அமெரிக்காவைச் சேர்ந்த பெண் ஒருவர், தன் வயிற்றில் வளரும் குழந்தை உயிரிழந்துபோகும் எனத் தெரிந்தும், அதனை பெற்றெடுத்து உடல் உறுப்புகளை தானம் செய்த சம்பவம் ஒன்று அண்மையில் இடம்பெற்றுள்ளது.

அமெரிக்காவில் டேவிஸ் லோவட் – கிறிஸ்டா டேவிஸ் தம்பதிக்கு கடந்த ஆண்டு டிசம்பர் 25ஆம் திகதி பெண் குழந்தைக்கு ரைலே ஆர்கேடியா டயன் லோவட் என பெயரிட்டனர்.

 கிறிஸ்டா கருவுற்று 18 வாரங்கள் ஆகியிருந்த நிலையில் வயிற்றில் இருக்கும் குழந்தை குறைபாடுகளுடன் உள்ளது என வைத்தியர்கள் தெரிவித்த நிலையில் குறித்த குழந்தை பிறக்கும்போதே மிகவும் அரிதான சில பாகங்கள் மூளையில் இல்லாமல் பிறந்துள்ளது.

இதனால் வைத்தியர்கள் பெற்றோரிடம், குழந்தை 30 நிமிடத்திற்கு மேல் உயிருடன் இருக்காது என தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில்,  இருவரும் கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய நிலையில் வைத்தியர்களின் முயற்சியால் ஒரு வாரம் வரை உயிருடன் இருந்துள்ளது.

இந்நிலையில் டேவிஸ், லோவட் இருவரும் ஒரு வாரம் வைத்தியசாலையிலேயே தங்கி, குழந்தை ரைலே உயிர் பிரியும் வரை கூடவே இருந்தனர். மேலும் டேவிஸ் குழந்தையை தொடர்ந்து கண்காணிக்கையில், ரைலே அந்த ஒரு வாரத்தில் ஒரு முறை கூட அழவே இல்லை எனவும், உயிரிறப்பதற்கு சற்று முன் லேசாக அழுததை கண்டதாகவும் மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து மருத்துவரின் அறிவுரையின் படி, உயிரிழந்த குழந்தையின் இதயவால்வுகள் இரண்டு குழந்தைகளுக்கு பொருத்தப்பட்டன அத்தோடு சிறுநீரகம் மற்றும் பிற உறுப்புகள் வைத்திய ஆராய்ச்சிக்கு வழங்கப்பட்டன.