ilakkiyainfo

‘சஹ்ரானின் மனைவியை வைத்து வீடியோ தயாரிப்பு’

‘சஹ்ரானின் மனைவியை வைத்து வீடியோ தயாரிப்பு’
November 08
05:29 2019

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபயவின் வெற்றி உறுதியாகிவிட்டதெனத் தெரிவித்த, நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே, “தற்கொலைதாரியான சஹ்ரானின் மனைவியை வைத்து, எமக்கெதிராக சேறுபூசும் வீடியோ தயாரிக்கப்படுகின்றது” என்றார்.

நாவலப்பிட்டிய மஹிந்தானந்த மன்ற நிறுவனத்தின் கேட்போர் கூடத்தில் நேற்று (07) நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தோல்வியை தாங்கிக்கொள்வதற்கு ஐக்கிய தேசியக் கட்சியினருக்கும், புதிய ஜனநாயக முன்னணியினருக்கும் முடியாது.

ஆகையால், எமக்கெதிரான சேறுபூசும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர் என்று தெரிவித்த அவர், அதனோர் அங்கமாக, ஏப்ரல் 21ஆம் திகதி நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பிரதான காரணமாக அமைந்திருந்த, சஹ்ரானின் மனைவியை வைத்து வீடியோ தயாரிக்கப்பட்டுள்ளது என்றார்.

அந்த வீடியோவை, நவம்பர் 13ஆம் திகதியன்று கசியவிடுவதற்கு திட்டமிட்டுள்ளனர். அதனூடாக, சஹ்ரானுக்கும் கோட்டா, மஹிந்தவுக்கும் இடையில் நெருங்கிய உறவொன்று இருந்ததாக, காண்பிப்பதற்கு முயற்சிக்கின்றனர் என்றார்.

கோட்டாவுக்கு இரண்டாவது விருப்பு வாக்கை வழங்கவிருப்பதாக, ஹிஸ்புல்லாஹ் தெரிவித்திருந்தார். எங்களுக்கு எந்தவோர், இரண்டாவது விருப்பு வாக்கும் தேவையில்லை. ஏப்ரல் 21ஆம் திகதியன்று மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களுடன் தொடர்புடைய எந்தவொருவரின் ஒத்துழைப்பும் எங்களுக்குத் தேவையில்லை என்றார்.

இதேவேளை, இராஜாங்க அமைச்சர் இராதாகிருஷ்ணன் கூறியிருப்பதைப் போல, சிறுபான்மையின மக்களின் எந்தவோர் ஆதரவும் தனக்குத் தேவையில்லையென, கோட்டாபய ஒருபோதும் தெரிவிக்கவில்லை என்றார்.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

February 2020
M T W T F S S
« Jan    
 12
3456789
10111213141516
17181920212223
242526272829  

Latest Comments

செருப்பாலபடிக்கோணும் உந்த பரதேசி நாயள... அவேன்ர லட்சணத்துக்குள்ள வந்துடுவினம் தமிழ் தேசியத்த பற்றி கதைக்க. குப்பமேட்டு நாயள்... இதுக்கு முதலும் [...]

இவர் செய்ய வேண்டிய தற்போதைய அரசின் மீதும் அதன் பயங்கரவாத அமைச்சர்கள் மீதும் பில்லியன் கணக்கில் நஷ்ட ஈடு [...]

நன்றி மறந்த இந்த நாட்டு மக்கள் அனுபவிக்கின்றார்கள் ,38 வருட புலி பயங்கரவாதத்தை அழித்து , [...]

Wellcome our future President , we need you for our country. [...]

வலிகள் வரிகளாக எனக்குள் அதை கவிதையாக [...]

இலங்கை பத்திரிகைகள்

தமிழ் நாளிதழ்கள்

English News

வானொலிகள்