அத்துமீறி வளவுக்குள் நுழைந்த 10 பேர் அடங்கிய குழுவினர், வீட்டிலிருந்த குடும்பத்தாரை வாளால் வெட்டிக் காயப்படுத்தியதுடன் தடுக்க வந்த பெற்றோரையும் கொட்டன்களால் தாக்கி விட்டுத் தப்பியோடியுள்ளனர் .

index  குடும்பத்தாரைத் தாக்கிவிட்டு தப்பியோடிய வாள்வெட்டு கும்பல் ; ஒருவர் வைத்தியசாலையில் index2இந்தச் சம்பவம் நேற்று இரவு யாழ்ப்பாணம் மீசாலை வடக்கு இராமாவில் முகாம் சாலையில் இடம்பெற்றுள்ளது.

வெட்டுக்காயங்களுக்கு இலக்கான அதே இடத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.