ilakkiyainfo

ilakkiyainfo

 Breaking News

குழப்புகிறாரா? குழம்புகிறாரா? – காண்டீபன் (கட்டுரை)

குழப்புகிறாரா? குழம்புகிறாரா? – காண்டீபன் (கட்டுரை)
December 31
11:24 2017

வடக்கு மாகாண முத­ல­மைச்சர் சி.வி.விக்­னேஸ்­வரன் மீண்டும் அர­சி­யலில் குழப்­பத்தை ஏற்­ப­டுத்தும் ஒரு­வ­ராக மாறி­யி­ருப்பதாக கூறப்படு­கிறது.

அவ­ரது அண்­மைய அறிக்­கைகள், கருத்­து­களில் ஏற்­பட்­டுள்ள தளம்பல் அல்­லது குழப்ப நிலை, பல்­வேறு தரப்­பி­னரும் அவரை வைத்து அர­சியல் செய்யும் சூழ­லையும் ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

உள்­ளூ­ராட்சித் தேர்தல் தொடர்­பாக முத­ல­மைச்சர் தனது நிலைப்­பாட்டை விளக்கி ஓர் அறிக்­கை­யுடன் நிறுத்திக் கொண்­டி­ருந்தால், அரசியல் சார்­பற்­றவர் என்ற நடு­வு­நி­லை­யுடன் நின்று கொண்­டி­ருக்க முடியும். அவ்­வா­றான ஒரு நிலைப்­பாட்டை எடுப்பார் என்றே பல­ராலும் எதிர்­பார்க்­கப்­பட்­டது.

2015 பாரா­ளு­மன்றத் தேர்­தலின் போது, வீட்டை விட்டு வெளியே வந்து வாக்­க­ளி­யுங்கள் என்று, அறிக்கை வெளி­யிட்டு குழப்­பத்தை ஆரம்­பித்து வைத்­தது போல, இம்­முறை நடந்து கொள்­ள­மாட்டார் என்ற எதிர்­பார்ப்பு பர­வ­லாகக் காணப்­பட்­டது.

ஆனால், அந்த எதிர்­பார்ப்பைப் பொய்­யாக்கும் வகையில், முத­ல­மைச்சர் தரப்பில் இருந்து அடுத்­த­டுத்து வெளி­யான அறிக்­கைகள், மீண்டும் தமி­ழ­ரசுக் கட்­சி­யுடன் மோத­லுக்கு வித்­திட்­டுள்­ளது.

அந்த நிலைப்­பாடே இன்று, அவரை உத­ய­சூ­ரி­யனும், தன்­னிச்­சை­யா­கவே அடுத்த முத­ல­மைச்சர் வேட்­பாளர் என்று அறி­விக்கும் நிலைக்குக் கொண்டு சென்­றி­ருக்­கி­றது.

உள்­ளூ­ராட்சித் தேர்­த­லுக்­கான ஆயத்­தங்கள் தொடங்­கிய போது, தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் ஒற்­று­மையை வலி­யு­றுத்­திய முதலமைச்சர், கூட்­ட­மைப்பு உடைந்து விடாது என்றும், அதனை வலுப்­ப­டுத்த வேண்டும் என்றும் கருத்­துக்­களை கூறி வந்தார்.

பின்னர் திடீ­ரென, ஓர் ஊடகச் சந்­திப்பில், எந்தக் கட்சி என்று பாராமல், ஊழ­லற்ற, நேர்­மை­யான, மக்கள் நலனில் அக்­க­றை­யுள்ள வேட்­பா­ள­ருக்கு வாக்­க­ளி­யுங்கள் என்று கோரி­யி­ருந்தார்.

அதற்குப் பிறகு அவர், அண்­மைக்­கா­ல­மா­கவே தி.மு.க. தலைவர் மு. கரு­ணா­நி­தியின் பாணியைப் பின்­பற்றி வெளி­யிட்டு வரும் கேள்வி பதில் அறிக்­கையில், தமி­ழ­ரசுக் கட்­சி­யையும், அதன் கொள்­கை­யையும், கேள்­விக்­குட்­ப­டுத்­தியும், அதன் தலை­மையை விமர்­சித்தும், ஒரு நீண்ட அறிக்­கையை வெளி­யிட்­டி­ருந்தார்.

images  குழப்புகிறாரா? குழம்புகிறாரா? - காண்டீபன் (கட்டுரை) imagesமுத­ல­மைச்சர் விக்­னேஸ்­வ­ரனின் இந்த அறிக்கை, தமி­ழ­ரசுக் கட்சி மீதான அவ­ரது கோபம் தணி­ய­வில்லை என்­பதை வெளிப்­ப­டுத்­தி­ய­துடன், குழப்பம் மிகுந்­த­வ­ரா­கவும் அவரை அடை­யா­ளப்­ப­டுத்­தி­யது.

அதை­விட, கட்சித் தலை­மைக்குக் கட்­டுப்­பட்டு நடக்­க­வில்லை என்ற குற்­றச்­சாட்டு தமி­ழ­ரசுக் கட்­சி­யினால் முன்­வைக்­கப்­ப­டு­வ­தாக ஒரு கேள்­வியை தாமே எழுப்பி, அதற்கும் தாமே பதி­ல­ளிக்கும் வகையில் அவர் இந்த அறிக்­கையை வெளி­யிட்­டி­ருந்தார்.

முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வரன் தொடர்­பாக தமி­ழ­ரசுக் கட்சி அத்­த­கைய எந்த விமர்­ச­னங்­க­ளையும் அண்­மைக்­கா­லத்தில் முன்வைத்திராத போதிலும், இத்­த­கை­ய­தொரு வினாவை தாமே எழுப்பி அதற்குப் பதில் கொடுக்க முனைந்­தமை, தமிழரசுக் கட்­சியை வேண்­டு­மென்றே சீண்­டு­கின்ற ஒரு விட­ய­மாகத் தான் தென்­பட்­டது.

அந்த அறிக்­கையில், தமி­ழ­ரசுக் கட்சி 2013 தேர்தல் அறிக்­கையில் கூறி­யி­ருந்த கொள்­கை­களில் இருந்து விலகி விட்­ட­தாக சாடி­யி­ருந்தார் முத­ல­மைச்சர்.

கட்சித் தலைமை சுய­நலப் போக்­குடன்,முடி­வு­களை எடுத்­த­தா­கவும் அவர் கூறி­யி­ருந்தார்.

தம்மைக் கட்­சியின் கூட்­டங்­க­ளுக்கு அழைக்­க­வில்லை என்ற ஒரு குற்­றச்­சாட்டை மாத்­தி­ர­மன்றி, தாம் அர­சி­ய­லுக்கு அழைத்து வரப்­பட்ட போது, தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு பதிவு செய்­யப்­ப­டாத ஓர் அர­சி­ய­ல­மைப்பு என்று தெரி­யாது என்றும் கூறி­யி­ருக்­கிறார்.

இந்த அறிக்கையில் முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வரன் கூறி­யி­ருந்த சில விட­யங்கள், அவ­ரது குழப்­ப­மான நிலையைத் தெளிவுபடுத்தியிருந்­தது.

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் ஐந்து கட்­சி­களின் தலை­வர்­களும் அழைப்பு விடுத்­ததால் தான், முத­ல­மைச்சர் வேட்­பா­ள­ராக போட்­டி­யிட முன்­வந்தேன் என்று குறிப்­பிட்­டி­ருந்தார்.

ஆனால், முதலில் அவரை அர­சி­ய­லுக்கு அழைத்­தது இரா.சம்­பந்தன் தான். அதற்குப் பின்­னரே, ஏனைய கட்­சி­களின் தலை­வர்கள் அழைத்தனர்.

suresh-premachandran-300-news-43453  குழப்புகிறாரா? குழம்புகிறாரா? - காண்டீபன் (கட்டுரை) suresh premachandran 300 news 43453விக்­னேஸ்­வ­ரனை முத­ல­மைச்சர் வேட்­பா­ள­ராக நிறுத்­து­வ­தற்கு ஈ.பி.ஆர்.எல்.எவ். தலைவர் சுரேஸ் பிரே­மச்­சந்­திரன் கடு­மை­யான எதிர்ப்பை வெளி­யிட்டார்.

அவரும் சேர்ந்து வந்து அழைத்தால் தான், பொது­வேட்­பா­ள­ராகப் போட்­டி­யி­டுவேன் என ஒற்­றைக்­காலில் நின்று அதனைச் சாதித்­தவர் முத­ல­மைச்சர் என்­பது குறிப்­பி­டப்­பட வேண்­டிய விடயம்.

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு பதிவு செய்­யப்­ப­டாத ஓர் அர­சியல் கூட்­ட­மைப்பு என்­பது தனக்கு அப்­போது தெரி­யாது என்ற முதலமைச்சரின் கருத்து அபத்தம் நிறைந்­தது.

உலக நடப்­பு­களை நன்­றாக அறிந்து வைத்­தி­ருந்த- தமி­ழ­ரசுக் கட்­சியின் மாநாட்டில் சிறப்­புரை ஆற்­றிய அனு­ப­வத்தைக் கொண்ட முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வ­ர­னுக்கு, தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு பதிவு செய்­யப்­பட்ட ஓர் அர­சியல் கட்சி அல்ல என்று தெரி­யாமல் இருந்­தது என்­பது நம்ப முடி­யாத விடயம்.

கூட்­ட­மைப்பு பதிவு செய்­யப்­பட்ட ஓர் அர­சியல் கட்சி இல்லை என்­பதால் தான், தமி­ழ­ரசுக் கட்­சியின் வீட்டு சின்­னத்தில் போட்­டி­யி­டு­கி­றது என்­பது கூடத் தெரி­யா­மலா அவர் முத­ல­மைச்சர் வேட்­பா­ள­ராக கள­மி­றங்­கி­யி­ருப்பார்?

முத­ல­மைச்­ச­ரான பின்னர், கூட்­ட­மைப்பின் பங்­காளிக் கட்­சி­யான ஈ.பி.ஆர்.எல்.எவ்.வை கடு­மை­யாக விமர்­சித்து வந்தார். அதனால் இரு­த­ரப்­புக்கும் இடையில் கடு­மை­யான கருத்து மோதல்கள் இடம்­பெற்று வந்­தன.

ஒரு கட்­டத்தில் முத­ல­மைச்சர் பொது­வேட்­பா­ள­ரா­கவே போட்­டி­யிட்டார்,

எல்லாக் கட்­சி­க­ளையும் அவர் சம­மா­கவே நடத்த வேண்டும் என்று ஈ.பி.ஆர்.எல்.எவ். கூறிய போது, தாம் முன்னாள் ஆயுதக் குழுக்களுடன் சக­வாசம் வைத்துக் கொள்­ள­வில்லை என்றும், தமி­ழ­ரசுக் கட்­சியின் சார்­பி­லேயே தான் தெரிவு செய்­யப்­பட்டேன் என்றும் கூறி­யவர்.

ஆனால் பின்னர் தமி­ழ­ரசுக் கட்­சி­யுடன் முரண்­பா­டுகள் ஏற்­பட்ட போது, ஈ.பி.ஆர்.எல்.எவ்.வுடன் அவ­ருக்கு நெருக்கம் அதி­க­மா­னது.

அந்த நெருக்­கத்தின் உச்­ச­மாக, முத­ல­மைச்­சரை மாற்றுத் தலை­மை­யாக உரு­வாக்க தமிழ் காங்­கி­ர­சுடன் இணைந்து, ஈ.பி.ஆர்.எல்.எவ். முயற்­சித்­தது.

எனினும், உள்­ளூ­ராட்சித் தேர்­தலில் இந்த இரண்டு கட்­சி­களும் தனித்­தனி அணியில் இணைந்து கொண்­டமை, முத­ல­மைச்சர் விக்னேஸ்வ­ர­னுக்கு அதிர்ச்­சியை ஏற்­ப­டுத்தத் தவ­ற­வு­மில்லை.

saththi  குழப்புகிறாரா? குழம்புகிறாரா? - காண்டீபன் (கட்டுரை) saththi e1514718579678தமி­ழ­ரசுக் கட்­சியைச் சாடியும், தனது கொள்கை, தமிழ் மக்கள் பேர­வையின் கொள்­கை­யுடன் ஒத்துப் போவ­தா­கவும், முத­ல­மைச்சர் விக்னேஸ்­வரன் அறிக்கை வெளி­யிட்ட பின்னர், ஈ.பி.ஆர்.எல்.எவ். பொதுச்­செ­யலர் சிவ­சக்தி அனந்தன், மாகா­ண­சபைத் தேர்தல் குறித்து கருத்­துக்­களை வெளி­யிட்டார்.

அடுத்த மாகா­ண­சபைத் தேர்­தலில் தமி­ழ­ரசுக் கட்சி சார்பில் மவை சேனா­தி­ரா­சாவும், உத­ய­சூ­ரியன் சின்­னத்தில் முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வ­ரனும் போட்­டி­யி­டு­வார்கள் என்றும், புளொட் ,ரெலோ என்­பன தமி­ழ­ரசுக் கட்­சி­யுடன் இணைந்து போட்­டி­யிடும் கடைசி தேர்தல் இது என்றும் அவர் கூறி­யி­ருந்தார்.

இது முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வ­ர­னுக்கு அதிர்ச்­சியை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது என்­பது, அடுத்­த­டுத்த நாட்­களில் அவர் வெளி­யிட்ட அறிக்­கையே உணர்த்தி நிற்­கி­றது.

தன்னை வைத்து கட்­சி­களும், வேட்­பா­ளர்­களும் அர­சியல் நலன்­களை அடைய முனை­கி­றார்கள் என்ற விச­னத்தை அவர் இந்த அறிக்­கையில் வெளிப்­ப­டுத்­தி­யி­ருக்­கிறார்.

அடுத்த மாகா­ண­சபைத் தேர்­தலில் போட்­டி­யி­டு­வதா என்று தான் இன்­னமும் தீர்­மா­னிக்­காத நிலையில், குறித்த ஒரு சின்­னத்தில் போட்­டி­யி­ட­வுள்­ள­தாக கூறப்­பட்­டுள்­ளது தவ­றா­னது என்று அவர் கூறி­யி­ருக்­கிறார்.

தனது கொள்கை தமிழ் மக்கள் பேர­வையின் கொள்­கை­யுடன் ஒத்துப் போவ­தா­கவும் அவர் குறிப்­பிட்­டி­ருக்­கிறார். அத்­துடன், 2013ஆம் ஆண்டு வெளி­யி­டப்­பட்ட தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தேர்தல் அறிக்­கை­யுடன் அது ஒத்­துப்­போ­கி­றது என்­ப­தையும் அவர் குறிப்­பிட மறக்­க­வில்லை.

முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வரன் அடுத்­த­டுத்து அறிக்­கை­களை வெளி­யிட முனைந்­ததும், உள்­ளூ­ராட்சித் தேர்தல் காலத்தில், தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பை விமர்­சித்து, தமி­ழ­ரசுக் கட்­சியை பல­வீ­னப்­ப­டுத்த முனைந்­த­தையும், கூட்­ட­மைப்­புக்கு எதி­ரான கட்­சி­களும், வேட்­பா­ளர்­களும் அவரை வைத்து பந்­தயம் கட்ட வழி­வ­குத்­துள்­ளது.

அதனால் தான், உத­ய­சூ­ரியன் சின்­னத்தில் முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வரன் அடுத்த மாகா­ண­சபைத் தேர்­தலில் போட்­டி­யி­டுவார் என்று தன்­னிச்­சை­யாகப் பிர­சாரம் செய்­யப்­படும் நிலை ஒன்றும் உரு­வா­கி­யி­ருக்­கி­றது.

போகிற போக்கில், ஐக்­கிய தேசியக் கட்­சி­யி­னரோ, அல்­லது ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியோ கூட தமது சின்­னத்தில் தான் விக்­னேஸ்­வரன் போட்­டி­யிடப் போகிறார் என்று அறி­வித்­தாலும் ஆச்­ச­ரி­ய­மில்லை என்ற நிலை கூட உரு­வா­னது.

இந்த விப­ரீ­தத்தை உணர்ந்தே, முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வரன், தனது பெயரை இழுத்து சில கட்­சி­களும், வேட்­பா­ளர்­களும் தேர்தல் காலத்தில் நன்மை பெற முயற்­சிக்­கி­றார்கள் என்று காட்­ட­மாக அறிக்கை வெளி­யிட வேண்­டிய நிலை ஏற்­பட்­டது.

இத்­த­கை­ய­தொரு நிலை உரு­வா­வதை முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வரன் முன்­னரே தவிர்த்­தி­ருக்­கலாம். உள்­ளூ­ராட்சித் தேர்தல் தொடர்­பாக தனது நிலைப்­பாட்டை தேர்தல் நெருங்கி வரும் ஒரு நாளில் ஒரே ஒரு அறிக்­கை­யுடன் அவர் நிறுத்­தி­யி­ருந்தால், இப்­ப­டி­யான குழப்பம் ஏற்­பட்­டி­ருக்­காது.

vickneswaran new  குழப்புகிறாரா? குழம்புகிறாரா? - காண்டீபன் (கட்டுரை) vickneswaran newமுத­ல­மைச்­சரின் குழப்பம், இன்று கட்­சி­க­ளையும் தமிழ் மக்­க­ளையும் குழப்பும் வகையில் அமைந்­தி­ருக்­கி­றது. இது முத­ல­மைச்­சரின் நிலைப்­பா­டுகள் எந்­த­ள­வுக்கு உறு­தி­யா­னது என்ற கேள்­வி­யையும் எழுப்ப வைத்­தி­ருக்­கி­றது.

அதே­வேளை, முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வ­ரனை முன்­னி­றுத்தி பல்­வேறு தரப்­புகள் அர­சியல் செய்ய முனை­கின்ற சூழலில், தமிழ் மக்­களின் உரி­மைக்­கான ஒன்­று­பட்ட குரலின் வலு குறை­வ­டையத் தொடங்­கி­யி­ருக்­கி­றது.

2009 இல் போர் முடி­வுக்கு வந்த போது, தமிழ்த் தேசிய அடையாளத்துடன் அரசியல் நடத்தும் ஒரு தரப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே இருந்தது.

ஆனால் இன்று அது மூன்று அணிகளாக மாறியிருக்கிறது. இது நான்காகவோ, ஐந்தாகவோ மாறினாலும் ஆச்சரியமில்லை.

இப்படியொரு நிலை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் உள்ள முரண்பாடுகள், கூட்டமைப்புத் தலைமை மற்றும் தமிழரசுக் கட்சியின் ஏகபோகத்தினால் மாத்திரம் உருவானது என்று கூற முடியாது.

முதலமைச்சர் விக்னேஸ்வரனும் கூட இதற்கான ஒரு காரணியாக இப்போது மாறியிருக்கிறார் என்பது மறுக்க முடியாத உண்மை.

ஏனெனில் இப்போது அவர் விரும்பியோ விரும்பாமலோ அவரை வைத்து அரசியல் செய்ய தமிழரசுக் கட்சி அல்லாத தரப்புகள் முடிவு செய்து விட்டன.

உள்ளூராட்சித் தேர்தலுக்கான வாக்களிப்புக்கு இன்னமும் ஐந்து வாரங்களுக்கு மேல் உள்ள நிலையில், முதலமைச்சர் விக்னேஸ்வரன் குழப்பமான அறிக்கைகளை வெளியிடுவதோ, அவரை அவ்வாறான அறிக்கைகளை வெளியிடத் தூண்டுவதோ, மக்களை இன்னும் குழப்பமான நிலைக்கே கொண்டு செல்லும்.

அத்தகையதொரு குழப்பத்தை தான் முதலமைச்சரும் விரும்புகிறாரா?

- காண்டீபன்-

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

December 2018
M T W T F S S
« Nov    
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

Latest Comments

அருமை மேலும் தகவல் இருந்தால் பதிவிdavum [...]

இன்றும் அணு சோதனை நடத்தி உள்ளார் , ஒரு மயிரையும் அமெரிக்கா புடுங்க முடியாது, , ஹிட்லருடன் இவரை [...]

UNP ஒரு ரவுடி கட்சி , 1983ல் தமிழர்களுக்கு எதிராக இனக்கலவரத்தை நடத்தி பல [...]

சில நாடுகளில் தேச நலனை கருத்தில் கொண்டு ராணுவம் அரசை கைப்பற்றி அடுத்த தேர்தல் வரை ஆடசி [...]

இந்த அலோலோயா மதமாற்றுக்கார CIA ஏஜென்ட் , உடனடியாக கைது செய்ய பட வேண்டும் [...]

இலங்கை பத்திரிகைகள்

English News