ­டுத்­தார்கள். ஏன்? எதற்­காக? இவர்கள் இவ்­வாறு சத்­த­மி­டு­கின்­றார்கள் என்ற அடுக்­க­டுக்­கான கேள்­விகள் பல அவர்­க­ளுக்குள் எழுந்த வண்­ணமே இருந்­தன.

எனவே சம்­பவ இடத்­துக்கு விரை­வாக வந்­த­டைந்­த­வர்­க­ளுக்கு என்ன அநி­யாயம்? என்று வாயை மூடி அழும் அள­வுக்கு அங்கு கண்ட காட்­சி­யி­ருந்­தது.

சுதந்­திர வர்த்­தக வல­யத்தில் தொழில் புரியும் அமை­தி­யான சுபாவம் கொண்ட நிரோ­ஷினி ஜய­சேன என்ற 24 வய­தான பெண் விடு­தியில் வாச­ல­ருகில் குருதி வெள்ளத்தில் பலத்த கத்­திக்­குத்து காயங்­க­ளுடன் உயி­ருக்குப் போரா­டிய நிலையில் கிடந்தாள்.

ஒரு நிமிடம் அந்தக் காட்சி மனித நேயம் கொண்ட மனங்கள் அனைத்­தை­யுமே ஸ்தம்­பிக்க வைத்­தது.

இந்­நி­லையில் நிரோ­ஷி­னியின் உயி­ரைக்­காப்­பாற்றும் முக­மாக வைத்­தி­ய­சா­லைக்கு கொண்டு செல்ல முயற்­சித்த போதும் வழி­யி­லேயே நிரோ­ஷி­னியின் உயிர் அவள் உடலை விட்­டுப்­பி­ரிந்­தது.

 showImageInStory  காத­லுக்கு இடை­யூறாய் இருந்த தாதியை தீர்த்­துக்­கட்­டிய கொடூரன்!- வசந்தா அருள்ரட்ணம் showImageInStory5நிரோ­ஷினி கொலை தொடர்­பாக மேற்­கொள்­ளப்­பட்ட விசா­ர­ணை­களின் போது கிடைக்­கப்­பெற்ற தக­வல்­களின் அடிப்­ப­டையில் அநு­ரா­த­பு­ரத்தில் ஸவஸ்­தி­புர சின்­னிக்­குளம் பிர­தே­சத்தை வதி­வி­ட­மாக கொண்ட டி.எம் ஜய­சேன(59), வயலட் நோனா ஆகிய இரு­வ­ரி­னதும் இளைய மக­ளாக 1991.03.14 திகதி பிறந்த நிரோ­ஷினி ஜய­சேன இயல்­பா­கவே இரக்க சுபா­வத்தைக் கொண்­டவள்.

சிறு வயது முதலே பிற­ருக்கு உதவி செய்து அதில் ஆனந்தம் கொள்வாள். எனவே எதிர்­கா­லத்தில் தான் ஒரு சிறந்த தாதி­யாக வந்து எல்­லோ­ருக்கு உதவி செய்ய வேண்டும் என்ற இலட்­சி­யத்தை மனதில் சுமந்­த­வாறு உயர்­தரம் வரை கற்றாள்.

உயர்­த­ரத்தின் பின் தனியார் நிறு­வ­ன­மொன்றில் தாதி­யர்­க­ளுக்­கான டிப்­ளோமா பாட­நெ­றியை நிறைவு செய்து சுமார் ஒரு வருட காலம் தனியார் வைத்­தி­ய­சா­லை­யொன்றில் தாதி­யா­கவும் கட­மை­யாற்­றினாள்.

அதன்பின் அதே வைத்­தி­ய­சா­லையில் தனது திற­மையின் கார­ண­மாக தாதி­யர்­க­ளுக்­கான ஆலோ­ச­க­ரா­கவும் கட­மை­யாற்­றினாள்.

showImageInStory  காத­லுக்கு இடை­யூறாய் இருந்த தாதியை தீர்த்­துக்­கட்­டிய கொடூரன்!- வசந்தா அருள்ரட்ணம் showImageInStory6அது­மட்­டு­மின்றி, சமய விட­யங்­க­ளிலும்,சமூக சேவை­யிலும் மிகுந்த ஈடு­பாடு கொண்ட நிரோ­ஷினி பௌத்த ஞாயிறு பாட­சா­லை­யிலும் ஆசி­ரி­ய­ராக கட­மை­யாற்­றினாள்.

இவ்­வாறு அங்கு ஆசி­ரி­ய­ராக கட­மை­யாற்றும் காலப்­ப­கு­தி­யி­லேயே கேகாலை, அம்­பிட்­டிய நாபெ­ரி­யாவ கிரா­மத்தை வசிப்­பி­ட­மாக கொண்ட ,இலங்கை இரா­ணு­வத்தில் மின்­னியல் பொறி­யி­லா­ள­ராக கட­மை­யாற்றும் ஜெகத் ஸ்ரீ சமன் பண்­டரா என்ற இளை­ஞனின் அறி­முகம் நிரோ­ஷினிக்கு கிடைத்­தது.

எனவே இரு­வ­ருக்கும் ஒரு­வரை ஒருவர் பிடித்து போக வெகு நாட்கள் செல்லும் முன்­னரே கடந்த ஆண்டு ஜூன் 05 ஆம் திகதி பல்­வேறு எதிர்­பார்ப்­பு­க­ளுடன் திரு­மண பந்­தத்தில் இணைந்தாள்

அதன் பின்னர் தனது குடும்­பத்தின் பொரு­ளா­தா­ரத்தை மேலும் மேம்­ப­டுத்த வேண்டும் என்­பதால் நிரோ­ஷினி வது­பிட்­டிய சுதந்­திர வர்த்­தக வல­யத்தில் பணி­பு­ரியும் அதி­காரி ஒரு­வரின் உத­வி­யுடன் வது­பிட்டிய சுதந்­திர வர்த்­தக வல­யத்தில் தாதி­யாக வேலைக்கு சேர்ந்­த­துடன், தனது தொழில் நிமித்தம் சுதந்­திர வர்த்­தக வல­யத்தை அண்­மித்­துள்ள பெண்கள் விடு­தியில் தங்­கினாள்.

அதன்பின் அங்கு தொழில் புரியும் காலப்­ப­கு­தி­யி­லேயே அவ­ளு­டைய நெருங்­கிய தோழி­யான ஷசினியும் (பெயர் மாற்­றப்­பட்­டுள்­ளது) சுதந்­திர வர்த்­தக வல­யத்தில் வேலைக்கு சேர்ந்து நிரோ­ஷினி தங்­கி­யி­ருந்த அதே விடு­தியில் தங்­கினாள்.

எனினும் ஆரம்­பத்தில் தனது தோழியின் வரு­கையை மகிழ்ச்­சி­யுடன் ஏற்ற நிரோ­ஷி­னிக்கு ஷசினி நொச்­சி­யா­கம பிர­தே­சத்தில் இரா­ணு­வத்தில் தொழில் புரியும் ஜிந்­த­கவை (பெயர் மாற்­றப்­பட்­டுள்­ளது) காத­லிக்­கின்றாள் என்று அறிந்­த­வுடன் அவள் காத­லுக்கு எதி­ரி­யாக மாறினாள்.

பல நாள் ஜிந்­த­க­வி­ட­மி­ருந்து ஷசி­னிக்கு வரும் தொலை­பேசி அழைப்­பு­களை ஷசி­னிக்கு தெரி­யா­மலே துண்­டித்து காத­லர்­க­ளுக்கு இடையில் பிரச்­சி­னை­களை ஏற்­ப­டுத்­தினாள்.

எனவே இது சிறிது நாட்­களில் எப்­ப­டியோ ஷசி­னிக்கு தெரிய வந்து நிரோ­ஷி­னி­யிடம் கேட்ட போது” நீ இன்னும் சிறிய பிள்ளை ஜிந்­த­க­வுடன் உள்ள காதல் தொடர்பை துண்­டித்து விடு” என்று அறி­வுரை வழங்­கினாள்.

அவளும் நண்­பியின் நட்­புக்கு மதிப்­ப­ளித்து தனது காதலை உள்­ளுக்­குள்ளே மறைத்து வைத்­துக்­கொண்டு நிரோ­ஷி­னிக்கு பிடித்த விதத்தில் நடிக்க ஆரம்­பித்தாள். எனினும் ஜிந்­த­க­வுக்கு நிரோ­ஷி­னியின் நட­வ­டிக்­கைகள் பிடிக்­க­வில்லை.

ஜிந்­தக பல கிலோ மீற்றர் தொலை­வி­லி­ருப்­பதால் தனது காத­லியை சந்­திக்க வாய்ப்­புகள் கிடைக்­க­வில்லை. குறைந்­தது தொலை­பேசி உரை­யா­டல்கள் மட்­டுமே இரு­வ­ருக்­கு­மி­டை­யி­லான காதலை வளர்க்கும் ஊட­க­மா­க­வி­ருந்­தது.

எனினும், நிரோ­ஷி­னியின் நடத்­தை கார­ண­மாக தனது காத­லி­யுடன் நிம்­ம­தி­யாக உரை­யாட முடி­ய­வில்­லையே என்ற ஆதங்கம் அவ­னுக்குள் உரு­வா­கி­யது.

எனவே தனது காத­லுக்கு நிரோ­ஷினி தான் தடை­யாக இருக்­கின்றாள். அவளை கொன்று விட்டால் தனக்கும் தனது காத­லிக்கும் எந்த பிரச்­சி­னையும் இல்லை என்ற எண்­ணத்­துடன் அவளைக் கொலை செய்­வ­தற்­கான நாளையும்,முறை­யையும் திட்­ட­மிட்டான்.

அதன்­படி மார்ச் ஒன்­பதாம் திகதி அதி­காலை நொச்­சி­யா­கம பிர­தே­சத்­தி­லி­ருந்து முச்­சக்­கர வண்­டி­யொன்றில் கையில் கத்­தி­யுடன் சுதந்­திர வர்த்­தக வல­யத்தை காலை 6.45 மணி­ய­ளவில் வந்­த­டைந்­தவன் , தனது காத­லி­யி­ட­மி­ருந்து பெற்­றுக்­கொண்ட தக­வல்­களின் அடிப்­ப­டையில் சுதந்­திர வர்த்­தக வல­யத்தின் பெண்கள் விடு­தியின் பிர­தான வாச­ல­ருகில் மறைந்து இருந்தான்.

அதன் பின்னர் காலை 7.00 மணி­ய­ளவில் நிரோ­ஷினி தனது விடுதி அறை­யி­லி­ருந்து சுதந்­திர வர்த்­தக வல­யத்­துக்கு வேலைக்கு செல்­வ­தற்­காக பிர­தான வாச­லுக்கு வரும் வேளை­யி­லேயே மறைந்­தி­ருந்­தவன் நிரோ­ஷி­னியை கத்­தியால் குத்த ஆரம்­பித்தான்.

எனினும் அந்த நேரம் அங்கு யாரும் இருக்­க­வில்லை. எனவே நிரோ­ஷினி அவ­னிடம் இருந்து தப்­பித்துச் செல்ல பல­வாறு முயற்­சித்த போதும் அவள் முயற்­சியில் தோற்றாள்.

அவனின் கையி­லி­ருந்த கத்தி பத்து தட­வை­க­ளுக்கு மேல் அவள் உடலைப் பதம் பார்த்­தது.ஜிந்­த­கவின் கத்திக் குத்­துக்கு நிரோ­ஷினி இலக்­காகி சில மணி நேரங்­க­ளுக்கு பின்­னரே விடு­தியில் தங்­கி­யி­ருந்த பெண்கள் பிர­தான வாச­ல­ருகில் உயி­ருக்கு போரா­டிய நிலையில் அவள் துடி­து­டிப்­பதைக் கண்டு பலத்த சத்­தத்­துடன் கத்­தி­யுள்­ளார்கள்.

எனினும் அந்த நேரம் கொலை­யா­ளி­யான ஜிந்­தக சம்­பவ இடத்­தி­லி­ருந்து தப்­பி­யோடி இருந்தான். அதன்பின் நிரோ­ஷி­னியை அனை­வரும் சேர்ந்து வைத்­தி­ய­சா­லைக்கு கொண்டு செல்ல முயற்­சித்த போதும் அவள் உயிரை காப்­பாற்ற முடி­ய­வில்லை. நிரோ­ஷி­னியின் உயிர் பாதி வழி­யி­லேயே அவள் உடலை விட்டுப் பிரிந்­தது.

இதை வேளை நிரோ­ஷினி ஏன் கொலை செய்­யப்­பட்டாள்? அவ­ளு­டைய கொலை­யுடன் யாருக்குத் தொடர்­பி­ருக்­கின்­றது? என்ற கோணத்தில் பொலிஸார் விசா­ர­ணை­களை மேற்­கொண்ட போது பொலி­ஸாரின் கவனம் நிரோ­ஷி­னியின் தோழி­யான ஷசி­னியின் மீது திரும்­பி­யது.

எனவே ஷசி­னி­யிடம் பொலிஸார் கடு­மை­யான விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்தன் மூலம் தான் இக்­கொ­லை­யுடன் ஜிந்­தக்­க­வுக்கு தொடர்பு இருக்­கின்­றது என்ற உண்மை தெரி­ய­வந்­த­துடன் ஜிந்­த­கவை கைது செய்து மேல­திக விசா­ர­ணை­க­ளையும் முன்­னெ­டுக்க முடிந்­தது.

அவ்­வி­சா­ர­ணை­க­ளின்­படி காதல் தொடர்பு ஒன்றில் ஏற்­பட்ட பிரச்­சி­னை­களின் கார­ண­மா­கவே மேற்­படி கொலை இடம்­பெற்­றி­ருப்­ப­தா­கவும், கத்­திக்­குத்­துக்கு இலக்­கான நிலை­யி­லேயே குறித்த பெண் உயி­ரி­ழந்­தி­ருப்­ப­தா­கவும் ஊர்­ஜி­தப்­ப­டுத்­தப்­பட்­டது

எனவே மேற்­படி சம்­ப­வத்தில் தேவை­யற்ற ஒரு விட­யத்தில் தலை­யிட்ட கார­ணத்­தினால் பரி­தா­ப­க­ர­மாக தனது உயிரை இழக்கும் துர்ப்­பாக்­கிய நிலை நிரோ­ஷி­னிக்கு ஏற்­பட்­டது.

158ஆவது சர்­வ­தேச மகளிர் தின கொண்­டாட்­டங்கள் நிறைவு செய்­யப்­பட்டு 7 மணித்­தி­யா­லங்கள் மட்­டுமே கடந்த நிலையில் அன்பின் உரு­வமாய் இருந்த ஒரு பெண் இவ்­வு­லக வாழ்­வி­லி­ருந்தே விடை­பெற்றுச் சென்று விட்டாள்.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

August 2019
M T W T F S S
« Jul    
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

Latest Comments

மிகப் பெரும் விஞ்ஞானிகள் , இவர்கள் நாசாவின் பணியாற்ற வேண்டியவர்கள் , ஆறறிவு அல்ல 12 அறிவு உடையவர்கள் , [...]

துப்பாக்கி உனக்கு ஏன் உன் சொந்த சகாக்களை கொல்லவா ? 1988 - 1996 வரை நீ செய்த [...]

50 வருடங்களுக்கு பின் தான் இந்தியாவுக்கு முடிந்திருக்கு. சீன எப்பவோ சாதித்து விட்ட்து. [...]

My vote for Mr. Gotabhaya Rajapaksa, he can only save our country. [...]

இறைவனின் துணையோடு நிலவை பிளந்த நபிக்கு அதே இறைவனின் துணையோடு ஒட்டவைக்க முடியாதா? ?? இந்த உலகத்தையே நாம்தான் படைத்தோம்னு சொல்லும் [...]

இலங்கை பத்திரிகைகள்

English News