ilakkiyainfo

ilakkiyainfo

சச்சினின் சாதனைகள் தெரியும்…அப்பாவாக அவர் எவ்வளவு சூப்பர் தெரியுமா?

சச்சினின் சாதனைகள் தெரியும்…அப்பாவாக அவர் எவ்வளவு சூப்பர் தெரியுமா?
April 24
19:06 2018

ந்த நாளை, சச்சின் மற்றும் அஞ்சலியால் மறந்திருக்க முடியாது. முதன்முறையாக அஞ்சலி, சச்சின் வீட்டுக்குச் செல்வதாக திட்டம். ஆனால், சச்சினிடம் ஒரு சின்ன தயக்கம்.

அலைபேசியில் அஞ்சலியிடம், “என்ன இருந்தாலும் நீ ஒரு பெண். இங்கே வந்தால் வீட்டில் உள்ளவர்கள் என்ன கூறுவார்களோ” என்கிறார். பிறகு அவரே, “ம்ம்ம்… ஒரு ஐடியா. என் வீட்டில் உன்னை ஒரு பத்திரிகையாளர் என்று கூறிவிடுகிறேன். யாருக்கும் சந்தேகம் வராது சரியா!”

famisac_14271  சச்சினின் சாதனைகள் தெரியும்...அப்பாவாக அவர் எவ்வளவு சூப்பர் தெரியுமா? famisac 14271

மறுநாள், பளபளப்பான சல்வார் கம்மீஸ் அணிந்துகொண்டு, சச்சின் வீட்டுக்குச் செல்கிறார் அஞ்சலி. பேட்டி எடுக்க வந்திருப்பதாகக் கூறுகிறார்.

இருவரும் பேசிக்கொண்டிருக்கிறார்கள். மற்றொரு அறையிலிருந்த சச்சினின் அக்காவுக்கு ஏதோ ஒரு சின்ன சந்தேகம் எழுகிறது. ”இவரைப் பார்த்தால் பேட்டி எடுக்க வந்தவர்போல தெரியவில்லையே!” என்று அம்மாவிடம் முணுமுணுக்கிறார்.

சச்சின், தன் காதலி அஞ்சலிக்கு சாக்லேட் துண்டுகளை வெட்டிக்கொடுக்கிறார். அந்த சாக்லேட் போலவே, இனிதாக முடிந்தது அந்தச் சந்திப்பு. பிறகு, இரு வீட்டார் சம்மதத்துடன் அவர்களின் திருமணம் 1995-ம் ஆண்டு நடந்தது.

sachin1_14056  சச்சினின் சாதனைகள் தெரியும்...அப்பாவாக அவர் எவ்வளவு சூப்பர் தெரியுமா? sachin1 14056

காதலித்த பெண்ணையே கரம் பிடித்து, அழகாகத் தொடங்கிய சச்சினின் திருமண வாழ்க்கைக்கு, வரமாகக் கிடைத்தது இரண்டு குழந்தைகள். மூத்தவள், சாரா டெண்டுல்கர். தற்போது 20 வயது இளைஞி. லண்டனில் கல்லூரி படிப்பை முடித்திருக்கிறார். இளையவன், அர்ஜூன் டெண்டுல்கர். 18 வயது கிரிக்கெட் வீரர்.

அஞ்சலிதான் குடும்ப விஷயங்களுக்கு முழுப்பொறுப்பு. “அவருக்கு கிரிக்கெட்தான் முதல் காதல். நாங்கள் எல்லாம் இரண்டாவதுதான். இந்த உண்மையை நாங்கள் ஏற்றுக்கொண்டோம்” என்று சொல்லியிருக்கிறார்  அஞ்சலி.

கிரிக்கெட், வெளிநாட்டுப் போட்டிகள், பயிற்சி என ஓடிக்கொண்டேயிருந்த சச்சினுக்கு, குழந்தைகள் வளர்வதை ரசிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

ஆனால், ஒரு தந்தையாக அவர்களுக்கு அளிக்கவேண்டிய அறிவையும் சுதந்திரத்தையும் கொடுக்கத் தவறியதில்லை. அர்ஜூன் டெண்டுல்கர், கிரிக்கெட் ஆட முடிவெடுத்தது முழுக்க முழுக்க அவரின் விருப்பமே.

அவர் எனக்கு முழு சுதந்திரம் அளித்திருக்கிறார். விளையாட்டை எப்படிப் பார்க்க வேண்டும் என்பதைக் கற்றுத்தந்திருக்கிறார். அவரின் மகன் என்பதால், ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பு இருக்கும் என்பதையும் உணர்த்தியிருக்கிறார்.

அது எந்த வகையிலும் என் விளையாட்டுடன் கலந்துவிடக்கூடாது என்றும் அறிவுறுத்தியிருக்கிறார். கிரிக்கெட்டைப் பொறுத்தவரை, எனக்கு ஒரே ஒரு அறிவுரைதான் கூறுவார்.

sach_14093  சச்சினின் சாதனைகள் தெரியும்...அப்பாவாக அவர் எவ்வளவு சூப்பர் தெரியுமா? sach 14093

‘எப்போதும் பயப்படாமல் ஆடு’ என்பதே அது. ‘கிரிக்கெட்டில் நீ என்னவெல்லாம்  கற்றுக்கொண்டாயோ, அவற்றையெல்லாம் உன் அணிக்காகச் சரியான நேரத்தில் வெளிப்படுத்து’ எனச் சொல்வார்” – இது, தன் தந்தையைப் பற்றி அர்ஜூன் டெண்டுல்கர் சொன்னது.

‘உங்களைக் கவர்ந்த கிரிக்கெட் வீரர் யார்?’ என்று அர்ஜூனிடம் கேட்டபோது, சச்சின் பெயரை கூறவில்லை. வேறோரு கிரிக்கெட் வீரரைச் சொன்னார். ஒரு மகனை சுயமாகவும் சரியாகவும் சிந்திக்கவைப்பதுதானே தந்தையின் தலையாய கடமை. அதற்கு இந்த ஒரு சம்பவமே சான்று.

சாரா டெண்டுல்கர், அப்படியே தாய் அஞ்சலியின் சாயல். அன்பு மகளின் பெயரில், ட்விட்டரில் ‘ஃபேக் ஐடி உருவாக்கப்பட்டு, பல அவதூறான கருத்துகள் பரவியிருந்தது.

உடனே சச்சின், ‘என் குழந்தைகள் அர்ஜூன் மற்றும் சாரா இருவருமே ட்விட்டரில் இல்லை. அவர்களின் ஃபேக் ஐடிகளை உடனடியாக நீக்குங்கள்’ என்று ட்விட்டர் நிறுவனத்தை ‘டேக்’ செய்தும், காவல்துறையில் புகார் அளித்தும் அந்தப் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

தன்னை ஒரு ஜாம்பவானாகவோ, நீங்கள் ஒரு ஜாம்பவானின் பிள்ளைகள் என்ற பெருமையுடனோ, குழந்தைகளை வளர்க்கவில்லை. இதற்கு, ‘சச்சின்: ஏ பில்லியன் ட்ரீம்ஸ்’ என்ற திரைப்படத்தை பார்த்துவிட்டுக் சாரா கூறிய வார்த்தைகள்தான் சான்று…

”எனக்கு அவர் எப்போதும் ஓர் எளிமையான, அன்பான அப்பாவாகவே தெரிந்திருக்கிறார். இந்தத் திரைப்படம் பார்த்த பிறகுதான், அவரை இந்த உலகம் எப்படிக் கொண்டாடுகிறது என்பதைப் புரிந்துகொண்டேன்.  அவரின் சாதனைகள் எவ்வளவு பிரம்மாண்டமானது என்றும் தெரிந்துகொண்டேன்” என்று நெகிழ்ந்திருந்தார்.

எளிமையையும் சிந்திக்கும் சுதந்திரத்தையும் தன் பிள்ளைகளுக்கு கற்றுத்தந்த அன்பு அப்பா சச்சினுக்கு, இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

May 2018
M T W T F S S
« Apr    
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

Latest Comments

இவர்கள் புலன் பெயர் முடடாள் புலிகளின் பணத்துக்க்காக மோதுகின்றனர் , இப்படி [...]

North korea not Americas slave Toilet India, any ways what happend in syria ? are [...]

பின் லாடன் உயிருடன் உள்ளார், இதை சொல்வது நான் இல்லை , புலன் பெயர் முடடாள் புலிகளின் [...]

உலகம் சமாதானமாக இருக்க வேண்டியது அவசியம் , ஆனால் கபடத்தனமான அமெரிக்கா [...]

இது கக்கூசு தமிழ் நாட்டில் புலி பினாமிகளால் தயாரிக்க பட்ட 18.05.2009 என்ற பிரச்சார படத்தில் [...]

இலங்கை பத்திரிகைகள்

English News