ilakkiyainfo

ilakkiyainfo

கொலை முயற்சி குற்றச்சாட்டு தொடர்பில் உரிய விசாரணை: ஜனாதிபதி மைத்திரி கூறுகின்றார்

கொலை முயற்சி குற்றச்சாட்டு தொடர்பில் உரிய விசாரணை: ஜனாதிபதி மைத்திரி கூறுகின்றார்
September 16
06:36 2018

என்னை கொலை செய்­வ­தற்­கான முயற்சி குறித்த குற்­றச்­சாட்டு தொடர்பில் தகவல் கிடைத்­துள்­ளது. இது தொடர்பில் விசா­ரணை மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றது. பொலிஸ்மா அதி­ப­ருடன் இந்த விட யம் தொடர்பில் கலந்­து­ரை­யா­டி­யுள்ளேன். விசேட பொலிஸ் குழு அமைக்­கப்­பட்டு இதற்­கான விசா­ரணை தொடர்­கின்­றது என்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்தார்.

ஜனா­தி­பதி மாளி­கையில் ஊடக நிறு­வ­னங்­க ளின் பிர­தா­னிகள் மற்றும் பத்­தி­ரி­கையின் ஆசி­ரி­யர்­களை ஜனா­திபதி மைத்­தி­ரி­பால சிறி­சேன நேற்று சந்­தித்து கலந்­து­ரை­யா­டினார். இந்த சந்­திப்­பின்­போது எழுப்­பப்­பட்ட கேள்வி ஒன்­றுக்கு பதி­ல­ளிக்­கை­யி­லேயே அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வையும் முன் னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­த­பாய ராஜ­ப­க் ஷ­வையும் கொலை செய்­வ­தற்­கான சதித்­திட்டம்

தொடர்பில் பயங்­க­ர­வாத புல­னாய்­வுப்­பி­ரிவின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக்க சில்வா தன்­னுடன் தொலை­பே­சியில் உரை­யா­டி­ய­தாக ஊழ­லுக்கு எதி­ரான படை அமைப்பின் நட­வ­டிக்கை பணிப்­பாளர் நாமல் குமார என்­பவர் குற்­றச்­சாட்­டுக்­களை முன்­வைத்­தி­ரு­நு்தார். இந்த விடயம் தொடர்பில் விடே விசா­ரணை இடம்­பெற்று வரு­கின்­றது.

இந்த நிலை­யி­லேயே ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன குறித்த விடயம் தொடர்பில் விசா­ரணை இடம்­பெ­று­வ­தாக தெரி­வித்­தி­ருக்­கின்றார்.

கேள்வி: ஜனா­தி­ப­தி­யான உங்­களை கொலை செய்­வ­தற்கு முயற்சி எடுக்­கப்­ப­டு­வ­தாக குற்­றச்­சாட்டு முன்­வைக்­கப்­பட்­டுள்­ளது. பிர­தி­பொ­லிஸ்மா அதிபர் ஒரு­வ­ருக்கு எதி­ரா­கவே இவ்­வாறு முறைப்­பாடு தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. இது குறித்து எடுக்­கப்­பட்ட நட­வ­டிக்கை என்ன?

பதில்: இவ்­வி­டயம் தொடர்பில் தகவல் கிடைத்­தது. விசா­ர­ணைகள் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றன. இந்த விடயம் தொடர்பில் இங்கு வரு­வ­தற்கு முன்­னரும் பொலிஸ்மா அதி­ப­ருடன் தொடர்­பு­கொண்டு வின­வி­யி­ருந்தேன். விசேட குழுவின் கீழ் விசா­ரணை இடம்­பெற்று வரு­கின்­றது.

கேள்வி: பிரதி பொலிஸ் மா அதி­ப­ருக்கு எதி­ராக செய்­யப்­பட்ட குற்­றச்­சாட்டை பொலிஸ் குழுவே விசா­ரிக்­க­வுள்­ளது. குற்­றச்­சாட்­டப்­பட்­டவர் பிரதி பொலிஸ் மா அதி­ப­ராக இருப்­ப­தனால் விசா­ர­ணைக்கு இடை­யூ­று­களை ஏற்­ப­டுத்த முடியும். எனவே அவரை பத­வி­லி­யி­ருந்து இடை­நி­றுத்தி விசா­ர­ணை­களை மேற்­கொள்ள முடி­யாதா?

பதில்: இந்த சம்­பவம் தொடர்பில் வெளி­யி­டப்­பட்ட ஒலி­நா­டாவில் நானும் கோத்­த­பாய ராஜ­ப­க்ஷவும் போதைப் பொரு­ளுக்கு எதி­ராக செயற்­ப­டு­வ­தாக குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. பொலிஸ் அதி­காரி தொடர்பில் குற்­றம்­சாட்­டப்­பட்­டதன் அடிப்­ப­டையில் குற்­றப்­பு­ல­னாய்வு பிரி­வினர் ஊடாக விசா­ர­ணையை ஆரம்­பிக்­கவும் நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது.

கேள்வி: இந்த குற்­றச்­சாட்­டுடன் பொலிஸ் மா அதி­பரும் தொடர்­பு­பட்­டுள்­ளாரா?

பதில்: குற்­றச்­சாட்டு தொடர்பில் விசா­ரணை நடை­பெ­று­கின்­றது.

கேள்வி: நாட்டின் ஜனா­தி­ப­தியை கொலை செய்ய திட்­ட­மி­டப்­பட்­டி­ருக்­கின்­றது. வடக்கில் சிங்­கள குடி­யேற்றம் இடம்­பெ­று­வ­தாக குற்­றம்­சாட்­டப்­ப­டு­கின்­றது. போதைப்­பொருள் பாவனை அதி­க­ரித்­துள்­ளது. இவ்­வாறு குற்­றச்­செ­யல்கள் அதிகரிக்கின்றன. திட்டமிட்ட வகையில் நாட்டின் உறுதிப்பாட்டை இல்லாமல் ஆக்குவதற்கு சதிமுயற்சி நடக்கின்றதா?

பதில்: உண்மையில் பொலிஸ் அறிக்கைகளை பார்க்கும் போது கடந்த மூன்று நான்கு வருங்களில் நாட்டில் குற்றங்கள் குறைவடைந்துள்ளன. இந்த நிலையில் நாம் பொறுப்புடன் செயற்படவேண்டும். பதவிகளை வகிப்பவர்கள் பொறுப்புடன்செயலாற்றவேண்டும்.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

November 2019
M T W T F S S
« Oct    
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  

Latest Comments

இந்த கோமாளி சர்வ தேசத்துக்கு எதோ செய்தி சொல்வதாக கூறி இந்த தேர்தலில் போட்டியிடடான் , ஆனால் வடகிழக்கு [...]

காஷ்மீர் மக்களை உரிமையுடன் இந்த மோடி ( மோசடி ) நடத்த வேண்டும் , இலங்கை தமிழர்கள் கருணை காட்ட [...]

எந்த தை பொங்கலுக்கு , எந்த தீபாவளிக்கு தீர்வு வரும் அதை முதலில் சொல்லுங்க ? புலிகள் [...]

17ம் திகதிக்கு பின் இங்கு , பணம் காயும் , வாழைப்பழ குலையும் சேமிக்கும் இடமாக மாற்றப்பட [...]

இங்கு வேலை செய்யும் தமிழர்கள் நவீன கால அடிமைகள் , இந்த உணவகத்தை புறக்கணிப்பதுடன் [...]

இலங்கை பத்திரிகைகள்

English News