ilakkiyainfo

ilakkiyainfo

சமையல்னாலே பொண்ணுங்கதானா? ஏன் பசங்க சமைக்கக் கூடாதா? – கொதிகொதிக்கும் லட்சுமி மேனன்

சமையல்னாலே பொண்ணுங்கதானா? ஏன் பசங்க சமைக்கக் கூடாதா? – கொதிகொதிக்கும் லட்சுமி மேனன்
January 05
23:13 2017

ப்போதும், எதைப்பற்றியும் தன் மனதில் தோன்றும் விஷயங்களை தைரியமாகப் பேசும் நடிகை, லட்சுமி மேனன். ஹோம்லி லுக்தான் அவரின் அடையாளம்.

”ஆனா, நான் இயல்பில் அதுக்கு நேரெதிர்” என்றவர், ஒரு முன்னணி நடிகையாக இருந்தும், அழகுப் பராமரிப்புகள் என்று எதுவுமே மெனக்கெடுவதில்லை என்பது ஆச்சர்யம்!

”ஏன் அப்படி..?”

”பியூட்டி சீக்ரெட்னு எங்கிட்ட கேட்டா, கேரளா க்ளைமேட் மற்றும் தண்ணியைதான் சொல்வேன். அதனால என் சருமம் இயற்கையிலேயே கொஞ்சம் வனப்பா இருக்கலாம்.

அதைத்தாண்டி, அழகுப் பராமரிப்புக்குனு எதையுமே செய்யுறதில்ல. நான் நேச்சுரல் பியூட்டினு சொல்ல வரல. அழகுக்காக மெனக்கெடுற   நல்ல பழக்கத்தை, நானே  விரும்பினாலும் என்னால செய்ய முடியல.

ஏன்னா, இயல்பில் நான் ஒரு டாம் பாய். பார்லர் போறது, வீட்டில் இருக்கும் நேரத்தில் பேக் போடுறதுனு இதெல்லாம் எனக்குப் பிடிக்காத விஷயங்கள்.

ஷூட்டிங் நேரத்துல மட்டும்தான் மேக்அப் போட்டுக்குவேன். மத்தபடி, தினமும் சோப், ஃபேஸ் வாஷ்னு இது ரெண்டும்தான் என் பியூட்டி கிட்ல இருக்கும். கேரளாவுல ஆயில் மசாஜ் ரொம்ப பிரபலம். அதைக்கூட நான் செஞ்சுக்கிறதில்ல. தலைக்கு எண்ணெய் வைக்கவே எனக்குப் பிடிக்காது.”

”சமைக்கத் தெரியுமா?” 

”எங்க வீட்டுல என் பாட்டி சமையல்தான். சூப்பரா இருக்கும். வீட்டுல எனக்கு சாப்பாட்டில் எந்த ஸ்பெஷல் கவனிப்பும் இருக்காது. நானும், ‘எனக்கு அது வேணும், இது வேணும்’னு எல்லாம் கேட்க மாட்டேன்.

சமைச்சிருக்கிற  உணவுகள்ல   எது ரொம்ப பிடிச்சிருக்கோ, அதை ஆர்வமா சாப்பிடுவேன் அவ்ளோதான்.

என்ன சமைச்சிருக்காங்கனு பார்த்து, ப்ளேட்ல எடுத்துட்டு வர மட்டும்தான் கிச்சன் பக்கம் போவேன்.

menanaas  சமையல்னாலே பொண்ணுங்கதானா? ஏன் பசங்க சமைக்கக் கூடாதா? - கொதிகொதிக்கும் லட்சுமி மேனன் menanaasரெண்டு, மூணு தடவை எனக்கு நானே பிளாக் டீ போட்டுக் குடிச்சிருக்கேன். இவ்வளவுதான் என் சமையல். கிச்சன் பக்கம் போகும்போது, உயரத்தில் இருக்கிற பொருட்களை என்னை எடுத்துத் தரச் சொல்லிக் கேட்டு, எடுக்கும்போது அதை நான் கீழ தவறவிட்டுனு… இந்தக் களேபரங்களால  எங்க வீட்டுல நான் சமையலறைப் பக்கம் போகாம இருந்தாலே சந்தோஷப்படுவாங்க.

ஜஸ்ட் எ மினிட்… பெண்கள்தான் சமைக்கணும் என்பது, எனக்கு சுத்தமா பிடிக்காத கான்செப்ட்.  ஆண்கள் சமைக்கக்கூடாதா என்ன?

கிச்சன் தாண்டியும் பெண்கள் பல விஷயங்களைக் கத்துக்கணும் என்பது என் எண்ணம். சொல்லப்போனா தமிழ்நாட்டுலதான் சமைக்கிறது பெண்களுக்கான அடையாளமா இருக்கு.

இங்க கேரளாவுல ஆண்-பெண் ரெண்டு பேருமே பாகுபாடு பார்க்காம சமைப்பாங்க. வீட்டு வேலைகளை ஆண்-பெண் ரெண்டு பேருமே ஷேர் பண்ணி செய்யணும்”.

”இந்த முறையும் உங்களுக்கு சொல்ல சுவாரஸ்யமா எங்கிட்ட எந்த பதிலும் இல்ல. எனக்கு சாப்பிடறதுன்னா ரொம்பப் பிடிக்கும். எப்போவெல்லாம், என்னவெல்லாம் சாப்பிடத் தோணுதோ சாப்பிட்டுடுவேன்.

எந்த உடற்பயிற்சியும் செய்றதில்ல, டயட் கன்ட்ரோலும் இல்ல. நான் வெஜிடேரியன் என்பதால, என் மெனு சேஃபர் ஸோன்லதான் இருக்குனு நினைக்கிறேன். படங்களில் கமிட் ஆகியிருந்தா, ஷுட் போற நாட்களில் மட்டும் கொஞ்சம் குறைச்சு சாப்பிடுவேன்… அவ்வளவுதான்!”

- கு.ஆனந்தராஜ்

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

February 2017
M T W T F S S
« Jan    
 12345
6789101112
13141516171819
20212223242526
2728  

Latest Comments

நாட்டிற்கு மிகவும் தேவையான விடயம். இதில் பெற்ற அறிவு -"சொந்த வீட்டில திருகுதாளங்கள் செய்ய வேண்டாம்" [...]

சீன ஆசியாவின் பாதுகாவலன் , அவர்களுக்கு இத்தகைய ஆயுதம் அவசியம், ஆனால் கக்கூசு புகழ் நாடு ஆசியாவின் துரோகி, அமெரிக்காவுக்கு [...]

This news good [...]

awesome dance [...]

Who is this bastard to tell to our great Mahinda Rajapakse ? we want Rajapakse [...]

இலங்கை பத்திரிகைகள்

English News