ilakkiyainfo

ilakkiyainfo

சார­தியும், நடத்­து­நரும் தேநீர் அருந்தும் போது இ.போ.ச. பஸ் வண்­டியை கடத்திச் சென்ற நபர்.!

சார­தியும், நடத்­து­நரும் தேநீர் அருந்தும் போது இ.போ.ச. பஸ் வண்­டியை கடத்திச் சென்ற நபர்.!
December 19
09:24 2017

 

இலங்கை போக்­கு­வ­ரத்து சபைக்கு சொந்­த­மான பஸ் வண்­டி­யொன்­றை கடத்­திக்­கொண்டு பய­ணித்த சந்­தேக நபர் ஒரு­வரை நிட்­டம்­புவ பொலிஸார் கைது செய்த சம்­பவம் ஒன்று பதி­வா­கி­யுள்­ளது.

இச்­சம்­பவம் கடந்த வெள்­ளி­க்கிழமை மாலை வேளையில் பதி­வா­ன­தா­கவும் சம்­பவம் தொடர்பில் மேல­திக விசா­ர­ணை­களை கம்­பஹா பொலிஸார் முன்­னெ­டுத்­துள்­ள­தா­கவும் மேல் மாகா­ணத்தின் வட பிராந்­திய பொலிஸ் உய­ர­தி­காரி ஒருவர் கேச­ரிக்கு தெரி­வித்தார்.

கெஸ்­பேவ டிப்­போ­வுக்கு சொந்­த­மான பஸ் வண்­டி­யொன்று கடந்த வெள்­ளி­க்

கிழமை மாணவக் குழு­வொன்­றினை அழைத்துச் செல்­வ­தற்­காக கெஸ்­பே­வையில் இருந்து வெயான்­கொடை பத்­த­ல­கெ­தர வித்­யா­லோக்க மகா வித்­தி­யா­லயம் நோக்கி சென்­றுள்­ளது.

இதன்­போது அந்த பஸ்ஸின் சார­தியும் நடத்­து­நரும், கொழும்பு கண்டி பிர­தான வீதியில் அளுத்­கம போக­முவ பகு­தியில் அமைந்­துள்ள உண­வகம் ஒன்றின் முன்­பாக தேநீர் அருந்­து­வ­தற்­காக பஸ்ஸை நிறுத்தி விட்டு உண­வகம் உள்ளே சென்­றுள்­ளனர்.

சார­தியும், நடத்­து­நரும் இவ்­வாறு தேநீர் அருந்திக் கொண்­டி­ருந்த போது, குறித்த இலங்கை போக்­கு­வ­ரத்து சபைக்கு சொந்­த­மான பஸ்ஸை பிறி­தொரு  நபர் இயக்கி செலுத்­து­வதை அவ்­வி­ரு­வரும் அவ­தா­னித்­துள்­ளனர்.

இத­னை­ய­டுத்து உடன் செயற்­பட்­டுள்ள சார­தியும் நடத்­து­நரும் 119 அழைப்பு இலக்கம் ஊடாக பொலி­ஸாரை தெரி­யப்­ப­டுத்­தி­யுள்­ளனர்.

அத்­துடன் தனியார் பஸ் ஒன்றில் கடத்திச் செல்­லப்­படும் போக்கு வரத்து சபை பஸ்ஸை பின் தொடர்ந்­துள்­ளனர். எனினும் அந்த பஸ்ஸை அவர்­களால் பின் தொடரமு­டி­யாமல் போயுள்­ளது.

இந் நிலையில் 119 அழைப்பு இலக்கம் ஊடாக கிடைத்த தக­வ­லுக்கு அமைய நிட்­டம்­புவ பொலிஸ் நிலை­யத்தின் போக்கு வரத்து பிரிவின் பொறுப்­ப­தி­காரி பொலிஸ் பரி­சோ­தகர் கிங்ஸ்லி ஹேரத் மற்­றொரு கான்ஸ்­ட­பி­ளுடன் மோட்டார் சைக்­கிளில் பஸ்ஸை துரத்திச் சென்­றுள்­ள­துடன் அதனை நிறுத்­து­மாறு சமிக்ஞை விடுத்­துள்­ளனர்.

எனினும் அந்த கடத்திச் செல்­லப்­பட்ட பஸ் நிறுத்­தப்­ப­டா­மையால் மோட்டார் சைக்­கிளை குறுக்­காக நிறுத்தி பஸ்ஸை நிறுத்த செய்துள்ளனர்.

இத­னை­ய­டுத்து பஸ்ஸை மீட்ட பொலிஸார் சந்­தேக நபரைக் கைது செய்­துள்­ளனர். தங்­கோ­விட்ட பகு­தியில் வைத்தே இவ்­வாறு பஸ் மீட்­கப்­பட்­டுள்­ளது.

இவ்­வாறு கைது செய்­யப்­பட்ட சந்­தேக நப­ரிடம் பொலிஸார் முன்­னெ­டுத்த ஆரம்ப கட்ட விசா­ர­ணையின் போது, குடும்­பத்­தா­ருடன் சுற்­றுலா பயணம் செய்­வ­தற்­காக பஸ்ஸை கடத்­தி­ய­தாக சந்­தேக நபர் தெரி­வித்­துள்ளார்.

எவ்­வா­றா­யினும் சந்­தேக நபர் மன நிலை பாதிக்­கப்­பட்­டவ­ராக இருக்க வேண்டும் என பொலிஸார் சந்­தே­கிக்­கின்­றனர். சந்­தேக நபர் பொலிஸ் கூண்டில் இருந்த போதும், புரி­யாத பாஷைகளால் பேசிக்கொண்டு விசில் அடித்த வண்ணம் இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

எவ்வாறாயினும் பஸ் வண்டி கடத்தப்பட்ட பிரதேசம் கம்பஹா பொலிஸ் பிரிவுக்குட்பட்டதால் பஸ்ஸும், சந்தேக நபரும் கம்பஹா பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

August 2019
M T W T F S S
« Jul    
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

Latest Comments

மிகப் பெரும் விஞ்ஞானிகள் , இவர்கள் நாசாவின் பணியாற்ற வேண்டியவர்கள் , ஆறறிவு அல்ல 12 அறிவு உடையவர்கள் , [...]

துப்பாக்கி உனக்கு ஏன் உன் சொந்த சகாக்களை கொல்லவா ? 1988 - 1996 வரை நீ செய்த [...]

50 வருடங்களுக்கு பின் தான் இந்தியாவுக்கு முடிந்திருக்கு. சீன எப்பவோ சாதித்து விட்ட்து. [...]

My vote for Mr. Gotabhaya Rajapaksa, he can only save our country. [...]

இறைவனின் துணையோடு நிலவை பிளந்த நபிக்கு அதே இறைவனின் துணையோடு ஒட்டவைக்க முடியாதா? ?? இந்த உலகத்தையே நாம்தான் படைத்தோம்னு சொல்லும் [...]

இலங்கை பத்திரிகைகள்

English News