ilakkiyainfo

ilakkiyainfo

காற்று இறங்காது… கடைக்கும் போய் நிற்காது: வருகிறது ஏர்லெஸ் டயர்! (வீடியோ)

காற்று இறங்காது… கடைக்கும் போய் நிற்காது: வருகிறது ஏர்லெஸ் டயர்! (வீடியோ)
November 25
14:45 2014

வயர்லெஸ் (போன்), ஃபயர்லெஸ் (சமையல்), ஜாப்லெஸ் (இளைஞர்கள்),, ஸ்லீவ்லெஸ் (உடை) என்று அனைத்துமே வாழ்க்கையில் ‘லெஸ்’ஸாகி விட்டது.

அதுவும் ஆட்டோமொபைல் துறையில் ட்யூப்லெஸ், கீ-லெஸ் என்று பெரும்பாலும் லெஸ்தான். இவற்றோடு இப்போது புதிதாக   ‘ஏர்-லெஸ் டயரும்’   (airless tyre) சேர்ந்து விட்டது. அதாங்க…. காற்றில்லாத டயர்கள்.

மிகப் பிரபலமான பிரெஞ்சு டயர் கம்பெனியான ‘மிஷ்லின்’ நிறுவனம்தான், புதிதாக காற்றில்லாத டயர்களை அறிமுகப்படுத்தி இருக்கிறது.

மற்ற சாதாரண வீல்களில் உள்ள அலாய் மற்றும் ஸ்போக்ஸ் மெட்டீரியல்களைப்போல் இல்லாமல், இதில் ‘பாலியுரேத்தேன்’ எனும் மூலப்பொருள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இது செம ஃப்ளெக்ஸிபிள் ஆகவும், பஞ்சர் போன்ற சேதாரங்கள் ஏற்படாத வண்ணமும் டயரைப் பாதுகாக்கிறது. டயரும் வீலும் தனித்தனியாக இல்லாமல், நடுவில் உள்ள ஒரு ‘ஹப்’ இதை இணைக்கிறது.

இந்த ஏர்லெஸ் டயருக்கு ‘ட்வீல்’ என்று பெயரிட்டு இருக்கிறார்கள். (அதாவது, டயரின் முதல் எழுத்தான T’-யையும், வீலையும் சேர்த்தால் ட்வீல்!) சாதாரண வீல்களைப்போல் இல்லாமல், ‘ஆன்ட்டி ஸ்கிட்’ முறையில்… (வழுக்கும் தன்மை இல்லாமல்) தயாரிக்கப்பட்டிருப்பது இதன் ஸ்பெஷல்.

airless-tyre-middle-1  காற்று இறங்காது... கடைக்கும் போய் நிற்காது: வருகிறது ஏர்லெஸ் டயர்! (வீடியோ) airless tyre middle 1‘‘இந்த ஏர்-லெஸ் ரேடியல் டயர்களில், ஒவ்வொரு பெட்ரோல் பங்க்காக அலைந்து காற்றடிக்க வேண்டியதில்லை; அதனால், வெயில் காலங்களில் காற்று இறங்கும் தொல்லை இல்லை; மேடு – பள்ளங்களில் பஞ்சராகி நடு ரோட்டில் நிற்க வேண்டிய நிலைமை இனி இல்லை!’’ என்கிறது மிஷ்லின் நிறுவனம்.

airless-yre-middle  காற்று இறங்காது... கடைக்கும் போய் நிற்காது: வருகிறது ஏர்லெஸ் டயர்! (வீடியோ) airless yre middle

இப்போதைக்கு ‘ட்வீல்’ இந்தியாவில் இல்லை; வட அமெரிக்காவின் தெற்கு கரோலினாவில், கிரீன்வில்லி பகுதியில் இதற்கான தொழிற்சாலையை அமைக்கப் போகிறது மிஷ்லின்.

வெல்கம் ட்வீல்!

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

June 2019
M T W T F S S
« May    
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930

Latest Comments

அருமையான பதிவு பகுதி-2? [...]

" முன்னைய காலங்களைப் போலவே இத்தகைய சிறப்புத் தாக்குதல் நடவடிக்கைகள் ஒட்டுமொத்தமான இராணுவ நடவடிக்கைகளின் பின்னணிப் பலத்தைச் சிதறடிக்கும் எனக் [...]

இப்போதாவது முடடாள் அமெரிக்கனுக்கு எங்கள் ஹீரோவை பற்றி நினைவு வந்துள்ளது, அமெரிக்கன் சேர்ந்த கூடடம் [...]

கஜினி முகமது யாரிடம் 17 முறை தோற்றார்? [...]

பிள்ளையுயும் கிள்ளி விட்டு, தொட்டிலையும் ஆட்டும் பழக்கம் இசுலாமிய சகோதரர்க்கு ஒரு தொழிலாகவே தொன்று தொட்டு இருந்து வருகின்றது. [...]

இலங்கை பத்திரிகைகள்

English News