ilakkiyainfo

ilakkiyainfo

சாவகச்சேரி பொலிஸாருக்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளி ஒருவர் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

சாவகச்சேரி பொலிஸாருக்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளி ஒருவர் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு
October 07
11:17 2017

 

யாழ்ப்பாணம் சாவகச்சேரி பொலிஸாருக்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளி ஒருவர் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

உணவு விடுதி ஒன்றின் உரிமையாளரான குறித்த முன்னாள் போராளியின் உணவு விடுதிக்குள் சாவகச்சேரி பொலிஸார் அத்துமீறி உள் நுளைந்து அட்டூளியம் புரிந்தமையை எதிர்த்தே இந்த முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தை சேர்ந்த ஐந்து பொலிஸார், கடந்த செவ்வாய்க்கிழமை சிவில் உடையில் சென்று குறித்த உணவு விடுதியில் மதுபானம் கேட்டுள்ளனர்.

ஆனாலும், அங்கிருந்த 70 வயதான ஊழியர் ஒருவர் அந்த நாளன்று மதுபானம் விற்பனை செய்வதில்லை என பொலிஸாரிடம் கூறியுள்ளார்.

இதனால் மதுபானம் வேண்டுமெனெக் கூறியவாறே குறித்த முதியவரைப் பொலிஸார் சரமாரியாகத்தாக்கியதோடு மட்டுமன்றி பொலிஸாரிடம் எதிர்த்துப் பேசியதற்காக அவரை கைதுசெய்து அடைத்துள்ளனர்.

அதுமட்டுமன்றி அங்கே களஞ்சிய அறையில் வைக்கப்பட்டிருந்த மதுபான போத்தல்களையும் அபகரித்துச் சென்றுள்ளனர்.

பின்னர் சட்டத்தரணி ஒருவரின் உதவியுடன், குறித்த உணவு விடுதியின் உரிமையாளர் முதியவரைப் பொலிஸ் பிணையில் விடுதலை செய்துள்ளார்.

மேலும் பொலிஸாரின் மூர்க்கத்தனமான தாக்குதலுக்கு இலக்கான குறித்த முதியவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடைய ஐந்து பொலிஸாருக்கும் எதிராக விடுதி உரிமையாளரான முன்னாள் போராளி, மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றைப் பதிவு செய்துள்ளார்.

ஆனாலும் குறித்த முறைப்பாட்டினை மீளப்பெற்றுக் கொள்ளுமாறு சாவகச்சேரி பொலிஸார் கோரி வருவதாக தெரிவித்த அவர், தான் ஒரு முன்னாள் போராளி என்பதனை காரணம் காட்டியே இவ்வாறு அச்சுறுத்தப்படுவதாகவும், இதற்கு முன்னரும் இரு தடவைகள் பொலிஸாரால் அச்சுறுத்தப்பட்டதாகவும் மேலும் கூறியுள்ளார்.



Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

August 2019
M T W T F S S
« Jul    
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

Latest Comments

மிகப் பெரும் விஞ்ஞானிகள் , இவர்கள் நாசாவின் பணியாற்ற வேண்டியவர்கள் , ஆறறிவு அல்ல 12 அறிவு உடையவர்கள் , [...]

துப்பாக்கி உனக்கு ஏன் உன் சொந்த சகாக்களை கொல்லவா ? 1988 - 1996 வரை நீ செய்த [...]

50 வருடங்களுக்கு பின் தான் இந்தியாவுக்கு முடிந்திருக்கு. சீன எப்பவோ சாதித்து விட்ட்து. [...]

My vote for Mr. Gotabhaya Rajapaksa, he can only save our country. [...]

இறைவனின் துணையோடு நிலவை பிளந்த நபிக்கு அதே இறைவனின் துணையோடு ஒட்டவைக்க முடியாதா? ?? இந்த உலகத்தையே நாம்தான் படைத்தோம்னு சொல்லும் [...]

இலங்கை பத்திரிகைகள்

English News