ilakkiyainfo

ilakkiyainfo

கோத்தாவை போல உயர்மட்டக் குழுவை அமைக்குமாறு முன்னாள் அமெரிக்க தூதுவர் ஆலோசனை

கோத்தாவை போல உயர்மட்டக் குழுவை அமைக்குமாறு முன்னாள் அமெரிக்க தூதுவர் ஆலோசனை
May 09
01:15 2019

தீவிரவாதத் தாக்குதல்களைத் தடுப்பதற்கு, உயர்மட்ட தொழிற்திறன் வாய்ந்த  குழுவொன்றை சிறிலங்கா அரசாங்கம் உருவாக்க வேண்டும் என்று சிறிலங்காவுக்கான முன்னாள் அமெரிக்க தூதுவர் றொபேர்ட் ஓ பிளேக் தெரிவித்துள்ளார்.

கொழும்பு பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் நேற்று நடந்த கருத்தரங்கில், “சீனா மற்றும் தெற்காசியாவை நோக்கிய அமெரிக்காவின் வெளிவிவகாரக் கொள்கை மற்றும்  இலங்கைக்கான அதன் அர்த்தம்“ என்ற தொனிப்பொருளில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

“தீவிரவாத தாக்குதல்களைத் தடுப்பதற்கு, முன்னர் கோத்தாபய ராஜபக்ச பாதுகாப்புச் செயலராக இருந்த போது, உருவாக்கப்பட்டிருந்த தொழிற்திறன் வாய்ந்த உயர்மட்ட குழுவைப் போன்றதொரு குழுவை, சிறிலங்கா அரசாங்கம் உருவாக்க வேண்டும்.

தொழிற்திறன் வாய்ந்த உயர்மட்டக் குழு சிறிலங்காவில் இருப்பது நாட்டுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும்.

செப்ரெம்பர் 11 தாக்குதலுக்கு முன்னரும், பின்னரும் அமெரிக்கா செய்த தவறுகளில் இருந்து சிறிலங்கா பாடம் கற்றுக் கொள்ள முடியும்.

உண்மையில், போர்க்காலத்தில் பாதுகாப்புச் செயலராக கோத்தாபய ராஜபக்ச இருந்த போது, சிறிலங்காவில் அத்தகைய குழுவொன்றை வைத்திருந்தார்.

அவர் தனிப்பட்ட முறையில் பகிர்ந்து கொண்டார். நாட்டில் உள்ள எல்லா புலனாய்வு கிளைகளினதும், தகவல்களை பகிர்ந்து, அதனை உயர்மட்டங்களுக்கு கொண்டு சென்று இத்தகைய தாக்குதல்கள் நடக்காமல் இருப்பதை உறுதி செய்தார்.

எனவே, சிறிலங்கா அரசாங்கம் அதுபோன்றதொரு குழுவை உருவாக்குவது மிகவும் முக்கியமானது என நான் நினைக்கிறேன்” என்றும் அவர் கூறியுள்ளார்.

Related Articles

1 Comment

 1. arya
  arya May 09, 01:43

  இப்போதாவது முடடாள் அமெரிக்கனுக்கு எங்கள் ஹீரோவை பற்றி நினைவு வந்துள்ளது, அமெரிக்கன் சேர்ந்த கூடடம் பாதிக்க படும் போது தான் அவனுக்கு புத்தியில் குறைக்கின்றது , முன்பு அரசை மாற்றி இலங்கை மத்திய வங்கியை சிங்கப்பூர் காரனை வைத்து கொள்ளை அடித்து நாட்டிடை பொருளாதாரத்தில் படு குழியில் தள்ளிய போது எங்கள் ராஜபக்சக்களை ஞாபகம் வரவில்லை , காலம் கடந்த ஞானம் , இன்னும் அனுபவிக்க வேண்டி வரும்.

  Reply to this comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

July 2019
M T W T F S S
« Jun    
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

விறுவிறுப்பு தொடர்கள்

    சயனைட் குப்பியைக் கடிப்பதா? என்னை நானே சுட்டுக் கொல்வதா?:பெண்ணொருவர் தந்த பழசாய்ப் போன சல்வார் உடையை அணிந்துகொண்டு மக்களோடு மக்களாகக் கலந்தேன்.. (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -28)

சயனைட் குப்பியைக் கடிப்பதா? என்னை நானே சுட்டுக் கொல்வதா?:பெண்ணொருவர் தந்த பழசாய்ப் போன சல்வார் உடையை அணிந்துகொண்டு மக்களோடு மக்களாகக் கலந்தேன்.. (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -28)

0 comment Read Full Article
    ராஜீவ் காந்தி கொல்லப்படப்போகிறார். திக்..திக்.. நிமிடங்கள்!! : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: –18)

    மக்கள், காயப்பட்டுக் கிடந்த, உயிரோடிருந்த போராளிகள் அனைவரையும் கைவிட்டு 300 போரளிகளுடன் இயக்க தலைமை கேப்பாபிலவு காட்டுக்குள் தப்பியோட முயற்சி!! (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -27)

Latest Comments

My vote for Mr. Gotabhaya Rajapaksa, he can only save our country. [...]

இறைவனின் துணையோடு நிலவை பிளந்த நபிக்கு அதே இறைவனின் துணையோடு ஒட்டவைக்க முடியாதா? ?? இந்த உலகத்தையே நாம்தான் படைத்தோம்னு சொல்லும் [...]

We want Mr.Kotapaye Rajapakse as our future President, he can only save our country not [...]

அமெரிக்காவில் மட்டும் தான் ஏலியன் வாகனங்கள் தென்படுகின்றன ? ஏனெனில் அங்குதான் Hollywood உள்ளது, நல்லா வீடியோ எடுக்க [...]

Trumpf is coward , he has afraid about if iran attack back then will give [...]

இலங்கை பத்திரிகைகள்

English News