ilakkiyainfo

ilakkiyainfo

சிம்பு, ராதாரவி, வைரமுத்து, விஷால், பாலா! அரையாண்டில் தமிழ் சினிமா சந்தித்த பிரச்னைகள்

சிம்பு, ராதாரவி, வைரமுத்து, விஷால், பாலா! அரையாண்டில் தமிழ் சினிமா சந்தித்த பிரச்னைகள்
July 09
22:43 2019

2019-ன் அரையாண்டில் தமிழ் சினிமா சந்தித்த பிரச்னைகள்.

2019-ன் முதல் பாதி முடிந்திருக்கிறது. கடந்த ஆறு மாதங்களில் தமிழ் சினிமாக்களும், தமிழ் சினிமா துறையும் பல பிரச்னைகள் மற்றும் சர்ச்சைகளைச் சந்தித்துள்ளது. சில அவ்வப்போதே முடிந்தாலும், பல விவகாரங்கள் 2019-ம் ஆண்டின் இரண்டாம் பாதியிலும் தொடர்கிறது.

‘வாகை சூட வா’ பாடல் விவகாரம்

பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா. கடந்த ஆண்டு வெளியான ’96’ படத்துக்கு எழுதிய பாடல்களின் வெற்றி இவரை லைம்லைட்டுக்குக் கொண்டு வந்தது. கடந்த ஜனவரி மாதம் இவர் கவிஞர் வைரமுத்து மீது வைத்த புகார் திரையுலகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

கார்த்திக் நேத்தா - வைரமுத்து சிம்பு, ராதாரவி, வைரமுத்து, விஷால், பாலா! அரையாண்டில் தமிழ் சினிமா சந்தித்த பிரச்னைகள் சிம்பு, ராதாரவி, வைரமுத்து, விஷால், பாலா! அரையாண்டில் தமிழ் சினிமா சந்தித்த பிரச்னைகள் vikatan 2F2019 07 2Fa3f92a58 f2a9 45fc 9ece bc15e11c80d7 2Fjanuary issue
கார்த்திக் நேத்தா – வைரமுத்து

2011-ம் ஆண்டு ரிலீஸான ‘வாகை சூட வா’ படத்தில் சூப்பர் ஹிட்டான ’சரசர சாரக்காத்து’ பாடல் தான் எழுதியது என்றும், அந்தப் பாடலின் வரிகளில் மாற்றம் செய்துவிட்டு வைரமுத்து பயன்படுத்திக்கொண்டதாகவும் கார்த்திக் நேத்தா பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார்.

இந்த சர்ச்சை தீவிரமடைந்த பிறகு, ‘வாகை சூட வா’ படத்தின் இயக்குநர் சற்குணம், “பாடல் கம்போஸிங்கின்போது டம்மி வரிகளை மட்டுமே கார்த்திக் நேத்தா எழுதியிருந்தார்.

இது சினிமா பாடல் உருவாக்கத்தில் சகஜமான ஒன்று. இதில் சர்ச்சையாக்க ஏதுமில்லை. எனது அடுத்த படத்தில் இருவரும் இணைந்து பணியாற்றுவார்கள்” எனச் சொல்லி, பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

‘அண்டாவுல பால் ஊத்துங்க!’ – சிம்பு

“`வந்தா ராஜாவாதான் வருவேன்’ பட வெளியீட்டின்போது, படத்தை பிளாக் டிக்கெட்டில் பார்க்காமல், அந்தச் செலவில் பெற்றோர்களுக்குப் புதுத் துணி எடுத்து உங்கள் அன்பை வெளிப்படுத்துங்கள்” என ஒரு வீடியோவை சிம்பு வெளியிட, விளம்பரத்துக்காகத்தான் இதைச் செய்கிறார் எனக் கருத்துகள் எழுந்தன.

சிம்பு சிம்பு, ராதாரவி, வைரமுத்து, விஷால், பாலா! அரையாண்டில் தமிழ் சினிமா சந்தித்த பிரச்னைகள் சிம்பு, ராதாரவி, வைரமுத்து, விஷால், பாலா! அரையாண்டில் தமிழ் சினிமா சந்தித்த பிரச்னைகள் vikatan 2F2019 07 2F37a9d834 037e 428f 9b73 a84192917e60 2Fsimbu  1
சிம்பு

கடுப்பான சிம்பு, தன் ரசிகர்களின் பலத்தைக் காட்டுவதற்காக, “நமக்கே ரெண்டு மூணு ரசிகர்கள்தான் இருக்காங்க.

அவங்களால என்ன நடந்துடப் போகுது. அதனால, அந்த ரெண்டு மூணு பேருக்கு என்னோட அன்புக் கட்டளை இது, `வந்தா ராஜாவாதான் வருவேன்’ படத்துக்கு இதுவரை நீங்க வைக்காத அளவுக்கு பேனர் வைங்க, பால் பாக்கெட்ல ஊத்தாதீங்க.

அண்டாவுல கொண்டுவந்து ஊத்துங்க. எனக்குத்தான் யாரும் இல்லையே, நான் பெரிய ஆள் இல்லையே… இதெல்லாம் தப்புனு யாரும் சொல்லமாட்டாங்க.” என்று கோபமாகப் பேசினார்.

இளையராஜா நிகழ்ச்சியில் முறைகேடு

கடந்த பிப்ரவரி 2, 3 தேதிகளில் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் இசையமைப்பாளர் இளையராஜாவின் 75-வது பிறந்த நாளையொட்டி இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இளையராஜா சிம்பு, ராதாரவி, வைரமுத்து, விஷால், பாலா! அரையாண்டில் தமிழ் சினிமா சந்தித்த பிரச்னைகள் சிம்பு, ராதாரவி, வைரமுத்து, விஷால், பாலா! அரையாண்டில் தமிழ் சினிமா சந்தித்த பிரச்னைகள் vikatan 2F2019 07 2F8d283f85 4a0d 48dd 81ca fade8be7359a 2Filayaraaja 75
இளையராஜா

ஜனவரி மாதமே, “இளையராஜா 75 நிகழ்ச்சியை நடத்துவது தொடர்பாக செயற்குழு, பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றாமலும், பாராட்டு விழா எனக் கூறிவிட்டு, நிதி திரட்டும் நிகழ்ச்சியாக இதை நடத்துகின்றனர்” எனக் கூறி, நிகழ்ச்சிக்குத் தடை விதிக்க தயாரிப்பாளர்கள் சதீஷ்குமார் மற்றும் ராதாகிருஷ்ணன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

கடைசி நேரத்தில், இளையராஜா நிகழ்ச்சிக்கு தடைக் கோரியது பெரும் சர்சையாகப் பேசப்பட்டது. “தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்களுக்கு வீடு கட்டித்தர நிதி திரட்டும் நோக்கில் இளையராஜா நிகழ்ச்சி நடத்த வேண்டும் என 2016-ஆம் ஆண்டே முடிவு செய்யப்பட்டதுதான்” என விஷால் தரப்பு வாதிட்டதால், நிகழ்ச்சிக்குத் தடையில்லை எனக் கூறி நீதிபதி உத்தரவிட்டார்.

முன்னதாக, தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு துணைத் தலைவராக நியமிக்கப்பட்ட பார்த்திபன், இளையராஜா 75 நிகழ்ச்சி நடத்தும் விஷயத்தில் ஏற்பட்ட அதிருப்தியால் பதவி விலகினார்.

பாலாவை உதறிய ‘வர்மா’

தெலுங்கில் வெளிவந்த ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தை தமிழில் பாலா இயக்க, விக்ரம் மகன் துருவ் நடித்து`வர்மா’ என்று பெயரிடப்பட்டது.

இந்தப் படம் கடந்த பிப்ரவரி 14-ஆம் தேதி திரைக்கு வரவிருந்த நிலையில், பிப்ரவரி 7-ஆம் தேதி ‘ஒரிஜினலுக்கும் இதற்கும் தொடர்பில்லாமல், இயக்குநர் பாலா கதையில் மாற்றங்கள் செய்திருக்கிறார்.

அதனால், இப்படத்தை வெளியிட எங்களுக்கு விருப்பமில்லை.`வர்மா’ படத்துக்கு இனி பாலா இயக்குநர் இல்லை, துருவ்தான் படத்தின் நாயகனாக நடிப்பார். படத்தை வேறொருவர் இயக்குவார்.” எனத் தயாரிப்பு நிறுவனம் அறிக்கை வெளியிட்டது.

பாலாவும், “துருவ்வின் எதிர்கால நலன் கருதி, மேலும் பேச விரும்பவில்லை!” எனத் தனது அறிக்கையில் கூறியிருந்தார்.

`துருவ்வின் எதிர்கால நலன் கருதி மேலும் பேச விரும்பவில்லை!’ -'வர்மா' விவகாரத்தில் இயக்குநர் பாலா சிம்பு, ராதாரவி, வைரமுத்து, விஷால், பாலா! அரையாண்டில் தமிழ் சினிமா சந்தித்த பிரச்னைகள் சிம்பு, ராதாரவி, வைரமுத்து, விஷால், பாலா! அரையாண்டில் தமிழ் சினிமா சந்தித்த பிரச்னைகள் vikatan 2F2019 05 2F4527d0f4 0442 432f 9fc0 9dccb3420e66 2F149304 thumb
`துருவ்வின் எதிர்கால நலன் கருதி மேலும் பேச விரும்பவில்லை!’ -‘வர்மா’ விவகாரத்தில் இயக்குநர் பாலா

பிறகு, இந்தப் படம் மீண்டும் புதிதாக ஆரம்பிக்கப்பட்டு ‘ஆதித்யா வர்மா’ எனப் பெயரிடப்பட்டது. படத்தின் டிரெய்லரும் அண்மையில் வெளியானது.

தயாரிப்பாளர் சங்கத்துக்கு நோட்டீஸ்

சங்கங்களின் பதிவாளர் அலுவலகச் சட்டத்தின் (சொசைட்டீஸ் ரெஜிஸ்ட்ரேஷன் ஆக்ட்) கீழ் பதிவு செய்யப்பட்டு இயங்கிவரும் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் மீது புகார் தெரிவித்தார்கள், சில தயாரிப்பாளர்கள்.

தயாரிப்பாளர்கள் சங்கம் சிம்பு, ராதாரவி, வைரமுத்து, விஷால், பாலா! அரையாண்டில் தமிழ் சினிமா சந்தித்த பிரச்னைகள் சிம்பு, ராதாரவி, வைரமுத்து, விஷால், பாலா! அரையாண்டில் தமிழ் சினிமா சந்தித்த பிரச்னைகள் vikatan 2F2019 05 2F6142c308 f7aa 44a1 800e d4a830f2fd0a 2F86876 thumb
தயாரிப்பாளர்கள் சங்கம்

விதிமுறைகளை முறையாகக் கடைப்பிடிக்காதது, கணக்கு வழக்குகளை ஒழுங்காகப் பராமரிக்காதது உள்ளிட்ட புகார்கள் எழுந்ததைத் தொடர்ந்து, சங்கத் தலைவர் விஷால், செயலாளர் கதிரேசன், பொருளாளர் எஸ்.ஆர்.பிரபு உள்ளிட்டோர் இந்த நோட்டீஸுக்கு 30 நாள்களில் பதிலளிக்க வேண்டும் என்று அரசு தெரிவித்தது.

விஷால் அணி தந்த பதில் உகந்ததாக இல்லை. அதனால், விஷால் தலைமையிலான நிர்வாகத்தைக் கலைத்து சங்கத்தை நிர்வகிக்க மாவட்டப் பதிவாளர் அந்தஸ்தில் இருக்கும் சேகர் என்ற சிறப்பு அதிகாரியை நியமித்து உத்தரவிட்டது, தமிழக அரசு.

`பாரதிராஜா தலைமையில் தற்காலிகக் குழு' - தயாரிப்பாளர் சங்கச் செயல்பாடுகளை முறைப்படுத்த அரசு முடிவு!  சிம்பு, ராதாரவி, வைரமுத்து, விஷால், பாலா! அரையாண்டில் தமிழ் சினிமா சந்தித்த பிரச்னைகள் சிம்பு, ராதாரவி, வைரமுத்து, விஷால், பாலா! அரையாண்டில் தமிழ் சினிமா சந்தித்த பிரச்னைகள் vikatan 2F2019 07 2F43a5a50b f04c 4708 b19a 5462cedbe748 2Fvikatan 2019 05 3dde52b5 a95f 4668 a567 120a998ffbd7 ad hoc 18289
`பாரதிராஜா தலைமையில் தற்காலிகக் குழு’ – தயாரிப்பாளர் சங்கச் செயல்பாடுகளை முறைப்படுத்த அரசு முடிவு!

தனி அலுவலர் சேகருக்கு உதவியாக, அரசு சார்பில் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு ADHOC கமிட்டி பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்.

அதில், பாரதிராஜா, சத்யஜோதி தியாகராஜன், எஸ்.வி.சேகர், ஜே.சதீஷ்குமார், கே.ராஜன், டி.சிவா, ராதாகிருஷ்ணன், துரைராஜ், சிவசக்தி பாண்டியன் உள்ளிட்ட ஒன்பது நபர்கள் இடம்பெற்றனர்.

தற்போது, இந்த ஆலோசனைக் குழு தயாரிப்பாளர் சங்கப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. தனி அலுவலர் நியமனத்தை எதிர்த்து விஷால் தொடுத்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது.

நயன்தாரா பற்றி ராதாரவி சர்ச்சைப் பேச்சு

நடிகர் ராதாரவி, ‘கொலையுதிர்காலம்’ டிரெய்லர் வெளியீட்டு விழாவில் நடிகை நயன்தாராவைப் பற்றி வைத்த விமர்சனம் மற்றும் அந்த நிகழ்ச்சியில் அவர் பேசிய விதம் பலத்த சர்ச்சையைச் சந்தித்தது.

விக்னேஷ் சிவன், வரலட்சுமி, ராதிகா உள்ளிட்ட பல பிரபலங்கள் ராதாரவியைக் கண்டிக்க, தி.மு.க-விலிருந்து ராதாரவி இடைநீக்கம் செய்யப்பட்ட நிலைக்குச் சென்றது.

ராதாரவி  சிம்பு, ராதாரவி, வைரமுத்து, விஷால், பாலா! அரையாண்டில் தமிழ் சினிமா சந்தித்த பிரச்னைகள் சிம்பு, ராதாரவி, வைரமுத்து, விஷால், பாலா! அரையாண்டில் தமிழ் சினிமா சந்தித்த பிரச்னைகள் vikatan 2F2019 05 2F1fbffb34 e6ab 4fe1 94ec d9acd35cf9b9 2F54556 thumb
ராதாரவி

ராதாரவிக்குப் பதில் சொல்லும் விதமாக நயன்தாரா வெளியிட்ட அறிக்கையும் பரபரப்பாகப் பேசப்பட்டது. அதைத் தொடர்ந்து, தானே கட்சியிலிருந்து விலகிக்கொள்வதாக அறிவித்த ராதாரவி, பிறகு முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுக-வில் இணைந்தார்.

ஒன்றன்பின் ஒன்றாகக் காட்டுத்தீ போலப் பல விளைவுகளை ஏற்படுத்த அடிப்படையாக அமைந்தது, `கொலையுதிர் காலம்’ படம்தான். இப்படம் டைட்டில் பிரச்னையைச் சந்தித்து, ஒருவழியாக விரைவில் வெளியாகவிருக்கிறது.

இந்த இந்த நடிகருக்கு இத்தனை சதவிகிதம்!

தமிழ்நாடு திரையரங்க மற்றும் மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் சங்கம், எந்தெந்த கதாநாயகர்களின் படத்துக்கு எவ்வளவு விகிதாசாரத்தில் விநியோகஸ்தர்களுடன் வணிகம் பேச வேண்டும் எனத் திரையரங்க உரிமையாளர்களுக்கு ஒரு கடிதத்தை அனுப்பியது.

தமிழ்நாடு திரையரங்கம் மற்றும் மல்டிபிளக்ஸ் சிம்பு, ராதாரவி, வைரமுத்து, விஷால், பாலா! அரையாண்டில் தமிழ் சினிமா சந்தித்த பிரச்னைகள் சிம்பு, ராதாரவி, வைரமுத்து, விஷால், பாலா! அரையாண்டில் தமிழ் சினிமா சந்தித்த பிரச்னைகள் vikatan 2F2019 07 2Ff1ea940f a2e1 4325 ac69 65f717bf4f3e 2Factors
தமிழ்நாடு திரையரங்கம் மற்றும் மல்டிபிளக்ஸ்

இதன்படி, முதல் வாரத்தில் ‘A’ சென்டர் தியேட்டர்களில் ரஜினி, அஜித், விஜய் படங்களுக்கு ஒரு டிக்கெட்டில் 60 சதவிகித தொகை, சூர்யா, ஜெயம் ரவி, தனுஷ், சிம்பு, சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி ஆகியோருக்கு 55 சதவிகித தொகை விநியோகஸ்தர்களுக்குத் தரவேண்டும்.

மீதமுள்ள சதவிகிதம் திரையரங்குக்குப் பிரிக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்திருந்தது. இதற்குப் பாரதிராஜாவும், தயாரிப்பாளர் சங்கத்தின் ஆலோசனைக் குழுவும் கண்டனம் தெரிவித்தது.

அட்லீ கதை விவகாரம்

BIGIL சிம்பு, ராதாரவி, வைரமுத்து, விஷால், பாலா! அரையாண்டில் தமிழ் சினிமா சந்தித்த பிரச்னைகள் சிம்பு, ராதாரவி, வைரமுத்து, விஷால், பாலா! அரையாண்டில் தமிழ் சினிமா சந்தித்த பிரச்னைகள் vikatan 2F2019 06 2Faf691bcf 6197 46b4 9af5 ab382b0b0cfc 2FWhatsApp Image 2019 06 21 at 6 02 31 PM
BIGIL

விஜய் – அட்லீ கூட்டணி மீண்டும் ‘பிகில்’ படத்தில் இணைந்துள்ளது. பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாகக் கொண்டு உருவாகும் இப்படத்தில், விஜய் கால்பந்து பயிற்சியாளராக நடிக்கிறார்.

இந்தப் படத்தின் கதை தன்னுடையது என்று கே.பி.செல்வா என்பவர் புகார் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். விஜய்யின் ‘சர்கார்’ படத்துக்கும் இதுபோல் ஒரு பிரச்னை வந்தது குறிப்பிடத்தக்கது.

நடிகர் சங்கத் தேர்தல்

நடிகர் சங்கத் தேர்த்ல் சிம்பு, ராதாரவி, வைரமுத்து, விஷால், பாலா! அரையாண்டில் தமிழ் சினிமா சந்தித்த பிரச்னைகள் சிம்பு, ராதாரவி, வைரமுத்து, விஷால், பாலா! அரையாண்டில் தமிழ் சினிமா சந்தித்த பிரச்னைகள் vikatan 2F2019 07 2F131a449e e425 48e0 abc7 977a1d33ceac 2Fpandavar ani
நடிகர் சங்கத் தேர்த்ல்

தயாரிப்பாளர் சங்கப் பிரச்னைக்கு முடிவுகள் கிடைக்காத நிலையில், நடிகர் சங்கத் தேர்தல் வந்துவிட்டது. நாசர், விஷால், கார்த்தி ஆகியோர் அங்கம் வகிக்கும் ‘பாண்டவர் அணி’யின் செயல்பாட்டுக்கு ஒருமித்த ஆதரவு கிடைக்கும் என எதிர்பார்த்த நிலையில், சங்கம் இரண்டாக உடைந்தது.

பாக்யராஜ், ஐசரி கணேஷ், சங்கீதா, உதயா, குட்டி பத்மினி, பிரசாந்த் ஆகியோர் அடங்கிய ‘சுவாமி சங்கரதாஸ் அணி’ உருவாகி, இரு அணியும் தேர்தலைச் சந்தித்தன.

நடிகர் சங்கத் தேர்த்ல் சிம்பு, ராதாரவி, வைரமுத்து, விஷால், பாலா! அரையாண்டில் தமிழ் சினிமா சந்தித்த பிரச்னைகள் சிம்பு, ராதாரவி, வைரமுத்து, விஷால், பாலா! அரையாண்டில் தமிழ் சினிமா சந்தித்த பிரச்னைகள் vikatan 2F2019 07 2F3079b588 5341 4503 aa01 d50b19d4b00d 2Fkamal sankaradass team
நடிகர் சங்கத் தேர்த்ல்

இடமாற்றம், பாதுகாப்பு விவகாரம் எனப் பல சிக்கல்கள் தொடர்ந்தன. தேர்தலை நிறுத்தவேண்டி ஐசரி கணேஷ் பல வழக்குகளை ஏவியதாகச் சொல்லப்பட்டது.

ஒருவழியாக நடந்து முடிந்த நடிகர் சங்கத் தேர்தலில் 80% வாக்குகள் பதிவாகின. நேற்று நடந்த வாக்கு எண்ணிக்கை தொடர்பான வழக்கு வெள்ளி வரை தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

October 2019
M T W T F S S
« Sep    
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

Latest Comments

இது தான் யாழ்ப்பாணிகள், வன்னி காட்டு மிராண்டிகளின் கலாச்சாரம் , முன்பு மறைமுகமாக செய்தார்கள் , [...]

மிகப் பெரும் விஞ்ஞானிகள் , இவர்கள் நாசாவின் பணியாற்ற வேண்டியவர்கள் , ஆறறிவு அல்ல 12 அறிவு உடையவர்கள் , [...]

துப்பாக்கி உனக்கு ஏன் உன் சொந்த சகாக்களை கொல்லவா ? 1988 - 1996 வரை நீ செய்த [...]

50 வருடங்களுக்கு பின் தான் இந்தியாவுக்கு முடிந்திருக்கு. சீன எப்பவோ சாதித்து விட்ட்து. [...]

My vote for Mr. Gotabhaya Rajapaksa, he can only save our country. [...]

இலங்கை பத்திரிகைகள்

English News