ilakkiyainfo

ilakkiyainfo

சட்டப்பிரிவு 377: ‘லிங்க வழிபாடு செய்யும் நாட்டில் ஒருபாலுறவு குற்றமா?’

சட்டப்பிரிவு 377: ‘லிங்க வழிபாடு செய்யும் நாட்டில் ஒருபாலுறவு குற்றமா?’
September 06
16:22 2018

செப்டம்பர் 6, 2018, வியாழக்கிழமை முற்பகல். இந்திய உச்ச நீதிமன்ற வளாகம். இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 377 ஒருபாலுறவைக் குற்றமாக்குவதை நீக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட பல்வேறு மனுக்கள் மீதான இறுதித் தீர்ப்பை இந்திய உச்ச நீதிமன்றம் வழங்குகிறது என்பதை அறியாத பலரும், “இன்று உச்ச நீதிமன்றத்தில் ஏதேனும் சிறப்பான நிகழ்வு உண்டா?” என்றபடியே கேள்வி எழுப்பினார்கள்.

தீர்ப்பை அறிந்துகொள்ள கூடியிருந்த LGBT எனப்படும் பாலின சிறுபான்மை குழுக்களைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்லாது பிராந்திய, தேசிய மற்றும் சர்வதேச ஊடகங்களைச் சேர்ந்தவர்களின் கூட்டத்தால் உச்சநீதிமன்ற வளாகமே நிரம்பியிருந்தது.

வழக்கத்துக்கும் அதிகமான எண்ணிக்கையில் நீதிமன்றத்திற்கு வெளியில் நின்று கொண்டிருந்த ஊடக வாகனங்கள் போக்குவரத்து நெரிசலுக்கு மட்டுமல்லாது, கடந்து செல்பவர்களின் குழப்பம் கலந்த வியப்புக்கும் காரணமாக இருந்தன.

ஒருபாலுறவு இனிமேல் குற்றமில்லை என்று ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வின் தீர்ப்புச் செய்தி வெளியானதும், அங்கு கூடியிருந்த ஒருபாலுறவுக்காரர்கள் மற்றும் பாலின சிறுபான்மையினருக்கான செயல்பாட்டாளர்கள் உரக்கக் குரல் எழுப்பித் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.

ஒருவரை ஒருவர் ஆரத் தழுவிக்கொண்டனர்; சிலர் புன்னகைத்தனர்; சிலர் கண்ணீர்விட்டனர். ஆனால், அந்த புன்னகை, கண்ணீர் இரண்டுக்குமே ஒரே காரணம்தான். தீர்ப்பு தந்த மகிழ்ச்சிதான் அது.

_103319418_fb6b9190-fdc1-43ab-9ded-3a4af6746ed7  சட்டப்பிரிவு 377: 'லிங்க வழிபாடு செய்யும் நாட்டில் ஒருபாலுறவு குற்றமா?' 103319418 fb6b9190 fdc1 43ab 9ded 3a4af6746ed7‘முத்திரைகள்,வசவுகள் எதுவும் பாதிக்காது’

சட்டப்பிரிவு 377க்கு எதிராக 2001இல் வழக்குத் தொடர்ந்த அமைப்புகளில் எய்ட்ஸ் பெத்பவ் விரோதி அந்தோலன் (AIDS Bhedbhav Virodhi Andolan) எனும் அமைப்பும் ஒன்று. ஆனால், அவர்களது மனுக்கள் அப்போது தள்ளுபடி செய்யப்பட்டன.

எனினும் வியாழக்கிழமை சமீபத்திய மனுக்கள் மீதான தீர்ப்பு குறித்து அறிய உச்ச நீதிமன்றம் வந்திருந்தார், அந்த அமைப்பைச் சேர்ந்த டாக்டர்.பி.எஸ்.சஹ்னி.

“100 கோடிக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட நாடு இந்தியா. சுமார் 80% மக்கள் லிங்க வழிபாடு செய்யும் நாட்டில், தங்கள் பாலியல் விருப்பத்தேர்வுகளை வெளிப்படுத்த ஏன் தயங்க வேண்டும்?” என்று கேள்வி எழுப்புகிறார் சஹ்னி.

_103319412_eb3d27d2-9c3d-407a-84c9-ad8f190dac29  சட்டப்பிரிவு 377: 'லிங்க வழிபாடு செய்யும் நாட்டில் ஒருபாலுறவு குற்றமா?' 103319412 eb3d27d2 9c3d 407a 84c9 ad8f190dac29

ஒருபாலுறவினர் பாலியல் இச்சைகளைத் தூண்டுபவர்கள் என்ற விமர்சனத்தை எதிர்கொள்ளவேண்டியிருந்தது.

ஆனால், ஒருபாலுறவில் ஈடுபடுபவர்களில் மூன்றில் ஒரு பங்கினர் பெண்கள் என்கின்றது ஒரு ஆய்வு. ஒரு பெண் எப்படி வெளிப்படையாக பிறரின் பாலியல் இச்சைகளைத் தூண்டும் வகையில் நடந்துகொள்வார் என்பதை யாரும் எண்ணிப்பார்க்கவில்லை.”

“முதலில் மோசமானவர்களாக ஒருபாலுறவினர் முத்திரை குத்தப்படுவார்கள். பின்னர் கண்டிக்கப்படுவார்கள்.

ஆனால் இறுதியில் வெற்றி கிடைக்கும். முத்திரைகள்,வசவுகள் எதுவும் ஒருபாலுறவினரை பாதிக்காது,” என்கிறார் அவர்.

‘சுதந்திரத்துடன் சுவாசிக்க முடியும்’

“இந்தச்சட்டபிரிவு இதுவரை எங்களை சுவாசிக்க விடாத ஒரு காற்று மாசு போல இருந்தது.

ஆனால், எங்களால் இனிமேல் முழு சுதந்திரத்துடன் சுவாசிக்க முடியும்,” என்று கூறுகிறார் தீர்ப்புச் செய்தியை அறிய உச்சநீதிமன்றம் வந்திருந்த ஒருபாலுறவுக்காரர்களின் உரிமைகளுக்கான செயல்பாட்டாளர் ரிதுபர்ணா போரா.

_103316210_7bb7e3a6-b683-4380-a25d-c776c9b46690  சட்டப்பிரிவு 377: 'லிங்க வழிபாடு செய்யும் நாட்டில் ஒருபாலுறவு குற்றமா?' 103316210 7bb7e3a6 b683 4380 a25d c776c9b46690

ஆனால், மாசு எல்லா இடங்களிலும் இருப்பது உண்மைதான்,” என்று அவர் எள்ளலாகக் கூறினார். அவர் காற்று மாசை மட்டும்தான் குறிப்பிட்டாரா என்பது அவருக்கு மட்டுமே தெரியும்.

‘இதற்காகத்தான் காத்திருந்தேன்’

தீர்ப்பு நாளன்று காலை முதலே உச்சநீதிமன்ற வளாகத்தில் காத்திருந்தார் திருநங்கை ராபியா. சட்டபூர்வ வயதை எட்டிய இருவர் ஒருபாலுறவு கொள்வது தவறல்ல என்ற செய்தியைக் கேட்டதும் மகிழ்ச்சியில் ராபியா எழுப்பிய கூச்சல் சுற்றிலும் இருந்த அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

_103316206_5c4e8c70-10f8-4fdf-a707-78fd032cbeca  சட்டப்பிரிவு 377: 'லிங்க வழிபாடு செய்யும் நாட்டில் ஒருபாலுறவு குற்றமா?' 103316206 5c4e8c70 10f8 4fdf a707 78fd032cbeca

தீர்ப்பை நண்பர்களுடன் கொண்டாடும் ராபியா (மத்தியில்)

2013இல் ஒருபாலுறவு ஒரு குற்றச்செயல்தான் என்று உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை குறிப்பிட்ட அவர், “ஒரு நாள் உச்ச நீதிமன்றம் எங்களைக் குற்றவாளி என்கிறது.

ஒருநாள் நீ குற்றவாளி இல்லை என்கிறது. இதுதான் இறுதித் தீர்ப்பு என நம்புகிறேன். இதற்காகத்தான் இத்தனை நாட்களாகக் காத்திருந்தேன்,” என்கிறார் ராபியா.

இதுநாள்வரை சந்தித்துவந்த தொல்லைகளில் இருந்து இந்தத் தீர்ப்பு எங்களை விடுவிக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார் ராபியா.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

June 2019
M T W T F S S
« May    
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930

Latest Comments

அருமையான பதிவு பகுதி-2? [...]

" முன்னைய காலங்களைப் போலவே இத்தகைய சிறப்புத் தாக்குதல் நடவடிக்கைகள் ஒட்டுமொத்தமான இராணுவ நடவடிக்கைகளின் பின்னணிப் பலத்தைச் சிதறடிக்கும் எனக் [...]

இப்போதாவது முடடாள் அமெரிக்கனுக்கு எங்கள் ஹீரோவை பற்றி நினைவு வந்துள்ளது, அமெரிக்கன் சேர்ந்த கூடடம் [...]

கஜினி முகமது யாரிடம் 17 முறை தோற்றார்? [...]

பிள்ளையுயும் கிள்ளி விட்டு, தொட்டிலையும் ஆட்டும் பழக்கம் இசுலாமிய சகோதரர்க்கு ஒரு தொழிலாகவே தொன்று தொட்டு இருந்து வருகின்றது. [...]

இலங்கை பத்திரிகைகள்

English News