ilakkiyainfo

ilakkiyainfo

சீன ஆக்கிரமிப்பு காஷ்மீரின் தற்போதைய நிலை என்ன?

சீன ஆக்கிரமிப்பு காஷ்மீரின் தற்போதைய நிலை என்ன?
August 14
01:01 2019

அக்சாய் சின்னும், ஜம்மு காஷ்மீரின் ஒருபகுதிதான். காஷ்மீர் என்றால் அது அக்சாய் சின், பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீர் அனைத்தும் உட்பட்டதுதான்.

உாயெ  சீன ஆக்கிரமிப்பு காஷ்மீரின் தற்போதைய நிலை என்ன?

ஜம்மு – காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, ஜம்மு – காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய இரண்டு யூனியன் பிரதேசங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

அப்பகுதியில் பதற்றம் நிலவிவருகிறது.

“சீன ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (அக்சய் சின்) உள்ள இந்தியாவின் பகுதிகள் எவை? அங்குள்ள மக்களின் வரலாறு மற்றும் குடியுரிமை நிலை என்ன?”

சுமார் 69 ஆண்டுகளாக, தீர்க்க முடியாமல் இருக்கும் இந்திய – சீன எல்லைப் பிரச்னையின் மையமாக இருப்பது காஷ்மீரின் மேற்குப் பகுதியில் இருக்கும் அக்சாய் சின். சீனாவின் நம்பகமற்ற தன்மை, இந்திய ஆட்சியாளர்களின் தொடர் தவறுகளால், இப்பிரச்னை இன்றுவரை இழுபறியாகவே உள்ளது.

அக்சாய் சின், காரகோரம், இந்துகுஷ் மலைத்தொடர்களை இணைக்கும் பாமிர் மலையில், 17,000 அடி உயரத்திலிருக்கும் ஒரு வறண்ட குளிர் பிரதேசம்.

மனித நடமாட்டம் இல்லாத அத்துவானம். அதன் பரவலான பகுதிகள் தரிசாக இருப்பதால், மக்கள் வாழும் கிராமங்கள் எதுவும் இல்லை. பூர்வகுடிகளும் கிடையாது.
ளளளளளளளளளள  சீன ஆக்கிரமிப்பு காஷ்மீரின் தற்போதைய நிலை என்ன?இந்திய – சீன எல்லை

சில பகுதிகள் மேய்ச்சல் நிலங்களாக இருப்பதால், இருநாட்டைச் சேர்ந்த நாடோடிகளும் ஆடு மேய்ப்பவர்களும் இப்பிரதேசத்தில் நடமாடுகின்றனர். நிரந்தரமாகக் குடியிருப்பவர்கள் சீன ராணுவத்தினர் மட்டுமே.

அக்சாய் சின்னின், புவி அமைப்புதான் அதன் முக்கியத்துவத்திற்குக் காரணம். அக்சாய் சின், இந்தியாவுக்கு மத்திய ஆசியாவுக்கான வாசல். சீனாவுக்கு மூலோபாயமான (Strategy) பகுதி.

மனிதன் வாழத் தகுதியற்ற இப்பிரதேசத்தைக் கைப்பற்றும் போராட்டம் 1800-களிலேயே தொடங்கிவிட்டது. கடந்த 1840-ல் சீக்கியர்கள் இப்பகுதியைக் கைப்பற்ற படையெடுத்தனர்.

திபெத், சீனாவின் உதவியுடன், சீக்கியப் படைகளைத் தோற்கடித்து விரட்டியது. பின்னர், சீக்கிய அரசு வீழ்ந்து பிரிட்டன் கை ஓங்கியபோது, பிரிட்டன் அக்சாய் சின் மீது கவனம் செலுத்தியது.

இப்பகுதியில் ரஷ்யா காலூன்றுவதைத் தடுக்க, திபெத்துடன் சில ஒப்பந்தங்களைச் செய்துகொண்டது பிரிட்டன். கடந்த 1842-ல் ஏற்பட்ட லடாக்-திபெத் ஒப்பந்தத்தில்கூட அக்சாய் சின் பற்றி இரு நாடுகளும் குறிப்பிடவில்லை.

பின்னர் 1913-ல் பிரிட்டன் முன்னெடுத்த இந்திய-சீனா-திபெத் இடையேயான முதல் சிம்லா ஒப்பந்தத்தின் ஷரத்துகளை சீனாதான் முன்மொழிந்தது.

கடைசியில், இந்த ஒப்பந்தத்தில் தன் அலுவலக முத்திரையைப் பதிக்க மறுத்துவிட்டது சீனா. மற்ற இருநாடுகளும், சீனா ஒரு பார்வையாளராகக் கலந்துகொண்டதாக நினைத்து, அதன்செயலை பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை.

காஷ்மீர் அரச பதிவேடுகள், ஆவணங்கள் அனைத்தும் சீன எல்லையான சாங் சென்மோ பள்ளத்தாக்குவரை காஷ்மீர் அரசரின் கட்டுப்பாட்டுக்குள் இருந்ததாகவே தெரிவிக்கின்றன.

சுதந்திரத்திற்குப்பின், இந்தியாவுடன் அதிகாரபூர்வமாக காஷ்மீர் இணைந்தபோது, அக்சார் சின்னும் இணைந்தது.

அப்போது, சீனா பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. ஆனால், பிரிட்டன் உருவாக்கிய இந்திய-சீன எல்லைக்கோடான மெக்மோகன் கோட்டினை மட்டும் சீனா ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டது. திபெத் எல்லையான லனக் லா பகுதிவரை இந்தியாவின் கட்டுப்பாட்டில் இருந்தது.

குளிர்காலத்தில் இந்திய ராணுவத்தின் கண்காணிப்பு குறைவாக இருந்ததைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட சீனா, 1952-ல் லனக் லா பகுதியிலிருந்து சிங்ஜியாங் பகுதிவரை அக்சாய் சின்னின் குறுக்கே சாலைபோடத் தொடங்கியது.

இதுகுறித்த தகவல் வந்தபோது, சீனாவை முழுமையாக நம்பிய நேரு, அத்தகவல்களை உதாசீனப்படுத்தினார். சீன ஆக்கிரமிப்பிலிருந்து திபெத்தைக் காக்க அக்சாய் சின் இந்தியாவுக்கு மிகவும் அவசியம் எனத் தெரிந்தும், இந்த விஷயத்தில் நேரு அசட்டையாக இருந்தார்.

சாலைப்பணி முடிந்தவுடன், அக்சாய் சின் தன்னுடையது என அறிவித்தது சீனா. ஏற்கெனவே, திபெத் கலவரத்திற்கு இந்தியாவே காரணம் எனக் குற்றம்சாட்டியதால், இரு நாடுகளிடையே உரசல்கள் அதிகரித்திருந்தன.

காஷ்மீர் விவகாரத்தில், பாகிஸ்தான் தனித்துவிடப்பட்டதைப்போல, அப்போது திபெத் விவகாரத்தில் இந்தியாவின் பெயரைக் கெடுக்க நினைத்த சீனாவின் முயற்சியும் தோல்வியில் முடிந்தது. இந்தியாவுடன் சுமுகமாக நடப்பதாக ரஷ்யாவிடம் கூறிய சீனா, சொன்னபடி நடக்கவில்லை.

திபெத் விவகாரத்தில் தலையிடுவதாகக்கூறி 1962-ல் இந்தியாமீது போர் தொடுத்து, அக்சாய் சின்னைத் தனது முழுக்கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட்டது, சீனா. ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் சீனா நிரந்தர உறுப்பினராவதற்கு உதவிய நேருவுக்கு, சீனா செய்த நம்பிக்கை துரோகத்திற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

நெசர  சீன ஆக்கிரமிப்பு காஷ்மீரின் தற்போதைய நிலை என்ன?

ஆப்கானிஸ்தான், தஜிகிஸ்தான், கசகஸ்தான், ரஷ்யா, மங்கோலியா, மியான்மர், நேபாள், பாகிஸ்தான், லாவோஸ், வட கொரியா, வியட்நாம் நாடுகளுடனான எல்லைப் பிரச்னைகளுக்கு 1963-லிருந்து 2008-க்குள் சுமுகத் தீர்வு கண்ட சீனா, இந்தியாவுடனான எல்லைப் பிரச்னையை மட்டும் தீர்க்காமல்வைத்திருக்கிறது. இதற்கு, இந்திய அரசியல் தலைவர்களும் காரணம்.

நேரு காலத்திலிருந்து, மெக் மோகன் எல்லைக்கோட்டை மதிக்க வேண்டும் என்பது இந்தியாவின் நிலைப்பாடு.

1960-களில் சீன அதிபர் சூ என் லாயும் மெக்மோகன் எல்லைக்கோட்டை ஏற்றுக்கொள்வதாகக் கூறினார்.

இருபது ஆண்டுகள் கழித்து, சீன அதிபர் டெங் சியாபிங்கும் 1980-களில் அப்போதைய வெளியுறவுத் துறை அமைச்சர் வாஜ்பாயிடம் அதே கருத்தை மீண்டும் வலியுறுத்தினார்.

அக்சாய் சின்னுக்காக சீனா நடத்திய நாடகம்தான் மெக்மோகன் கோடு பிரச்னை என்பது பின்னர்தான் தெரியவந்தது.
indian-and-chinese-soldiers-celebrate-new-year_7aadc2be-175e-11e9-a284-061f95944840  சீன ஆக்கிரமிப்பு காஷ்மீரின் தற்போதைய நிலை என்ன? indian and chinese soldiers celebrate new year 7aadc2be 175e 11e9 a284 061f95944840

கடந்த 1960-ல் சீன அதிபர் சூ என் லாய் இந்தியா வந்தபோது, ‘அக்சாய் சின் குறுக்கே செல்லும் நெடுஞ்சாலையை (தற்போது திபெத்-சிங்ஜியாங்கை இணைக்கும் சீன நெடுஞ்சாலை 219) இந்தியா ஏற்றுக்கொண்டால், நாங்கள் மெக் மோகன் எல்லைக்கோட்டை ஏற்றுக்கொள்கிறோம்’ என்றார்.

எல்லைப்பிரச்னையில் தீர்வுகாண, 1962-க்கு முன் மேற்குப் பகுதியில் சில சலுகைகளைக் கேட்டது சீனா. திபெத்தைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த பின், 1980-களில் காஷ்மீரின் கிழக்குப் பகுதிகளை விட்டுத்தரக் கோரியது.

அமைதிப் பேச்சுவார்த்தை நடக்கும்போதே, பாகிஸ்தான், பயங்கரவாதத்தைத் தூண்டிவிடுவதைப்போல, சீனாவும் பேச்சுவார்த்தைக்கிடையே எல்லை ஊடுருவலைத் தீவிரப்படுத்தியது. கடந்த 1980-லிருந்து 2008 வரை லடாக் பகுதியை சீனா தொடர்ந்து ஆக்கிரமித்துவருகிறது.

“இதுகுறித்து, பிரதமர் அலுவலகம், வெளியுறவுத் துறைக்கெல்லாம் நன்கு தெரிந்தும் கண்டுகொள்ளவில்லை” என்கிறார், சீனாவுக்கான முன்னாள் இந்திய தூதர் ஸ்டோப்டன்.

சிந்து நதியின் மேற்குக் கரைவரை இந்தியாவைத் தள்ளிவிட்ட சீனா, இப்போது பேச்சுவார்த்தை என்ற பெயரில் மேலும் புதிய இடங்களை அபகரிக்கப் பார்க்கிறது.

d2467df0996cacc0751cff0901576647  சீன ஆக்கிரமிப்பு காஷ்மீரின் தற்போதைய நிலை என்ன? d2467df0996cacc0751cff0901576647

அக்சாய் சின்னை ஆக்கிரமித்தபோதே சீனாவைத் தட்டிக்கேட்காததால், சீனா அருணாசல பிரதேசத்தின்மீது சொந்தம் கொண்டாடத் தொடங்கியது.

அருணாசல பிரதேசத்தில் இருக்கும் தவாங் பகுதியைக் கேட்கும் அளவுக்குத் துணிந்தது. ஒரு காலகட்டத்தில், ‘அக்சாய் சின் வேண்டுமென்றால், தவாங்கை விட்டுக்கொடு’ என இந்தியாவை நிர்பந்தித்தது. தவாங் பௌத்தர்களின் புனிதத்தலம். இந்தியா அதன் கோரிக்கையை நிராகரித்தது.

முதலில் ஆள் நடமாட்டமில்லாத இந்தியப் பகுதிகளை நாடோடிகள் மூலம் சீனா நோட்டமிடும். ஏனெனில், நாடோடிகளை விரட்டவோ, துன்புறுத்தவோ கூடாது என நம் ராணுவத்துக்கு உத்தரவிட்டிருப்பதால், அதை சீனா தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டது.

நமது ராணுவ நடவடிக்கைகளை, நாடோடிகள் மூலம் கண்காணிக்கும். பின்னர் சீன ராணுவத்தினர் அங்கே நுழைந்து, ஆக்கிரமித்து ராணுவ முகாம் அமைப்பார்கள். பின்னர் வெளியேற மறுப்பார்கள். டோக்லாம் பகுதியிலும் இதே தந்திரத்தைப் பயன்படுத்தி ஆக்கிரமிக்க முயன்றார்கள். ஆனால் அது நடக்கவில்லை.
Jammu-Kashmir-Map-1 (1)  சீன ஆக்கிரமிப்பு காஷ்மீரின் தற்போதைய நிலை என்ன? Jammu Kashmir Map 1 1

சுமார் 68 வருடங்கள் கழிந்தும் இப்பிரச்னை இழுபறியாகவே இருப்பதற்கு முக்கியக் காரணங்கள், சீனாவின் முன்பின் முரணான பேச்சுகள், நம்பவைத்து கழுத்தறுக்கும் தந்திரம், தனது அரசியல், ராணுவத் தேவைகளுக்கேற்ப தன் நிலைப்பாட்டை அடிக்கடி மாற்றிக்கொள்ளும் குணம்தான்.

இதுவரை ஐந்துமுறை ஒப்பந்தங்கள் கையொப்பமாகியுள்ளன. ஆனாலும் தீடீர் தாக்குதல்கள், ஆக்கிரமிப்புகள், ஊடுருவல்கள், அத்துமீறல்கள் மற்றும் வன்முறைகளை சீனா இன்றுவரை நிறுத்தவில்லை.

தற்போதுகூட இந்திய இறையாண்மையைக் காலில்போட்டு மிதித்துவிட்டு, பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீர் பகுதியில் பட்டுப்பாதை அமைக்கத் திட்டமிட்டுள்ளது.

அக்சார் சின்னுக்காக, சீனா, காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை இழந்த விவகாரத்தில் தனது பட்டுப்பாதை கனவுத் திட்டத்திற்கு உதவும் பாகிஸ்தானைக்கூடக் கைகழுவி விட்டது. லடாக் யூனியன் பிரதேசமானதை மட்டும் எதிர்த்துவிட்டு, அமைதியாக இருக்கிறது.

Atal Bihari Vajpayee 600  சீன ஆக்கிரமிப்பு காஷ்மீரின் தற்போதைய நிலை என்ன? Atal Bihari Vajpayee 600

அதனால்தான் வாஜ்பாய் பிரதமரானவுடன் சீனாவை எச்சரிக்கையுடன் அணுகினார். “சீனாவின் பெயரைக் குறிப்பிடாமல், பாகிஸ்தானைத் தவிர ஒரு மூன்றாவது நாடு ஜம்மு-காஷ்மீரின் ஒரு பகுதியை அதன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாகவும், காஷ்மீர் சிக்கலைத் தீர்ப்பதற்கான பேச்சுவார்த்தைகளின்போது, பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீருடன் சீனா ஆக்கிரமிப்பின்கீழ் உள்ள பகுதிகளும் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படும்” என வாஜ்பாய் சூசகமாக எச்சரித்தார். அதுவும் குடியரசுத்தலைவர் கே.ஆர்.நாராயணன் சீனா செல்வதற்குச் சிலநாள் முன்னர் இந்த அறிக்கையை வெளியிட்டார்.

தற்போது, வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் சீனா செல்வதற்குமுன், உள்துறை அமைச்சர் அமித் ஷா, நாடாளுமன்றத்தில், “அக்சாய் சின்னும், ஜம்மு காஷ்மீரின் ஒருபகுதிதான்.

காஷ்மீர் என்றால் அது அக்சாய் சின், பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீர் அனைத்தும் உட்பட்டதுதான். அதற்காக என் உயிரையும் கொடுப்பேன்” என முழங்கியிருக்கிறார்.

_107283883_1fdcc208-c7ea-4e5f-82b8-29e0628277c7  சீன ஆக்கிரமிப்பு காஷ்மீரின் தற்போதைய நிலை என்ன? 107283883 1fdcc208 c7ea 4e5f 82b8 29e0628277c7இந்தியாவுக்குச் சீனா அதிக நெருக்கடி கொடுக்கும்பட்சத்தில், இந்தோ-சீனா உறவுகுலைந்து, இந்தியா அமெரிக்கா, ஜப்பானுடன் நெருக்கமாகும் வாய்ப்பு அதிகரிக்கும்.

சீனா, இந்தியாவின் தலையில் (காஷ்மீர்) கைவைத்ததால், இந்தியா, சீனாவை அதன் காலில் (வியட்நாம் தென் சீனக்கடல்) தாக்குகிறது. அதர்மத்தை அதர்மத்தால்தானே வெல்ல முடியும்..!

Jammu-Kashmir-As-it-is  சீன ஆக்கிரமிப்பு காஷ்மீரின் தற்போதைய நிலை என்ன? Jammu Kashmir As it is

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

September 2019
M T W T F S S
« Aug    
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

Latest Comments

காலம் கடந்து சொல்ல படும் எல்லோருக்கும் அறிந்த ரகசியம் , உலக பயங்கரவாதிகளின் தலைவன் அமெரிக்கா [...]

Jey

Losliya is 23 yrs old. Not a kid anymore. She has the right to live [...]

ராஜபக்சேக்கள் சொன்னால் அதை செய்யும் தீரர்கள், 2007ல் ஒரு ஐரோப்பிய நாட்டில் அவர்களை சந்தித்த போது [...]

இது தான் யாழ்ப்பாணிகள், வன்னி காட்டு மிராண்டிகளின் கலாச்சாரம் , முன்பு மறைமுகமாக செய்தார்கள் , [...]

மிகப் பெரும் விஞ்ஞானிகள் , இவர்கள் நாசாவின் பணியாற்ற வேண்டியவர்கள் , ஆறறிவு அல்ல 12 அறிவு உடையவர்கள் , [...]

இலங்கை பத்திரிகைகள்

English News