ilakkiyainfo

ilakkiyainfo

கொழும்பு மாந­க­ர முதல் பெண் மேய­ராக பத­வி­யேற்­கிறார் ரோஸி

கொழும்பு மாந­க­ர முதல் பெண் மேய­ராக பத­வி­யேற்­கிறார் ரோஸி
February 12
14:32 2018

கொழும்பு மாந­க­ர­ச­பையின் முதல் பெண் மேய­ராக ரோஸி சேன­நா­யக்க பத­வி­யேற்­க­வுள்ளார். கொழும்பு மாந­க­ர­ச­பைக்­கான தேர்­தலில் ஐக்­கிய தேசி­யக்­கட்சி 1 இலட்­சத்து 31 ஆயி­ரத்து 353 வாக்­கு­களைப் பெற்று 60 ஆச­னங்­களை தன்­வ­சப்­ப­டுத்­தி­யுள்­ளது.

110 உறுப்­பி­னர்­களைக் கொண்ட கொழும்பு மாந­க­ர­ச­பையில் 60 உறுப்­பி­னர்­களை ஐக்­கிய தேசி­யக்­கட்சி பெற்­றுள்­ள­மை­யினால் தனித்து ஆட்சி அமைக்­கக்­கூ­டிய நிலைமை உரு­வா­கி­யி­ருக்­கின்­றது. ஆனால் ரோஸி சேன­நா­யக்­கவை மேய­ராகக் கொண்ட நிர்­வாகம் அமைக்கப்ப­ட­வுள்­ளது.

இந்தத் தேர்­தலில் பொது­ஜன பெர­முன 60 ஆயி­ரத்து 87 வாக்­கு­களைப் பெற்று 23 உறுப்­பி­னர்­க­ளையும் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி 31 ஆயி­ரத்து 421 வாக்­கு­களைப் பெற்று 12 உறுப்­பி­னர்­க­ளையும் பெற்­றுள்­ளன.

அமைச்சர் மனோ கணேசன் தலை­மை­யி­லான ஒருங்கிணைந்த முற்­போக்கு கூட்­டணி 27 ஆயி­ரத்து 168 வாக்­கு­களைப் பெற்று 10 உறுப்­பி­னர்­களை தன்­வ­சப்­ப­டுத்­தி­யுள்­ளது.

இதில் தொகுதி ரீதி­யாக வெள்­ள­வத்தை பாமன்­கடை மேற்கு தொகு­தியில் போட்­டி­யிட்ட பி. பாஸ்­கரா வெற்­றி­பெற்­றுள்ளார். மேயர் வேட்­பா­ள­ராக போட்­டி­யிட்ட சண் குக­வ­ரதன் சொற்ப வாக்கு வித்­தி­யா­சத்தில் தோல்­வி­ய­டைந்­துள்ளார்.

இருந்­த­போ­திலும் விகி­தா­சார பட்­டியல் அடிப்­ப­டையில் 9 ஆச­னங்­களைப் பெற்று மொத்­த­மாக 10 உறுப்­பி­னர்­களை முற்­போக்­குக்­கூட்­டணி தன­தாக்­கிக்­கொண்­டுள்­ளது.

மக்கள் விடு­தலை முன்­னணி 14 ஆயி­ரத்து 234 வாக்­கு­களைப் பெற்று 6 ஆச­னங்­களை கைப்­பற்­றி­யுள்­ளது. நவோ­தய மக்கள் முன்னணியின் தலைவர் எஸ். கே. கிருஷ்ணா தலை­மையில் போட்­டி­யிட்ட சுயேச்­சைக்­குழு 2 ஆனது 4833 வாக்­குக்­களைப் பெற்று 2 உறுப்­பி­னர்­களை பெற்­றுள்­ளது.

இலங்கை தொழி­லாளர் காங்­கி­ர­ஸுடன் இணைந்து போட்­டி­யிட்ட ஜன­நா­யக மக்கள் காங்­கிரஸ் அணி 2853 வாக்­கு­களைப் பெற்று 1 ஆசனத்­தையும் இலங்கை தேசிய சக்தி 3251 வாக்­கு­களைப் பெற்று 1 ஆச­னத்­தையும் நல்­லாட்­சிக்­கான தேசிய முன்­னணி 2771 வாக்­கு­களைப் பெற்று 1 ஆச­னத்­தையும் ஐக்­கிய தேசிய சுதந்­திர முன்­னணி 1380 வாக்­கு­களைப் பெற்று 1 ஆச­னத்­தையும் கைப்­பற்­றி­யுள்­ளன.

ஐக்­கிய தேசி­யக்­கட்­சியில் கொட்­டாஞ்­சே­னையில் போட்­டி­யிட்ட மேல்­மா­கா­ண­சபை உறுப்­பினர் ராமின் புதல்­வ­ரான ஜோன் ராம் வெற்­றி­பெற்­றுள்ளார்.

இதே­போன்று காயத்­திரி விக்­கி­ர­ம­சிங்க வெற்­றி­வாகை சூடி­யுள்ளார். வெள்­ள­வத்­தையில் போட்­டி­யிட்ட திரு­மதி அமிர்­தாம்­பிகை கோபாலன், பிர­ணவன் ஆகி­யோரும் வெற்­றி­பெற்­றுள்­ளனர்.

பாமன்­கடை மேற்குத் தொகு­தியில் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் சார்பில் போட்டியிட்ட ஊடகவியலாளர் உமாசந்திர பிரகாஷ், ஜனநாயக மக்கள் காங்கிரஸின் செயலாளரும் முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான நல்லையா குமரகுருபரன் ஆகியோரும் தோல்வியைத் தழுவியுள்ளனர்.

இந்தத் தொகுதியிலேயே ஒருமித்த முற்போக்கு கூட்டணியில் வேட்பாளராக போட்டியிட்ட பாஸ்கரா வெற்றிபெற்றுள்ளார்.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

July 2018
M T W T F S S
« Jun    
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

Latest Comments

raj

Nalla kirukkan [...]

Nice pair i think and manmadhan ,saravana,CCV, காற்றின் மொழி super ha irukkum my thalaivan str [...]

ஒரு காலத்தில் எதிர்க்கட்சித் தலைவர் அமிர்தலிங்கத்திற்கு எதிராக கௌரவ சிறில் மத்தியு உட்பட பல ஐதேக எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவித்ததை [...]

இரத்தம் சிந்திய ஒரு போராளி, அநியாத்திற்கு எதிராகம் குமுறும் ஒரு வீரப்பெண், மக்களின் சுதந்திரத்திற்காகவும் உரிமைகளிற்காகவும் பெருந் தலைவர்களுடனும் அரசியல் [...]

இப் பேச்சிற்காக ஏதோ அமைப்பு அவருக்கு வீரப் பெண் சிங்கம் என்று பட்டம் வழங்குவார்கள். அதற்காக அவர் அப்படிப் பேசியிருக்கலாம். [...]

இலங்கை பத்திரிகைகள்

English News