ilakkiyainfo

ilakkiyainfo

காதல் கடிதம் எழுதியவருக்கு ஜெயலலிதா கொடுத்த சுவாரசியமான பதில்!!

காதல் கடிதம் எழுதியவருக்கு ஜெயலலிதா கொடுத்த சுவாரசியமான பதில்!!
January 08
22:47 2017

காதல் கடிதம் எழுதியவருக்கு ஜெயலலிதா கொடுத்த சுவாரசியமான பதில்!! மறைந்த முதல்வர் ஜெயலலிதா நடிகையாக இருந்தபோது அவருடைய ரசிகர் ஒருவர் அவருக்கு காதல் கடிதம் ஒன்றை எழுதினார். அதற்கு ஜெயலலிதா யாரும் சற்றும் எதிர்பாராத பதிலைத் தந்து சிலிர்க்க வைத்தார்.

சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதா நடிகையாக இருந்த போது அவரது தீவிர ரசிகர் ஒருவர் அவருக்கு காதல் கடிதம் ஒன்றை எழுதினார்.

அதற்கு ஜெயலலிதா எழுதிய பதில் கடிதம் சுவாரசியம் நிறைந்தது… நடிகையாக பலரின் இதயங்களை கொள்ளை கொண்டவர்… சிறந்த ஆளுமையால் இந்திய அரசியலையே திரும்பி பார்க்க வைத்தவர்…

அதீத துணிச்சலால் பெண்களின் ரோல் மாடலாகவும் இருந்தவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா… திடீர் உடல் நலக்குறைவால் கடந்த செப்டம்பர் 22ஆம் தேதி இரவு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

75 நாட்களுக்கும் மேலாக சிகிச்சைப் பெற்று வந்த முதல்வர் ஜெயலலிதா கடந்த டிசம்பர் 5ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அவரது உடல் சென்னை மெரினா கடற்கடையில் உள்ள எம்ஜிஆர் சமாதி வளாகத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இன்றுடன் அவர் இறந்து 30 நாட்கள் ஆகிவிட்டன. இன்று வரையும் அவரது நினைவிடத்தில் கண்ணீர் அஞ்சலி செலுத்த மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

ஜெயலலிதாவின் வாழ்நாள் முழுவதும் போராட்டம் நிறைந்ததாகவே இருந்தது என கூறப்படுவதுண்டு. அவர் அரசியல் பிரவேசம் எடுத்தப்பின் அவருக்கு நேராக நின்று பேச அமைச்சர்களும் அஞ்சினார்கள்.

அப்படிப்பட்ட ஜெயலலிதாவுக்கு ரசிகர் ஒருவர் காதல் கடிதம் எழுதினார். அதற்கு ஜெயலலிதா எழுதிய பதில் சமயோசிதமானது. அவருடைய புத்திசாலிதனத்தையும் தீர்க்க முடிவையும் அது வெளிப்படுத்தியது.

அதில் நான் உங்கள் மேல் உயிரையே வைத்திருக்கிறேன். நான் திருமணம் செய்தால் உங்களை தான் செய்வேன் என்று எழுதியிருந்தார்.

மேலும் ஒரு தேதியை குறிப்பிட்டு இந்த தேதிக்குள் என்னை நீங்கள் திருமணம் செய்து கொள்ளாவிட்டால் நான் தற்கொலை செய்துகொள்வேன் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

ரசிகரின் அந்த கடிதத்திற்கு ஜெயலலிதா எந்த பதிலும் எழுதவில்லை. பின்னர் சில நாட்கள் கழித்து அந்த தேதி கடந்த பின்னர் அதே ரசிகரிடமிருந்து மீண்டும் ஒரு கடிதம் வந்தது.

அதில் மற்றொரு தேதியைக் குறிப்பிட்டிருந்த அந்த ரசிகர், அந்த தேதிக்குள் தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும். இல்லையெனில் தற்கொலை செய்துகொள்வேன் என குறிப்பிட்டிருந்தார்.

இம்முறை ரசிகரின் கடிதத்துக்கு ஜெயலலிதா பதில் கடிதம் எழுதுகிறார். அதில் எனக்கு கணவராக வர விரும்புபவர் கொடுத்த வாக்கை காப்பாற்ற வேண்டுபவராக இருக்க வேண்டும்.

நீங்கள் முந்தைய கடிதத்தில் கொடுத்த வாக்கை காப்பாற்றவில்லை. உங்களை எப்படி நான் திருமணம் செய்துகொள்ள முடியும்? மன்னிக்கவும். என்று எழுதினார்.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

April 2018
M T W T F S S
« Mar    
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

Latest Comments

இந்த கோழை பயல் சரத் போன்சேகா 30 வருடத்துக்கு மேல் ராணுவத்தில் இருந்துள்ளான் , இவன் பயங்கர [...]

நான் ஒவ்வொரு முறையும் சொல்வதை போல் , இந்த தேச துரோக அரசு இந்த நாடடை அமெரிக்கா விடமும் [...]

Its Fake news, See the true here at following link: http://inexplicata.blogspot.ch/2018/04/argentina-strange-creature-slays-two.html?m=1 [...]

மீடியாக்களை சந்தித்தது மட்டுமல்ல பெண் செய்தியாளரின் கன்னத்தையும் கிள்ளி போடடான் காம தாத்தா கவ்னர் [...]

இது போல் பாகிஸ்தானில் ஒரு இந்துவுக்கோ அல்லது எதாவது ஓர் இஸ்லாம் இல்லாதவருக்கோ உயர் விருது கிடைக்குமா , [...]

இலங்கை பத்திரிகைகள்

English News