ilakkiyainfo

ilakkiyainfo

`குட் நைட் டார்லிங்…!’ – 60 வருட காதல் வாழ்க்கை; நோயால் விபரீத முடிவெடுத்த மூதாட்டி

`குட் நைட் டார்லிங்…!’ – 60 வருட காதல் வாழ்க்கை; நோயால் விபரீத முடிவெடுத்த மூதாட்டி
November 06
22:13 2019

தங்கள் அன்புக்குரியவர்கள் கஷ்டப்படும்போது என்ன செய்ய வேண்டும் என்ற விழிப்புணர்வை பெறுவதற்காகவே இதை உங்கள் பார்வைக்கு கொண்டுவருகிறேன்.

`மரணத்திலும் உன்னைப் பிரியேன்… அன்பே… கோலிவுட் முதல் பாலிவுட் வரை காதல் படங்களில் தவறாமல் இடம்பெறும் வசனம் இது. பிரிட்டனைச் சேர்ந்த வயதான தம்பதி மரணத்திலும் தாங்கள் பிரியக் கூடாது என எண்ணி தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்தனர்.

ஆனால், விதி வேறுவிதமாக விளையாடியது. `குட் நைட் டார்லிங்!’ 60 வருட காதல் வாழ்க்கையின் இறுதி நிமிடத்தில் மாவிஸ் எக்லெஸ்டன் தன் கணவரிடம் கடைசியாக பேசிய வார்த்தை இதுதான். டென்னிஸ் எக்லெஸ்டன் – மாவிஸ் தம்பதிக்கு 1958-ம் ஆண்டு திருமணம் நடந்தது. குழந்தைகள், பேரன்கள் என அழகாக நகர்ந்துகொண்டிருந்த வாழ்க்கையில் புற்றுநோய் அழையா விருந்தாளியாக வந்தது. கணவர் படும் துயரை இவரால் காணமுடியவில்லை.

கடந்தாண்டு பிப்ரவரி மாதம் இருவரும் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்தனர். இருவரும் விஷத்தை அருந்தியுள்ளனர். தன் கணவருக்கு விஷத்தைக் கொடுத்த மாவிஸ் இறுதியாக , “குட் நைட் டார்லிங்” எனக் கூறி அவருக்கு போர்வையைப் போர்த்தியுள்ளார்.

vikatan_2019-11_0bfdad6c-567e-45b1-b6cb-1e94790ad49e_couple_1 `குட் நைட் டார்லிங்...!' - 60 வருட காதல் வாழ்க்கை; நோயால் விபரீத முடிவெடுத்த மூதாட்டி `குட் நைட் டார்லிங்...!' - 60 வருட காதல் வாழ்க்கை; நோயால் விபரீத முடிவெடுத்த மூதாட்டி vikatan 2019 11 0bfdad6c 567e 45b1 b6cb 1e94790ad49e couple 1 e1573078325701விஷத்தின் தன்மை காரணமாக மாவிஸ் மயக்கமடைந்தார். யாரோ அவரை எழுப்புவதுபோல் இருந்தது. இந்த இரவு இனி விடியப்போவதில்லை என நினைத்திருந்த மாவிஸின் கண்கள் விழித்தது. இது மாவிஸுக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது. தன்னுடைய தற்கொலை முயற்சி தோல்வியில் முடிந்ததை உணர்ந்தார். மருத்துவமனையில் மாவிஸ் மற்றும் அவரின் கணவர் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

டென்னிஸ் தீவிர சிகிச்சையில் இருந்தார். டென்னிஸுக்கு எதிரில் மாவிஸ் படுத்திருந்தார். மரணப்படுக்கையில் இருந்த தாய், தந்தை இருவரையும் அவரின் குழந்தைகள் புகைப்படம் எடுத்தனர். தன் கணவர் கைகளை டென்னிஸ் மெல்ல கைப்பற்றினார். புற்றுநோய் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டிருந்த டென்னிஸ் விஷத்தின் தாக்கத்தினால் மரணமடைந்தார். மாவிஸ் குற்ற உணர்ச்சியில் கண்ணீர் வடித்தார். இது குறித்த தகவல் காவல்நிலையத்தில் தெரிவிக்கப்பட்டது. மருத்துவமனையில் சிகிச்சை முடிந்த பின்னர் 80 வயதான மாவிஸ் கைது செய்யப்பட்டார்.

காவல்துறையினரிடம் அவர் அளித்த வாக்குமூலத்தில், “நான் என் கணவருடன் இருக்க விரும்பினேன். அவரின் துயரத்தை நீங்கள் பார்த்திருந்தால் தெரிந்திருக்கும். விலங்குகள்கூட அதுபோன்ற வலிகளுடன் இருக்க நீங்கள் விரும்ப மாட்டீர்கள். நான் செய்ததற்கு வருத்தப்பட வேண்டாம், என்ன நடந்தது என்பதை மாற்ற மாட்டேன்” என்றார். நீதிமன்ற விசாரணைக்குப் பின்னர் சிறைக்கு அனுப்பப்பட்டார். இந்தாண்டு செப்டம்பரில் மாவிஸ் விடுதலையானார்.

vikatan_2019-11_fdded70c-cb17-4384-8f44-0132d31b66d4_couple `குட் நைட் டார்லிங்...!' - 60 வருட காதல் வாழ்க்கை; நோயால் விபரீத முடிவெடுத்த மூதாட்டி `குட் நைட் டார்லிங்...!' - 60 வருட காதல் வாழ்க்கை; நோயால் விபரீத முடிவெடுத்த மூதாட்டி vikatan 2019 11 fdded70c cb17 4384 8f44 0132d31b66d4 couple e1573078410386டென்னிஸ் எக்லெஸ்டன் – மாவிஸ் இருவரும் மருத்துவமனையில் இறுதியாக இணைந்திருந்த புகைப்படத்தை அவரின் மகள் ஜாய் தனது ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். இதுகுறித்துப் பேசிய ஜாய், “ என்னுடைய 80 வயது தாய் ஒரு கொலைகாரரைப்போல் இருக்கிறாரா? என் தாய், தந்தை இருவரும் ஒன்றாக இருந்த அந்தப் புகைப்படத்தை உங்கள் பார்வைக்கு அளிக்கின்றேன். இது வெளியிடுவதற்கான காரணம், தங்கள் அன்புக்குரியவர்கள் கஷ்டப்படும்போது என்ன செய்ய வேண்டும் என்ற விழிப்புணர்வை பெறுவதற்காகவே இதை உங்கள் பார்வைக்கு கொண்டுவருகிறேன்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட என் தந்தையுடன் தற்கொலைக்கு முயன்றதாக அவர் மீது கொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. என் தந்தை வலியால் துடிப்பதை அவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. 60 வருட காதல் வாழ்க்கையில் அவருக்காக நிறைய விஷயங்களைத் தியாகம் செய்தார். இறுதியாக தன் உயிரையும் தியாகம் செய்ய முடிவு செய்தார். நான் அந்த புகைப்படத்தை எடுத்த 20 நிமிடத்தில் என் தந்தை மரணமடைந்துவிட்டார். மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே இதைப் பகிர்ந்தோம். இது சட்டத்தை மாற்ற எங்களுக்கு உதவுமானால் அது மதிப்புக்குரியதாக இருக்கும்” என்றார்.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

November 2019
M T W T F S S
« Oct    
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  

Latest Comments

இந்த கோமாளி சர்வ தேசத்துக்கு எதோ செய்தி சொல்வதாக கூறி இந்த தேர்தலில் போட்டியிடடான் , ஆனால் வடகிழக்கு [...]

காஷ்மீர் மக்களை உரிமையுடன் இந்த மோடி ( மோசடி ) நடத்த வேண்டும் , இலங்கை தமிழர்கள் கருணை காட்ட [...]

எந்த தை பொங்கலுக்கு , எந்த தீபாவளிக்கு தீர்வு வரும் அதை முதலில் சொல்லுங்க ? புலிகள் [...]

17ம் திகதிக்கு பின் இங்கு , பணம் காயும் , வாழைப்பழ குலையும் சேமிக்கும் இடமாக மாற்றப்பட [...]

இங்கு வேலை செய்யும் தமிழர்கள் நவீன கால அடிமைகள் , இந்த உணவகத்தை புறக்கணிப்பதுடன் [...]

இலங்கை பத்திரிகைகள்

English News