ilakkiyainfo

ilakkiyainfo

கோவில்கள் தேவாலயங்களை தாக்குவதற்கு திட்டம்- மலேசியாவில் முறியடிப்பு

கோவில்கள் தேவாலயங்களை தாக்குவதற்கு திட்டம்- மலேசியாவில் முறியடிப்பு
May 14
11:20 2019

மலேசியாவில் இந்து ஆலயங்கள் மற்றும் கத்தோலிக்க தேவாலயங்கள் மீது மேற்கொள்ளவிருந்த தாக்குதல்களை முறியடித்துள்ள மலேசிய காவல்துறையினர் நால்வரை கைதுசெய்துள்ளனர்.

மலேசியாவின் முக்கிய பிரமுகர்களையும் கொலை செய்வதற்கு கைதுசெய்யப்பட்டவர்கள் திட்டமிட்டிருந்தனர் என தெரிவித்துள்ள மலேசிய காவல்துறையினர் இந்து ஆலயமொன்றின் வாகனதரிப்பிடத்தில் கடந்த வருடம் முஸ்லீம் தீயணைப்பு படை வீரர் ஒருவர் கொல்லப்பட்டமைக்கு பழிவாங்குவதற்காகவே தாக்குதல்களை மேற்கொள்வதற்கு கைதுசெய்யப்பட்டவர்கள் திட்டமிட்டிருந்தனர் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

மே முதல் வாரத்தில் இடம்பெற்ற சோதனை நடவடிக்கைகளின் போது ரொகிங்யா இனத்தை சேர்ந்த இருவர் உட்பட நால்வரை கைதுசெய்துள்ளதாக மலேசியாவின் தேசிய பொலிஸ் தலைமையதிகாரி அப்துல் ஹமீத் பதூர் தெரிவித்துள்ளார்.

தீயணைப்பு படைவீரர் அடிப்பின் இறப்பிற்கு பழிவாங்குவது இவர்களின் நோக்கங்களில் ஒன்று என தெரிவித்துள்ள அவர் இதற்காக இவர்கள் முக்கிய பிரமுகர்களை கொலை செய்ய திட்டமிட்டிருந்தனர் எனவும் தெரிவித்துள்ளார்.

எனினும் இலக்குவைக்கப்பட்ட முக்கிய பிரமுகர்களின் பெயர் விபரங்களை வெளியிடுவதற்கு அந்த அதிகாரி மறுத்துள்ளார்.

தேடுதல் நடவடிக்கையின் போது உள்ளுரில் தயாரிக்கப்பட்ட வெடிபொருட்களையும் காவல்துறையினர் மீட்டுள்ளனர்.

மலேசியாவை சேர்ந்த நபரே இந்த திட்டத்தின் முக்கிய சூத்திரதாரி அவர் இந்து ஆலயங்கள் மற்றும் கிறிஸ்தவ தேவாலயங்களையும் பொழுதுபோக்கிற்காக மக்கள் கூடும் இடங்களையும் தாக்க திட்டமிட்டிருந்தார் என மலேசிய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

20 மற்றும் 25 வயது ரொகிங்யா இனத்தவர்களை சேர்ந்தவர்களையும் கைதுசெய்துள்ளோம்,இவர்களில் ஒருவர் மியன்மார் இராணுவத்திற்கு எதிராக போராடும் அமைப்பின் ஆதரவாளர்  என தெரிவித்துள்ள  பொலிஸார் இவர்கள்மலேசியாவில் உள்ள மியன்மார் தூதரகத்தை தாக்க திட்டமிட்டுள்ளார் என தெரிவித்துள்ளார்.

இவர்கள் வட்ஸ்அப் மூலம் தொடர்பாடல்களை முன்னெடுத்தனர் சிரியாவில் உள்ள மலேசிய பிரஜையொருவர் இவர்களிற்கு அறிவுறுத்தல்களை வழங்கினார் எனவும்  அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

May 2019
M T W T F S S
« Apr    
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

விறுவிறுப்பு தொடர்கள்

    புலிகளின்  இராணுவ  பலம் வெளிப்பார்வைக்குப்  பிரமிப்பூட்டுவதாக  அமைந்திருந்தது: உண்மையில் உள்ளே வெறும் கோரையாகிப்  போயிருந்தது!!  (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -23)

புலிகளின் இராணுவ பலம் வெளிப்பார்வைக்குப் பிரமிப்பூட்டுவதாக அமைந்திருந்தது: உண்மையில் உள்ளே வெறும் கோரையாகிப் போயிருந்தது!! (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -23)

0 comment Read Full Article
    தலைவரின் ஒப்புதலுடன்   “மாவிலாற்றை  பூட்டி கடைசிக்கட்ட  போரை தொடங்கி  வைத்த  தளபதி சொர்ணம்!!  (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -22)

தலைவரின் ஒப்புதலுடன் “மாவிலாற்றை பூட்டி கடைசிக்கட்ட போரை தொடங்கி வைத்த தளபதி சொர்ணம்!! (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -22)

0 comment Read Full Article
    மகிந்த ராஜபக்சவுக்கு வாக்களியுங்கள்!! “மகிந்த ஜனாதிபதியா வந்தா கட்டாயம் சண்டைதான் தொடங்கும்.. சண்டை தொடங்கினா நாங்கதான் வெல்லுவம்!!: அண்ணன் கூறினார்!!  (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -21)

மகிந்த ராஜபக்சவுக்கு வாக்களியுங்கள்!! “மகிந்த ஜனாதிபதியா வந்தா கட்டாயம் சண்டைதான் தொடங்கும்.. சண்டை தொடங்கினா நாங்கதான் வெல்லுவம்!!: அண்ணன் கூறினார்!! (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -21)

0 comment Read Full Article

Latest Comments

இப்போதாவது முடடாள் அமெரிக்கனுக்கு எங்கள் ஹீரோவை பற்றி நினைவு வந்துள்ளது, அமெரிக்கன் சேர்ந்த கூடடம் [...]

கஜினி முகமது யாரிடம் 17 முறை தோற்றார்? [...]

பிள்ளையுயும் கிள்ளி விட்டு, தொட்டிலையும் ஆட்டும் பழக்கம் இசுலாமிய சகோதரர்க்கு ஒரு தொழிலாகவே தொன்று தொட்டு இருந்து வருகின்றது. [...]

24/04/2019 தேதியிட்ட கல்கண்டு வார இதழில், தலாய்லாமாவின் முழுப் பெயர் "ஜே-சுன்-ஜாம்-பால்காக்-வாங்லோ-சாங்யே- ஷே டென்சிங்யா-சோ-ஸி-சும்வாங்-க்யூர்சுங்-பா-மே-பாய்-டே-பால்-ஸாங்-போ" என்று குறிப்பிடப்பட்டுள்ளது [...]

இவர் செய்ய வேண்டிய தற்போதைய அரசின் மீதும் அதன் பயங்கரவாத அமைச்சர்கள் மீதும் பில்லியன் கணக்கில் நஷ்ட ஈடு [...]

இலங்கை பத்திரிகைகள்

English News