ilakkiyainfo

ilakkiyainfo

சுவாமிநாராயண் அக்ஷர்தாம் கோயில் (படங்கள், வீடியோ)

சுவாமிநாராயண் அக்ஷர்தாம் கோயில் (படங்கள், வீடியோ)
September 05
01:05 2014
உலகமே இந்தியக் கட்டிடக்கலையைப் பார்த்து பிரமித்துக்கிடக்கிறது. அதிலும் இந்தியாவில் கட்டப்பட்டுள்ள தொன்மையான கோயில்கள் கட்டிடக்கலையின் உன்னத சாட்சியங்களாக இன்று நம்மிடையே உள்ளன. ஆனால் நிகழ்காலத்தில் இவற்றை விஞ்சும் விதமாக கோயில்களோ, வேறு சில கட்டிடங்களோ வெகுநாட்கள் இந்தியாவில் தோன்றாமல் இருந்தன.

_13528760024 சுவாமிநாராயண் அக்ஷர்தாம் கோயில் (படங்கள், வீடியோ) 13528760024அந்தக் குறையை போக்கும் விதமாக, பாரம்பரிய கோயில்களோடு போட்டிபோடக்கூடிய நவீன படைப்பாக சுவாமிநாராயண் அக்ஷர்தாம் கோயில் கட்டப்பட்டுள்ளது. சுவாமிநாராயண் அக்ஷர்தாம் கோயில் டெல்லி பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து 25 கி.மீ தொலைவிலும், ரயில் நிலையத்திலிருந்து 9 கி.மீ தூரத்திலும் தலைநகர் டெல்லியில், யமுனா ஆற்றங்கரையில் அமைந்துள்ளது.


aaaaa சுவாமிநாராயண் அக்ஷர்தாம் கோயில் (படங்கள், வீடியோ) aaaaa

சுவாமிநாராயண்
18-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இந்திய வைஷ்ணவ ஞானி சுவாமிநாராயண் அவர்களின் நினைவாக சுவாமிநாராயண் அக்ஷர்தாம் கோயில் கட்டப்பட்டுயள்ளது.
748px-Akshardham_airpano சுவாமிநாராயண் அக்ஷர்தாம் கோயில் (படங்கள், வீடியோ) 748px Akshardham airpano
11000 கட்டிடக்கலைஞர்கள், 5 ஆண்டுகள்!
2005-ஆம் ஆண்டு திறக்கப்பட்ட சுவாமிநாராயண் அக்ஷர்தாம் கோயிலைக் கட்டி முடிக்க மொத்தம் 5 ஆண்டுகள் ஆகியுள்ளது. இதன் கட்டுமான பணியில் 11000 கட்டிடக்கலைஞர்கள் பங்கேற்றுள்ளனர்.

New_Delhi_Temple சுவாமிநாராயண் அக்ஷர்தாம் கோயில் (படங்கள், வீடியோ) New Delhi Temple

நினைவுச்சின்னம்
அக்ஷர்தாம் கோயில் வளாகத்தின் மையத்தில் அமைந்துள்ள முதன்மை நினைவுச்சின்னம் 141-அடிகள் (43 மீ) உயரம், 316-அடிகள் (96 மீ) அகலம் மற்றும் 370-அடிகள் (110 மீ) நீளம் கொண்டது.

அதோடு இந்த நினைவுச்சின்னத்தில் 234 அலங்காரமாகச் செதுக்கப்பட்ட தூண்கள், ஒன்பது குவிமாடங்கள், இந்துசமயத்தின் சாதுக்கள், பக்தர்கள், ஆச்சாரியார்களின் 20,000 மூர்த்திகளின் சிலைகள் ஆகியவை அமைந்துள்ளன. மேலும் மத்திய குவிமாடத்துக்குக் கீழாக 11-அடிகள் (3.4 மீ) உயரத்துடன் சுவாமிநாராயணன் சிலை நிறுவப்பட்டுள்ளது. இந்த நினைவுச்சின்னத்திடையே சீதை-ராமன், ராதா-கிருஷ்ணன், சிவன்-பார்வதி, இலட்சுமி-நராயணன் போன்ற பிற இந்து தெய்வங்களின் சிலைகளையும் பயணிகள் காணலாம்.

31-1406788587-redstones சுவாமிநாராயண் அக்ஷர்தாம் கோயில் (படங்கள், வீடியோ) 31 1406788587 redstones

இளஞ்சிவப்பு மணற்பாறைகள்
ராஜஸ்தான் இளஞ்சிவப்பு மணற்பாறைகள் மற்றும் வெள்ளை சலவைக்கல் இரண்டையும் பயன்படுத்தி கட்டப்பட்டுள்ள இந்த கோயிலில் உலோகக்கட்டமைப்புகளோ, கான்கிரீட் கலவையோ பயன்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.31-1406788665-sahajanath சுவாமிநாராயண் அக்ஷர்தாம் கோயில் (படங்கள், வீடியோ) 31 1406788665 sahajanath
சஹஜாநாத் பிரதர்ஷன்
கோயில் வளாகத்தில் உள்ள ‘சஹஜாநாத் பிரதர்ஷன்’ எனும் கூடத்தில் இயந்திரபொம்மைகள், தத்ரூப காட்சி மாதிரிகள் போன்றவற்றை பயன்படுத்தி ஸ்வாமிநாராயணனின் வரலாறு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. உலகசமாதானம், ஒற்றுமை, கருணை, தொண்டு போன்ற மானுட அம்சங்களை வலியுறுத்துவதுடன் ஒப்பற்ற மஹாசக்தியை முன்னிலைப்படுத்துவதாகவும் இந்த சித்தரிப்புகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.31-1406788314-kalyanayatra சுவாமிநாராயண் அக்ஷர்தாம் கோயில் (படங்கள், வீடியோ) 31 1406788314 kalyanayatra
நீலகண்ட கல்யாண யாத்ரா
இந்த கோயில் வளாகத்தில் ‘நீலகண்ட கல்யாண யாத்ரா’ எனும் விசேஷமான ஆவணப்படம் ஒரு பிரம்மாண்ட திரையில் (85′ X 65′) பக்தர்களுக்காக திரையிடப்படுகிறது. இமாலயம் தொடங்கி கேரளக்கடற்கரை வரை இந்தியாவிலுள்ள முக்கிய ஆன்மீக புனித்தலங்கள், சடங்குகள் மற்றும் மரபுகள், கலாச்சாரம், திருவிழாக்கள் போன்றவற்றை படம் பிடித்து தொகுத்து இந்த சிறப்பான ஆவணப்படம் தயாரிக்கப்பட்டிருக்கிறது.31-1406788144-boat சுவாமிநாராயண் அக்ஷர்தாம் கோயில் (படங்கள், வீடியோ) 31 1406788144 boat
படகுச்சவாரி
சான்ஸ்க்ருதி விகார் எனப் பெயரிடப்பட்டுள்ள படகுச்சவாரியானது இங்கு வருகை தருபவர்களை கிட்டத்தட்ட 12 நிமிடங்களில் இந்தியவரலாற்றில் 10,000 ஆண்டுகள் வழியாக அழைத்துச் செல்கிறது. வருகையாளர்கள் மயில் போன்ற வடிவத்தில் சிறப்பாக அமைக்கப்பட்ட படகுகளில் அமர்ந்து, செயற்கையாக அமைக்கப்பட்டுள்ள ஆற்றில் தமது பயணத்தைத் தொடருவர்.இது தட்சசீலா, உலகின் முதலாவது பல்கலைக்கழகம்,[19] வேதியியல் ஆய்வுகூடங்கள், புராதன மருத்துவமனைகள் மற்றும் கடைத் தெருக்கள் ஆகியவற்றின் மாதிரிகளைக் கடந்து, கடைசியாக இந்தியாவின் எதிர்காலத்துக்கான நம்பிக்கையை வெளிக்காட்டும் செய்தியுடன் நிறைவுபெறுகிறது.31-1406788090-bharathubhavan சுவாமிநாராயண் அக்ஷர்தாம் கோயில் (படங்கள், வீடியோ) 31 1406788090 bharathubhavan
பாரத் உபவான்
பாரத் உபவான் என்றழைக்கப்படும் தோட்டத்தில் தழையால் அலங்கரிக்கப்பட்ட புல்வெளிகள், மரங்கள் மற்றும் புதர்கள் உள்ளன. இந்தத் தோட்டத்தில் இந்தியாவின் பண்பாடு மற்றும் வரலாற்றுக்குப் பங்களித்தவர்களின் பித்தளை சிற்பங்கள் வரிசையாக இருக்கும்.31-1406788837-yagnapurushkund சுவாமிநாராயண் அக்ஷர்தாம் கோயில் (படங்கள், வீடியோ) 31 1406788837 yagnapurushkund

யக்ஞபுருஷ் குண்டம்

அக்ஷர்தாம் வளாகத்தின் யக்ஞபுருஷ் குண்டம் மற்றும் அதிலுள்ள இசைநீரூற்று மற்றொரு சிறப்பம்சமாக பிரசித்தி பெற்றுள்ளது. வேதகால யாக குண்டம் மற்றும் நவீன இசை நீரூற்று அமைப்பு இரண்டையும் கலந்து இந்த அமைப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது.புராதன கால படிக்கிணறு போன்று பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த குண்டம் அல்லது கிணறு உலகிலேயே மிகப்பெரிய படிக்கிணறாக உருவாக்கப்பட்டிருக்கிறது. மாலை நேரங்களில் இந்த குண்டத்தின் இசை நீரூற்று இயக்குவிக்கப்படுகிறது. வண்ண விளக்குளால் ஜொலிக்கும் இந்த அதிஉயர நீரூற்றுகள் மாயாஜாலம் போன்று பார்வையாளர்களை திகைக்க வைத்துவிடுகின்றன.31-1406788875-yogihradaykamal சுவாமிநாராயண் அக்ஷர்தாம் கோயில் (படங்கள், வீடியோ) 31 1406788875 yogihradaykamal
யோகி அரடே கமல்
மேலிருந்து பார்க்கும்போது ஒரு தாமரை போன்ற வடிவிலுள்ள மூழ்கிய தோட்டமானது, ஷேக்ஸ்பியர் மற்றும் மார்டின் லூதர் கிங் ஆகியோரிலிருந்து சுவாமி விவேகானந்தா மற்றும் சுவாமிநாராயணன் வரையான உலக அறிவுமேதைகளின் மேற்கோள்கள் பொறிக்கப்பட்ட பெரிய கற்களை உருப்படுத்திக் காட்டுகிறது.
31-1406788470-neelkandabhishekam சுவாமிநாராயண் அக்ஷர்தாம் கோயில் (படங்கள், வீடியோ) 31 1406788470 neelkandabhishekam

நீலகாந்த அபிஷேகம்

பக்தர்கள் நீலகாந்த வர்னி சிலைமீது தண்ணீர் ஊற்றப்படும் சமயச்சடங்கான அபிஷேகம் செய்து, தெய்வநிலை சார்ந்த மேம்பாடு மற்றும் விருப்பங்கள் நிறைவேற்றப்படுதல் போன்றவற்றுக்காக தமது பெருமதிப்பு மற்றும் வழிபாடுகளை வெளிப்படுத்துவர்.

31-1406788431-narayanasarovar சுவாமிநாராயண் அக்ஷர்தாம் கோயில் (படங்கள், வீடியோ) 31 1406788431 narayanasarovar

நாராயண சரோவர்
நினைவுச்சின்னத்தை சூழந்துள்ள நாராயண சரோவர் ஏரியில் 151 ஆறுகள் மற்றும் ஏரிகளின் நீர் கலந்துகிடக்கிறது. நாராயணன் சரோவாரைச் சூழ அமைந்துள்ள 108 இறைவனின் பெயர்களைக் குறிக்கின்ற 108 கௌமுக்குகளிலிருந்து புனித நீர் முன்னே வழங்கப்படுகிறது.31-1406788548-premvathiagraharam சுவாமிநாராயண் அக்ஷர்தாம் கோயில் (படங்கள், வீடியோ) 31 1406788548 premvathiagraharam
பிரேம்வதி அக்ரகாரம்
பிரேம்வதி அக்ரகாரம் அல்லது பிரேம்வதி ஃபூட் கோர்ட் என்பது அக்ஷர்தாம் கோயில் வளாகத்தில் உள்ள சைவ உணவகம் மற்றும் ஆயுர்வேத கடைத்தெருவாகும்.
31-1406788626-research சுவாமிநாராயண் அக்ஷர்தாம் கோயில் (படங்கள், வீடியோ) 31 1406788626 research

சமூக அமைதி மற்றும் பயன்பாட்டு ஆராய்ச்சி மையம்

அக்ஷர்தாம் கோயில் வளாகத்துக்கு உள்ளே அமைந்துள்ள சமூக அமைதி மற்றும் பயன்பாட்டு ஆராய்ச்சி மையம், மூக அமைதி மற்றும் தொடர்பான தலைப்புகளின் ஆராய்ச்சிகளில் ஈடுபடுகிறது. இதன் ஊடாக கல்வியாளர்களும் மாணவர்களும் செயல்முறை சார்ந்த ஆராய்ச்சியை நடத்தலாம். கல்வி, மருத்துவ உதவி, பழங்குடி மற்றும் கிராமப்புற நலன், சூழலியல் மற்றும் பண்பாடு ஆகியவை குறித்த ஆய்வுகள் இம்மையத்தில் நடக்கின்றன.

31-1406788194-guinness சுவாமிநாராயண் அக்ஷர்தாம் கோயில் (படங்கள், வீடியோ) 31 1406788194 guinness

கின்னஸ் உலக சாதனை
பல்வேறு வசதிகளை உள்ளடக்கிய சுவாமிநாராயண் அக்ஷர்தாம் கோயில், 17 டிசம்பர் 2007-ஆம் ஆண்டு, “உலகின் மிகப்பெரிய அனைத்தும் கொண்ட இந்துக் கோயில்” என்று கின்னஸ் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டு கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளது.31-1406788509-nightview சுவாமிநாராயண் அக்ஷர்தாம் கோயில் (படங்கள், வீடியோ) 31 1406788509 nightview
இருளில் நிலவு!
இரவின் இருளில் பிரகாசிக்கும் நிலவு போல காட்சியளிக்கிறது அக்ஷர்தாம் கோயில்.31-1406788353-maerkoorai சுவாமிநாராயண் அக்ஷர்தாம் கோயில் (படங்கள், வீடியோ) 31 1406788353 maerkoorai
மேற்கூரை
அற்புதமாக அலங்கரிக்கப்பட்ட அக்ஷர்தாம் கோயிலின் மேற்கூரை.31-1406788798-wallsculptures சுவாமிநாராயண் அக்ஷர்தாம் கோயில் (படங்கள், வீடியோ) 31 1406788798 wallsculptures
சுவர்ச்சிற்பங்கள்

கோயில் சுவற்றில் செதுக்கப்பட்டுள்ள சிற்பங்கள்.

31-1406788233-hotels சுவாமிநாராயண் அக்ஷர்தாம் கோயில் (படங்கள், வீடியோ) 31 1406788233 hotels

சுவாமிநாராயண் அக்ஷர்தாம் கோயில், டெல்லி

இந்திய மண்ணில் இந்த நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட ஒரு அற்புத கலைப்படைப்பாக இந்த ‘அக்ஷர்தாம் கோயில்’ கம்பீரமாக வீற்றிருக்கிறது. என்னதான் நாம் நவீன உபகரணங்களையும் தொழில் நுட்ப உத்திகளையும் பயன்படுத்தி வானுயர்ந்த கட்டிடங்களை நகர்ப்பகுதிகளில் உருவாக்கியுள்ளபோதிலும் நம் முன்னோர்களின் ரசனைக்கும் கட்டிடக்கலை நுணுக்கங்களுக்கும் இணையாக ஒரு கட்டுமானப்படைப்பை – மனித அறிவும் ஜனநாயகமும் ஆக்கிரமிக்க தொடங்கிவிட்ட கடந்த அரை நூற்றாண்டுக்காலத்தில் – உருவாக்கவேயில்லை என்பதுதான் உண்மை.

அந்த உண்மைக்கான நிகழ்காலத்தின் பதிலாகத்தான் இந்த ‘அக்ஷர்தாம் கோயில்’ உருவாகியிருக்கிறது என்றால் மிகையில்லை. வெகு தூரம் கடந்து போய்விட்ட இந்திய மண்ணின் மஹோன்னத கோயிற்கலை பாரம்பரியத்தை நினைவூட்டுவதுபோல், இந்த பிரம்மாண்ட ஆலய வளாகம் இந்தியாவின் தலைநகரில் எழுப்பப்பட்டிருக்கிறது. இது அரசாங்க அதிகாரத்துக்கு அப்பாற்பட்டு செயல்படுத்தப்பட்ட ஒரு சாதனை என்பதும் வியப்பூட்டும் மற்றொரு அதிசயமாகும்.

இந்திய மண்ணின் பாரம்பரிய கோயிற்கலை மரபையும் ஆன்மீக முக்கியத்துவத்தையும் பிரதிபலிக்கும் இந்த மஹோன்னத கோயில் வளாகத்தை உருவாக்குவதற்கு 5 வருடங்கள் பிடித்துள்ளன.

‘போச்சனஸ்வாமி ஷீ அக்ஷர் புருஷோத்தம் ஸ்வாமிநாராயண் சன்ஸ்தா’ எனும் ஆன்மீக மடத்தின் குருவான ‘பிரமுக் ஸ்வாமி மஹராஜ்’ என்பவரது நோக்கம் மற்றும் வழிகாட்டலில் இந்த கோயில் உருவாகியிருக்கிறது.

3000 தன்னார்வ கரசேவகர்களையும் உள்ளடக்கிய 11000 கலைஞர்களின் கூட்டு உழைப்பில் இந்த ‘அக்ஷர்தாம் கோயில் வளாகம்’ உருவாக்கப்பட்டுள்ளது. 2005ம் ஆண்டு நவம்பர் 6ம் நாள் இக்கோயில் திறக்கப்பட்டிருக்கிறது.

வாஸ்து சாஸ்திரம் மற்றும் பஞ்சரத்ர சாஸ்திரம் போன்ற பாரம்பரிய இந்திய கட்டிடக்கலை தத்துவ மரபுகளை பின்பற்றி இந்த கோயில் வடிவமைப்பட்டுள்ளது.

இந்த ஆலயத்தின் ஒட்டுமொத்த வளாகமும் 5 முக்கியமான தொகுதிகளாக பிரிக்கப்பட்டிருக்கிறது. வளாகத்தின் நடுவே இதன் பிரதான அமைப்பு வீற்றிருக்கிறது. 141 அடி உயரத்தில் காட்சியளிக்கும் இந்த கோயில் வளாகமானது அலங்கார நுணுக்கங்கள் கொண்ட 234 தூண்கள், 9 அலங்கார மாடகோபுரங்கள், 20 நாற்கர விமானக்கூரைகள், ஒரு பிரம்மாண்ட கஜேந்திர பீடம் மற்றும் தெய்வங்கள், ரிஷிகள், பக்தர்கள், யோகிகள் ஆகியோரை குறிக்கும் 20000 சிற்பங்கள் மற்றும் சிலைகள் போன்றவற்றை தன்னுள் கொண்டுள்ளது.

இளஞ்சிவப்பு மணற்பாறைகள் மற்றும் வெள்ளை சலவைக்கல் இரண்டையும் பயன்படுத்தி கட்டப்பட்டுள்ள இந்த கோயிலில் உலோகக்கட்டமைப்புகளோ கான்கிரீட் கலவையோ பயன்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

முழுக்க முழுக்க நம் முன்னோர்களின் படைப்பைப்போன்றே உருவாக்க வேண்டும் எனும் நோக்கத்தில் நமது சம கால கலைஞர்கள் ஜெயித்தார்களா என்பது பற்றி நீங்கள் நேரில் இந்த கோயிலைப்பார்த்தபின் ஒரு முடிவுக்கு வரலாம்.

கோயில் வளாகத்தில் உள்ள ‘சஹஜாநாத் பிரதர்ஷன்’ எனும் கூடத்தில் இயந்திரபொம்மைகள், தத்ரூப காட்சி மாதிரிகள் போன்றவற்றை பயன்படுத்தி ஸ்வாமிநாராயணனின் வரலாறு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

உலகசமாதானம், ஒற்றுமை, கருணை, தொண்டு போன்ற மானுட அம்சங்களை வலியுறுத்துவதுடன் ஒப்பற்ற மஹாசக்தியை (கடவுள்) முன்னிலைப்படுத்துவதாகவும் இந்த சித்தரிப்புகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.

இந்த கோயில் வளாகத்தில் ‘நீலகண்ட கல்யாண யாத்ரா’ எனும் விசேஷமான ஆவணப்படம் ஒரு பிரம்மாண்ட திரையில் (85’ X 65’) பக்தர்களுக்காக திரையிடப்படுகிறது.

இமாலயம் தொடங்கி கேரளக்கடற்கரை வரை இந்தியாவிலுள்ள முக்கிய ஆன்மீக புனித்தலங்கள், சடங்குகள் மற்றும் மரபுகள், கலாச்சாரம், திருவிழாக்கள் போன்றவற்றை படம் பிடித்து தொகுத்து இந்த சிறப்பான ஆவணப்படம் தயாரிக்கப்பட்டிருக்கிறது. விரிவான உள்ளடக்கத்துடன் இதே படத்தின் சர்வதேச திரைவடிவமும் ‘மிஸ்டிக் இந்தியா’ என்ற தலைப்பில் உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அக்ஷர்தாம் கோயிலில் படகுச்சவாரி எனும் புதுமையான அனுபவத்திற்கான ஒரு உன்னத வளாகம் ஒன்றும் உருவாக்கப்பட்டிருக்கிறது. அதி அற்புதமான கற்பனையில் உதித்த ஒரு படைப்பாக்கம் என்றே இந்த வளாகத்தை சொல்லலாம்.

இந்த வளாக அமைப்பில் பார்வையாளர்கள் படகில் நகர்ந்தபடியே நிஜக்காட்சியை பார்ப்பது போன்று தத்ரூபமான காட்சித்தோற்ற அமைப்புகளை கரைப்பகுதியில் பார்த்து ரசிக்கலாம்.

இந்திய மரபின் சில அடிப்படையான அம்சங்கள், வாழ்க்கைக்காட்சிகள் போன்றவற்றை சித்தரிக்கும் நுணுக்கமான (இன்ஸ்டலேஷன் பாணி) காட்சி அமைப்புகள் இங்கு வரிசையாக அமைக்கப்பட்டுள்ளன.

இவை பார்வையாளர்களை நிஜமாகவே இன்னொரு யுகத்துக்குள் கால இயந்திரம் போன்று இழுத்துச்செல்கின்றன. குருகுலக்கல்வி, யோகக்கலை போன்றவை இந்திய பாரம்பரிய கல்வி முறையின் அங்கமாக இடம் பெற்றிருந்ததை விளக்கும் தத்ரூப காட்சிகள் நம் முன்னே வெளிச்சத்துடன் உயிர் பெறுவது பரவசமூட்டும் அனுபவமாகும்.

பார்வையாளர்கள் இருட்டிலும், காட்சிகள் நுணுக்கமாக வெளிச்சப்படுத்தப்பட்டும் இருக்குமாறு அற்புதமான தொழில்நுட்பத்துடன் இந்த படகுச்சவாரி வளாகம் உருவாக்கப்பட்டுள்ளது. படகுச்சவாரி என்பதற்கு பதிலாக ‘கால இயந்திர சவாரி’ என்றே இந்த அனுபவத்தை சொல்லலாம் என்பதை நேரில் புரிந்து கொள்வீர்கள்.

அக்ஷர்தாம் வளாகத்தின் யக்ஞபுருஷ் குண்டம் மற்றும் அதிலுள்ள இசைநீரூற்று மற்றொரு சிறப்பம்சமாக பிரசித்தி பெற்றுள்ளது. வேதகால யாக குண்டம் மற்றும் நவீன இசை நீரூற்று அமைப்பு இரண்டையும் கலந்து இந்த அமைப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது.

31-1406788274-htrandweather சுவாமிநாராயண் அக்ஷர்தாம் கோயில் (படங்கள், வீடியோ) 31 1406788274 htrandweather

புராதன கால படிக்கிணறு போன்று பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த குண்டம் அல்லது கிணறு உலகிலேயே மிகப்பெரிய படிக்கிணறாக உருவாக்கப்பட்டிருக்கிறது.மாலை நேரங்களில் இந்த குண்டத்தின் இசை நீரூற்று இயக்குவிக்கப்படுகிறது. வண்ண விளக்குளால் ஜொலிக்கும் இந்த அதிஉயர நீரூற்றுகள் மாயாஜாலம் போன்று பார்வையாளர்களை திகைக்க வைத்துவிடுகின்றன.மேலும், எட்டு இதழ்களுடன் கூடிய தாமரை மலர் போன்ற வடிவமைப்பு இந்த படிக்கிணறின் மையத்தில் அமைக்கப்பட்டுள்ளது. அக்கால இந்திய கணிதத்தத்துவங்களில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருந்த ‘எண்கோண’ தத்துவப்படி இந்த தாமரை மலர் அமைப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அக்ஷர்தாம் கோயில் வளாகத்தின் மற்றொரு அம்சமாக இதன் உள்ளே ‘பாரத் உபாவன்’ அல்லது ‘பாரத தோட்டம்’ எனும் அமைப்பும் உருவாக்கப்பட்டிருக்கிறது. இதனுள்ளே குழந்தைகள், பெண்கள், சுதந்திரப்போராட்ட வீரர்கள், முக்கிய தலைவர்கள் மற்றும் இந்திய பிரபல்யங்களின் சிலைகள் காணப்படுகின்றன.

இவை தவிர அக்ஷர்தாம் கோயிலில் யோகி ஹிருதய் கமால், நீலகண்ட அபிஷேக், நாராயண் சரோவர், பிரேம்வதி அஹர்கிருஹ் மற்றும் ஆர்ஷ் சென்டர் போன்ற இதர முக்கிய அம்சங்களும் உள்ளன.

தலைநகருக்கு விஜயம் செய்யும் இந்தியப்பயணிகள் அனைவரும் மறக்காமல் தரிசிக்கவேண்டிய அற்புத ஸ்தலம் இந்த அக்ஷர்தாம் கோயிலாகும். நம் முன்னோர்களின் கலைத்திறமையில் கொஞ்சமாவது எட்டியிருக்கின்றோமா என்று நீங்களும் சொல்லுங்களேன், இந்த கோயிலை பார்த்துவிட்டு!

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

July 2019
M T W T F S S
« Jun    
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

விறுவிறுப்பு தொடர்கள்

    சயனைட் குப்பியைக் கடிப்பதா? என்னை நானே சுட்டுக் கொல்வதா?:பெண்ணொருவர் தந்த பழசாய்ப் போன சல்வார் உடையை அணிந்துகொண்டு மக்களோடு மக்களாகக் கலந்தேன்.. (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -28)

சயனைட் குப்பியைக் கடிப்பதா? என்னை நானே சுட்டுக் கொல்வதா?:பெண்ணொருவர் தந்த பழசாய்ப் போன சல்வார் உடையை அணிந்துகொண்டு மக்களோடு மக்களாகக் கலந்தேன்.. (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -28)

0 comment Read Full Article
    ராஜீவ் காந்தி கொல்லப்படப்போகிறார். திக்..திக்.. நிமிடங்கள்!! : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: –18)

ராஜீவ் காந்தி கொல்லப்படப்போகிறார். திக்..திக்.. நிமிடங்கள்!! : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: –18)

0 comment Read Full Article
    மக்கள், காயப்பட்டுக் கிடந்த, உயிரோடிருந்த போராளிகள் அனைவரையும் கைவிட்டு 300 போரளிகளுடன் இயக்க தலைமை கேப்பாபிலவு காட்டுக்குள் தப்பியோட முயற்சி!! (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -27)

மக்கள், காயப்பட்டுக் கிடந்த, உயிரோடிருந்த போராளிகள் அனைவரையும் கைவிட்டு 300 போரளிகளுடன் இயக்க தலைமை கேப்பாபிலவு காட்டுக்குள் தப்பியோட முயற்சி!! (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -27)

0 comment Read Full Article

Latest Comments

My vote for Mr. Gotabhaya Rajapaksa, he can only save our country. [...]

இறைவனின் துணையோடு நிலவை பிளந்த நபிக்கு அதே இறைவனின் துணையோடு ஒட்டவைக்க முடியாதா? ?? இந்த உலகத்தையே நாம்தான் படைத்தோம்னு சொல்லும் [...]

We want Mr.Kotapaye Rajapakse as our future President, he can only save our country not [...]

அமெரிக்காவில் மட்டும் தான் ஏலியன் வாகனங்கள் தென்படுகின்றன ? ஏனெனில் அங்குதான் Hollywood உள்ளது, நல்லா வீடியோ எடுக்க [...]

Trumpf is coward , he has afraid about if iran attack back then will give [...]

இலங்கை பத்திரிகைகள்

English News