ilakkiyainfo

ilakkiyainfo

கூட்டமைப்பின் முத­ல­மைச்சர் வேட்­பாளர் யார் ? விரைவில் அறி­விக்க ரெலோ, புளொட் கோரிக்கை!!

கூட்டமைப்பின் முத­ல­மைச்சர் வேட்­பாளர் யார் ? விரைவில் அறி­விக்க ரெலோ, புளொட் கோரிக்கை!!
August 12
15:39 2018

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் சார்பில் வட­மா­கா­ண­ச­பைக்­கான அடுத்த தேர்­தலில் கள­மி­றக்­கப்­ப­ட­வுள்ள முத­ல­மைச்சர் வேட்­பாளர் யார் என்­பது தொடர்பில் விரைந்து முடி­வெ­டுத்து  பகி­ரங்­க­மாக அறி­விக்க வேண்­டு­மென கூட்­ட­மைப்பின் தலை­வரும், எதிர்க்கட்சித்தலை­வ­ரு­மான இரா.சம்­பந்­த­னி­டத்தில் பங்­கா­ளிக்­கட்­சி­க­ளான ரெலோ, புளொட் ஆகி­யன கூட்­டாக கோரிக்கை விடுத்­துள்­ளன.

தற்­போ­தைய முத­ல­மைச்சர் விக்­கி­னேஸ்­வரன் கூட்­ட­மைப்­பி­லி­ருந்து வெளி­யேறும் பட்­சத்தில் பாரிய பின்­ன­டை­வுகள் ஏற்­படும் என்பதையும் பங்­கா­ளிக்­கட்­சிகள் தலைவர் சம்­பந்­தனின் கவ­னத்­திற்கு கொண்டு வந்­தி­ருந்­தன.

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் ஒருங்­கி­ணைப்புக் குழுக் கூட்­டத்­தி­லேயே மேற்­கண்ட விடயம் கவ­னத்தில் கொள்­ளப்­பட்­டுள்­ளது. கொழும்பில் நடை­பெற்­றி­ருந்த இக்­கூட்டம் தொடர்பில் மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது,

வட­மா­காண சபைக்கு அடுத்த தேர்­தலில் முத­ல­மைச்சர் வேட்­பாளர் யார் என்­பது தொடர்பில் பல்­வேறு கருத்­துக்கள் நிலவி வரு­கின்­றன.

கூட்­ட­மைப்பின் தலை­வ­ரான தாங்கள் அது தொடர்பில் தீர்க்­க­மான அறி­விப்­பொன்­றினைச் செய்ய வேண்டும் என்று ரெலோ, புளொட் தரப்­புக்கள் முதலில் கோரிக்கை விடுத்­தன.

அத­னை­ய­டுத்து தற்­போ­துள்ள முத­ல­மைச்சர் விக்­கி­னேஸ்­வரன் தொடர்­பிலும் கருத்­துக்கள் பரி­மா­றப்­பட்­டன.

குறிப்­பாக, விக்­கி­னேஸ்­வ­ர­னுக்கு கணி­ச­மான மக்கள் செல்­வாக்கு காணப்­ப­டு­கின்­றது.

ஆகவே அவர் கூட்­ட­மைப்­பி­லி­ருந்து வெளியேறினால் அது பெரும் பின்­ன­டை­வாக அமைந்து விடும். எனவே அந்த விடயம் சம்­பந்­த­மா­கவும் கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் பங்­கா­ளிக்­கட்­சிகள் சுட்­டிக்­காட்­டி­யி­ருந்­தன.

இவ்­வி­ட­யங்­களை அவ­தா­னித்­துக்­கொண்­டி­ருந்த கூட்­ட­மைப்பின் தலைவர் சம்­பந்தன், மக்கள் செல்­வாக்கு சம்­பந்­த­மான விட­யத்­தினைக் கருத்­திற்­கொண்­டி­ருந்­த­தோடு வேறு தெரி­வுகள் எவையும் கூட்­ட­மைப்பில் இருக்­கின்­றதா என்ற தொனிப்­ப­டவும் சில கருத்­துக்­களை முன்­வைத்­தி­ருந்தார்.

எனினும் அவை எதுவும் தீர்க்­க­மா­ன­தாக குறிப்­பி­டப்­ப­ட­வில்லை என அறி­ய­மு­டி­கின்­றது.

இதே­வேளை இலங்கை தமி­ழ­ர­சுக்­கட்­சியின் தலை­வ­ரான மாவை.சோ.சேனா­தி­ராஜா எம்.பி., முத­ல­மைச்சர் விட்­டி­ருக்­கின்ற தவ­றுகள் தொடர்­பிலும் கவ­னத்­தினைச் செலுத்த வேண்­டி­யது முக்­கி­ய­மா­கின்­றது என்றும் குறிப்­பிட்­டி­ருந்தார்.

அத­னை­ய­டுத்து இவ்­வி­டயம் சம்­பந்­த­மாக ஆராய்ந்து தீர்க்­க­மான முடி­வெ­டுப்­ப­தென்று தீர்­மா­னிக்­கப்­பட்­டது.

இந்­நி­லையில் வட­மா­கா­ணத்தில் நீடித்­துக்­கொண்­டி­ருக்கும் சர்ச்­சைக்­கு­ரிய அமைச்­ச­ரவை விடயம் சம்­பந்­த­மா­கவும் இதன்­போது கவ­னத்தில் கொள்­ளப்­பட்­டது.

முத­ல­மைச்சர் விக்­கி­னேஸ்­வரன் தற்­போது கூட்­ட­மைப்­பி­னையே பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்­து­வ­தா­கவும், தாங்­களே(சம்­பந்­தனே) தலைவர் என்றும் கூறிவருகின்ற  நிலையில் அவருக்கு எதிராக கூட்டமைப்பில் உள்ளவர்களே வழக்குகளை தாக்கல் செய்து வாதப்பிரதிவாதங்கள் செய்துகொண்டிருப்பது பொருத்தமற்றதொரு செயற்பாடாக இருக்கின்றது.

ஆகவே அந்த விடயத்திலும் உரிய முடிவொன்று எடுக்கப்பட வேண்டும் என்றும் பங்காளிக்கட்சிகள் சம்பந்தனிடத்தில் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

October 2018
M T W T F S S
« Sep    
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

Latest Comments

இவர் ஒரு பிற்போக்குவாதி , கோழை அதனால் தான் இப்படி சொல்கின்றார் , எவருக்கும் எந்த [...]

’வீழ மாட்டோம்’ என்கிற ஆல்பம் புலன் பெயர் புலிகளால் ஏற்பாடு செய்ய படட நிகழ்வு, [...]

" யார் அரசியல் கைதிகள் , இவர்கள் எந்த அரசியல் நடவடிக்கையில் ஈடுபடடார்கள் என்று [...]

’வீழ மாட்டோம்’ என்கிற ஆல்பம் புலன் பெயர் புலிகளால் ஏற்பாடு செய்ய படட நிகழ்வு, [...]

உண்மை , இந்தியாவில் உள்ள நேர்மையாக ஒரு சிலரில் ஸ்வாமியும் ஒருவர், மிகவும் படித்தவர் , இவரை போல் [...]

இலங்கை பத்திரிகைகள்

English News