ilakkiyainfo

ilakkiyainfo

சுவிஸ் சம்பியன் கால்பந்தாட்ட அணியில் பிரகாசிக்கும் இலங்கை வீரர் ஹனீப்

சுவிஸ் சம்பியன் கால்பந்தாட்ட அணியில் பிரகாசிக்கும் இலங்கை வீரர் ஹனீப்
June 25
13:16 2017

 

சுவிட்­சர்­லாந்தில் நடை­பெற்­று­வரும் இன்டர் கன்ட்ரி கால்­பந்­தாட்ட லீக் போட்­டி­களில் சம்­பி­ய­னான எவ். சி. வெட்­டிஞ்சென்  (FC Wettingen)
அணியில் இலங்­கையைச் சேர்ந்த ஹசீப் ஹனீப்பும்  (Haseef Haneef) இடம்­பெற்று நாட்­டிற்கு பெருமை சேர்த்­துக்­கொ­டுத்­துள்ளார்.

திஹா­ரி­யவைப் பிறப்­பி­ட­மாகக் கொண்ட ஹனீப் விளை­யாடும் எவ். சி. வெட்­டிஞ்சென் கழகம்  (FC Wettingen) 26 போட்­டி­களில் 14 இல் வெற்­றி ­பெற்­ற­துடன் 6 போட்­டி­களை வெற்றி தோல்­வி­யின்றி முடித்­துக்­கொண்­டது. 6 போட்­டி­களில் தோல்வி அடைந்­தது.

இக் கழகம் மொத்­த­மாக போட்ட 60 கோல்­களில் 15 கோல்­களை ஹனீப் போட்டு அணியின் சிறந்த வீரர்­களில் ஒரு­வ­ராகத் திகழ்­கின்றார்.

இந்த லீக் போட்­டியில் எவ். சி. வெட்­டிஞ்சென் கழகம் ஒரு புள்ளி வித்­தி­யா­சத்தில் இரண்டாம் இடத்தில் இருந்­தது.

எனினும் தீர்­மா­ன­மிக்க எவ். சி. அரவ் கழ­கத்­து­ட­னான போட்­டியில் 3 க்கு 1 என்ற கோல்கள் அடிப்­ப­டையில் வெட்­டிஞ்சென் அணி வெற்­றி­யீட்டி சம்­பியன் பட்­டத்தை சுவீ­க­ரித்­தது.

இந்தப் போட்­டி­யிலும் ஹனீப் திற­மை­யாக விளை­யா­டி அணியின் வெற்­றிக்கு வித்­திட்­டி­ருந்தார்.

இலங்­கையில் பொலிஸ் கழ­கத்­துடன் சிநே­க­பூர்வ போட்டி ஒன்றில் விளை­யா­டிய ஹனீப்பின் ஆற்­றலைக் கண்டு தேசிய கோல்­காப்­பாளர் பயிற்­றுநர் மஹிந்த கல­கெ­தர பாராட்­டி­ய­துடன் கலம்போ எவ்.சி. அணி பயிற்­றுநர் எம். எச். றூமியின் பாராட்­டையும் பெற்­ற­வ­ராவார்.

தனக்கு இரட்டை பிர­ஜா­வு­ரிமை கிடைத்­த­பின்னர் கலம்போ எவ்.சி. அணிக்­காக விளை­யாட எண்­ணி­யுள்­ள­தாக ஹனீப் தெரி­விக்­கின்றார்.
இதே­வேளை சுவிட்­சர்­லாந்தில் மூன்று கழ­கங்­க­ளி­ட­மி­ருந்து தனக்கு அழைப்பு வந்துள்ளதாகவும் அது குறித்து நன்கு ஆலோசித்து முடிவு எடுக்கவுள்ளதாகவும் ஹனீப் குறிப்பிட்டார்.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

June 2018
M T W T F S S
« May    
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  

Latest Comments

எல்லோரது ஆசையும் விக்னேஸ்வரன் என்ற நொண்டிக் குதிரைமீது பணம் கட்டுவதான். அவரை ஒரு பஞ்ச கல்யாணிக் குதிரை எனப் பலர் [...]

I want rohyponl tablet [...]

முன்னாள் பிரதமர் தேவேகவுடாவின் மகன் குமாரசாமி. கர்நாடக முன்னாள் முதவர். இவர் ஜனதாதளம் (எஸ்) கட்சியின் மாநில தலைவர். தற்போது [...]

கேவலம் கேட்ட கொலை கார ஜென்மத்துக்கு ஒருவரும் அஞ்சலி செலுத்தாதது ஒன்றும் வியப்பில்லை, ஹிட்லருக்கு கூட [...]

குட்டி ஆடு கொழுத்தாலும் வழுஉவழப்பு போகாது என்பது போல், அகம்பாவத்தினாலும், முதிர்ச்சி இன்மையாலும், ராஜதந்திரமோ, சாணக்கியமோஅற்ற பதிலைக் கொடுத்து புலிகளின் [...]

இலங்கை பத்திரிகைகள்

English News