ilakkiyainfo

ilakkiyainfo

கூண்டோடு கோழிகளையும் முட்டைகளையும் திருடியவர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனை!

கூண்டோடு கோழிகளையும் முட்டைகளையும் திருடியவர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனை!
May 23
07:16 2019

                                                                                                                                

கூண்டோடு கோழிகளைத் திருடிய ஒருவருக்கு மூன்று மாத காலச் சிறைத்தண்டனை விதித்து சாவகச்சேரி நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

நாவற்குழி 300 வீட்டு திட்ட பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்குள் புகுந்த இந்த நபர்கள் கோழிக்கூட்டுடன் முட்டைகளையும் கடந்த ஏப்பிரல் மாதம் 24ஆம் திகதி திருடி சென்றனர்.

இது தொடர்பில் வீட்டு உரிமையாளர் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தார். முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் நாவற்குழி பகுதியை சேர்ந்த இரு இளைஞர்களை சந்தேகத்தில் கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்தனர்.

images  கூண்டோடு கோழிகளையும் முட்டைகளையும் திருடியவர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனை! images4அதன் போது அவர்கள் தாமே திருடியதாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்தனர். அதனை தொடர்ந்து அவர்களை நீதிமன்றில் பொலிஸார் ஆஜர்படுத்தினர்.

அதன்போது அவர்கள் தாமே திருடியதாகவும் திருடிய கோழிக்கூட்டில் கோழிகள் முட்டைகள் என்பவற்றை யாழ்ப்பாணத்தில் விற்று விட்டதாகவும் நீதிமன்றில் தெரிவித்தனர். அதனையடுத்து அவர்கள் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

இந்நிலையில் குறித்த வழக்கு புதன்கிழமை தீர்ப்புக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட போது முதலாம் எதிரிக்கு 6 ஆயிரத்து 500 ரூபா தண்டம் விதித்த மன்று உரிமையாளருக்கு 25 ஆயிரம் ரூபா நஷ்ட ஈடு வழங்க உத்தரவிட்டது.

இரண்டாம் எதிரிக்கு ஆயிரத்து 500 ரூபா தண்டம் விதித்த மன்று மூன்று மாத கடூழிய சிறைத்தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தது.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

October 2019
M T W T F S S
« Sep    
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

Latest Comments

இது தான் யாழ்ப்பாணிகள், வன்னி காட்டு மிராண்டிகளின் கலாச்சாரம் , முன்பு மறைமுகமாக செய்தார்கள் , [...]

மிகப் பெரும் விஞ்ஞானிகள் , இவர்கள் நாசாவின் பணியாற்ற வேண்டியவர்கள் , ஆறறிவு அல்ல 12 அறிவு உடையவர்கள் , [...]

துப்பாக்கி உனக்கு ஏன் உன் சொந்த சகாக்களை கொல்லவா ? 1988 - 1996 வரை நீ செய்த [...]

50 வருடங்களுக்கு பின் தான் இந்தியாவுக்கு முடிந்திருக்கு. சீன எப்பவோ சாதித்து விட்ட்து. [...]

My vote for Mr. Gotabhaya Rajapaksa, he can only save our country. [...]

இலங்கை பத்திரிகைகள்

English News