ilakkiyainfo

ilakkiyainfo

சமஸ்டி தீர்வு தேவையில்லை சுமந்திரன் கூறியது அப்பட்டமான உண்மை: கஜேந்திரகுமார்

சமஸ்டி தீர்வு தேவையில்லை சுமந்திரன் கூறியது அப்பட்டமான உண்மை: கஜேந்திரகுமார்
September 06
16:52 2018

தமிழ் மக்களுக்கு சமஷ்டி வேண்டாம் என கூறும் சுமந்திரன் தொடர்ந்து 13ம் திருத்தச்சட்டத்தில் சில அதிகாரங்களை வழங்கி திருத்தம் செய்தால் போதுமானது என கூறுகிறார்.

மேலும் அதனைதான் நாங்கள் தேர்தல் விஞ்ஞாபனங்களிலும் குறிப்பிட்டுள்ளோம். அதற்கே மக்கள் தொடர்ச்சியாக ஆதரவை வழங்கிக் கொண்டிருக்கின்றார்கள் என்றும் கூறியுள்ளார். இது அப்பட்டமான உண்மை.

இந்த உண்மை ஊடாக சுமந்திரனும் தமிழ்தேசிய கூட்டமைப்பும் தமிழ் மக்களிடம் அம்பலப்பட்டிருக்கும் நிலையில் சமஸ்டி வேண்டாம் என தான் கூறவில்லை என்றும், சமஷ்டி பெயர்பலi கயே வேண்டாம் என்று கூறியதாகவும் அப்பட்டமான பொய்யை சொல்லிக் கொண்டிருக்கின்றார். இது சுமந்திரனின் தனிப்பட்ட கருத்தாக அமையாது.

காரணம் சுமந்திரன் தமிழ்தேசியக் கூட்டமைப்பின் உத்தியோகபூர்வ பேச்சாளர். ஆகவே சுமந்திரனின் கருத்து கூட்டமைப்பின் கருத்தாகவே அமைந்துள்ளது.

இது ஒருபக்கம் நடந்து கொண்டிருக்க மறுபக்கம் தமிழ்தேசிய கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளான ரெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், மற்றும் புளொட் அமைப்பின் தலைவர் த.சித்தார்த்தன் ஆகியோர் ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள கருத்தில்,சுமந்திரன் அவ்வாறு பேசியுள்ளாரா? என்பது தெரியவில்லை.

ஆனால் அப்படி பேசியிருந்தால் தவறு என கூறியிருக்கின்றார்கள். இதன் அர்த்தம் தாங்கள் சிறந்தவர்கள் என காட்டிக் கொண்டு தாங்கள் தப்பித்துக் கொள்வதுதான்.

இந்த விடயத்தை பொறுத்தளவில் வெறுமனே சம்மந்தன் மீதும், சுமந்திரன் மீதும் குற்றத்தை சுமத்திவிட்டு இருப்பதற்கு நாங்கள் தயாராக இல்லை.

இந்த துரோகத்திற்கு காரணம் தமிழ்தேசிய கூட்டமைப்பில் உள்ள அத்தனைபேரும்.

குறிப்பாக புளொட் அமைப்பின் தலைவர் த.சித்தார்த்தன் புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பான 6 உபகுழுக்களில் ஒன்றான அதிகார பகிர்வு தொடர்பான ஆலோசனைகளை பெறும் குழுவின் தலைவராக இருக்கிறார்.

அந்தவகையில் புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தில் சித்தார்த்தனும் ஒரு பங்காளியாக இருக்கிறார்.

ஒற்றையாட்சி அரசியலமைப்பு உருவாக்கத்தில் பங்காளியாக இருந்து கொண்டிருக்கும் சித்தார்த்தன் தமிழ் மக்கள் பேரவையிலும் இருக்கிறார்.

தமிழ் மக்கள் பேரவை சமஸ்டி அடிப்படையிலான தீர்வை கேட்கிறது. அப்படியிருந்து கொண்டு நடந்து முடிந்த உள்ளுராட்சிசபை தேர்தலிலும் சித்தார்த்தன் ஒற்றையாட்சி அரசியலமைப்புக்கு அங்கீகாரம் வழங்ககோரி தேர்தலில் போட்டியிட்டார்.

அப்போதும் சித்தார்த்தன் கூட்டமைப்புக்கள் ஒன்றாக இருந்தார். இதேபோல் ஒரு வித்தியாசமும் இல்லாமல் செயற்பட்டவர் செல்வம் அடை க்கலநாதன். ஆகவே சுமந்திரன் கூறியது சுமந்திரனின் தனிப்பட்ட கருத்தாகாது.

இப்போது செல்வம் அடைக்கலநாதனும், சித்தார்த்தனும் கூறிய கருத்துக்களே தனிப்பட்ட கருத்துக்களாகும். ஆகவே இந்த மாபெரும் துரோகத்திற்கு தமிழ்தேசிய கூட்டமைப்பில் உள்ள அத்தனை பேரும் துணைபோயுள்ளார்கள்.

கூட்டமைப்பு தொடர்ந்து பொய்களை கூறி..கூறி இப்போது அப்பட்டமாகி கொண்டிருக்கின்றது. பச்சையாக மக்களிடம் அம்பலப்படும் இடங்களில் தாங்க ள் அப்படி சொல்லவில்லை, செய்யவில்லை என பொய்களை கூறிக்கொண்டிருக்கின்றது.

இதற்கும்மேல் தமிழ்தேசிய கூட்டமைப்பு அம்பலப்படும். அதனை மக்கள் தெளிவாக புரிந்து கொள்ளவேண்டும்.

தாங்கள் கூறும் பொய்களையும், தாங்கள் செய்யும் துரோகங்களையும் மக்க ள் புரிந்து கொள்ளப்போவதில்லை என தெரிவித்துள்ளார்.(15)

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

September 2018
M T W T F S S
« Aug    
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930

Latest Comments

கோட்டாவை தொடடால் சிறு பான்மை இனங்களே இலங்கையில் இருக்காது என்பது ஜூலை 1983 கலவரத்தை வழி நடத்திய [...]

இவளுக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் , அதை பார்த்து ஒரு தமிழ் நாய் பிரிவினை பற்றி பேச [...]

சுவிஸ் குமாரை தப்பிக்க 45 இலட்சம் பெற்று கொண்டு உதவியது விஜயகலா மகேஸ்வரன் என்ற தேவடியா , [...]

ஐரோப்பாவில் இப்படி ஒரு காட்டு மிராண்டி மக்களா ? இது தடை செய்யப்பட வேண்டும். ஜப்பானியர்கள் [...]

அன்று மேற்குலகின் ( அமெரிக்கா ) வாலை அன்டன் பாலசிங்கம் மூலம் பிடித்த இந்த பிரபாகரன், [...]

இலங்கை பத்திரிகைகள்

English News