ilakkiyainfo

ilakkiyainfo

சரத் பொன்கோ எதிர் ஜகத் ஜயசூரிய: இரு முன்னாள் இராணுவத் தளபதிகளின் மோதல்!! (பாகம் – 2) – டி.பி.ஜெயராஜ்

சரத் பொன்கோ எதிர் ஜகத் ஜயசூரிய: இரு முன்னாள் இராணுவத் தளபதிகளின் மோதல்!! (பாகம் – 2) – டி.பி.ஜெயராஜ்
September 27
00:20 2017

 

மிகவும் உயர்வாக மதிக்கப்படும் இராணுவத் தளபதி சேனநாயக்காவின் பதில் பரவலாக வரவேற்கப்பட்டது. சேனநாயக்காவின் பகிரங்க கருத்து அதனுடன் சேர்ந்து மூத்த அரசியல் தலைவர்கள் மேற்கொண்ட அமைதி ஏற்படுத்தும் முயற்சி என்பன நல்ல பலனைத் தந்தன.

பீல்ட் மார்ஷலுக்கும் மற்றும் லெப்.ஜெனரலுக்கும் இடையே பிரகடனப்படுத்தப்படாத யுத்த நிறுத்தம் ஒன்று ஏற்பட்டது. முன்னாள் உயர் மட்டங்களின் வாய்மூலமான பீரங்கி வெடியோசைகள் அமைதியாயின.

இதற்கிடையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஜகத் ஜயசூரியாமீது அல்லது ஒரு இராணுவ அதிகாரிமீது அல்லது ஒரு யுத்த வீரர்மீது கை வைப்பதை தான் ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை என்று வெளிப்படையாக பிரகடனப் படுத்தினார்.

ஜயசூரியா மீதான குற்றச்சாட்டு பற்றிய அரசாங்கத்தின் நிலைப்பாடு தெளிவு படுத்தப்பட்டதின் பின்னர் சண்டையிடும் இரண்டு முன்னாள் இராணுவத் தலைவர்களிடையே கடினமான சமாதானம் உருவானது.

முன்னாள் இராணுவத் தளபதிகள் இடையேயான இந்த மோதலை தனிப்பட்ட ஒரு ஒற்றை நிலைப்பாடான சம்பவமாகப் பார்க்க முடியாது.

இந்த மோசமான வாய்த் தர்க்கத்துக்குப் பின்னால் ஆழமான விரோதப் போக்கின் வரலாறு இருப்பதைப் அலட்சியப் படுத்திவிட முடியாது.

பொன்சேகா மற்றும் ஜயசூரியா இடையேயான ஆளுமை மோதல், இராணுவத்தில் அரை நூற்றாண்டுகளுக்கு மேலாக இடம்பெற்றுவரும் இராணுவ அரசியல்மயமாக்கல் செயற்பாட்டின் விளைவு ஆகும்.

இந்த இராணுவத்தின் அரசியல்மயமாக்கல் நடவடிக்கை ராஜபக்ஸ ஆட்சியின்போது எண்ணற்ற விகிதாச்சாரத்தைக் கொண்டிருந்தது. புலிகளுக்கு எதிரான போரில் வெற்றி பெறும் நோக்கத்துக்காக ஆயுதப்படையினர் மிகப் பெரிய அளவிற்கு அரசியல் மயமாக்கப்பட்டார்கள்.

எல்.ரீ.ரீ.ஈ யினை வெற்றி கொள்வது என்ற முடிவில் தீவிரமாக்கப்பட்ட யுத்தம் அதன் பின்னணியில் திட்டமிடப்படாத பல விளைவுகளை ஏற்படுத்தியது.

அவைகளில் பிரதானமானது பொன்சேகா நிகழ்வின் பிறப்பு மற்றும் வளர்ச்சி என்பனவாகும். யுத்தத்தை வெற்றிகொண்ட இராணுவ தளபதி யுத்தத்தை வெற்றிகொண்ட ஜனாதிபதிக்கு எதிராக ஜனாதிபதி பதவிக்காகச் சவால் விடுத்தபோது இந்த நடவடிக்கை ஒரு மோசமான திருப்பத்தை எட்டியது.

இது அரசியல்மயமாக்கப்பட்ட இராணுவச் சூழலில் கடலளவு மாற்றத்தை ஏற்படுத்தியது. இராணுவ உயர்மட்டத்தினர் அரசியல் ரீதியாகப் பிளவடைந்தார்கள்.

சாதாரண சூழலில் அரசியலில் நிலையற்ற கனவான்களைப் போலிருந்த அதிகாரிகள் அரசியல் மிருகங்களைப் போல மாறினார்கள். பொன்சேகா – ஜயசூரியா பிளவு மோசமடைந்தது ராஜபக்ஸக்கள் அவர்கள் இருவரிடையேயும் அரசியல் விளையாட்டை நடத்திய காரணத்தினால்தான்.

இந்தக் கட்டத்தில், யுத்தம் முடிவடைந்ததின் பின்னர் யுத்தத்தை வெற்றிகொண்ட இராணுவத் தளபதிகள் ராஜபக்ஸாக்களுடன் மோதிக்கொண்ட வரலாற்றினையும் மற்றும் அது எப்படி சரத்பொன்சேகா மற்றும் ஜகத் ஜயசூரியா இடையேயான பிளவை மோசமாக்கியது என்பதையும் பற்றியும் சுருக்கமாக விளக்குவது பொருத்தமாக இருக்கும்.

rajapaksa_CI சரத் பொன்கோ எதிர் ஜகத் ஜயசூரிய: இரு முன்னாள் இராணுவத் தளபதிகளின் மோதல்!! (பாகம் - 2) - டி.பி.ஜெயராஜ் சரத் பொன்கோ எதிர் ஜகத் ஜயசூரிய: இரு முன்னாள் இராணுவத் தளபதிகளின் மோதல்!! (பாகம் - 2) - டி.பி.ஜெயராஜ் rajapaksa CIமெதமுலான மற்றும் வல்வெட்டித்துறை

 2005 நவம்பர் 18ல் நிறைவேற்று ஜனாதிபதியாகத் தேர்வு செய்யப்பட்டார். புலிகளினால் கட்டாயமாக மேற்கொள்ளப்பட்ட ஒரு தேர்தல் புறக்கணிப்பு காரணமாக தேர்தலில் வெற்றி பெற்றதுக்கு மாறாக மெதமுலான மற்றும் வல்வெட்டித்துறை என்பன ஒரு மோதலுக்கு தயாராகின்றன என்பது விரைவிலேயே வெளிப்படையாகத் தெரிந்தது.

எல்.ரீ.ரீ.ஈ உடன் ஒரு பயங்கரமான யுத்தத்தை எதிர்பார்த்து ராஜபக்ஸ தனது ஜனாதிபதி பதவியை பயன்படுத்தி இரண்டு முக்கியமான நியமனங்களை மேற்கொண்டார்.

ஒன்று தனது இளைய சகோதரரான கோட்டபாயா ராஜபக்ஸவை பாதுகாப்புச் செயலராக நியமித்தது. மற்றையது சரத் பொன்சேகாவினை இராணுவத் தளபதியாக நியமித்து அவரது பதவிக்காலத்தை நீட்டிப்புச் செய்தது.

index சரத் பொன்கோ எதிர் ஜகத் ஜயசூரிய: இரு முன்னாள் இராணுவத் தளபதிகளின் மோதல்!! (பாகம் - 2) - டி.பி.ஜெயராஜ் சரத் பொன்கோ எதிர் ஜகத் ஜயசூரிய: இரு முன்னாள் இராணுவத் தளபதிகளின் மோதல்!! (பாகம் - 2) - டி.பி.ஜெயராஜ் index1 e1506470104289கோட்டபாயாவின் வேண்டுகோள் காரணமாகத்தான் சரத் பொன்சேகா இராணுவத் தளபதியாக நியமிக்கப் பட்டார்.

2005 டிசம்பர் 6ல், ஓய்வு பெறுவதற்கான கட்டாய வயதெல்லையான 55 வயதை பொன்சேனா அடைவதினால் அவர் ஓய்வு பெறுவதற்கு அட்டவணைப் படுத்தப் பட்டிருந்தது.

ஆனால் கோட்டபாயா தனது சகோதரனை சமாதானப்படுத்தி சரத்தை இராணுவத் தளபதியாக்கினார் ஏனென்றால் அந்தக் காலகட்டத்தில் இராணுவத்தை வழிநடத்துவதற்கு பொன்சேகாதான் சிறந்த மனிதராக இருந்தார்.

அப்போது கடமையில் இருந்த மேஜர் ஜெனரல் சாந்த கொட்டகொடவினை பிரேசில் நாட்டுக்கு தூதுவராக அனுப்பிய பின்னர் பொன்சேகா ஊள்ளீர்க்கப்பட்டார் அதன் பின்னர் அவரது பிறந்த நாளான டிசம்பர் 6ல் ஒவ்வொரு வருடமும் அவருக்கு பதவி நீடிப்பு வழங்கப்பட்டது,

மே 2009ல் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு தனது வாட்டர்லூவை நந்திக்கடலேரியின் தண்ணீரில் சந்தித்தது,

புலிகளுக்கு எதிரான வெற்றியின்  பெரிய பங்கு உயர் பீடத்தில் இருந்த மூன்று பேருக்கு உரியதாக இருந்தது. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ, பாதுகாப்புச் செயலாளர் கோட்டபாய ராஜபக்ஸ மற்றும் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா ஆகியோரைக் கொண்ட மூன்று பிரதானிகள் புலிகளுக்கு எதிரான வெற்றிகரமான யுத்தத்தில் முறையே அரசியல், நிர்வாகம் மற்றும் இராணுவ தலைமைகளை வழங்கியதற்காக பாராட்டப்பட்டார்கள்.

யுத்தம் முடிவடைந்து பிறகு றுகுணுவை சோந்த ராஜபக்ஸக்கள் யுத்த வெற்றியை ஜனாதிபதி தேர்தலில் மகிந்த ராஜபக்ஸ வெற்றி பெறுவதற்கான பிரச்சாரத்துக்கு பயன்படுத்த விரும்பினார்கள்.

அவர்கள் சரத்பொன்சேகாவையும் அவரது யுத்த வெற்றித் தோற்றத்தையும் மெதமுலான மச்சியவெல்லியின் பிரச்சாரத்துக்காக ஈடுபடுத்த எண்ணினார்கள்.

a_fonseka-_mahinda_-_gotabhaya சரத் பொன்கோ எதிர் ஜகத் ஜயசூரிய: இரு முன்னாள் இராணுவத் தளபதிகளின் மோதல்!! (பாகம் - 2) - டி.பி.ஜெயராஜ் சரத் பொன்கோ எதிர் ஜகத் ஜயசூரிய: இரு முன்னாள் இராணுவத் தளபதிகளின் மோதல்!! (பாகம் - 2) - டி.பி.ஜெயராஜ் a fonseka  mahinda   gotabhayaஎனினும் பொன்சேகாவுக்கு வேறு திட்டங்கள் இருந்தன மற்றும் தனது இராணுவ தோற்றத்தை எதிர்பார்ப்பது போல மெதமுலான சுயநலக்குழுவினரை மேலுயுயர்த்தப் பயன்படுத்துவதற்குப் பதிலாக தனது சொந்த நலனுக்காக காசாக்கினால் என்ன என்று சிந்திக்கலானார்.

துரதிருஷ்டவசமாக டாக்டர். பிராங்கன்ஸ்ரீன் உருவாக்கிய அசுரனைப்போன்ற இயல்புள்ள உயிரினங்களான ராஜபக்ஸக்கள் தங்கள் சொந்த நலனைப் பற்றிய எண்ணத்தையே கொண்டிருந்ததால் அதைப்பற்றி மறுபரிசீலனை செய்ய மறுத்துவிட்டார்கள்.

நான் ஏன் அடுத்த ஜனாதிபதியாகக் கூடாது?

உற்சாகமான சந்தர்ப்பங்களில் பொன்சேகா தன்னைக் கட்டுப்படுத்த முடியாமல் பேசி தனக்கே எதிர்பாரத தீங்குகளை ஏற்படுத்திக்கொள்ளும் போக்கினைக் கொண்டிருந்தார்.

பொன்சேகா தன்னைப்பற்றிப் பேசும்போது தான் றோகணவைப் போல தமிழர்களைத் தோற்கடித்த ஒருவர் என்று பேசத் தொடங்கியதுடன் மற்றும்  தனது நண்பர்கள்  மற்றும் அறிமுகமானவர்களிடம் “நான் ஏன் அடுத்த ஜனாதிபதி ஆகக்கூடாது” என்று கேள்வி எழுப்பவும் ஆரம்பித்தார்.

சரத் பொன்சேகாவைப் பொறுத்தமட்டில் அவர்தான்  யுத்தத்தில் வெற்றி பெற்று நாட்டைக் காப்பாற்றியவர் மகிந்த அல்ல என்ற எண்ணமே மேலோங்கியிருந்தது.

அவரது மாற்றமடைந்துவரும் அணுகுமுறை பற்றிய செய்தி ராஜபக்ஸ சகோதரர்களுக்கு பரிமாறப்பட்டபோது எச்சரிக்கை மணி ஒலிக்க ஆரம்பித்தது.

மகிந்தவின் அரசியல் அதிர்ஷ்டத்துக்கு உண்மையானதோ அல்லது கற்பனையானதோ ஏதோ ஒரு வகை அச்சுறுத்தல ஏற்பட்டிருப்பதாக உணரப்பட்டது.

இதைத்தொடர்ந்து பல்வேறு எரிச்சலூட்டும் சம்பவங்கள் மகிந்த மற்றும் பொன்சேகா இடையில் ஏற்படலாயிற்று. அந்தச் சிலவற்றில் குறிப்பிடத்தக்க ஒன்று, முதல் பெண்மணி ஷிராந்தி ராஜபக்ஸ மற்றும் மூத்த மகன் நாமல் ஆகியோர் வடக்கிற்கான அவர்களது ஒரு பயணத்தின்போது, இராணுவத்தினரால் நிறுத்தப்பட்டு தேவையின்றி பல மணி நேரம் தாமதப் படுத்தப்பட்டார்கள். இது பொன்சேகா அவர்களின் வேண்டுகோளின் படியே நடத்தப்பட்ட ஒரு செயலாகவே பார்க்கப்பட்டது.

2009 ஜூலை 9ல் யுத்தத்தை பற்றி எழுதப்பட்ட ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் பொன்சேகா உரையாற்றினார், அதில் அவருக்கு எகப்பட்ட பாராட்டுக்கள் வழங்கப்பட்டன.

ஜனாதிபதி பாத்திரத்துக்கான ஒரு அடையாள சம்மதம் தெரிவிப்பதாகவே அந்த நிகழ்வு அமைந்தது. கோட்டபாய கிட்டத்தட்ட புறக்கணிக்கப்பட்டார்.

சரத்தைப் பொறுத்தமட்டில் தானே மற்றும் தான் மட்டுமே ஜனாதிபதியின் ஆதரவுடன் யுத்தத்தை வெற்றிகொண்டோம் என்கிற எண்ணமே இருந்தது. இது மகிந்த அல்ல, சரத் அவர்கள்தான் தேசத்தைக் காப்பாற்றியவர் என்கிற அர்த்தத்தை ஏற்படுத்தியது.

மற்றொரு சம்பவத்தில் அம்பலாங்கொட, தர்மாசோக கல்லூரியில் 2009 ஜூலை 10ல் நடைபெற்ற பாராட்டு விழாவில் இடம்பெற்றது.

காலி வீதியின் அனைத்து போக்கு வரத்துக்களும் பல மணி நேரத்துக்கு நிறுத்தி வைக்கப்பட்டன.சரத்தின் பாதுகாப்பு தரப்பினரால் எழுந்தமானத்துக்கு மிகப் பெரும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததால் அது பொதுமக்களுக்கு பலத்த அசௌகரியத்தை ஏற்படுத்தியது.

சரத், சொந்த ஊர் மக்களின் பாராட்டை பெறுவதற்காக யுத்தத்தினை தனியாக வெற்றி பெற்ற தனது பங்கினைப்பற்றி பூசி மெழுகிக் கதையளந்தார்.

சரத் மற்றும் இராணுவத்தில் உள்ள அவரை மகிழ்விக்கும் மனிதர்கள் தங்களுக்குள்ளேயே ஒரு சட்டத்தை உருவாக்கி வருவதற்கான அடையாளங்கள் அதிகரித்துக் காணப்படலாயிற்று.

குறிப்பிட்ட சில இடங்களில் சமாந்தரமான தனி அதிகாரம் பொன்சேகாவினால் நடைமுறைப் படுத்தப்பட்டு வந்தது. சில இடங்களில் உயர்மட்டத்துக்கு சமமான அதிகாரம் பொன்சேகாவினால் பயன்படுத்தப்படுவது போல இருந்தது.

images சரத் பொன்கோ எதிர் ஜகத் ஜயசூரிய: இரு முன்னாள் இராணுவத் தளபதிகளின் மோதல்!! (பாகம் - 2) - டி.பி.ஜெயராஜ் சரத் பொன்கோ எதிர் ஜகத் ஜயசூரிய: இரு முன்னாள் இராணுவத் தளபதிகளின் மோதல்!! (பாகம் - 2) - டி.பி.ஜெயராஜ் images

சரத் பொன்சேகா வலிமையான விருப்பு வெறுப்புகளைக் கொண்டிருந்தார். அவர் தனது அதிகாரிகளில் சிலரை இழிவு படுத்தியும் அவர்கள்மீது பாரபட்சம் காட்டியும் வந்தார், அநீதியான முறையில் தான் விரும்பும் மற்றவர்களுக்கு சலுகைகள் காட்டியும் வந்தார்.

அவரினால் பாதிக்கப்பட்ட மூத்த அதிகாரிகளில் ஒருவர் ஜகத் ஜயசூரியா. அவரை பலவீனமானவர் மற்றும் திறமையற்றவர் என்று அழைத்த பொன்சேகா அவர் முன்னணிப் போர்முனைக்கு செல்வதற்கு மறுப்புத் தெரிவித்து வந்தார்.

வன்னிப் பிரதேச தளபதியான அவர் நிருவாகம் மற்றும் தளபாடங்களுக்கு பொறுப்பாக வைக்கப்பட்டிருந்தார் ஆனால் யுத்த முன்னரங்கிற்கு கடமைக்குச் செல்வதற்கு அனுமதிக்கப்படவில்லை.

எனினும் ஜயசூரியா ராஜபக்ஸக்களின் ஒரு தூரத்து உறவினராக இருந்தபடியால் மகிந்த மற்றும் கோட்டா ஆகிய இருவரையும் நேரிட்டு சந்திப்பதற்கான வழி அவருக்கிருந்தது. இது பொன்சேகாவுக்கு மேலும் எரிச்சல் மூட்டியது.

படைத்தலைவரின் துணை அதிகாரியிடம் விசாரணை

அப்போது நடைபெற்ற அடக்குமுறையான ஒரு சம்பவம், பொன்சேகாவின் கட்டளைப்படி செயல்படும் இராணுவ அதிகாரிகள் ஜகத் ஜயசூரியாவின் துணை அதிகாரியாக கடமையாற்றியவரை விசாரணை செய்வதற்காகக் கைது செய்ததுதான்.

முகாம் முகாமையாளராக இருந்த அவரிடம் ஜகத் ஜயசூரியாவுடன் அவர் வைத்திருந்த தனிப்பட்ட உறவு தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது.

வன்னி தளபதியின் ஓய்வு விடுதியான மரக் குடிசையில் ஜயசூரியாவின் துணையுடன் அவர் செலவு செய்ததாகச் சொல்லப்படும் நேரத்தைப் பற்றி அவரிடம் விசேஷமாக வினாவப்பட்டது.

கேள்விகள் கேட்கப்பட்ட விதம் அவர்கள் இருவருக்கும் இடையே ஒரு ஓரினச்சேர்க்கை உறவு இருந்ததாக நிறுவப்படும் நோக்கமுடையதாக இருந்தது. ஒரு கட்டத்தில் ஜயசூரியாவை கைது செய்யும் திட்டம் கூட மேற்கொள்ளப்பட்டது, ஆனால் ராஜபக்ஸக்களுக்கு அது தெரியவந்ததினால் அது முறியடிக்கப்பட்டது.

இந்தப் பின்னணியில்தான் மகிந்த அரசாங்கம் தனது நகர்வை மேற்கொண்டது. திடீரென பொன்சேகாவின் உலகம் விழுந்து நொறுங்கியது.

2009 ஜூலை 12ல் அவர் அவசரமாக வரவழைக்கப்பட்டு இராணுவ தலைவர் பொறுப்புக்கு விடை கொடுத்துவிட்டு பாதுகாப்பு தலைமை அதிகாரியாக (சி.டி.எஸ்) பொறுப்பேற்பதற்கு மூன்று நாள் கால அவகாசம் வழங்கப்பட்டது.

பொன்சேகா தயக்கத்துடன் தனது இறுதி கோரிக்கையை சமர்ப்பித்துவிட்டு இராணுவத் தலைவர் பதவியை துறந்து பாதுகாப்பு தலைமை அதிகாரியாக (சி.டி.எஸ்) மாறினார்.

அவரது வேண்டுகோளான அவரது நெருங்கிய சகாவான யாழ்ப்பாணத் தளபதியாக இருந்த ஜெனரல் சந்திரசிறியை இராணுவ தலைவராக நியமிக்க வேண்டும் என்பது நிராகரிக்கப்பட்டது. பொன்சேகாவுக்கு நெருக்கமான யாரையும் அந்தப் பதவியில் நியமிக்கும் மனநிலையில் ராஜபக்ஸக்கள் இருக்கவில்லை.

மாறாக பதவி மூப்பு நிலையில் 9வது இடத்தில் இருந்த ஜகத் ஜயசூரியா எட்டுப் பேர்களைக் கடந்து இராணுவ தளபதியாக நியமனம் பெற்றார்.

பொன்சேகாவின் கலகத்தனமான நடவடிக்கை ராஜபக்ஸக்களுக்கு நம்பிக்கையான விசுவாசி ஒருவரை இராணுவத் தவைராக நியமிக்கவேண்டும் என்கிற எண்ணத்தை தோற்றுவித்தது.

அந்த இடத்துக்கு ஜயசூரியா கனகச்சிதமாகப் பெருந்தினார். பொன்சேகா 2009 ஜூலை 15ல் இராணுவத் தலைவர் பதவியில் இருந்து ஓய்வு பெற்றதும,; அதே நாளில் ஜகத் ஜயசூரியா இராணுவத் தலைவர் பதவியை வெற்றிகரமாகக் கைப்பற்றினார். பொன்சேகாவின் முன்னோக்கில் இது அவமானப்பட்டதில் இருந்து அடிவாங்கிய நிலைக்கு ஒப்பானதாக இருந்தது.

பொன்சேகா பாதுகாப்பு பணியாளர்களின் தலைமை அதிகாரியாக (சி.டி.எஸ்) நியமிக்கப்பட்டிருந்த போதிலும், புதிய தளபதிகளை நியமிப்பதன் மூலம் இராணுவத்துக்குள் தான் படிப்படியாக குறைக்கப்பட்டு வருவதைக் கண்டார்.

பொன்சேகாவை அடையாளப்படுத்தும் காட்சிப் பொருட்கள் இராணுவக் கண்காட்சிகளில் இருந்து அகற்றப்பட்டு வந்தன இராணுவத்தின் 60 வது வருட விழாவில் அவர் ஆற்றிய உரை, அரச மற்றும் குறிப்பிடத்தக்க அரச சார்பற்ற நிறுவன ஊடகங்களில் வெளியிடுவது இருட்டடிப்புச் செய்யப்பட்டது.

பாதுகாப்பு பணியாளர்களின் தலைமை அதிகாரி

பொன்சேகா பாதுகாப்பு பணியாளர்களின் தலைமை அதிகாரியாக பதவி உயர்த்தப்பட்டதின் பின்னர் புதிய இராணுவ தளபதியாக நியமனம் பெற்ற ஜகத் ஜயசூரியா ஏராளமான உள்ளக நியமனங்களை மேற்கொண்டார், இராணுவக் கட்டமைப்புக்குள் மாற்றங்கள் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

பொன்சேகாவுக்கு விசுவாசமான அநேகர் உணர்திறன் மிக்க பதவிகளில் இருந்து மூலோபாயமற்ற நிலைகளுக்கு நகர்த்தப்பட்டார்கள். மூலோபாய நிலையில் முக்கியமான பதவிகள் பொன்சேகாவுடன் பகைமை பாராட்டுபவர்களால் நிரப்பப் பட்டது.

பொன்சேகாவின் முக்கியத்துவம் சீராக மாற்றியமைக்கப்பட்டது. சி.டி.எஸ் இல் அவருக்கு கீழ் இருந்த அதிகாரிகளின் கட்டமைப்பில் கூட அவருக்கு விரோதமான உறுப்புகள் ஊடுருவியிருந்தன. பொன்சேகா மற்றும் அவரது விசுவாசிகள் எனக் கருதப்படுபவர்கள் இரகசியமாக கண்காணிக்கப்பட்டு வருவதாக அதிகம் பேசப்பட்டது.

அதனால் முற்றிலும் ஆத்திரமடைந்த சரத் பொன்சேகா தனது இராஜினாமாவை 2009 டிசம்பர் 1, நடைமுறைக்கு வரும்வகையில் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்கவிடம நவம்பர் 12, வியாழக்கிழமை பி.ப 1.30 மணியளவில் சமர்ப்பித்தார்.

அவரது வெளியேற்றத்துக்கான 17 காரணங்களை வெளிப்படுத்தும் மூன்று பக்க கடிதம் உடனடியாக ஏற்றுக் கொள்ளப்பட்டது, பொன்சேகா இராஜினாமாவை சமர்ப்பித்த உடனடியாகவே அதை அந்த நேரத்திலிருந்து அமலுக்கு வரும் வகையில் ஏற்றுக்கொள்ளும்படி மகிந்த ராஜபக்ஸ தெளிவான உத்தரவைப் பிறப்பித்து இருந்தார். அந்தக் கடிதத்தில் ஜகத் ஜயசூரியாவுக்கு எதிராக பொன்சேகா குறிப்பிட்ட சில புகார்களைத் தெரிவித்திருந்தார்.

அந்த கடிதத்தின் குறிப்பிட்ட பகுதி கீழே தரப்பட்டுள்ளது.

“தற்போதைய இராணுவ தளபதி கடமையேற்ற உடனேயே, துருப்புக்களின் நலன்களைக் கவனித்து வரும் சேவா வனிதா இராணுவப் பிரிவில்; எனது மனைவியுடன் கடமையாற்றும் கனிட்ட அதிகாரிகள் உட்பட எனது பதவிக்காலத்தில் எனது கட்டளைப்படி யுத்த முயற்சிக்கு அளவற்ற பங்களிப்புச் செய்த மூத்த இராணுவ அதிகாரிகள் பலரை இடமாற்றம் செய்ய ஆரம்பித்துள்ளார், இது அதிகாரிகளின் விசுவாசத்துக்கு சவால் விடுவதுடன் மற்றும் இராணுவத்தின் அதிகாரிகளின் கீழுள்ள துருப்புக்களுக்கு மிகவும் அதைரியம் அளிப்பதுடன் எனது அதிகாரத்தின்மீது செலுத்தப்பட்ட தவறான சமிக்ஞையும் ஆகும்.’;

எதிரணியின் பொது ஜனாதிபதி வேட்பாளர்

சிடிஎஸ் இலிருந்து இராஜினாமா செய்ததின் பின்னர் பொன்சேகா அரசியலில் மூழ்கி எதிரணி பொது ஜனாதிபதி வேட்பாளரானார். தேர்தல் பிரச்சாரத்தின்போது முன்னாள் இராணுவத் தலைவர் மிகவும் வெளிப்படையாக பேசி வந்தார்.

இந்த நடவடிக்கையின்போது, அவர் அரசாங்கத்தையும், முன்னாள் பாதுகாப்பு செயலாளரையும் மற்றும் அந்தச் சமயத்தில் பாதுகாப்பு சேவையில் உயர் பதவி வகிக்கும் அதிகாரிகளையும் கடுமையாகச் சாடினார். பொன்சேகா மேலும் தனது பிரியப்பட்ட கீதமான யுத்த வெற்றிக்கான தனது புகழினை பாடுவதை அடிக்கடி செய்துவந்தார்.

இதை ஒருவகையில் எதிர்க்கும் விதமாக மகிந்த அரசாங்கம் இராணுவ மரபுக்கு முரணான வகையில் மற்றும் கடமையில் உள்ள இராணுவ அதிகாரிகளை நேரடியாகவும் மற்றும் மறைமகமாகவும் சரத் பொனசேகாவுக்கு விரோதமாக பேசுவதற்கு ஏற்பாடு செய்தது.

ராஜபக்ஸ ஆட்சி, அந்த இராணுவத்தினரின் பேச்சுக்கள் மூலமாக உயர்ந்தபட்ச பிரச்சாரப் பயன்களை பெறுவதை உறுதி செய்திருந்தது.அதற்காக விரிவான ஊடக அனுசரணை வழங்கப்பட்டிருந்தது.

இதன்படி தற்போது கடமையிலுள்ள இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் ஜகத் ஜயசூரியாவினால் வலிறுத்தப்படும்; அறிக்கைகள் ஊடகங்களில் விரிவான விளம்பரம் பெறுவதை நாடு பெருமளவில் கண்டது.

இந்த அறிக்கைகள் சிலவற்றில் ஜயசூரியா, பொன்சேகா கூறுவதை வெளிப்படையாக மறுதலித்தார். இராணுவ வளாகத்துக்குள் ஜயசூரியாவினால் இராணுவத்தினருடன் நடத்தப்படும் உள்ளகக் கூட்டங்களைக்கூட பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளங்களில் வெளிவருவதற்கான ஒரு வழியையும் அவர் கண்டுபிடித்தார்

அப்போது இராணுவ பேச்சாளராக இருந்த உதய நாணயக்கார, குறிப்பாக சரத் பொன்சேகா தொடர்பான விடயங்களைப் பற்றி கருத்து வெளியிடுவதின் மூலம் தனக்கு வழங்கப்பட்ட பொறுப்பில் இருந்து பெரிதும் விலகிச் சென்றார்.

இதைத் தவிர வேறு பல உயர் பதவியில் உள்ள இராணுவ அதிகாரிகள் ஊடக நேர்காணல்களை வழங்க ஆரம்பித்தனர். அவர்களில் முக்கியமானவர் மேஜர்.ஜெனரல் சவேந்திர சில்வா.

“சண்டே லீடர்” பத்திரிகைக்கு பொன்சேகா வழங்கிய ஒரு நேர்காணலில் சவேந்திர சில்வாவை விமர்சன ரீதியாகக் குறிப்பிட்டதில் இருந்து மேஜர் ஜெனரலுக்கு தன்னைப் பாதுகாக்கவும் அதனைத் தெளிவு படுத்தவும் வேண்டிய சில காரணங்கள் இருந்தன. இருந்தபோதும் இந்த நடைமுறை நீண்ட காலத்துக்கு விரும்பத்தக்க ஒன்றாக இல்லை.

அரசியல் நிகழ்ச்சித் திட்டத்தின் பகுதி

மேஜர்.ஜெனரல். கமால் குணரத்ன, மேஜர்.ஜெனரல், சாஜி கலகே, மேஜர்.ஜெனரல். பிரசன்ன சில்வா, மேஜர்.ஜெனரல். கப்பில ஹெந்தவிதாரண மற்றும் மேஜர்.ஜெனரல்.பிரசாத் சமரசிங்க போன்ற ஏனைய இராணுவ அதிகாரிகளும் அரச ஊடகங்களுக்கு நேர்காணல்களை வழங்கினார்கள்.

இந்த நேர்காணல்களில் பெரும்பாலானவை பெயரளவில் இராணுவ விடயங்கள் மற்றும் புலிகளுக்கு எதிரான யுத்தம்பற்றியதாக இருந்தது, அவைகளில் காப்புரிமையான அரசியல் உப வசனங்கள் தவறாகப் பயன்படுத்தப் படவில்லை.

ஆனால் அவை அனைத்தும் சரத்பொன்சேகாவை குறைமதிப்பீடு செய்து மகிந்த ராஜபக்ஸவை முன்னேற்றும் அரசியல் நிகழ்ச்சி நிரலின் பகுதியாகவே இடம்பெற்றன. இராணுவ அதிகாரிகளின் இந்த வெட்கம்கெட்ட அரசியல் நடப்பு இதற்கு முந்தைய காலங்களில் ஒருபோதும் கேள்விப்பட்டிராத ஒன்றாக இருந்தது.

இவை அனைத்தும் புதிதாக நியமிக்கப்பட்ட இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் ஜகத் ஜயசூரியாவின் கண்காணிப்பின் கீழேயே நடைபெற்றன.

தேர்தல் பிரச்சாரத்தின்போது, முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோட்டபாய ராஜபக்ஸவின் நடவடிக்கை தீவிர சர்ச்சைக்குரியதாக இருந்தது.

அவர் ஒரு உயர்மட்ட அரசாங்க ஊழியர் என்கிற உண்மைக்கு மாறாக பாதுகாப்புச் செயலாளர் பொதுக் கூட்டங்களில் உரையாற்றும்போது வெளிப்படையான அரசியல் பிரசங்கங்களில் ஈடுபட்டார்.

அரசியல் ஊகங்கள் நிறைந்த ஏராளமான ஊடக நேர்காணல்களை அவர் வழங்கினார். கோட்டாவின் கீழ் இயங்கும் பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளம் வழக்கமாக பொன்சேகாவுக்கு எதிரானதும் மகிந்தவுக்கு ஆதரவானதுமான செய்திகளையே முற்றிலும் ஆர்வமாக வெளியிட்டு வந்தது.

இப்படியான ஒரு சூழ்நிலையில்தான் 2010 ஜனவரி 26ல் நாடு ஜனாதிபதி தேர்தலை சந்தித்தது. மகிந்த ராஜபக்ஸ சரத் பொனசேகாவை தோற்கடித்தார். அதன்பின் ராஜபக்ஸ ஆட்சி சரத் பொனசேகா மற்றும் அவரது ஆதரவாளர்கள்மீது கடுமையாக நடந்து கொள்ளத் தொடங்கியது தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதும் உடனடியாக கடும் நடவடிக்கைகள் ஆரம்பமாயின.

அடுத்தது: கைது, தடுத்து வைப்பு, மற்றும் இராணுவ விசாரணை….

தேனீ மொழிபெயர்ப்பு எஸ்.குமார்

சரத் பொன்கோ எதிர் ஜகத் ஜயசூரிய: இரு முன்னாள் இராணுவத் தளபதிகளின் மோதல்!!- (பாகம்-1) – டி.பி.ஜெயராஜ்

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

December 2018
M T W T F S S
« Nov    
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

Latest Comments

இன்றும் அணு சோதனை நடத்தி உள்ளார் , ஒரு மயிரையும் அமெரிக்கா புடுங்க முடியாது, , ஹிட்லருடன் இவரை [...]

UNP ஒரு ரவுடி கட்சி , 1983ல் தமிழர்களுக்கு எதிராக இனக்கலவரத்தை நடத்தி பல [...]

சில நாடுகளில் தேச நலனை கருத்தில் கொண்டு ராணுவம் அரசை கைப்பற்றி அடுத்த தேர்தல் வரை ஆடசி [...]

இந்த அலோலோயா மதமாற்றுக்கார CIA ஏஜென்ட் , உடனடியாக கைது செய்ய பட வேண்டும் [...]

தமிழ் தேசியம் என்பது ஒரு " சாக்கடை " என்பது மீண்டும் மீண்டும் நிரூபணமாகி உள்ளது, தமிழ் தேசியம் பேசுபவர்கள் [...]

இலங்கை பத்திரிகைகள்

English News