ilakkiyainfo

ilakkiyainfo

என்.ஐி.ஓ (NGO) என்ற போர்வையில் வன்னிக்குள் நுழைந்த உளவாளிகள் (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது?? -பகுதி -10)

என்.ஐி.ஓ (NGO) என்ற போர்வையில் வன்னிக்குள் நுழைந்த உளவாளிகள் (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது?? -பகுதி -10)
November 25
05:22 2016

ஒரு நாட்டில்  உளவு பார்க்க  இப்பொழுதெல்லாம், உளவு நிறுவனங்கள்  தங்கள் முகவர்களை  என்.ஐி.ஓ ஊழியர்களாகவே அனுப்பி வைக்கிறார்கள்.

எனவே  என்.ஐி.ஓ கள் என்றாலே  ஒரு நாட்டின் உளவு நிறுவன முகவர்கள் என்றாகிவிட்டது.

இலங்கையில் யுத்த  நிறுத்தம்  நடைமுறைக்கு  வந்து, சமாதான பேச்சுவார்த்தைகள் தொடங்கியதும் அப்படி சில தொண்டு நிறுவனங்கள்  மக்களுக்கு  உதவுகிறோம் என்று சொல்லிக்கொண்டு வன்னிக்குள் காலடி எடுத்து வைத்தனர்.

இதே காலகட்டத்தில் சுனாமி வன்னியையும் தாக்கியது. அப்போது உலகத்தில் உள்ள அனைத்து  என்.ஐி.ஓ க்களும் வன்னிக்கு படையெடுத்தனர்.

அவர்களினூடாக  வன்னிக்குள்  நுழைவது  உளவாளிகளுக்கு இன்னும் சுலபமானது. அப்படி வன்னிக்குள் நுழைந்த சிலர் மக்களுக்கு உதவுவதைவிட   விடுதலைப்புலிகளின்  தளபதிகள் மற்றும்    முக்கிய உறுப்பினர்களை குறிவைத்து உதவ தொடங்கினார்கள்.

இவர்கள் சுனாமியால் மற்றும் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களிற்கு வெறும் தரப்பாள்களும் பிளாஸ்ரின் கோப்பைகள் உணவுகள்.

படுக்க பாய்களை மட்டும் கொடுத்துக்கொண்டு புலிகளின் தளபதிகள் பொறுப்பாளர்களிற்கு கணணிகள் மடிக்கணணிகள்,  கைத்தொலைபேசி அவர்கள் வீடுகளிற்கு மின்சாரம் பெற்றுக்கொள்ள ஜெனரேர்ரர்கள் அல்லது இயற்கையில் சூரிய ஒளியில் மின்சாரம் பெறும் சோலார்கள் என சகல வசதிகளிற்கும் அவர்களை பழக்கப் படுத்திக்கொண்டிருந்தார்கள்.

காரணம் இன்னொரு சண்டை தொடங்கும் போது புலிகளின் முக்கிய பொறுப்பாளர்கள் இந்த வசதி வாய்ப்புக்களை துறந்து  மீண்டும் கெரில்லாக்களாக காடுகளிற்குள்  இறங்கி போராப் போய் விடக்கூடாது என்பதே இவர்களது நோக்கமாக இருந்தது.

balraj_450 என்.ஐி.ஓ (NGO) என்ற போர்வையில் வன்னிக்குள் நுழைந்த உளவாளிகள் (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது?? -பகுதி -10) balraj 450
இப்படி எல்லா தளபதிகளும் கொஞ்சம் கொஞ்சமாக சுக போக வாழ்க்கைக்கு பழக்கப் படுத்திக்கொண்டிருந்தபோது பால்ராச் மட்டும் அதற்கு விதி விலக்காக இருந்தார்.

இவர் பெரும்பாலும் போராளிகளுடன் முகாமிலேயே தான் தங்குவார்.

தனது உடல் சுகபோக வாழ்க்கைக்கு பழக்கப் பட்டு விடக்கூடாது என்பதற்காக எப்போதும்போல மரத்தாலான வாங்கு ஒன்றிலேயே துண்டை விரித்துப்போட்டு படுத்துக் கொள்வார்.

ஆனாலும் அவருக்கு விதி வேறொரு வடிவத்தில் விளையாடியது.

இருதய நோயாளியாகி 2003 ம் ஆண்டு சிங்கப்பூரிற்கு அனுப்பப் பட்டு அங்கு அமெரிக்காவில் இருந்து வந்த வைத்தியர்களால் சிகிச்சைக்கு உட்படுத்தப் பட்டிருந்தார்.

ஆனால் புலிகள் அமைப்பின் பழைய சர்வதேச வலை கட்டமைப்பு கலைக்கப்பட்ட பின்னர் புதிய கட்டமைப்பினரால்  இவரிற்கான சிகிச்சை ஏற்படு செய்யப் பட்டு சிங்கப்பூரிற்கு பால்ராஐ்  அனுப்பப் படும்போதே  பழைய கட்டமைப்பினரால்  ஒரு எச்சரிக்கை கொடுக்கப் பட்டிருந்தது.

bricadiar-balraj-01 என்.ஐி.ஓ (NGO) என்ற போர்வையில் வன்னிக்குள் நுழைந்த உளவாளிகள் (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது?? -பகுதி -10) Bricadiar balraj 01
அது என்னவெனில்  பால்ராச் என்கிற மனிதனை பற்றிய பெரும் வியப்பையும் அவரது தாக்குதல் வியூகங்களையும்,   உலக இராணுவ வல்லுனர்களே  அதிசயத்தோடு பார்த்துக்கொண்டிருக்கும் போது அவரிற்கு வெளிநாடு ஒன்றில் சிகிச்சை கொடுத்தால் புலிகள் அமைப்பை  பலவீனப் படுத்த நினைக்கும் சர்வதேசம் நிச்சயமாக தனது புலனாய்வு பிரிவை பயன் படுத்தி  பால்ராச்சை  கொன்றுவிடுவார்கள்.

அது  சிகிச்சையின் போதாக இல்லாது இருக்கும்.

 ஆனால் சிகிச்சையின் போது மிக மெல்ல கொல்லும் விசத்தை அவரது உடலில் ஏற்றி விட சந்தர்ப்பம் உள்ளது.

எனவே அவரிற்கு உள்ளுரிலேயே சிறந்த வைத்தியர்களை வைத்து  சிகிச்சை செய்யவும்   என அறிவுறித்தியிருந்ததோடு,  அதற்கு உலக நாடுகளின்  போராளிகள்  சிலர் வெளி நாடுகளில் சிகிச்சை பெற்றபின்னர் இறந்த உதாரணங்களும் எடுத்து சொல்லப் பட்டிருந்தது.

ஆனால் நீங்கள் மட்டும் அன்ரன் பாலசிங்கத்தை வெளியில் எடுத்து சிகப்பூரில் சிகிச்சை செய்யலாம் எங்களால் முடியாதா என்கிற எகத்தளத்தில் பதில் வந்திருந்தது.

 அதே நேரம் பால்ராச்சும்  சிகிச்சை முடிந்த பின்னர் வன்னி சென்றதும் இறந்துபோய்விட்டிருந்தார்.

இது இயக்கத்திற்கு மாபெரும் இழப்பு என்பது மறுக்க முடியாதது. பால்ராச்சின் இறப்பு என்பது இலங்கையரசிற்கு பெரும் மகிழ்ச்சியை கொடுத்திருந்தது

அது மட்டுமல்லாது சமாதானகாலத்தில்  பெருமளவான புலம் பெயர் தமிழர்களும் வன்னிக்கு படையெடுக்கத் தொடங்கியிருந்ததோடு…

புலிகள் அமைப்பின் பொறுப்பளர்களிற்கு   விலையுயர்ந்த  கைக் கடிகாரங்கள் மடிக்கணணிகளை பரிசாகக் கொடுத்து அவர்களோடு நின்று படம் எடுத்துக் கொண்டுவந்தனர்.

அதனை பெரிதாக்கி தங்கள் வீட்டு வரவேற்பறைகளில் வைத்து மகிழ்ந்திருந்தது மட்டுமல்லாமல் பிரபாகரனோடு நின்று படம் எடுப்பதற்காக  பெரும் கூட்டமே அலைந்தது.

அதற்காக  வெளிநாடுகளில் உள்ள அனைத்துலக செயலக பொறுப்பாளர்களிடம் பணம் கொடுத்தும் சிபாரிசுகளை பெற்றுக் கொண்டும் வன்னிக்கு போயிருந்தார்கள்.

ஊரில் இயக்கத்திற்கு  ஆதரவகாவும்  போராளிகளையும் ஆதரித்தது மட்டுமல்லாமல் தங்கள் பிள்ளைகளை போராட்டத்தில் மாவீரராக பறிகொடுத்த பெற்றோர்களே  பிரபாகரனை நேரில் பார்க்கவோ படம் எடுக்கவோ முடிந்திராத நிலையில்..இ

பிரச்சனை என்றதுமே வெளிநாட்டிற்கு ஓடிவந்து விட்டு  ஊரைப் பற்றியோ போராட்டத்தைப் பற்றியோ எந்தக் கவலையும் இல்லாமல் தன்னுடைய சுய தேடல்களில்  இறங்கியிருந்த   ஒருவர்   சமாதான காலத்தில்   வன்னிக்குப் போய் கொஞ்சம் பணத்தைக் கொடுத்துவிட்டு  பிரபாகரனிற்கு  பக்கத்தில் நின்று  படமெடுக்கலாமென்கிற நிலைமை உருவாகியிருந்தது.

20091126_mv04 என்.ஐி.ஓ (NGO) என்ற போர்வையில் வன்னிக்குள் நுழைந்த உளவாளிகள் (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது?? -பகுதி -10) 20091126 MV04“இப்படி பிரபாகரனுக்குப் பக்கத்தில் நின்று படம் எடுத்த ஒரேயொரு தகுதியை மட்டுமே வைத்துக்கொண்டு சீமான் தமிழ் நாட்டில் ஒரு அரசியல் கட்சியே தொடக்கி நடத்திக்கொண்டிருக்கிறார்.”

இதனை பார்க்கும்போது  இங்கு வெளிநாடுகளில் நத்தார் காலங்களில்  ஒருவர்  மக்கள் கூடும் இடங்களில் நத்தார் தாத்தா வேடம் போட்டிருப்பார் அவரிற்கு பக்கத்தில் நின்று படமெடுப்பதற்கு  குழந்தைகள் விரும்புவார்கள்.

 எனவே  அவரிற்கு கொஞ்சம் பணத்தை கொடுத்து விட்டு தங்கள் குழந்தைகளை நத்தார் தாத்தாவேடம் போட்டவரிற்கு பக்கத்தில் தங்கள் குழந்தைகளை  நிறுத்தி படமெடுத்துபோவார்கள்.

இதைப்போல தலைவர் பிரபாகரனும் வெளிநாடுகளில் இருந்து போனவர்கள் பக்கத்தில் நின்று படம் எடுக்கும் நத்தார் தாத்தாவைப்போல மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுருந்தார்.

ஆனாலும் யுத்தத்தை எப்படியாவது தொடக்கி விடுவது என்கிற முனைப்போடு இருந்தார் .

கருணாவின் பிளவு அதனைத் தொடர்ந்து கிழக்கு மாகாணத்தின் பெரும்பகுதி கையை விட்டுப்போன நிலைமை.

கருணா விடயத்தை சரியாக கையாளவில்லை என்று பல தளபதிகள் குறிப்பாக கிழக்கு மாகாண தளபதிகள் தலைமையில் அதிருப்தியில் இருந்தார்கள்.
index என்.ஐி.ஓ (NGO) என்ற போர்வையில் வன்னிக்குள் நுழைந்த உளவாளிகள் (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது?? -பகுதி -10) index6
தொடர்ச்சியாக ஆயுதக்கப்பல்களும் மூள்கட்டிகப் பட்டுக்கொண்டிருந்தது.

மேற்குலக நாடுகளின் நெருக்குதல்கள் இயக்கத்தின் மீதான தடைகள் என இயக்கம் மிக நெருக்கடியான கட்டத்துக்குள் சென்று கொண்டிருப்பதை பிரபாகரன் உணர்ந்தார்.

இவை எல்லாவற்றுக்கும் பின்னல் முக்கியமான இரண்டு நபரின் மூளைகள் இயங்கிக்கொண்டிருந்தது.

அவர்களின் இயக்கத்தை எப்படியாவது நிறுத்திவிட முடிவெடுத்தார்.

ranilas என்.ஐி.ஓ (NGO) என்ற போர்வையில் வன்னிக்குள் நுழைந்த உளவாளிகள் (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது?? -பகுதி -10) ranilas

முதலாவது மூளை  அப்போதைய சந்திரிக்கா   அரசில் வெளிநாட்டமைச்சராக இருந்த லக்ஸ்மன் கதிர்காமர்.

இவர் ஒரு தமிழர் என்பதால் துரோகியாகவே கருதப்பட்டவர்.

2005 ஆண்டு  நவெம்பர் மாதம் 13 ம் திகதி அவரது வீட்டு நீச்சல் குளத்தில் சினைப்பர்  தாக்குதல்  மூலம்  கொல்லப் பட்டார் .

ரணில் விக்கிரம சிங்க

இரண்டாவது மூளை அன்றும் இன்றும் இலங்கை அரசின் பிரதமராக இருக்கும் ரணில் விக்கிரம சிங்கே ஆவார் .

ரணில் விக்கிரம சிங்கேயை போட்டுத் தள்ளுவது சுலபமாக இருந்தாலும் அதன் பின் விளைவுகள் மிக மோசமாதாய் இருக்கும் என்பது பிரபாகரனுக்கு தெரியும்.

காரணம் யுத்த நிறுத்தத்தை அறிவித்து பேச்சு வார்த்தைக்கு தயார் என புலிகள் பல தடவை அறிவித்த போதும் அன்றைய ஜனாதிபதி சந்திரிக்கா அதனை நிராகரித்திருந்தார்.

ஆனால் 2001ம் ஆண்டு நடந்த தேர்தல் மூலம் பிரதமராகப் பதவியேற்ற ரணில் விக்கிரமசிங்காவே நோர்வேயின் அனுசரணையுடன் தொடங்கப்பட்ட பேச்சு வார்த்தைக்கு  சம்மதம் தெரிவித்து  பிரபாகரனோடு ஒப்பத்தில் கையெழுத்திட்டவர்.

ஆகவே அவரை போட்டுதள்லாமல்  சமாதனப் பேச்சுவார்த்தையில் இருந்து   எப்படி அப்புறப் படுத்துவது என யோசித்துக் கொண்டிருந்த பிரபாகரனுக்கு 2005 ல் நடக்கவிருந்த சனாதிபதிக்கான பொதுத் தேர்தல் கைகொடுத்தது.

அந்தத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி சார்பில் மகிந்தராஜபக்சவும் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் ரணில் விக்கிரமசிங்கவும் வேட்பாளர்களாக களத்தில் இறங்கினார்கள்.

இலங்கையில் ஆயுதப் போராட்டம் தொடங்கிய பின்னர் புலிகள் அமைப்பின் அணுகுமுறைகள், நடவடிக்கைகள், அதன் சரி பிழைகளுக்கப்பால் இலங்கையானாலும்  தமிழ் நாடானாலும் சரி தேர்தல் வெற்றி தோல்விகளில் அவர்களின் பங்கு அல்லது அவர்களின் தாக்கம்  இன்றி எந்தத்  தேர்தலும்   நடைபெற்றிருக்கவில்லை  என்பது மட்டுமல்லாமல் வெற்றி தோல்விகளை தீர்மானிக்கும் சக்தியாகவும் இருந்திருகிறார்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது.

அதேபோல 2005 ம் ஆண்டு தேர்தலில் மகிந்தவுக்கு சிங்களவர்களின் பெரும்பான்மையான ஆதரவு இருந்தாலும் ரணில்விக்கிரமசிங்க  பெரும்பான்மையான தமிழர்களின் வாக்குகளால் வெற்றி பெறும் வாய்ப்புக்கள் அதிகமாக இருந்தது.

1-6_2 என்.ஐி.ஓ (NGO) என்ற போர்வையில் வன்னிக்குள் நுழைந்த உளவாளிகள் (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது?? -பகுதி -10) 1 6 2
அதற்க்கு காரணமும் இருந்தது .நீண்ட கால யுத்தத்தால் தமிழர்கள் களைத்துப்போயிருந்தனர். எனவே ரணிலை வெற்றி பெற வைப்பதன் மூலம் சமாதானம் நீடிக்கும் என நம்பினார்கள் .

சந்திரிக்கா குமாரதுங்கா சமாதானக் கதவுகள் திறந்துள்ளது என சொல்லிக் கொண்டு தேர்தலில் குதித்த போதும் பெரும்பாலான தமிழர்களின் வாக்குகலாலேயே வெற்றி பெற்றார் என்பதும் குறிப்பிடத் தக்கது.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி சார்பில் போட்டியிட்ட மகிந்தராஜபக்ச தனது வெற்றியை நிர்ணயம் செய்து விடுவதற்காக புலிகளின் உதவியை நாடினார்கள்.

அதற்காகவே சந்தர்ப்பம் பார்த்துக் காத்திருந்த புலிகளுக்கோ எப்போதும்போல அதிஷ்ட்ரக் காற்று தங்கள் பக்கம் வீசுவதாக நினைத்து மகிழ்ந்தார்கள்.

ஆனால் அதுதான் அவர்கள் எதிர் கொள்ளப்போகும் சூறாவளி என்று அப்போது நினைத்துப்பார்த்திருந்திருக்க மாட்டார்கள்.

தொடரும்…
-சாத்திரி-
தொகுப்பு: கி.பாஸ்கரன்-

2006ம் ஆண்டு அமெரிக்காவால் முற்றுமுழுதாக சிதைக்கப்பட்ட புலிகளின் சர்வதேச கடத்தல் வலையமைப்பு!! (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது?? -பகுதி -9)

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

February 2017
M T W T F S S
« Jan    
 12345
6789101112
13141516171819
20212223242526
2728  

Latest Comments

நாட்டிற்கு மிகவும் தேவையான விடயம். இதில் பெற்ற அறிவு -"சொந்த வீட்டில திருகுதாளங்கள் செய்ய வேண்டாம்" [...]

சீன ஆசியாவின் பாதுகாவலன் , அவர்களுக்கு இத்தகைய ஆயுதம் அவசியம், ஆனால் கக்கூசு புகழ் நாடு ஆசியாவின் துரோகி, அமெரிக்காவுக்கு [...]

This news good [...]

awesome dance [...]

Who is this bastard to tell to our great Mahinda Rajapakse ? we want Rajapakse [...]

இலங்கை பத்திரிகைகள்

English News