ilakkiyainfo

ilakkiyainfo

`கியூட் ஜோதிகா அண்ணி, பாசக்கார ரஞ்சனி அண்ணி, அப்பாவோட வாட்ஸ்அப் குரூப்ஸ்!” – சூர்யாவின் தங்கை

`கியூட் ஜோதிகா அண்ணி, பாசக்கார ரஞ்சனி அண்ணி, அப்பாவோட வாட்ஸ்அப் குரூப்ஸ்!” – சூர்யாவின் தங்கை
May 21
12:21 2018

“எட்டாவது படிக்கும்போது ஆண்டு விழாவுல ‘சின்னத்தம்பி’ படத்துல வந்த ‘போவோமா ஊர்கோலம்’ பாட்டு பாடினேன். அதுதான் மேடையேறிப் பாட்டு பாடின முதல் அனுபவம். பிறகு நண்பர்கள் பலரும் என்கரேஜ் பண்ணதுனால, கர்நாடக சங்கீதம் கத்துக்கலாம்னு முடிவெடுத்தேன்.

இந்த விஷயத்தை அப்பாவின் நண்பரும் பிரபல பரதநாட்டியக் கலைஞருமான பத்மா சுப்பிரமணியம் மேடம்கிட்ட சொன்னேன். அவங்க விஜயா நடராஜன் என்ற மேடம்கிட்ட பாட்டு கத்துக்க சொன்னாங்க.

பாட்டு கத்துக்க ஆரம்பிச்ச பிறகு, தன் பையனோட கல்யாணத்துலயே விஜயா மேடம் என்னைப் பாட வெச்சாங்க. அத்தனை மாணவர்கள் இருந்தும் என்னைப் பாட வைக்கிற அளவுக்கு மேடத்துக்கு என்னை ரொம்பப் பிடிக்கும்” பாட்டு கற்றுக்கொண்ட நாள்களை நினைவுகூர்கிறார் ‘சிங்கர்’ பிருந்தா. நடிகர் சூர்யாவின் தங்கை. ‘மிஸ்டர் சந்திரமௌலி’ படத்தின் மூலம் பாடகியாக சினிமாவுக்கு அறிமுகமாகி இருக்கிறார்.

IMG_9707_15591 `கியூட் ஜோதிகா அண்ணி, பாசக்கார ரஞ்சனி அண்ணி, அப்பாவோட வாட்ஸ்அப் குரூப்ஸ்!" - சூர்யாவின் தங்கை `கியூட் ஜோதிகா அண்ணி, பாசக்கார ரஞ்சனி அண்ணி, அப்பாவோட வாட்ஸ்அப் குரூப்ஸ்!" - சூர்யாவின் தங்கை IMG 9707 15591

“பாட்டுப்பாட பிறந்த வீட்டைவிட எனக்குப் புகுந்த வீட்ல பெரிய சப்போர்ட். என் கணவர் பெயரும் சிவகுமார்தான். ‘மெட்ராஸ் டைமண்ட் டூல்ஸ்’ கிரானைட் கம்பெனியில வேலை பார்க்கிறார். எங்களுக்குத் தன்வி என்ற 10 வயசு மகளும் குகன் என்ற 8 வயசுப் பையனும் இருக்காங்க.”

“இசையின் மீது ஆர்வம் வந்தது எப்படி?”

“ப்ளஸ் டூ படிக்கும்போது ஓர் இசை நிகழ்ச்சி. அந்த நிகழ்ச்சிக்கு தேவி ஸ்ரீ பிரசாத் சார்தான் நடுவர். அப்போ அவர் வளர்ந்து வர்ற இசையமைப்பாளர். பிறகு, கல்லூரியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றுக்கும் அவர்தான் நடுவர்.

அதில், ‘கண்ணே கலைமானே’ பாட்டு பாடினேன். பிறகு, வேறொரு நிகழ்ச்சியில், `ஆசை’ பட `புல்வெளி’ பாட்டுப் பாடினப்போ, திடீர்னு பாட்டு வரிகள் மறந்து மேடையிலேயே நின்னுட்டேன்.

surya-family_15301 `கியூட் ஜோதிகா அண்ணி, பாசக்கார ரஞ்சனி அண்ணி, அப்பாவோட வாட்ஸ்அப் குரூப்ஸ்!" - சூர்யாவின் தங்கை `கியூட் ஜோதிகா அண்ணி, பாசக்கார ரஞ்சனி அண்ணி, அப்பாவோட வாட்ஸ்அப் குரூப்ஸ்!" - சூர்யாவின் தங்கை surya family 153011இப்படி மொக்கை வாங்கின அனுபவம் நிறைய இருக்கு. இப்படித்தான் இசைமேல எனக்கு ஆர்வம் ஏற்பட்டுச்சு. ஸ்கூல் படிக்கிறவரை, ‘நாமதான் நல்லா பாடுறோம்’னு நினைப்பேன். ஆனா, காலேஜ்ல ஏகப்பட்ட திறமையான பாடகர்களைப் பார்க்கும்போதுதான், ‘நாம இன்னும் வளரணும்’ங்கிற விஷயம் புரியவந்துச்சு.

அதைப் பக்திமயம் கொண்ட இசைனுகூட சொல்லலாம். இந்துஸ்தானி இசை கத்துக்க ஒரு நல்ல ஆசிரியரை தேடிட்டு இருந்தேன். அப்போதான் ராமமூர்த்திராவ் சாரை சந்திச்சேன்.

அவர் பீம் சிங் ஜோஷியின் மாணவர். ‘கல்யாணத்துக்குப் பிறகும் நீ பாட்டு கத்துக்கணும். உனக்கு கட்டாயம் சென்னையிலதான் மாப்பிளை அமையும்’னு ராமமூர்த்தி சார் சொல்லிகிட்டே இருப்பார்.

அவர் சொன்ன மாதிரியே கல்யாணம், குழந்தை பிறப்புனு எல்லாத்தையும் முடிச்சுட்டு மறுபடியும் பாட்டுப்பாட ஆரம்பிச்சேன். இந்துஸ்தானியில பல மொழிகள்ல பாட வேண்டியது இருக்கும். ‘அகரம்’ அமைப்போட நிகழ்ச்சிகள்ல மட்டும் தமிழ்ல பாடுவேன். நான் தமிழ்ல அதிகமா பாடணும்னு அப்பாவின் ஆசை.”

“இசை ஆர்வம் தவிர, பிடிச்ச விஷயங்கள், பொழுதுபோக்கு?”

“எனக்குப் படம் வரையிறது ரொம்பப் பிடிக்கும். வீடு முழுக்க நான் வரைந்த படங்களோட கலெக்ஷன்ஸ் வெச்சுருக்கேன். ஒரு கட்டத்தில் நகை அலங்காரம் பண்ண ஆரம்பிச்சேன்.

2014-ல் குழந்தைகளுக்கான நகையலங்கார டிசைன்களைப் பண்ணிக்கொடுத்துட்டு இருந்தேன். அதுவும் தெரிஞ்சவங்களுக்கு மட்டுமேதான்.

‘நல்லா டிசைன் பண்ற’னு நண்பர்கள் பலர் சொன்னாங்க. பிறகுதான், என் மகள் பெயர்ல நகை டிசைன்ஸ் பண்ணலாம்னு முடிவு பண்ணி அதுக்கான மையத்துல பதிவு பண்ணிணேன்.”

surya-family_15301 `கியூட் ஜோதிகா அண்ணி, பாசக்கார ரஞ்சனி அண்ணி, அப்பாவோட வாட்ஸ்அப் குரூப்ஸ்!" - சூர்யாவின் தங்கை `கியூட் ஜோதிகா அண்ணி, பாசக்கார ரஞ்சனி அண்ணி, அப்பாவோட வாட்ஸ்அப் குரூப்ஸ்!" - சூர்யாவின் தங்கை surya family 15301குடும்பத்துல உங்களுக்கு எந்தளவுக்கு ஆதரவா இருக்காங்க?”

“இலக்கியக் கூட்டங்கள்ல பேசுறது, படிக்கிறதுனு அப்பா இப்பவும் பரபரப்பா இருக்கார். எங்க எல்லாரையும்விட அவர் அதிகமான வாட்ஸ்அப் குரூப் வெச்சிருப்பார். இலக்கியம், வரலாறு தொடர்பான சந்தேகங்கள் கேட்டா பிரமாதமா பாடம் எடுப்பார்.

எங்க யாருக்குமே அந்தளவுக்கு வாசிப்பனுபவம் இல்லை. தான் படிச்ச நல்ல நல்ல கதைகளை பேரப் பிள்ளைகளுக்கும் சொல்வார். எங்க அத்தனை பேரையும் என்கரேஜ் பண்ணிட்டே இருப்பார்.

ஆனா அம்மா, அப்பாவுக்கு நேரெதிர். அவங்க என்கரேஜ் பண்றதைவிட அதிகமா விமர்சிப்பாங்க. அது உண்மையான விமர்சனமாவும் இருக்கும். என் நிறை குறைகளை அவங்க மூலம்தான் தெரிஞ்சுக்குவேன்.

கல்யாணத்துக்குப் பிறகு, ‘நீ வீட்ல சும்மா இருக்கக் கூடாது. ஏதாவது உனக்குப் பிடிச்ச வேலைகளைப் பண்ணு’னு என் கணவர் சொல்லிகிட்டே இருந்தார். அவர் தந்த ஊக்கம்தான் என்னை இன்னைக்கு சினிமாவுல பாடுறவரை கொண்டுவந்து நிறுத்தியிருக்கு.”

“அண்ணிகள் பற்றி சொல்லலையே?”

“எங்க வீட்டை அழகுபடுத்துறது ஜோ அண்ணிதான். ஒரு பண்டிகை வந்தா நாம சாமி கும்பிடுவோம், விருந்து சாப்பிடுவோம், அவ்வளவுதான் பண்ணுவோம். ஆனா, வீட்டையே அலங்கரிக்கிறது, பார்ட்டி பண்றதுனு சின்னச் சின்ன சுவாரஸ்யங்களா சேர்த்து பெரிய சந்தோஷமா மாத்திடுவாங்க.

வீடு, சினிமானு அவங்க இவ்வளவு வேலைகள் செய்வாங்கனு நான் நினைச்சுகூடப் பார்க்கலை. இதேபோல ரஞ்சனி அண்ணியும் ரொம்பப் பாசக்காரவங்க.

குடும்பத்துமேல அவங்களுக்கு அக்கறையும் பாசமும் அதிகம். கார்த்தி அண்ணா அவரோட கல்யாணத்துக்கு முன்னாடி, ‘எனக்கு உன்னை மாதிரி பாசக்கார பொண்ணு வேண்டாம். அன்புத் தொல்லைகளை சமாளிக்கிறது கஷ்டம்’னு சொல்லிகிட்டே இருப்பார். ஆனா, கடைசியில என்னை மாதிரியே குணம் கொண்டவங்கதான் அண்ணனுக்கு கிடைச்சிருக்காங்க.”

வாழ்த்துகள் ‘சிங்கர்’ பிருந்தா!

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

February 2019
M T W T F S S
« Jan    
 123
45678910
11121314151617
18192021222324
25262728  

விறுவிறுப்பு தொடர்கள்

    ராஜிவ் காந்தியை  படுகொலை  செய்ய “சிவராசன்”  மரகதம் சந்திரசேகரின் தொகுதியான   ஸ்ரீபெரும்புதூரை தேர்ந்தெடுத்தது ஏன்??: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: –10)

ராஜிவ் காந்தியை படுகொலை செய்ய “சிவராசன்” மரகதம் சந்திரசேகரின் தொகுதியான ஸ்ரீபெரும்புதூரை தேர்ந்தெடுத்தது ஏன்??: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: –10)

0 comment Read Full Article
    “கையெழுத்து வைச்சிட்டு வந்திட்டன், இனிமேல்த்தான் பிரச்சனையே இருக்குது” : 2002 இல் போர் நிறுத்த உடன்படிக்கையில் கையொப்பமிட்ட தலைவர் பிரபாகரன் கூறியது!!  (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -18)

“கையெழுத்து வைச்சிட்டு வந்திட்டன், இனிமேல்த்தான் பிரச்சனையே இருக்குது” : 2002 இல் போர் நிறுத்த உடன்படிக்கையில் கையொப்பமிட்ட தலைவர் பிரபாகரன் கூறியது!! (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -18)

0 comment Read Full Article
    நந்திக்கடல் வழியாக தலைவர் வெளியேறும் திட்டத்தில் பெண் போராளிகள்   எவரையேனும்  இணைத்துக்கொள்ளவில்லை!!   (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -17)

நந்திக்கடல் வழியாக தலைவர் வெளியேறும் திட்டத்தில் பெண் போராளிகள் எவரையேனும் இணைத்துக்கொள்ளவில்லை!! (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -17)

1 comment Read Full Article

Latest Comments

இனி விண் வெளியிலும் பயங்கரவாதிகளா ??? பொறுக்க முடியவில்லை , பல கொடூர தட் கொலை [...]

புலிகளால் கடத்த பட்டு கொடூர மான சித்திரவதை செய்து கொல்ல [...]

புலி வாழ பிடித்தவர் போல் இவரின் பின்னணி தெரிகின்றது, நல்ல பிள்ளையாக நடப்பர் என [...]

வாழ்த்துகள் , மற்றைய சவூதி பெண்களும் இவரை பின் பற்றி , காட்டு மிராண்டி கொலை [...]

அருமை மேலும் தகவல் இருந்தால் பதிவிdavum [...]

இலங்கை பத்திரிகைகள்

English News