ilakkiyainfo

ilakkiyainfo

குழப்புவது யார்?

குழப்புவது யார்?
February 03
20:54 2019

ஒக்­டோபர் 26 ஆட்­சிக் க­விழ்ப்பு மூலம், இழந்­து போன செல்­வாக்கை தூக்கி நிறுத்­து­வ­தற்­கான ஒரு வாய்ப்­பாக, இந்தப் புதிய அர­சி­ய­ல­மைப்பு விவ­கா­ரத்தை கையில் எடுத்­தி­ருக்­கி­றது மஹிந்த தரப்பு

“புதிய அர­சி­ய­ல­மைப்பு சமஷ்டி பண்­பு­க­ளுடன் தான் வரு­கி­றது. அர­சி­யல்­வா­தி­களின் சொல்­லா­டல்­களால் குழப்­ப­ம­டைந்து விடக்­கூ­டாது” இது, கொழும்பில் நடந்த தமி­ழ­ரசுக் கட்­சியின் மத்­திய செயற்­ குழுக் கூட்­டத்தில் இரா . சம்­பந்தன் கூறி­யி­ருக்­கின்ற விடயம்.

பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவும் ஐக்­கிய தேசியக் கட்சி அமைச்­சர்­களும் ஒற்­றை­யாட்­சி­யையும், பௌத்த மதத்­துக்­கான முன்­னு­ரி­மை­யையும் புதிய அர­சி­ய­ல­மைப்பு உறு­திப்­ப­டுத்தும் என்று தெளி­வாகக் கூறி வரும் சூழலில், தான் இரா.சம்­பந்தன் இந்தக் கருத்தைக் கூறி­யுள்ளார்.

சமஷ்டித் தீர்வு ஒன்­றையே தமிழர் தரப்பு வலி­யு­றுத்தி வந்த நிலையில், புதிய அர­சி­ய­ல­மைப்பு அத்­த­கைய ஒன்­றாக இருக்கப் போவ­தில்லை என்­பது உறு­தி­யாகி விட்­டது.

பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சுமந்­திரன் ஏற்­க­னவே, தமி­ழர்கள் எதிர்­பார்க்கும் – சமஷ்டித் தீர்வை புதிய அர­சி­ய­ல­மைப்பு தராது என்று தெளி­வாகக் கூறி­யி­ருந்தார்.

ஆனாலும், சம்­பந்­தனும் சுமந்­தி­ரனும் இந்தப் புதிய அர­சி­ய­ல­மைப்பை எப்­ப­டி­யா­வது நிறை­வேற்றி விட வேண்டும் என்­பதில் உறு­தி­யாக இருக்­கி­றார்கள்.

பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க கூட, இந்த அர­சி­ய­ல­மைப்பு நிறை­வேற்­றப்­படும் என்ற உறு­தி­யான நம்­பிக்­கையை வெளி­யி­ட­வில்லை. இப்­போது இல்­லா­விட்­டாலும், பின்­ன­ரா­வது அது கொண்டு வரப்­படும் என்று தான் கூறி­யி­ருக்­கிறார்.

பாரா­ளு­மன்­றத்தில் அறுதிப் பெரும்­பான்மை பலம் கூட இல்­லாத ஐக்­கிய தேசியக் கட்­சிக்கு, புதிய அர­சி­ய­ல­மைப்பை நிறை­வேற்ற, மூன்றில் இரண்டு பெரும்­பான்மை பலம் கிடைக்கும் என்ற நம்­பிக்கை இல்லை. அதை­விட சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பும் வேறு நடத்த வேண்­டி­யி­ருக்கும்

நான்கு ஆண்­டு­க­ளுக்கு முன்னர், இது தான் புதிய அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்­கு­வ­தற்குக் கிடைத்­துள்ள பொன்­னான காலம் என்று கரு­தப்­பட்­டது. இப்­போ­தைய நிலையில், இது சாத்­தி­ய­மில்லை என்று கருதக் கூடிய சூழலே தென்­ப­டு­கி­றது.

புதிய அர­சி­ய­ல­மைப்பு இப்­போது தேவை­யில்லை, அதனை தோற்­க­டிக்க முனைவோம் என்று அதன் உள்­ள­டக்­கத்தின் சாதக, பாத­கங்­களைப் பற்றி கவ­லைப்­ப­டாமல் சூளு­ரைத்துக் கொண்­டி­ருக்­கி­றது மஹிந்த அணி.

இப்­ப­டிப்­பட்­ட­தொரு நிலையில், புதிய அர­சி­ய­ல­மைப்பு பற்­றிய அதீ­த­மான நம்­பிக்­கையில் சம்­பந்­தனும் சுமந்­தி­ரனும் மாத்­தி­ரமே இருக்­கி­றார்கள் . தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் ஏனைய பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் கூட நம்­பிக்­கை­ யி­ழந்து போய் விட்­டார்கள்.

அவர்கள் யாருமே இது­பற்றிப் பேசு­வது கூட இல்லை. பேசு­வ­தற்கும் தயங்­கு­கி­றார்கள்.

புதிய அர­சி­ய­ல­மைப்புத் தேவை, அது நடை­மு­றைக்குக் கொண்டு வரப்­பட வேண்டும் என்­ப­தெல்லாம் சரி, ஆனால் அந்த புதிய அர­சி­ய­ல­மைப்பின் உள்­ள­டக்­கமும், அதனை நிறை­வேற்­று­வ­தற்­கான அர­சியல் தற்­து­ணிவும் பாரா­ளு­மன்ற பலமும், ஆட்­சி­யா­ளர்­க­ளுக்கு இருக்­கின்­றதா என்­பதே, இந்தக் கட்­டத்தில் முக்­கி­ய­மா­னது.

தற்­போ­தைய நிலையில், ஐக்­கிய தேசியக் கட்­சி­யிடம், புதிய அர­சி­ய­ல­மைப்பை நிறை­வேற்றும் துணிச்­சலோ, அதனை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்­கான பெரும்­பான்மை பலமோ கிடை­யாது.

புதிய அர­சி­ய­ல­மைப்பை வைத்து, மஹிந்த அணி தொடுத்­தி­ருக்­கின்ற அர­சியல் பிர­சா­ரங்­களில் இருந்து தன்னைப் பாது­காத்துக் கொள்­வ­தி­லேயே ஐக்­கிய தேசியக் கட்சி தீவிர கவனம் செலுத்தி வரு­கி­றது. புதிய அர­சி­ய­ல­மைப்பு நிறை­வேற்­றப்­பட்டால், மாகாண அர­சுகள் பலம் பெறும், மத்­திய அரசு பல­வீ­ன­ம­டைந்து, நாட்­டுக்குப் பேரா­பத்து ஏற்­படும் என்று கோத்­தா­பய ராஜ­பக்ச ஷ எச்­ச­ரித்துக் கொண்­டி­ருக்­கிறார்.

ஒன்­பது துண்­டு­க­ளாக நாடு பிரியப் போகி­றது என்­கிறார் இன்­னொ­ருவர். தேசிய பாது­காப்­புக்கு ஆபத்து என்­கிறார் மற்­றொ­ருவர்.

சமஷ்டி அரசு உரு­வாகும், வடக்கு, கிழக்கு இணையும், தனி­நாடு உரு­வாகும் என்­கிறார் வேறொ­ருவர்.

ஆயு­தங்­களால் பிர­பா­கரன் பெற முடி­யாமல் போனதை, புதிய அர­சி­ய­ல­மைப்­பினால் சுமந்­திரன் பெற்றுக் கொடுக்கப் போகிறார் என்­கி­றார்கள் வேறு சிலர்.

பௌத்­தத்­துக்­கான முன்­னு­ரிமை பறி­போகப் போகி­றது என்று புலம்­பு­கின்­றனர் இன்னும் சிலர்.

இப்­படி, புதிய அர­சி­ய­ல­மைப்பை விமர்­சனம் செய்­வது என்ற பெயரில், அதன் உள்­ள­டக்­கத்­துக்குப் புறம்­பான, விட­யங்­களை முன்­னி­றுத்தி மஹிந்த தரப்பு பிர­சா­ரத்தில் இறங்­கி­யி­ருக்­கி­றது.

ஒக்­டோபர் 26 ஆட்­சிக்­க­விழ்ப்பு மூலம், இழந்­து­போன செல்­வாக்கை தூக்கி நிறுத்­து­வ­தற்­கான ஒரு வாய்ப்­பாக, இந்தப் புதிய அர­சி­ய­ல­மைப்பு விவ­கா­ரத்தை கையில் எடுத்­தி­ருக்­கி­றது மஹிந்த தரப்பு.

ஐக்­கிய தேசியக் கட்சி நாட்டை ஆபத்­துக்குள் தள்ளிச் செல்­கி­றது என்று, சிங்­கள பௌத்த வாக்­கா­ளர்­களை நம்ப வைக்­கின்ற முயற்­சியில் தான் அந்த அணி தீவிர பிர­சா­ரங்­களை முன்­னெ­டுக்­கி­றது,

இந்தக் கட்­டத்தில், ஐக்­கிய தேசியக் கட்­சியைப் பொறுத்­த­வ­ரையில், புதிய அர­சி­ய­ல­மைப்பை விட, அடுத்து வரும் தேர்­தல்­களைத் தான் முக்­கி­ய­மா­ன­தாக கரு­து­கி­றது. அதில் தோல்­வி­ய­டைந்து விடக் கூடாது என்­பதே அவர்­களின் முதல் நோக்­க­மாக இருக்­கி­றது.

எனவே, புதிய அர­சி­ய­ல­மைப்பை வைத்து செய்­யப்­படும் பிர­சா­ரங்­களைத் தோற்­க­டிக்க, அந்தக் கட்சி செய்யும் பிர­சா­ரங்கள் தமிழ்த் தேசியக். கூட்­ட­மைப்பைச் சந்­தியில் கொண்டு வந்து நிறுத்­தி­யி­ருக்­கி­றது.

ஒற்­றை­யாட்சி அர­சி­ய­ல­மைப்புத் தான் வரும், சமஷ்டி கிடை­யாது, பௌத்­தத்­துக்­கான முன்­னு­ரிமை பாது­காக்­கப்­படும் என்­றெல்லாம் ஐ.தே.க. செய்யும் பிர­சா­ரங்கள் கூட்­ட­மைப்­புக்கும் அதன் வாக்கு வங்­கிக்கும் ஆபத்­தாக மாறி­யி­ருக்­கி­றது.

புதிய அர­சி­ய­ல­மைப்பு இப்­போது வராது போனாலும், ஒற்­றை­யாட்­சியை அனை­வரும் ஏற்­றுக்­கொண்­டுள்­ளார்கள், இதுவே மிகப்­பெ­ரிய வெற்றி என்று பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க கூட கூறி­யி­ருக்­கிறார்.

தமி­ழர்கள் 1950களில் சமஷ்டி கேட்­டார்கள், பின்னர், தனி­நாடு கேட்­டார்கள், போர் முடிந்த பின்­னரும் சமஷ்­டியை கேட்­டார்கள் – இப்­போது, ஒற்­றை­யாட்­சியை ஏற்றுக் கொண்­டி­ருக்­கி­றார்கள். இது மிகப்­பெ­ரிய வெற்றி என்று பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க கூறி­யி­ருந்தார்.

சம்­பந்தன் ஒரு பக்­கத்தில் சமஷ்டிப் பண்­பு­க­ளு­ட­னான அர­சி­ய­ல­மைப்புத் தான் வரும் என்­கிறார். சமஷ்டி இல்­லா­விட்­டாலும், அதன் குணாம்­சங்­களைக் கொண்ட அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்­கப்­படும் என்று சுமந்­திரன் கூறி­னாலும், ஒற்­றை­யாட்­சியை தமி­ழர்கள் ஏற்­றுக்­கொண்டு விட்­டார்கள் என்று பிர­தமர் ரணில் கூறி­யி­ருப்­பது முரண்­பா­டா­ன­தாக உள்­ளது.

இவர்கள் மூவரும் கூறிய கருத்­துக்கள் சரி­யா­னவை என்றால், தமி­ழர்­களை சம்­பந்­தனும் , ரணிலும் ஏமாற்­று­கின்­றனர் என்று மஹிந்த அணி­யினர் கூறும் குற்­றச்­சாட்­டடை சரி­யென்றே கருத வேண்டும்.

ஏனென்றால், சமஷ்டிப் பண்­பு­க­ளுக்கும், அதன் குணாம்­சங்­க­ளுக்கும், ஒற்­றை­யாட்சித் தன்மை நேர் எதிர்­மா­றா­னது. அதி­காரக் குவிப்பை வலி­யு­றுத்தும் ஒற்­றை­யாட்­சியும், அதி­காரப் பகிர்வை வலி­யு­றுத்தும், சமஷ்­டியும் எவ்­வாறு ஒரே கோட்டில் வர முடியும்?

சம்­பந்தன், சுமந்­திரன், ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஆகிய மூவரும், கூறு­கின்ற விட­யங்கள் சரி­யா­ன­வை­யாக இருந்தால், இந்த இரண்டும் ஒரே கோட்டில் வர வேண்டும்.

முதலில் சமஷ்டி என்ற பெயர்ப்­ப­லகை இருக்­காது. அது அவ­சி­ய­மில்லை என்­றனர். அதன் பண்­புகள் மாத்­திரம் போதும் என்­றனர்.

தமிழர் தரப்பில் இத்­த­கை­ய­தொரு விட்­டுக்­கொ­டுப்­புக்குத் தயா­ராக இருந்­தாலும், அரச தரப்பு ஒற்­றை­யாட்சி என்ற பெயர்ப்­ப­ல­கையில் தான் தொங்கிக் கொண்­டி­ருக்­கி­றது என்­பதை பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க உறு­திப்­ப­டுத்­தி­யி­ருக்­கிறார்.

ஒற்­றை­யாட்­சியில் தொங்கிக் கொண்­டி­ருக்கும் அரச தரப்பு, எப்­படி சமஷ்­டியின் பண்­பு­களை ஒத்த ஒரு அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்கித் தரும் என்ற கேள்வி மக்கள் மத்­தியில் இருக்­கி­றது.

உள்­ள­டக்கம் தான் முக்­கியம் சொல்­லாடல் முக்­கி­ய­மில்லை என்ற சம்­பந்தன்- சுமந்­திரன் தரப்பு வாதம் சரி­யாக இருக்­கலாம். ஆனால், அந்தச் சொல்­லாடல் தான், அர­சியல் தலை­வி­தியை நிர்­ண­யிக்கப் போகி­றது.

சிங்­கள மக்­க­ளிடம் போய், ஒற்­றை­யாட்­சியை விட்டுக் கொடுப்போம் என்று எந்த சிங்­களத் தலை­வ­ராலும் கூற­மு­டி­யாது. ஆனால், தமிழ்த் தலை­வர்கள், தனி­நாட்டுக் கோரிக்­கையைக் கைவிட்டு விட்டோம் என்று துணிந்து கூறு­கி­றார்கள். சமஷ்­டி­யையும் கைவிட்டு விடும் நிலைக்கு வந்­தி­ருக்­கி­றார்கள்.

சமஷ்டி என்ற சொல் வராத அதன் பண்­பு­களை ஏற்கத் தயார் என்ற நிலைக்கு வந்­தி­ருக்­கி­றார்கள். இதனைக் கூட சிங்­களத் தலை­மைகள் ஏற்றுக் கொள்ளத் தயாரா என்­பது கேள்வி.

சிங்­கள மக்­களை திருப்­திப்­ப­டுத்­து­வ­தற்­காக- அவர்­களின் ஆத­ரவைப் பெறு­வ­தற்­காக, சிங்­களத் தலை­வர்கள் கூறு­கின்­றதை கவ­னத்தில் கொள்ள வேண்­டி­ய­தில்லை என்றும், புதிய அர­சி­ய­ல­மைப்பு சமஷ்டி பண்­பு­க­ளுடன் தான் வரும் என்றும் சம்­பந்தன் கூறி­யி­ருக்­கிறார்.

இந்தக் கட்­டத்தில், ஒரு கேள்வி, சிங்­கள மக்கள் விரும்­பாத ஒன்றை – அவர்­க­ளுக்கு ஒன்றைக் கூறி இன்­னொன்றை செய்து, ஒரு அர­சி­ய­ல­மைப்பை நிறை­வேற்ற முடி­யுமா? அவ்­வாறு நிறை­வேற்­றினால் தான் அது பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்­வாக அமைந்து விடுமா?

இரா.சம்பந்தன் கடந்த பல ஆண்டுகளாக ஒரு விடயத்தை வலியுறுத்தி வந்தார், அனைத்து மக்களும் ஏற்றுக்கொள்ளக் கூடிய தீர்வு ஒன்றை உருவாக்குவோம் என்பதே அது.

சிங்கள மக்களுக்கு சிங்களத் தலைமைகள் ஒன்றைக் கூறி விட்டு இன்னொன்றைச் செய்தால், அது அனைத்து மக்களும் ஏற்றுக் கொள்ளக் கூடிய தீர்வாக இருக்குமா?

புதிய அரசியலமைப்பாக இருக்கட்டும், இனப்பிரச்சினைக்கான தீர்வாக இருக்கட்டும், எதுவானாலும் அது சிங்கள மக்களின் ஒப்புதலின்றி நிறைவேற்றப்பட்டால் அது வெறும் குப்பை தான்.

அடுத்து வரும் ஆட்சி அதனை தூக்கியெறியும். அதற்கான பலத்தை சிங்கள மக்கள் நிச்சயம் கொடுப்பார்கள்.

சிங்கள மக்களும், தலைமைகளும் விட்டுக்கொடுப்புக்கும், நீதி, நியாயங்களுக்கும் தயாரில்லாத வரைக்கும், புதிய அரசியலமைப்பு சாத்தியமாகாது. இந்த நிலைதான் இன்றுள்ள யதார்த்தம்.

இதற்குப் பின்னரும், புதிய அரசியலமைப்பு பற்றிய மிகையான கற்பனைகளை ஊட்டிக் கொண்டிருப்பது, அரசியல் தலைமைகளுக்கு நல்லதல்ல.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

October 2019
M T W T F S S
« Sep    
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

Latest Comments

இது தான் யாழ்ப்பாணிகள், வன்னி காட்டு மிராண்டிகளின் கலாச்சாரம் , முன்பு மறைமுகமாக செய்தார்கள் , [...]

மிகப் பெரும் விஞ்ஞானிகள் , இவர்கள் நாசாவின் பணியாற்ற வேண்டியவர்கள் , ஆறறிவு அல்ல 12 அறிவு உடையவர்கள் , [...]

துப்பாக்கி உனக்கு ஏன் உன் சொந்த சகாக்களை கொல்லவா ? 1988 - 1996 வரை நீ செய்த [...]

50 வருடங்களுக்கு பின் தான் இந்தியாவுக்கு முடிந்திருக்கு. சீன எப்பவோ சாதித்து விட்ட்து. [...]

My vote for Mr. Gotabhaya Rajapaksa, he can only save our country. [...]

இலங்கை பத்திரிகைகள்

English News