ilakkiyainfo

ilakkiyainfo

“கோட்டாபய ராஜபக்ஷ இலங்கை ஜனாதிபதியாவது தமிழர்களுக்கு நன்மையே” – விக்னேஸ்வரனின் கருத்து ஏற்புடையதா?

“கோட்டாபய ராஜபக்ஷ இலங்கை ஜனாதிபதியாவது தமிழர்களுக்கு நன்மையே” – விக்னேஸ்வரனின் கருத்து ஏற்புடையதா?
October 01
17:43 2019

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ, ஜனாதிபதியாக சத்திய பிரமாணம் செய்துக் கொள்ளும் பட்சத்தில் அது தமிழர்களுக்கு நன்மையே தவிர தீமை கிடையாது என வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள சி.வி.விக்னேஸ்வரன், தமிழர்கள் அச்சப்படுகின்ற அளவிற்கு அவர் நடந்துக்கொள்ள மாட்டார் என கூறியுள்ளார்.

கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக வருவதை இந்தியா மற்றும் அமெரிக்கா விரும்பாது என விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவ்வாறு கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதிவரும் பட்சத்தில், இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் தமிழ் மக்களுக்கு சார்பாக நடவடிக்கை எடுக்க வேண்டியதொரு நிலைக்குத் தள்ளப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவிற்கும், கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் இடையில் கள்ள உறவு இருப்பதாக கூறப்படுகின்றது என அவர் சுட்டிக்காட்டினார்.

அவ்வாறு இருந்தாலும், அமெரிக்கா கோட்டாபய ராஜபக்ஷவை வழிநடத்த பார்க்கும் என கூறியுள்ள அவர், அது தமிழ் மக்களுக்கு சார்பாகவே அமையும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களுக்கான செல்வாக்கு அமெரிக்காவில் அதிகரித்து காணப்படுகின்றமையினால், அது தமிழர்களுக்கு சாதகமாகவே காணப்படும் என சி.வி.விக்னேஸ்வரன் கூறியுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பதில்

_109045759_c1b3d1d1-7e56-4cd0-ad88-776c0a8f1188 "கோட்டாபய ராஜபக்ஷ இலங்கை ஜனாதிபதியாவது தமிழர்களுக்கு நன்மையே" - விக்னேஸ்வரனின் கருத்து ஏற்புடையதா? "கோட்டாபய ராஜபக்ஷ இலங்கை ஜனாதிபதியாவது தமிழர்களுக்கு நன்மையே" - விக்னேஸ்வரனின் கருத்து ஏற்புடையதா? 109045759 c1b3d1d1 7e56 4cd0 ad88 776c0a8f1188பாதுகாப்பு முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தொடர்பில் சி.வி.விக்னேஸ்வரன் வெளியிட்ட கருத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிவமோகன் தெரிவிக்கின்றார்.

சி.வி.விக்னேஸ்வரன் வெளியிட்ட கருத்து தொடர்பில் பி.பி.சி தமிழ் வினவிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டிருந்தார்.

மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் வன்னி நிலப்பரப்பில் வாழ்ந்த அனைத்து மக்களும் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்கி வந்திருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

வெள்ளை வேன்களில் பல கடத்தல்கள் இடம்பெற்றதாகவும், புலனாய்வாளர்கள் என்ற போர்வையில் வருகைத் தந்தவர்கள் தமிழர்களின் வாழ்க்கையை சீர்குலைத்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

_109045762_4776b4d1-76d4-45b0-b709-4d58858b8028 "கோட்டாபய ராஜபக்ஷ இலங்கை ஜனாதிபதியாவது தமிழர்களுக்கு நன்மையே" - விக்னேஸ்வரனின் கருத்து ஏற்புடையதா? "கோட்டாபய ராஜபக்ஷ இலங்கை ஜனாதிபதியாவது தமிழர்களுக்கு நன்மையே" - விக்னேஸ்வரனின் கருத்து ஏற்புடையதா? 109045762 4776b4d1 76d4 45b0 b709 4d58858b8028அத்துடன், புலம்பெயர்ந்த தமிழர்கள் மீண்டும் நாட்டிற்கு வருகைத் தந்த சந்தர்ப்பங்களில் அவர்களின் தகவல்களை திரட்டி, அவர்களின் வீடுகளுக்கு சென்று அச்சுறுத்தல்களை விடுத்ததாகவும் அவர் கூறினார்.

கிறிஸ் பூதம் என்ற பெயரிலான அச்சுறுத்தல்கள், காணாமல் ஆக்கப்பட்டமை மற்றும் காணாமல் போன போராளிகளின் மனைவிமார் கொழும்பிற்கு அழைத்து செல்லப்பட்டு பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், அரச படைகள் தமிழர்களின் காணிகளை கையகப்படுத்தி வைத்துள்ளமை, மக்களுக்கு பாரிய பிரச்சினையாக அமைந்திருந்ததாகவும் எஸ்.சிவமோகன் கூறினார்.

வன்னியிலுள்ள மக்கள் எதிர்நோக்கி பிரச்சினைகள் தொடர்பில், சி.வி.விக்னேஸ்வரனுக்கு தெரியாது என கூறிய அவர், சி.வி.விக்னேஸ்வரன் கொழும்பில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்துக் கொண்டிருந்ததாகவும் சுட்டிக்காட்டினார்.

வன்னியின் வரலாறு தெரியாத ஒருவர் வன்னி மக்கள் தொடர்பில் கருத்துரைக்க வேண்டிய அவசியம் கிடையாது என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிவமோகன் குறிப்பிட்டிருந்தார்.

சிவமோகனின் குற்றச்சாட்டுக்கள், பொதுஜன பெரமுன பதில்

தமிழ் மக்களுக்கு நன்மை ஏற்படும் வகையிலான எந்தவொரு பணிகளையும் வடக்கு கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் அரசியல்வாதிகள் செய்ததில்லை எனவும், மாறாக மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் மீது குற்றச்சாட்டுக்களை சுமத்தி தமிழர்களை வாக்குகளை சுவீகரிக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவிக்கின்றது.

மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளித்த அந்த கட்சியின் உறுப்பினர் டலஸ் அழகபெரும இதனைக் குறிப்பிட்டார்.

_109045761_34adaebd-ff79-4319-8019-06a7ee0cd1eb "கோட்டாபய ராஜபக்ஷ இலங்கை ஜனாதிபதியாவது தமிழர்களுக்கு நன்மையே" - விக்னேஸ்வரனின் கருத்து ஏற்புடையதா? "கோட்டாபய ராஜபக்ஷ இலங்கை ஜனாதிபதியாவது தமிழர்களுக்கு நன்மையே" - விக்னேஸ்வரனின் கருத்து ஏற்புடையதா? 109045761 34adaebd ff79 4319 8019 06a7ee0cd1ebஇந்தியாவின் தலையீட்டில் தமிழர்களுக்கான உரிமைகளை பெற்றுக்கொடுக்கும் நோக்குடன் ஸ்தாபிக்கப்பட்ட மாகாண சபைகளில், வட மாகாணத்திற்கான தேர்தல் மாகாண சபை ஸ்தாபிக்கப்பட்டு 26 வருடங்களின் பின்னரே நடைபெற்றதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அந்த தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெறும் என்பதனை அறிந்திருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஜனநாயகத்தை ஸ்தாபிப்பதற்காக வட மாகாணத் தேர்தலை நடத்தியிருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஆனால் தமிழர்கள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் கருத்துரைக்கவில்லை என அவர் குறிப்பிட்டார்.

தமிழர்களின் அதிகாரத்தை பெற்றுக் கொடுப்பதற்காகவே பணியாற்ற வேண்டுமே தவிர, தேர்தலை இலக்காக கொண்டு பணியாற்றக் கூடாது என டலஸ் அழகபெரும தமிழ் அரசியல்வாதிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

November 2019
M T W T F S S
« Oct    
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  

Latest Comments

இந்த கோமாளி சர்வ தேசத்துக்கு எதோ செய்தி சொல்வதாக கூறி இந்த தேர்தலில் போட்டியிடடான் , ஆனால் வடகிழக்கு [...]

காஷ்மீர் மக்களை உரிமையுடன் இந்த மோடி ( மோசடி ) நடத்த வேண்டும் , இலங்கை தமிழர்கள் கருணை காட்ட [...]

எந்த தை பொங்கலுக்கு , எந்த தீபாவளிக்கு தீர்வு வரும் அதை முதலில் சொல்லுங்க ? புலிகள் [...]

17ம் திகதிக்கு பின் இங்கு , பணம் காயும் , வாழைப்பழ குலையும் சேமிக்கும் இடமாக மாற்றப்பட [...]

இங்கு வேலை செய்யும் தமிழர்கள் நவீன கால அடிமைகள் , இந்த உணவகத்தை புறக்கணிப்பதுடன் [...]

இலங்கை பத்திரிகைகள்

English News