லண்டனில், விம்பிள்டன் ரயில் நிலையத்தில் குடிபோதையில் தண்டவாளத்தில் படுத்து உறங்கிய இளைஞர் உடல் கருகி உயிரிழந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குடிபோதையில் நிதானம் இல்லாமல் ரயில் நிலையத்திற்குள் வந்த இளைஞர், 8 மற்றும் 9 நடைமேடைகளுக்கு இடையிலான தண்டவாளத்தில் சாவகாசமாக படுத்து உறங்கியுள்ளார்.

இதைக்கண்ட நடைமேடை பாதுகாவலர்கள், இளைஞரை எழுப்பி கண்டித்துள்ளனர். போதையில் எழுந்து நிற்க முடியாமல் திணறிய இளைஞர் நகர முடியாமல், மீண்டும் கீழே விழுந்துள்ளார்.

3_TRAIN குடிபோதையில் தன்னிலை மறந்து, தண்டவாளத்தில் தலைசாய்ந்த இளைஞன்: உடல் கருகி மரக்கட்டையான சோகம் குடிபோதையில் தன்னிலை மறந்து, தண்டவாளத்தில் தலைசாய்ந்த இளைஞன்: உடல் கருகி மரக்கட்டையான சோகம் 3 TRAIN

கீழே விழுந்த இளைஞர் மீது மின்சாரம் பாய்ந்துள்ளது. பின்னர், இளைஞனின் உடல் கருகி புகை வந்துள்ளது. தகவல் அறிந்த சம்பவயிடத்திற்கு மருத்துவ உதவிக்குழுவினர் மற்றும் போக்குவரத்து பொலிசார் விரைந்துள்ளனர்.

0_train-3 குடிபோதையில் தன்னிலை மறந்து, தண்டவாளத்தில் தலைசாய்ந்த இளைஞன்: உடல் கருகி மரக்கட்டையான சோகம் குடிபோதையில் தன்னிலை மறந்து, தண்டவாளத்தில் தலைசாய்ந்த இளைஞன்: உடல் கருகி மரக்கட்டையான சோகம் 0 train 3

அங்கு மரக்கட்டை போல்  கருகிக் கிடந்த, இளைஞரின் மரணம் சந்தேகத்திற்குரியதாக கருதப்படவில்லை என குறிப்பிட்ட பொலிஸ் அதிகாரிகள், அவரை அடையாளம் கண்டு அவர்களின் உறவினர்களுக்கு தெரிவிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வழங்கியுள்ளன.