ilakkiyainfo

ilakkiyainfo

கொழும்பு றோயல் கல்லூரி மாணவர்கள் பயணித்த இரண்டு வாகனங்கள் விபத்தில் சிக்கியதில் ஒருவர் பலி; 9 பேர் காயம்

கொழும்பு றோயல் கல்லூரி மாணவர்கள் பயணித்த இரண்டு வாகனங்கள் விபத்தில் சிக்கியதில் ஒருவர் பலி; 9 பேர் காயம்
November 13
11:36 2017

வெலிக்­கடை பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட ராஜ­கி­ரிய சில்வா ஒழுங்­கைக்கு அருகில் இடம்­பெற்ற இரு வாகன விபத்­து­களில் கொழும்பு றோயல் கல்­லூ­ரியைச் சேர்ந்த ஒரு மாணவர் உயி­ரி­ழந்­த­துடன் 9 பேர் காய­ம­டைந்­துள்­ள­தாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரி­வித்­துள்­ளது.

இதே­வேளை, குறித்த கெப் வாக­னத்தின் பின்னால் வந்த வேறொரு கார் ஒன்றும் விபத்­துக்­குள்­ளான கெப்­புடன்மோதுண்­டதில் அதன் சாரதியும் காய­ம­டைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் பொலிஸார் தெரி­விக்­கின்றனர்.

மொர­கஸ்­முல்­ல­வி­லி­ருந்து ராஜ­கி­ரிய மாதின்­னா­கொட வீதியில் ராஜ­கி­ரிய நோக்கி பய­ணித்த கெப் ஒன்று நேற்று அதி­காலை 2 மணியளவில் சார­தியின் கட்­டுப்­பாட்டை இழந்து ராஜ­கி­ரிய சில்வா ஒழுங்­கைக்கு அருகில் வைத்து இட­து­பு­ற­மாக பாதை­யை­விட்டு விலகி அரு­கி­லுள்ள வீடு ஒன்றின் மதிலில் மோதி­யதில் இந்த விபத்து இடம்­பெற்­றுள்­ள­தாக வெலிக்­கடை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இத­னை­ய­டுத்து, விபத்­துக்­குள்­ளான கெப்பில் பய­ணித்த 10 பேர் பலத்த காயங்­க­ளுடன் கொழும்பு தேசிய வைத்­தி­ய­சா­லையில் அனுமதிக்கப்­பட்ட நிலையில் அவர்­களில் ஒருவர் சிகிச்சை பல­னின்றி உயி­ரி­ழந்­துள்ளார்.

கல்­கிஸை இசுறு உயன பிர­தே­சத்தை சேர்ந்த மொஹமட் அமன் கிவில் என்ற 18 வய­தான இளைஞர் ஒரு­வரே விபத்தில் உயி­ரி­ழந்­துள்­ள­வ­ரென தெரி­ய­வந்­துள்­ளது.

இச்­சம்­பவம் தொடர்பில் மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது, கொழும்பு றோயல் கல்­லூ­ரியில் இடம்‍­பெற்ற கண்­காட்சி ஒன்றில் கலந்து கொண்ட 11 மாண­வர்கள் டபிள் கெப் மற்றும் கார் ஒன்றில் ராஜ­கி­ரிய நாவல வீதியில் அமைந்­துள்ள இரவு நேர உண­வகம் ஒன்றில் உணவு பெற்­றுள்­ளனர்.

Royal-College  கொழும்பு றோயல் கல்லூரி மாணவர்கள் பயணித்த இரண்டு வாகனங்கள் விபத்தில் சிக்கியதில் ஒருவர் பலி; 9 பேர் காயம் Royal College

இந்த உண­வ­கத்தில் விலை குறைவு என்­பதால் தாம் அங்கு உணவு வாங்­கு­வ­தற்கு சென்­ற­தாக சம்­ப­வத்தில் காய­ம­டைந்த மாணவர் ஒருவர் தெரி­வித்­துள்ளார்.

அதன்­பின்னர் ஐ.டி.எச். பிர­தே­சத்தை நோக்கிச் சென்று தம்­முடன் வந்த மாணவர் ஒரு­வரை அவ­ரது வீட்டில் இறக்­கி­விட்டு வாக­னத்தை வேக­மாக செலுத்­தி­ய­வாறு  மீண்டும் ராஜ­கி­ரிய நோக்கி பய­ணித்துக் கொண்­டி­ருந்து போது முன்னால் பய­ணித்த டபள் கெப் வீதியை விட்டு விலகி கொங்­கிறீட் மதி­லொன்றை மோதி விபத்­துக்­குள்­ளா­கி­யுள்­ளது.

அதன்­பின்னர் விபத்­துக்­குள்­ளான கெப்பின் பின்னால் காரை செலுத்திச் சென்ற மாணவன், முன்னால் தனது நண்­பர்கள் பய­ணித்த கெப் விபத்­துக்­குள்­ளா­னதை கண்டு தனது வாக­னத்தின் வேகத்தை கட்­டுப்­ப­டுத்த முடி­யாமல் விபத்­துக்­குள்­ளான கெப்பை மோதி விபத்­துக்­குள்­ளா­ன­தாக சம்­ப­வத்தில் காய­ம­டைந்த மாண­வ­ரொ­ருவர் தெரி­வித்­துள்ளார்.

இத­னை­ய­டுத்து, தாம் விபத்­துக்­குள்­ளான கெப்­பி­லி­ருந்து வெளி­யேற முயற்­சித்­த­போது, கெப்­பினால் மோதப்­பட்ட கொங்­கிறீட் மதில் தம்­மீது இடிந்து வீழ்ந்து தாம் பலத்த காய­ம­டைந்­த­தாக அவர் மேலும் தெரி­வித்­துள்ளார்.

விபத்தில் காய­ம­டைந்த நால்­வரின் நிலை கவ­லைக்­கி­ட­மாக உள்­ள­தா­கவும், காய­ம­டைந்த மாண­வர்கள் அனை­வரும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், சம்பவங்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிக்கடை பொலிஸார் முன்னெடுத் துவருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

December 2018
M T W T F S S
« Nov    
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

Latest Comments

இன்றும் அணு சோதனை நடத்தி உள்ளார் , ஒரு மயிரையும் அமெரிக்கா புடுங்க முடியாது, , ஹிட்லருடன் இவரை [...]

UNP ஒரு ரவுடி கட்சி , 1983ல் தமிழர்களுக்கு எதிராக இனக்கலவரத்தை நடத்தி பல [...]

சில நாடுகளில் தேச நலனை கருத்தில் கொண்டு ராணுவம் அரசை கைப்பற்றி அடுத்த தேர்தல் வரை ஆடசி [...]

இந்த அலோலோயா மதமாற்றுக்கார CIA ஏஜென்ட் , உடனடியாக கைது செய்ய பட வேண்டும் [...]

தமிழ் தேசியம் என்பது ஒரு " சாக்கடை " என்பது மீண்டும் மீண்டும் நிரூபணமாகி உள்ளது, தமிழ் தேசியம் பேசுபவர்கள் [...]

இலங்கை பத்திரிகைகள்

English News