ilakkiyainfo

ilakkiyainfo

குரங்கின் கைப் பூமாலையாகிய வட மாகாணசபை நிர்வாகம்!! – வி. சிவலிங்கம் (சிறப்புக் கட்டுரை)

குரங்கின் கைப் பூமாலையாகிய வட மாகாணசபை நிர்வாகம்!!  – வி. சிவலிங்கம் (சிறப்புக் கட்டுரை)
June 20
01:37 2017

சுதந்திரம் பெற்ற காலம் முதல் இற்றை வரை தமிழரசுக் கட்சியும், இக் கட்சி போட்ட மாறு வேடங்களும், நடத்திய எதிர்ப்பு அரசியலும் அதன் முடிவை நோக்கிச் செல்வதையே சமீபத்தைய மாகாண சபை நிர்வாகச் சீர்கேடுகள் உணர்த்துகின்றன.

வெறுமனே தமிழ்க் குறும் தேசியவாத துணையோடு அரசியலை நடத்தி பாராளுமன்ற மற்றும் உள்ளுராட்சித் தேர்தல்களில் அரச சார்பு சக்திகள் அல்லது துரோகிகள் அதிகாரத்தைக் கைப்பற்ற இடமளிக்கக் கூடாது எனக் கூறி அதிகாரத்தைக் கைப்பற்றி இறுதியில் அந்த நிர்வாகங்களையும் ஊழலுக்குள் தள்ளியுள்ளதை மேலும் விசாரணைக் குழுக்களை அமைத்தால் அம்பலமாகிவிடும்.

வெறுமனே எதிர்ப்பு அரசியலை நடத்தினார்களே தவிர, ஓர் வலுவான நிர்வாகத்தை நடத்தம் ஆற்றல் மிக்கவர்களை வளர்க்கவில்லை.

சிங்களப் பகுதிகளில் எவ்வாறு பௌத்த சிங்கள பேரினவாத அரசியல் ஊழல்வாதிகளை உற்பத்தி செய்து, அரசைக் கைப்பற்றி குடும்ப அதிகாரத்திற்கு எடுத்துச் சென்றதோ அதே நிலை தமிழ்ப் பகுதிகளில் காணப்படுகிறது.

மாகாணசபை நிர்வாகங்களில் அதன் அமைச்சர்களின் உறவினர்களே அதிகம் காணப்படுகின்றனர். இதனால் பிரதேச சபை உறுப்பினர் முதல் முதல் பாராளுமன்ற உறுப்பினர் வரை ஊழல் துர் நாற்றம் வீசுகிறது.

இதற்குக் காரணம் தமிழரசுக் கட்சிக்குள்ளும், கூட்டமைப்பிற்குள்ளும் ஊழலே கொடிகட்டிப் பறப்பதாகும். இச் சீர்கேடுகளை அம்பலப்படுத்த வேண்டிய ஊடகங்களும், ஊழல் சக்திகளின் கட்டுப்பாட்டிற்குள் உள்ளன.

இதனால் மக்கள் இக் கொடுமைகளை அறிய முடியாது இருட்டிற்குள் வைக்கப்பட்டுள்ளனர். தற்போது ஊழலைப் பங்கீடு செய்வதில் ஏற்பட்ட தகராறுகளே இவற்றை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளன.

கூட்டமைப்பு என்ற இணைப்பிலுள்ள கட்சிகள் மத்தியிலே தனி நபர் முரண்பாடுகள் அதிகரித்துச் சென்றன.

பாராளுமன்ற, பிரதேச சபை உறுப்பினர் பதவிகளுக்கு மிகவும் கடுமையான போட்டிகள் எழுந்தன. இவற்றைக் கட்டுப்படுத்த கூட்டமைப்பின் தலைமையால் முடியவில்லை.

தேர்தல் அதிகாரத்தைத் தன் கையில் வைத்திருக்கும் தமிழரசுக் கட்சித் தலைமை மிகவும் அரசியல் வங்குறோத்து நிலமையில் உள்ளது.

அதிலுள்ள முக்கியஸ்தர்கள் அரசாங்க சலுகைகளிலும், புலம்பெயர் அமைப்புகளிலுள்ள சில சந்தர்ப்பவாத, சுயநலமிகளின் கொடுப்பனவுகளிலும் தங்கியுள்ளார்கள்.

தொண்டன் முதல் தலைவன் வரை ஊழலுக்குச் சோரம் போய்விட்ட நிலையில் யார் யாரைக் கட்டுப்படுத்துவது? அல்லல்படும் மக்கள் பற்றித் தேர்தல் காலத்தில் மட்டும்தான் நீலிக் கண்ணீர் வடிப்பார்கள்.

சமீபத்திய வட மாகாணசபை முறைகேடுகள் அரசியல் கட்சிகள், அரசியல்வாதிகள் என்போரின் கொருர முகத் தோற்றங்களை தெளிவாக காட்டியுள்ளது.

C.V.-Wigneswaran குரங்கின் கைப் பூமாலையாகிய வட மாகாணசபை நிர்வாகம்!!  - வி. சிவலிங்கம் (சிறப்புக் கட்டுரை) குரங்கின் கைப் பூமாலையாகிய வட மாகாணசபை நிர்வாகம்!!  - வி. சிவலிங்கம் (சிறப்புக் கட்டுரை) Cமுதலமைச்சர் தரும் விளக்கம் என்ன?

முதலமைச்சர் தனது பதவி குறித்து ஓர் மாயைக்குள் வாழ்கிறார். தாம் மக்களால் தெரிவு செய்யப்பட்ட முதலமைச்சர் என்ற புதிய விளக்கத்தைத் தருகிறார்.

இதன் மூலம் தனது பதவியை அசைக்க முடியாது என உணர்த்துகிறார். தன்னை ஏனைய உறுப்பினர்களிலிருந்தும் வேறுபடுத்த விரும்புகிறார்.

மாகாண சபைத் தேர்தலில் ஓர் பெயர்ப் பட்டியலைச் சமர்ப்பித்து அதன் அடிப்படையில் போட்டியிட்டார்கள். விருப்பு வாக்குகளின் அடிப்படையில் அவர் அதிக வாக்குகளைப் பெற்றார்.

அவரே முதலமைச்சர் என தேர்தல் காலத்தில் கூறப்பட்டிருக்கலாம். ஆனால் அவர் சட்ட அடிப்படையில் முதலமைச்சர் அல்ல.

பதிலாக அவரும் ஒட்டு மொத்த 38 உறுப்பினர்களில் ஒருவரே. இந்த 38 பேரில் பெரும்பான்மையினரின் நம்பிக்கையைப் பெற்ற காரணத்தால் அவர் முதலமைச்சராக தெரிவு செய்யப்பட்டார்.

எனவே முதலமைச்சர் என்பவர் பெரும்பான்மை உறுப்பினர்களின் நம்பிக்கையைப் பெறும் வரையில்தான் முலமைச்சராக அமர முடியும்.

அவர் நாட்டின் ஜனாதிபதி போல் தாமும் தெரிவு செய்யப்பட்டதாக கருதுவது மிக அறியாமையாகும். மக்கள் தமது இறைமை அதிகாரத்தை அவருக்கு மட்டும் தனியாக அளித்தால் அதுவும் அரசியல் அமைப்பு அனுமதித்தால் மட்டுமே அவ்வாறு எண்ண முடியும். கோர முடியும்.

அவர் ஓய்வுபெற்ற நீதிபதி என்ற வகையில் இவற்றைப் புரிந்திருக்க நியாயமுண்டு. ஆனால் அவரது நியாயங்கள் அந்தக் கதிரையை விட்டு விலக முடியாத அளவிற்கு அதிகார மமதை அல்லது அவரது மொழியில் நான் என்ற அகங்காரம், ஆணவம் அவரைக் கௌவ்விக் கொண்டுள்ளதா? என எண்ணத் தோன்றுகிறது.

அவர் உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்திருக்கலாம். ஆனால் அவரிடம்; வினைத் திறன் மிக்க நிர்வாகத்தை நடத்தும் ஆற்றல் இருக்கவில்லை என்பதை 3 வருட செயற்பாடுகள் சாட்சியமாக அமைகின்றன.

மாகாண சபையில் அவரது உரையும்,குழப்பங்களும்

முதலமைச்சரின் உரையின் பிரகாரம் பார்க்கையில் இவ் ஊழல்கள் குறித்து அவர் நன்கு அறிந்திருந்தார் என்பது நன்கு புரிகிறது.

தான் ‘பன்டோரா’ பெட்டியைத் திறக்க வேண்டாமென பல தடவைகள் வற்புறுத்தியும் அவர்கள் திறந்தார்கள்.

தற்போது வேண்டத் தகாத பலவும் வெளியே வந்துள்ளதாக விசனப்படுகிறார். அத்துடன் அக் குற்றச்சாட்டுகளைத் தன்னிடம் சமர்ப்பித்திருந்தால் தான் விசாரித்து முடிவு செய்வதாகக் கூறியிருந்தும் அவர்கள் பத்திரிகைகளில் வெளியிட்டு தமது பிரச்சாரத்தை நடத்தியதாக் குறிப்பிடுகிறார். ஆனால் இவர் விசாரணை அறிக்கையை மூடி மறைத்ததாக எதிரணியினர் கூறுகின்றனர்.

சில அமைச்சர்கள் சபையின் நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாக செயற்படாமல், வேறு நிகழ்ச்சி நிரலில் செயற்படுவதாகவும், மத்திய அரசு இவர்களுக்கு உடந்தையாக இருப்பதாகவும் அதன் காரணமாக தம்மைத் திட்டுவதற்கும் அவர்கள் தயங்குவதில்லை எனவும் கூறி 5 அமைச்சர்களும் வெளிப்படையாகச் செயற்படவில்லை எனவும் குற்றம் சுமத்துகிறார்.

இவற்றை மக்களிடம் கூறுவதற்கு அவருக்கு 3 வருடங்கள் தேவைப்பட்டுள்ளது.

முதலமைச்சர் மக்களின் நலன்களில் கவனம் செலுத்தாது பாராளுமன்ற உறுப்பினர்களின் அரசியல் பணிகளைத் தனது கையில் எடுத்துள்ளார் என பல சமூக நிறுவனங்கள், ஜனநாயக சக்திகள் அடிக்கடி தெரிவித்து வந்தன. இவை யாவற்றையும் அசட்டை செய்த அவர் தற்போது தனது அமைச்ர்களைக் குறை கூறுவது அவரது இயலாமையாகும்.

தனக்கு ஆதரவாக ஓர் அமைச்சர் உள்ளார் எனக் கூறி அவர்மீது ஊழல் குற்றச்சாட்டுகளை முன் வைத்து இறுதியில் இன்னொருவரையும் வெளியேற்றியுள்ளதாகக் கூறி தன்னிடம் தராமல் பத்திரிகைகளுக்கு அனுப்பி அமர்க்களப்படுத்தியுள்ளதாக கூறுகிறார்.

தனிப்பட்ட விருப்புகள், பேராசைகளுக்கு எம்மை அடிமைப்படுத்திக் கொண்டால் இதுதான் விளைவுகளாக அமையும் என உபதேசம் வைக்கிறார்.

அவரது நிர்வாகம் படு மோசமாக அமைந்திருந்தது என்பதை அவரது வார்த்தைப் பிரயோகங்கள் ஒவ்வொன்றும் உணர்த்தின. இவ்வாறான பிரச்சனைகளின் போது சபையிலிருந்து ஒர் தெரிவுக் குழுவை அமைத்து விசாரணைகளை நடத்துமாறு கோருவதுதான் வழமை.

ஆனால் அவர் சபைக்கு வெளியிலுள்ளவர்களை நியமித்தமை மேலும் பல சந்தேகங்களைத் தருகிறது. அத்துடன் சட்டச் சிக்கல்களை ஏற்படுத்த்லாம் எனவும் கருதப்படுகிறது.

அவருக்கு எதிராக தற்போது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்படுவதும், அவரது கட்டுப்பாட்டிலுள்ள அமைச்சுப் பொறுப்புகளிலும் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக சிறீதரன் ( பா. உ ) குறிப்பிடுவது மேலும் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

அவ்வாறானால் கூட்டமைப்பு இதுவரை மௌனமாக இருந்தது ஏன்? அவர்களும் இணைந்து இதனை மறைத்து இப்போது அவற்றைக் கூறுவதேன்? பலரின் ஊழல்கள் அம்பலமாவதற்கான கதவுகள் திறக்கப்பட்டுள்ளதால் ஏற்பட்டுள்ள பயம் காரணமாகவே சிறீதரன் பேசத் தொடங்கியுள்ளதாக தெரிகிறது.

 சிறீதரன் ( பா உ) கூறுவதென்ன?

 

கல்வி அமைச்சராகவுள்ள குருகுலராஜா அவர்களைத் தேர்தலில் நிறுத்தியது சிறீதரனே எனக் கூறப்படுகிறது. இந்த ஊழல்களின் இருப்பிடமாக அவரை மாற்றியதும் இவரே எனக் கூறப்படுகிறது. இப் பின்னணியில் சிறீதரன் எழுப்பும் சந்தேகங்களைப் பார்க்கலாம்.

விசாரணைக் குழு தொடர்பாக அவர் எழுப்பி வரும் கேள்விகள் மிகவும் விசித்திரமானவை. ஒரு பாராளுமன்ற உறுப்பினராக செயற்படும் தகுதி உண்டா? என எண்ணத் தோன்றுகிறது.

முதலமைச்சரால் நியமிக்கப்பட்டுள்ள குழு பல மாதங்களாக விசாரணைகளை நடத்தியுள்ளது. இவ் விசாரணைக் குழு அங்கத்தவர்களின் விபரங்கள், விசாரணை அம்சங்கள் போன்ற விபரங்கள் பலரும் ஏற்கெனவே அறிந்தவை.

இந் நிலையில் விசாரணைக் குழு அங்கத்தவர்களின் தகைமை குறித்து மிக மோசமான சந்தேகங்களை இப்போது எழுப்புகிறார். அவர்களைத் தனிப்பட்ட முறையில் சாடுகிறார்.

அதில் அங்கம் வகித்த ஓய்வு பெற்ற நீதிபதிகள் குறித்துக் குறிப்பிடுகையில் இவர்கள் ஓய்வுபெற்ற நீதிபதிகள் என்பதால் நிறைவான மன நிலையில் இருந்தார்களா?

ஓய்வு பெற்ற பின்னரும் நீதியோடு அதே மனநிலையில் இருந்தார்களா? முன்னாள் நீதிபதிகள் பலர் அரசியல் கட்சிகளில் உள்ளனர் எனக் கூறி அரசியல் சாயம் பூசி விசாரணை செய்தவர்களின் நேர்மையில் சந்தேகங்களை எழுப்புகிறார்.

உரிய வேளையில் இவற்றைப் பேசாமல் பல மாதங்கள் கடந்த பின், விசாரணைகள் முடிந்த பின், அறிக்கை வெளி வந்த பின் பேசுவதன் நோக்கமென்ன? இதுவே அவரது பாராளுமன்றத் தகைமை பற்றிய கேள்வியாக மாறுகிறது.

விசாரணைக் குழுவின் இன்னொரு அங்கத்தவரான முன்னாள் அரசாங்க அதிபர் நில மோசடிகளில் ஈடுபட்டிருந்தார் எனவும் கூறி மொத்தத்தில் விசாரணை அறிக்கையின் கவனத்தை அதனை நடத்திய அங்கத்தவர்களின் பிரச்சனையாக மாற்ற முயற்சிக்கிறார்.

எழுப்பிய குற்றங்கள் குறித்து அவர் மௌனம் காட்டியது ஊழலோடு அவருக்கும் தொடர்புள்ளதை உணர்த்துகிறது.

அமைச்சில் இடம்பெறும் கொடுக்கல் வாங்கல்களை ஆராய்வதற்கு மத்திய அரசின் மேற்பார்வையில் உள்ள பொதுக் கணக்காய்வுக் குழு, மாகாண சபையின் கணக்காய்வுக் குழு என்பன கண்காணிக்கின்றன. இவர்களைத் தாண்டி ஊழல் நடைபெற வாய்ப்பு இல்லை என சப்பைக் கட்டுப் போடுகிறார்.

இதன் காரணமாக இவ் விசாரணைகளின் பின்னால் வேறொரு பகைப்புலம் இருப்பதாகவும், விசாரணைக் குழு வேறு சக்திகளால் இயக்கப்பட்டுள்ளதாகவும், விசாரணை அறிக்கை ஊடகங்களில் எவ்வாறு வெளிவந்தது? யார் கொடுத்தார்கள்? எனவும் சந்தேகங்களை எழப்பி அரசாங்கத்தின் தலையீடாக மாற்ற முயற்சித்துள்ளார்.

ரணிலின் அரசியலில் காணப்படும் சூழ்ச்சிகள் சம்பந்தமாகவும் பேசுகிறார். ஆனால் தமிழரசுக் கட்சி இப் பிரச்சனை தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில் மறைத்து வைத்த அறிக்கை பத்திரிகைகளில் வெளிவந்த பின்னரே முதலமைச்சர் அதனை வெளியிட்டதாக கூறுகிறது.

அவ்வாறானால் அந்த அறிக்கையை யார் வெளியிட்டது? சிறீதரன் யாரை ஏமாற்ற முயற்சிக்கிறார்? ஊழலின் தாற்பரியங்கள், தாக்கங்கள் பற்றி எதுவித வார்த்தைகளும் தெரிவிக்காமல் ஊழலை விசாரித்தவர்கள், ஊழலை விசாரிக்க உத்தரவிட்டவர் போன்றோர் பற்றிப் பேசி மக்களின் கவனத்தை திருப்பும் அவர், பொதுமக்களை எவ்வளவு மட்டமாக எண்ணியுள்ளார் என்பதற்கு வேறு என்ன சாட்சியம் வேண்டும்?

பத்திரிகைச் செய்திகளைப் படித்த மக்கள் இதற்காகவா அமைச்சர்களை பதவி நீக்கம் செய்ய வேண்டும்;? என மக்கள் அங்கலாய்ப்பார்கள் எனவும் கூறி ஊழல் நடவடிக்கைகள் மிகவும் அற்பமானவை என கூற விழைகிறார்.

ஊழல் சம்பவம் ஒன்றினைப் பற்றி தெரிவிக்கும் போது முதலமைச்சர் கலந்துகொண்ட நிகழ்வில் இடம்பெற்றதாக கூறப்படும் ஊழல் குறித்து தெரிவிக்கையில், அந்த நிகழ்வில் தாம் கலந்து கொள்ளவில்லை என முதலமைச்சர் கூறுகிறார்.

ஆனால் விசாரணைக் குழு அவர் கலந்து கொண்டதாக கூறுகிறது. எனவே உண்மைக்கு மாறான செய்திகளைக் கொண்டுள்ள அறிக்கையின் மிகுதிச் செய்திகளில் எவ்வளவு உண்மையுள்ளது? எனக் கேள்வி எழுப்புகிறார்.

உதாரணமாக வட்டக்கச்சியிலுள்ள ‘புழுதி ஆறு’ பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ‘ஏற்று நீர்ப்பாசன திட்டம்’ மாகாண சபையின் ஒப்புதலுடன் நிறைவேற்றப்பட்டது எனவும், எனவே அதில் ஏதாவது முறைகேடுகள் இருப்பின் தனியான அமைச்சரின் தலையில் போடுவது தவறு எனவும், அது அமைச்சர்களின் கூட்டுப் பொறுப்பு என்பதால் அவர்களே பொறுப்பாளிகள் என்கிறார்.இதனையே குருகுலராஜாவும் கூறுகிறார்.

விசாரணைக் குழு அங்கத்தவர்களின் சுயாதீனத்தினைக் கேள்விக்குட்படுத்திய சிறீதரன் முதலமைச்சரின் கட்டுப்பாட்டில் மேலும் 7 அமைச்சுப் பொறுப்புகள் உள்ளதாகவும், அவரது அமைச்சிற்குள்ளும் நில மோசடிகள் இடம்பெற்றுள்ளதாகவும் கூறி அவரது அமைச்சையும் விசாரிக்க வேண்டும் என்கிறார்.

ஓருபாராளுமன்ற உறுப்பினர் தனது கட்சியினால் நியமிக்கப்பட்ட நிர்வாகத்தினைப் பகிரங்கமாக குற்றம் சாட்டுவது கட்சியின் பலவீனத்தை எடுத்துக் காட்டுகிறது.

அதனைக் கட்சிக்குள் கூறாமல், உரிய நடவடிக்கைகளை எடுக்காமல் தற்போது கூறுவது சிறீதரனின் பாராளுமன்ற தகைமையில் சந்தேகத்தை எழுப்புகிறது.

 

cm-cartoon குரங்கின் கைப் பூமாலையாகிய வட மாகாணசபை நிர்வாகம்!!  - வி. சிவலிங்கம் (சிறப்புக் கட்டுரை) குரங்கின் கைப் பூமாலையாகிய வட மாகாணசபை நிர்வாகம்!!  - வி. சிவலிங்கம் (சிறப்புக் கட்டுரை) cm cartoon

ஊழலை மறைக்க அரசியல் முகமூடி

வட மாகாண சபை உருவாக்கப்பட்ட வேளையில் 13 வது திருத்தம் போதவில்லை எனப் போலிக் காரணங்களைக் கூறி புலிகளுடன் ஒத்தியைந்து தேர்தலைப் பறக்கணித்த கூட்டமைப்பினர்,

-அதிகாரம் போதவில்லை என்பதை உலக நாடுகளுக்கு உணர்த்தவே தேர்தலில் ஈடுபடுவதாகக் கூறி பதவிகளைப் பெற்றார்கள்.

-அதன் பின்னர் ஆளுனரைக் குற்றம் கூறி தமது இயலாமையை மறைத்தார்கள்.

-அதிகாரம் போதாது எனக் கூறியவர்களால் இவ்வளவு பெரும் தொகையான பணத்தைக் கொள்ளையிட எவ்வாறு முடிந்தது?

ஊழல் மோசடி விசாரணைக் குழு வட மாகாண சபையைக் குழப்புவதற்கான உள் நோக்கங்களைக் கொண்டிருந்ததாக சிறீதரன் கூறுகிறார்.

அவ்வாறானால் அரசின் ஆலோசனையுடன்தான் முதலமைச்சர் விசாரணைக் குழுவினை அமைத்தாரா? சிறீதரனும், முதலமைச்சரும் அரசின் மீது குற்றம் சாட்டுகிறார்கள்.

அவ்வாறானால் யார் கூறுவது உண்மை? சிறீதரனின் ஊழல் மற்றும் பல தில்லுமுல்லுகளை உளவுத்துறை அறிந்துள்ளதால் அவரை அவர்கள் நாலாம் மாடியில் விசாரித்துள்ளனர்.

அதன் பின்னர் அவரும் உளவுப் பிரிவின் முகவராக தொழிற்படுவதாக செய்திகள் கசிந்திருந்தன. அவ்வாறானால் யார் அரசுடன் ஒத்துழைக்கிறார்கள்? முதலமைச்சருக்கும், ரணிலுக்குமிடையே ஆகாது என பலரும் நம்புகின்றனர். அவரும் அரசுக்கு எதிராகப் பேசுகிறார். ஓன்றும் புரியவில்லையே!

இதன் பின்னணியில் அரசு இருப்பதை மறைத்து மக்களின் பார்iவையைத் திசை திருப்பும் ஒரு முயற்சியே இந்த விசாரணை எனவும், முதலமைச்சர் அவரே விரித்த வலையில் வீழ்ந்துள்ளதாகவும் சிறீதரன் கூறுகிறார்..

பாராளுமன்ற உறுப்பினரான அவரின் கருத்துக்களைப் பார்க்கும்போது பொது மக்களின் பணம் சூறையாடப்பட்டுள்ளது.

எனவே குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதற்குப் பதிலாக அவரது கவனம் விசாரணைக் குழு மேல் திரும்பியிருப்பது பலமான சந்தேகங்களை எழுப்புகிறது.

அவர் சார்ந்துள்ள தமிழரசுக் கட்சி இவை குறித்து இதுவரை மௌனமாக இருப்பதும், அமைச்சர் குருகுலராஜா தனது ராஜினாமாவை முதலமைச்சரிடம் சமர்ப்பிப்பதற்குப் பதிலாக கட்சியிடம் கொடுத்திருப்பதும், அதனைக்கட்சித் தலைவர்மாவை முடக்கி வைத்து முதலமைச்சரை நம்பிக்கையில்லாத் தீர்மானம் மூலம் அகற்றுவதாக மிரட்டுவதும் ஜனநாயக விரோதமானது மட்டுமல்ல ஊழலுக்குத் துணைபோவதுமாகும்.

அரசியல் அமைப்பு நெருக்கடி

மாகாண சபைகள் சுயாதீனமாக இயங்கும் வகையிலும், வழங்கப்பட்ட அதிகாரங்கள் மத்திய அரசால் மீளப் பெறாத வகையிலும் அதிகார பரவலாக்கம் தேவை என கூட்டமைப்பு வலியுறுத்துகிறது. ஆனால் இவர்களே அதன் சுயாதீனத்தை விட்டுக் கொடுத்து மத்திய அரசின் தலையீட்டைக் கோரியுள்ளனர்.

முதலமைச்சர் மீது தமக்கு நம்பிக்கை இல்லை எனில் சகலருடனும் பரஸ்பர பேச்சுவார்;தைகளை நடத்தி சபைக்குள் ஒரு சுமுகமான தீர்வுக்குச் சென்றிருக்க வேண்டும். பதிலாக ஆளுனரிடம்சென்று முதலமைச்சர் மீது நம்பிக்கை இல்லை எனக் கூறி அகற்றும்படி கோருவது உள் விவகாரங்களில் மத்திய அரசின் தலையீட்டை வலிந்து கோருவதாகும்.

முதலமைச்சர் தொடர்பான பிரச்சனை சட்டப் பிரச்சனை அல்ல. அது நிர்வாக சிக்கல்கள். இச் சிறிய பிரச்சனையைப் பேசித் தீர்க்க முடியாதவர்கள் ஆளுனரிடம் செல்வது சுயாதீனத்தை வலிந்து விட்டுக் கொடுத்து எதிர்காலத்திலும் மத்திய அரசு தலையிடும் வாய்ப்பை இவர்களே ஊக்குவிப்பதாக உள்ளது. அதாவது தமிழ் மக்களின் அடிப்படை அபிலாஷைகளை தமது சுயநலன்களுக்காக விற்பதற்கு ஒத்ததாகும்.

TNA-CVW-NPC குரங்கின் கைப் பூமாலையாகிய வட மாகாணசபை நிர்வாகம்!!  - வி. சிவலிங்கம் (சிறப்புக் கட்டுரை) குரங்கின் கைப் பூமாலையாகிய வட மாகாணசபை நிர்வாகம்!!  - வி. சிவலிங்கம் (சிறப்புக் கட்டுரை) TNA CVW NPCஆளுனர் சந்திப்பும் குழறுபடிகளும்

மொத்த அங்கத்தவர் தொகையான 38பேரில் 21 பேர் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் ஒப்பமிட்டு ஆளுனரிடம் கையளித்த போது அவர் என்ன காரணங்களால் நம்பிக்கை இல்லை?எனக் கேட்டதோடு அதற்கான காரணங்களைத் தரும்படி கேட்டார்.

தனக்கு எதிராகவும் கடந்த காலத்தில் அவ்வாறான தீர்மானம் கொண்டு வந்தார்கள் எனவும், இருப்பினும் அவர்கள் அதற்கான காரணங்களை எழுத்தில் முன்வைத்தார்கள் எனவும்கூறினார்.

கையைப் பிசைந்து கொண்டிருந்த சிவஞானம் அவர்கள் தம்மில் பெரும்பான்மையோருக்கு முதலமைச்சரில் நம்பிக்கை இல்லை எனக் கூறி பெரும்பான்மை என்பதையே அவரது காரணமாக முன்வைத்தார்.

ஆனால் முதலமைச்சர், அமைச்சர்களைப் பதவி நீக்கம் செய்வதற்கு காரணங்கள் இருந்தன.

அவர்கள் மீது விசாரணை நடத்தியே அதன் பிரகாரம் பதவியை நீக்கினார். ஆனால் முதலமைச்சரைக்காரணங்கள் இல்லாமல் அகற்றுவதற்கு பெரும்பான்மை மட்டும் போதுமா? அவ்வாறானால் முதலமைச்சர் எவ்வாறு சுயாதீனமாக இயங்குவது? அவர் நம்பிக்கையில்hத் தீர்மானத்தை என்னேரமும் எதிர்பார்த்தபடி செயற்பட முடியுமா? உறுப்பினர்களின் நிர்வாகம் தொடர்பான தகுதியற்ற நிலமைகளையே இவை காட்டுகின்றன.

தமிழரசுக் கட்சி அஸ்தமனத்தை நோக்கி…

மாகாண சபை நிர்வாக ஊழல்களும், அதனைத் தொடர்ந்து தமிழரசுக் கட்சி நடந்து கொள்ளும் முறைகளும் அதன் எதிர்ப்பு அரசியல் வழிமுறைகளின் விளைவுகளாகும்.

அரசியல் எதிரிகளின் கைகளில் அதிகாரங்கள் போகக் கூடாது என எண்ணிய அளவிற்கு நிர்வாகம் சீராக மக்களுக்கு சேவை புரிய வேண்டும் என்ற திட்டம் அக் கட்சிக்குள் இருந்ததில்லை.

இதனால் ஜனநாயக சக்திகளுக்கான கதவுகள் அடைக்கப்பட்டன. தமிழரசுக் கட்சியினதும், கூட்டமைப்பினதும் உள் கட்டமைப்பு ஊழல் சக்திகளின் இருப்பிடமாக மாறி அதன் உள் பண்புகளில் பல மாற்றங்கள் ஏற்பட்டது.

தற்போது அரசின் அங்கமாக உள்ளதால் எதிர்ப்பு அரசியலைப் பேசி மக்களை ஏமாற்றவும் முடியவில்லை.

அவை தற்போதுமக்களால் நிராகரிக்கப்பட்ட பிற்போக்கு தேசியவாத சக்திகளின் ஆயுதமாக உள்ளது. இதனால் அதிகார இருப்பைக் காப்பாற்றுவதற்கான தந்திரங்களே இறுதி வழிமுறையாக உள்ளது.

இவ் ஊழல் பிரச்சனைகளில் தமிழரசுக் கட்சி நடந்து கொள்ளும் முறை மிகவும் பரிதாபகரமானது. விசனிக்கத் தக்கது. அதன் அரசியல் வங்குறோத்து துலாம்பரமாக தெரிகிறது.

npc-5a குரங்கின் கைப் பூமாலையாகிய வட மாகாணசபை நிர்வாகம்!!  - வி. சிவலிங்கம் (சிறப்புக் கட்டுரை) குரங்கின் கைப் பூமாலையாகிய வட மாகாணசபை நிர்வாகம்!!  - வி. சிவலிங்கம் (சிறப்புக் கட்டுரை) npc 5aதமிழரசுக் கட்சி அறிக்கை

சமீபத்தில் கட்சியின் உதவிச் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான சுமந்திரன் கட்சியின் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் முதலமைச்சருக்கு மிகவும் நெருக்கமான   ஐங்கரநேசனுக்கு எதிராக முதலமைச்சர் எதுவித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்ததால் தாம் முதலமைச்சரை வற்புறுத்தி தீர்மானம் நிறைவேற்றியதாக கூறுகிறார்.

ஆனால் ஐங்கரநேசனைப் பாதுகாக்கவே சகல அமைச்சர்களுக்கும் எதிராக விசாரணை நடத்தப்பட்டதாக சுமந்திரன் குறிப்பிடுகிறார்.

அவ்வாறானல் இதர அமைச்சர்களுக்கு எதிராகவும் அவர் விசாரணை நடத்தியதில் என்ன தவறு? அவர்களின் ஊழல் குறித்தும் அவரிடம் தகவல்கள் இருந்திருக்கலாம் அல்லவா?

அமைச்சர் ஐங்கரநேசனைப் பாதுகாப்பதற்கு ஏனைய அமைச்சர்கள் மீதும் விசாரணை நடத்தினால் அவர் எவ்வாறு ஐங்கரநேசனைப் பாதுகாக்க முடியும்? அமைச்சர் குருகுலராஜா அதிகார வரம்பை மீறுவது அதிகார துஷ்பிரயோகம் அல்லவா? அதிகார துஷ்பிரயோகம் என்பதும் ஊழலின் வடிவம் தானே.

ஊழலையும்,குற்றவாளிகளையும் காப்பாற்ற முதலமைச்சர் விசாரணை அறிக்கையைத் தாமதப்படுத்தினார் அல்லது மறைத்தார் என அவ் அறிக்கை குற்றம் சாட்டுகிறது.

குற்றவாளிகளையும், குற்றங்களிலிருந்து விடுவிக்கப்பட்டவர்களையும் ஒன்றாக பதவி நீக்கம் செய்வது குற்றங்களை நீர்த்துப் போகச் செய்து குற்றவாளிகளைக் காப்பாற்றும் நடவடிக்கை என அவ் அறிக்கை மேலும் கூறுகிறது.

அவ்வாறானால் பொதுப் பணத்தைக் கொள்ளையடித்தவர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டதும் அக் குற்றங்களிலிருந்து தப்பியுள்ளார்கள் என அர்த்தம் கொள்ள முடியுமா? முதலில் பதவியைப் பறித்த பின்னர்தான் குற்ற விசாரணைக்கு உத்தரவிட முடியும்.

இதனை எவ்வாறு குற்றங்களை நீர்த்துப் போகச் செய்யும் முயற்சி எனக் கூற முடியும்? நால்வரையும் ஒன்றாக நீக்குவது என்பது குற்றங்களை மழுங்கடிக்கும் செயல் என தமிழரசுக் கட்சித் தலைவர் முதலமைச்சரிடம் தெரிவித்ததாக கூறுவது அர்த்தம் அற்றது.

குற்றம் சாட்டப்பட்ட இருவரையும் பதவியிலிருந்து விலகுமாறும், ஏனைய இருவர் மீதும் விசாரணைகள் நடத்தப்படவுள்ளதால் ஓய்வில் அல்லது விடுமுறையில் செல்லுமாறும் முதலமைச்சர் கூறியுள்ளார்.

இது எவ்வாறு தவறாக இருக்க முடியும்? அவர்களைப் பதவியிலிருந்து விலகுமாறு கோரவில்லையே. அவர்கள் பதவியிலிருந்தால் விசாரணை நடத்துவது கடினம் என்பதே நடைமுறை. அமைச்சர்கள் முதலமைச்சரின் நம்பிக்கைப் பெறவில்லை எனில் புதிதாக நியமிக்கும் அதிகாரம் அவருக்கு உண்டு. இதில் கட்சி அரசியல் தலையிட முடியாது.

தமிழரசுக் கட்சியால் ஒரு சிறிய நிர்வாகத்தை மூன்று வருட காலம் கூட நடத்த முடியாத நிலையில் தமிழீழம், மாநில சுயாட்சி, வடக்கு கிழக்கு இணைந்த நிர்வாகம் எனக் கூப்பாடு போடுவது அதன் இருப்பின் பலவீனத்தையே காட்டுகிறது. .

வாசகர்களே!

முதலமைச்சர் விக்னேஸ்வரன் வானத்திலிருந்து குதிக்கவில்லை. தமிழரசுக் கட்சியே விடுமுறையை அனுபவித்துக் கொண்டிருந்த அவரை கொண்டு வந்தது.

சிங்கள மக்களிடையே பெரும் பாலமாக அவர் இருப்பார் எனப் பலரும் கருதினர். ஆனால் அவரது பதவி ஆசையும், தகாத உறவுகளும், இந்து ஆதிக்க வெறியும் தமிழ்க் குறும் தேசியவாத சகதிக்குள் அவரைத் தள்ளியது.

தற்போது கூட்டமைப்பினால் கைவிடப்பட்டு அநாதையாக்கப்பட்டுள்ள அவர் சந்தர்ப்பவாத, சுயநல அரசியல் சக்திகளால் தத்து எடுக்கப்பட்டு நாயகராக வலம் வருகிறார்.

போரின் கொடுமைகளால் சிதையுண்ட தமிழ் சமூகத்தை மீட்டெடுக்க மக்கள் புதிய மீட்பர்களை நோக்கிச் செல்ல வேண்டும்.

இவர்கள் யார்?

போரின் உச்சத்தின்போது மக்களின் ஜனநாயக உரிமைகளுக்காக, மனித உரிமைகளுக்காக, நீதியான பொருளாதார சமத்துவத்திற்காக, தேசிய நல்லிணக்கத்திற்காக பல்வேறு இழப்புகளுக்கு மத்தியிலும் குரல் கொடுத்த அந்த சக்திகளே உண்மையான, நேர்மையான மீட்பர்களாக முடியும்.

முற்றும்.

வி. சிவலிங்கம்

 மூலம்- தேனி இணையம்

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

August 2019
M T W T F S S
« Jul    
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

Latest Comments

மிகப் பெரும் விஞ்ஞானிகள் , இவர்கள் நாசாவின் பணியாற்ற வேண்டியவர்கள் , ஆறறிவு அல்ல 12 அறிவு உடையவர்கள் , [...]

துப்பாக்கி உனக்கு ஏன் உன் சொந்த சகாக்களை கொல்லவா ? 1988 - 1996 வரை நீ செய்த [...]

50 வருடங்களுக்கு பின் தான் இந்தியாவுக்கு முடிந்திருக்கு. சீன எப்பவோ சாதித்து விட்ட்து. [...]

My vote for Mr. Gotabhaya Rajapaksa, he can only save our country. [...]

இறைவனின் துணையோடு நிலவை பிளந்த நபிக்கு அதே இறைவனின் துணையோடு ஒட்டவைக்க முடியாதா? ?? இந்த உலகத்தையே நாம்தான் படைத்தோம்னு சொல்லும் [...]

இலங்கை பத்திரிகைகள்

English News