ilakkiyainfo

ilakkiyainfo

கொலஸ்ட்ரோலுக்கு என்ன காரணம்?

கொலஸ்ட்ரோலுக்கு என்ன காரணம்?
April 01
02:03 2016

நமது உடல் கொலஸ்ட்ரோலைத் தன்­னி­லி­ருந்தே உற்­பத்தி செய்து கொள்­கி­றது.

நம் கல்­லீரல் நாளொன்­றுக்குச் சுமார் 1000 மில்­லி­கி­ராம்கள் வரை கொலஸ்ட்ரோலை உற்­பத்தி செய்­கி­றது.

கல்­லீ­ரலும் மற்ற செல்­களும் சேர்ந்து இரத்­தத்தின் மொத்த கொலஸ்ட்ரோல் அளவில் 75% உற்­பத்தி செய்­கின்­றன.

25% கொலஸ்ட்ரோல்  நாம் உட்­கொள்ளும் உணவு வகை­க­ளான முட்டைக் கரு, மாமிசம், கோழி­யி­றைச்சி, பால் மற்றும் பால் தயா­ரிப்­பு­க­ளி­லிருந்து கிடைக்­கி­றது.

* அதிக அள­வி­லான கொழுப்­புகள் கலந்த உணவுப் பழக்கம்

* அதிக மாமிச உணவு உண்­பது

* அதீத உடற்­ப­ருமன் (Obesity)

* உடல் இயக்கக் குறை­வான பணிகள்

* உடற்­ப­யிற்­சி­யின்மை

* அதிக தூக்கம்

* புகைப் பழக்கம்

* மன அழுத்தம்

* மதுப்­ப­ழக்கம்

* சக்­க­ரைநோய், சிறு­நீ­ரகம் மற்றும் தைெராய்ட் சுரப்பி நோய்கள்.

* கருத்­தடை மாத்­தி­ரைகள்

*பெற்­றோர்­க­ளுக்கு மிகை கொலஸ்ட்ரோல் இருக்­கு­மானால் அதற்கு கார­ண­மான ஜீன்­களை நீங்­களும் பெற்­றி­ருக்கக் கூடும்.

பொது­வாக, இரத்­தத்தில் அதிக அளவில் கொலஸ்ட்.ேரால் இருப்­ப­தற்­கான எந்த ஓர் அறி­கு­றி­யையும் ஏற்­ப­டுத்­து­வ­தில்லை. ஆகை­யால்தான் அது “அமை­தி­யான உயிர்க்­கொல்லி” என்று அறி­யப்­ப­டு­கி­றது.

உடல் பருமன் இல்­லா­த­வர்­க­ளுக்கு இரத்­தத்தில் கொலஸ்ட்.ேரால் அதிகம் இருக்­காது என்று சொல்ல முடி­யாது. யாருக்கும் வரலாம். இரத்த பரிசோதனை செய்து பார்த்தால் தான் தெரிய வரும்.

இரத்­தத்தில் உள்ள கொலஸ்ட்ரோலின் அளவு என்­பது, 12 மணி நேரம் ஏதும் உட்­கொள்­ளாத நிலையில் காலையில் எடுக்­கப்­பட்ட மாதிரி (sample) இரத்­தத்­தி­லி­ருந்து கணக்­கி­டப்­ப­டு­கி­றது.

அதிலும் ‘லிபோபுரோட்டீன் ப்ரொஃபைல்’ (lipoprotein profile) எனும் இரத்தப் பரிசோதனை செய்வது மிகவும் சிறந்தது.

கொலஸ்ட்ரோல் அதிகரிப்பினால் மூளை அடைப்பும் ஏற்படலாம்

கொலஸ்ட்ரோலுக்கு என்ன காரணம்? surrogatemarkersஎமது கொழுப்பு உணவின் ஓர் அங்­கமே கொலஸ்ட்ரோல் ஆகும். இவை ஒரு குறிப்­பிட்ட அளவில் இருப்­பது எமது உடலுக்கு அவ­சியம்.

கொலஸ்ட்ரோலில் பல கூறுகள் உண்டு. HDl, LDL, TRIGLYCE RIDES என்­பன முக்­கிய கூறு­க­ளாகும். இதில் HDL கொலஸ்ரோல் ஆபத்­தற்­றது. அதி­க­மாக இருப்­பினும் பாதிப்­பில்லை. நன்­மைதான்.

ஆனால் LDL, TRIGLYCE RIDES என்­பன குறிப்­பிட்ட அள­வுக்கு மேலாக இருப்­பது தீங்­கு­களை விளை­விக்கும்.

மொத்த கொலஸ்ட்ரோல் குரு­தியில் 200mg இற்கு அதி­க­மாக இருப்பின் நாம் உஷா­ர­டைய வேண்டும்.

இதுவே 240 mg DL இற்கு அதி­க­மானால் கொலஸ்ட்ரோல் படிவு குருதிக் குழாய்­களின் உட் சுவரில் படிந்து குருதி சீராகப் பய­ணிப்­பதைத் தடுப்­ப­துடன் இரத்தச் சுற்­றினில் குருதி உறைந்து CLOTS உரு­வாக வழி­வ­குக்கும்.

இந்­நிலை மிகவும் ஆபத்­தா­னது.

கொலஸ்ட்ரோலுக்கு என்ன காரணம்? atherosclerosisஇக்­கு­ருதிக் கட்­டிகள் இதய நாடி­க­ளையோ மூளைக்குச் செல்லும் நாடி­க­ளையோ அடைக்கும் போது மார­டைப்பு மூளை­ய­டைப்பு என்­பன ஏற்­ப­டலாம்.

கொலஸ்ட்ரோல் படி­வுகள் குருதிக் குழாய்­களில் அதி­க­மாக படிவதால் குருதி பாயும் சிறு குழாய்­களுள் அடைப்பை ஏற்­ப­டுத்தும் அபா­யமும் உண்டு.

இவ் அடைப்­புக்கள் சிறி­ய­ளவில் இருக்கும் போது களைப்பு, மார்பு வலி, தலை­வலி முத­லான சில அறி­கு­றிகள் அடிக்­கடி தோன்றும்.

ஆனால் அடைப்பு பெரி­தாகி குருதி வழங்கல் பாதிப்­புறும் போது தீவிர நோய் நிலை ஏற்­படும். மூளை அடைப்பினால்பக்கவா­தமும் ஏற்­ப­டலாம்.

கொலஸ்ட்ரோல் படிவு அதிக கொழுப்பு உணவு வகை­களை உண்­ப­வர்­க­ளிலும், எடை அதி­க­மாக உள்­ள­வர்களிலும் சிறுவயதிலிருந்தே சிறிது சிறிதாக மெதுவாக படிய ஆரம்பிக்கும்.

ஆண்­களில் 25 வய­துக்குப் பின்­னரும் பெண்களில் மாத விலக்கு நின்ற பின்­னரும் கொலஸ்ட்ரோல் வேக­மாக அதிகரிக்கும்.

பெண்­களில் மாத­வி­லக்கு தொடரும் காலங்­களில் பால் ஓமோன்கள் கொலஸ்ட்ரோலின் அளவைக் கட்­டுப்­ப­டுத்த உதவுகின்­றன. ஈஸ்­ரஜன் குறையும் போது கொலஸ்ரோல் அதி­க­ரிக்கும்.

ஒரு­வரில் கொலஸ்ட்ரோல் தேவை­யான அளவை விட அதி­க­ரித்­தாலும் வெளியே எது­வித அறி­கு­றி­களை உடனும் தோற்­று­விப்­ப­தில்லை.

நடுத்­தர வயதை அண்­மிக்கும் போது இதன் படிவு குருதிக் குழாய்­களில் அதி­க­ரிக்கும் போதே அறி­கு­றிகள் வெளித்­தெ­ரிய ஆரம்­பிக்கும்.

எதுவும் இது ஏற்­ப­டுத்தும் இதர நோய் நிலை­களைப் பொறுத்தே இருக்கும். சற்று காலம் செல்ல இப்­ப­டி­வுகள் நாடி­களில் அதி­க­ரிக்கும் போது மார­டைப்பு, மூளை­ய­டைப்பு அல்­லது பக்­க­வாதம், சிறு­நீ­ரக நோய்கள், ஈரல் நோய்கள், கண் பார்­வையில் பாதிப்பு உட்­பட பல பாதிப்­புக்கள் ஏற்­படும்.

கொலஸ்ரோல் அதி­க­ரித்­துள்­ளதை LIPID PROFIFE என்ற குருதிப் பரி­சோ­தனை மூலமே கண்­ட­றிய முடியும். இரவு சாப்­பிட்ட பின்னர் 12 மணித்­தி­யா­லங்கள் எதுவும் உண்­ணாமல் இருந்து காலையில் இரத்­தத்தை பரி­சோ­திக்க வேண்டும். இடையில் வெறும் தண்­ணீரைத் தவிர வேறு நீரா­கா­ரங்­களும் அருந்தக் கூடாது.

நீரி­ழிவு, உயர்குருதி அழுத்தம் முத­லான நோயுள்­ள­வர்­களும் உடற் பருமன் உள்­ள­வர்­களும் கட்­டா­ய­மாக இப் பரி­சோ­த­னையை மேற்­கொள்ள வேண்டும்.

பரம்­ப­ரையில் கொலஸ்ட்ரோல் உள்­ள­வர்­களும் கட்­டா­ய­மாக பரி­சோ­த­னையை மேற்­கொள்ள வேண்டும்.

30 வய­துக்கு மேற்­பட்ட ஆண்­களும் மாத­விடாய் நின்று போன பெண்­களும் இப் பரி­சோ­த­னையை மேற்­கொள்­வது நல்­லது. உடலு­ழைப்பு குறைந்­த­வர்­களும் பரி­சோ­தித்தல் வேண்டும்.

கொலஸ்ட்ரோல் அதி­க­ரிப்­புக்கு அதிக கொழுப்­பான உண­வு­களை உட்­கொள்­வதும் பரம்­பரை அலகும் முக்­கிய கார­ணங்­க­ளாகும். இது தவிர முன் குறிப்­பிட்­டது போல உயர் குருதி அழுத்­தமும், நீரி­ழிவு நோயும் அதிக உடலுழைப்பின்­மையும் கொலஸ்ட்ரோலை அதி­க­ரிக்க வைக்­கின்­றன.

வயது அதி­க­ரிக்கும் போது கொலஸ்ட்ரோல் அதி­க­ரிப்பு ஏற்­படும்.

மது, புகைத்தல், மனச்­சுமை, சூழல் மாசு, சில மருந்­துகள் என பிற கார­ணங்­களால் உடலில் கொலஸ்ட்ரோல் அதி­க­ரிப்­பதற்கு முக்­கிய காரணம். தவ­றான உணவுப் பழக்கங்­களே என்­பதால் சிறு வய­தி­லி­ருந்தே உணவுக் கட்­டுப்­பாட்டைப் பேண வேண்டும்.

அதி­க­ரித்த கொழுப்பு மற்றும் மாமிச உண­வு­களை குறைத்துக் கொள்ள வேண்டும். இதன் மூலம் வளரும் போது கொலஸ்ட்ரோலை கட்­டுப்­பாட்­டுக்குள் வைத்­தி­ருக்க முடி­கின்­றது.

தானிய வகைகள், மரக்­கறி வகைகள், இலைக் கறிவகைகள், பழ­வ­கைகள் முத­லா­ன­வற்றை அதி­க­மாக உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

அதி­க­ரித்த கொலஸ்ட்ரோல் இருப்­ப­தாக இனம் காணப்­பட்­ட­வர்கள் உணவுக் கட்­டுப்­பாட்டை தீவி­ர­மாக மேற்­கொள்ள வேண்டும்.

மாமி­சங்கள், எண்ணெய் வகைகள், நெய் முத­லான பாற் பொருட்கள் என்­ப­வற்றை இயன்­றளவு தவிர்க்க வேண்டும். மது, புகைத்தல் என்­ப­வற்றை முற்­றாக தவிர்க்க வேண்டும்.

போதிய உட­லு­ழைப்பு அல்­லது தேகாப்­பி­யாசம் செய்ய வேண்டும். நடத்தல், நீந்­துதல், துவிச்­சக்­கர வண்­டியில் பய­ணித்தல் என்­பன கொலஸ்ட்ரோலைக் கட்­டுப்­ப­டுத்­திட உதவும்.

நீரி­ழிவு மற்றும் உயர் குருதி அழுத்த நோயா­ளர்கள் தமது நோயைக் கட்­டுப்­பாட்­டுக்குள் வைத்­தி­ருக்க வேண்டும். வைத்­திய ஆலோ­ச­னை­யுடன் கொலஸ்ட்ரோலின் அதி­க­ரிப்பைக் கட்­டுப்­ப­டுத்தும் மருந்தை பாவிக்க வேண்டும்.

கொலஸ்ட்ரோலின் அளவு கட்­டுப்­பாட்­டுக்குள் வந்த பின்னர் மருந்தை உட்­கொள்­ளாது விடினும் உணவு கட்­டுப்­பாட்டைத் தொடர வேண்டும்.

மார­டைப்பு மற்றும் ஸ்ரோக் ஆபத்து ஏது நிலை உள்­ள­வர்கள் தொடர்ந்தும் சிறிய அளவில் கொலஸ்ட்ரோலைக் கட்டுப்படுத்தும் மருந்தை பாவிக்க வேண்டும். தேகப் பயிற்சியையும் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்.

எமது சீரான வாழ்க்கை முறையினால் மிக ஆபத்தான நோய்கள் ஏற்படுவதை இலகுவாக தவிர்க்க முடியும். கொலஸ்ட்ரோல் கொழுப்பு அதிகரிப்பின் ஆபத்துக்கள் பற்றி சிறு வயதிலிருந்தே சுகாதாரக் கல்வி மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

இதன் மூலம் நீண்ட காலம் நோயற்ற சுகவாழ்வை வாழ முடியும். முதுமையிலும் தொல்லைகளின்றி வாழ்ந்திட இது வழி வகுக்கும்.

-டொக்டர் ச.முருகானந்தன்-

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

October 2018
M T W T F S S
« Sep    
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

Latest Comments

’வீழ மாட்டோம்’ என்கிற ஆல்பம் புலன் பெயர் புலிகளால் ஏற்பாடு செய்ய படட நிகழ்வு, [...]

" யார் அரசியல் கைதிகள் , இவர்கள் எந்த அரசியல் நடவடிக்கையில் ஈடுபடடார்கள் என்று [...]

’வீழ மாட்டோம்’ என்கிற ஆல்பம் புலன் பெயர் புலிகளால் ஏற்பாடு செய்ய படட நிகழ்வு, [...]

உண்மை , இந்தியாவில் உள்ள நேர்மையாக ஒரு சிலரில் ஸ்வாமியும் ஒருவர், மிகவும் படித்தவர் , இவரை போல் [...]

bis

திருமணம் என்பது ஒப்பந்தம். ஒப்பந்தம் கட்டாயப்படுத்தி செய்ய முடியாது. ச்ட்டாபூர்வமில்லாத ஒப்பந்தம் தானாகவே வலுவற்றதாகி விடுகின்றது. Legally not bound. [...]

இலங்கை பத்திரிகைகள்

English News