ilakkiyainfo

ilakkiyainfo

காதல் திருமணம் செய்த தங்கை… அதிகாலையில் காதலனுக்கு நடந்த துயரம்!

காதல் திருமணம் செய்த தங்கை… அதிகாலையில் காதலனுக்கு நடந்த துயரம்!
October 02
15:56 2018

தங்கையைக் காதல் திருமணம் செய்துகொண்டவரை வீட்டில் புகுந்து சகோதரர் சரமாரியாக வெட்டியுள்ளார். தட்டிக்கேட்ட காதலனின் தாயாரும் வெட்டப்பட்டுள்ளார். இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் மதுரையில் நடந்துள்ளது.

மதுரை  காமராஜர் சாலை காதர்கான் பட்லர் லைன் பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகன் பொன்ராஜ். 29 வயதான இவர், தனியார் நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் கார் ஓட்டுநராகப் பணியாற்றிவருகிறார். இவரும், உறவினர் மீனா (23) என்பவரும் சில ஆண்டுகளாகக் காதலித்துவந்துள்ளனர். பின்னர், இரு வீட்டாரின் சம்மதத்துடன் 6 மாதங்களுக்கு முன் திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதனிடையே, இரு வீட்டாருக்குமிடையே கருத்துவேறுபாடுகள் ஏற்பட்டதால், திருமணம் நிறுத்தப்பட்டது. இருந்தபோதிலும், பொன்ராஜ்- மீனா ஆகியோரின் காதல் தொடர்ந்துள்ளது. இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை திருச்செந்தூர் முருகன்கோயிலில் இருவரும் திருமணம் செய்துகொண்டனர். இந்தத் தகவல் மீனாவின் பெற்றோருக்குத் தெரியவந்துள்ளது.

madurai_lover_injured_12536 காதல் திருமணம் செய்த தங்கை... அதிகாலையில் காதலனுக்கு நடந்த துயரம்! காதல் திருமணம் செய்த தங்கை... அதிகாலையில் காதலனுக்கு நடந்த துயரம்! madurai lover injured 12536

இந்நிலையில், பொன்ராஜ் வீட்டுக்கு மீனாவின் சகோதரர் அரிவாளுடன் வந்துள்ளார். அப்போது, வீட்டில் இருந்த பொன்ராஜிடம் பிரபு தகராறு செய்துள்ளார். “எப்படி என் தங்கையை நீ திருமணம் செய்துகொள்ளலாம்” என்று ஆவேசத்துடன் கேட்ட பிரபு, பொன்ராஜை சரமாரியாக வெட்டியுள்ளார்.

இதைத் தடுக்க வந்த பொன்ராஜியின் தாயாரையும் பிரபு வெட்டியுள்ளார். பின்னர் அங்கிருந்து தப்பிவிட்டார். ரத்த வெள்ளத்தில் கிடந்த இரண்டு பேரையும் அக்கம் பக்கத்தினர் ராஜாஜி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அவர்களுக்குத் தீவிரசிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.

இதுகுறித்து மதுரை தெப்பக்குளம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய பிரபுவைத் தேடிவருகின்றனர்.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

July 2019
M T W T F S S
« Jun    
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

விறுவிறுப்பு தொடர்கள்

    சயனைட் குப்பியைக் கடிப்பதா? என்னை நானே சுட்டுக் கொல்வதா?:பெண்ணொருவர் தந்த பழசாய்ப் போன சல்வார் உடையை அணிந்துகொண்டு மக்களோடு மக்களாகக் கலந்தேன்.. (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -28)

சயனைட் குப்பியைக் கடிப்பதா? என்னை நானே சுட்டுக் கொல்வதா?:பெண்ணொருவர் தந்த பழசாய்ப் போன சல்வார் உடையை அணிந்துகொண்டு மக்களோடு மக்களாகக் கலந்தேன்.. (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -28)

0 comment Read Full Article
    ராஜீவ் காந்தி  கொல்லப்படப்போகிறார். திக்..திக்.. நிமிடங்கள்!! : “சல்வார் கமீஸ் ஆடைக்குள்  வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: –18)

ராஜீவ் காந்தி கொல்லப்படப்போகிறார். திக்..திக்.. நிமிடங்கள்!! : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: –18)

0 comment Read Full Article
    மக்கள், காயப்பட்டுக் கிடந்த, உயிரோடிருந்த  போராளிகள்  அனைவரையும் கைவிட்டு 300 போரளிகளுடன் இயக்க தலைமை  கேப்பாபிலவு காட்டுக்குள் தப்பியோட முயற்சி!! (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -27)

மக்கள், காயப்பட்டுக் கிடந்த, உயிரோடிருந்த போராளிகள் அனைவரையும் கைவிட்டு 300 போரளிகளுடன் இயக்க தலைமை கேப்பாபிலவு காட்டுக்குள் தப்பியோட முயற்சி!! (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -27)

0 comment Read Full Article

Latest Comments

My vote for Mr. Gotabhaya Rajapaksa, he can only save our country. [...]

இறைவனின் துணையோடு நிலவை பிளந்த நபிக்கு அதே இறைவனின் துணையோடு ஒட்டவைக்க முடியாதா? ?? இந்த உலகத்தையே நாம்தான் படைத்தோம்னு சொல்லும் [...]

We want Mr.Kotapaye Rajapakse as our future President, he can only save our country not [...]

அமெரிக்காவில் மட்டும் தான் ஏலியன் வாகனங்கள் தென்படுகின்றன ? ஏனெனில் அங்குதான் Hollywood உள்ளது, நல்லா வீடியோ எடுக்க [...]

Trumpf is coward , he has afraid about if iran attack back then will give [...]

இலங்கை பத்திரிகைகள்

English News