ilakkiyainfo

ilakkiyainfo

செஞ்சோலை காணியில் குடியிருப்போரை 15 ஆம் திகதிக்கு முன் வெளியேற உத்தரவு: செஞ்சோலைப் பிள்ளைகள் செய்வதறியாது நிர்க்கதி

செஞ்சோலை காணியில் குடியிருப்போரை 15 ஆம் திகதிக்கு முன் வெளியேற உத்தரவு: செஞ்சோலைப் பிள்ளைகள் செய்வதறியாது நிர்க்கதி
October 06
05:18 2019

கிளிநொச்சி மலையாளபுரம் கிராமத்தில் உள்ள செஞ்சோலை காணியில் குடியிருப்போரை எதிர்வரும் ஒக்டோபர் 15 ஆம் திகதிக்கு முன் அக்காணியை விட்டு வெளியேறுமாறு கரைச்சி பிரதேச செயலகம் அறிவித்துள்ளது.

இது தொடர்பிலான எழுத்து மூலமான அறிவித்தல், கரைச்சி பிரதேச செயலகத்தினால் செஞ்சோலை காணியிலுள்ள, செஞ்சோலை பிள்ளைகள் தங்கியுள்ள தற்காலிக வீடுகளில் ஒட்டப்பட்டுள்ளது.

இதனால் செஞ்சோலைப் பிள்ளைகள் செய்வதறியாது நிர்க்கதிக்குள்ளாகியுள்ளனர்.

கடந்த வருடம் இராணுவத்தின் கட்டுப்பாட்டிலிருந்து குறித்த காணி விடுவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் செஞ்சோலை சிறுவர் இல்லத்தில் இருந்து வளர்ந்த பிள்ளைகள் திருமணம் செய்து குறித்த காணியில் மீள்குடியேறியிருந்தனர்.

குறித்த காணி செஞ்சோலை மற்றும் காந்தரூபன் அறிவுச்சோலை சிறுவர் இல்லங்களுக்காக 2009 இற்கு முன் விடுதலைப்புலிகளால் காணி உரிமையாளர்களிடம் இருந்து கொள்வனவு செய்யப்பட்டிருந்தது.

செஞ்சோலை காணியில் குடியிருப்போரை 15 ஆம் திகதிக்கு முன் வெளியேற உத்தரவு-Vacating Notice to Sencholai Model Village Children

ஆயினும் குறித்த காணி உரிமையாளர்கள் காணி அனுமதிப்பத்திர ஆவணத்தை வைத்துக்கொண்டு குறித்த காணி தங்களுடையது எனவும் அதனை தங்களுக்கே மீளவும் வழங்க வேண்டும் தெரிவித்து யாழ்ப்பாணம் பிராந்திய மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்திருந்தனர்.

இந்த முறைப்பாட்டினை விசாரித்த மனித உரிமைகள் ஆணைக்குழு சட்டம் மற்றும் 2014 ஆம் ஆண்டு சுற்றுநிரூபத்தின் பிரகாரம், அதன் ஆரம்ப உரிமையாளர்களிடமே காணி வழங்கப்பட வேண்டும் என்ற தீர்மானத்தை வழங்கியதன் அடிப்படையில் கரைச்சி பிரதேச செயலாளரினால் குறித்த அறிவித்தல் ஒட்டப்பட்டுள்ளது.

625.0.560.320.310.730.053.800.670.160.90  செஞ்சோலை காணியில் குடியிருப்போரை 15 ஆம் திகதிக்கு முன் வெளியேற உத்தரவு: செஞ்சோலைப் பிள்ளைகள் செய்வதறியாது நிர்க்கதி 625

குறித்த அறிவித்தலில் அரச காணியில் அதிகாரமில்லாது ஆட்சி செய்கின்றீர்கள் எனவும் எனவே அக் காணியை விட்டு ஒக்டோபர் 15 இற்கு முன் வெளியேறுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் செஞ்சோலை காணிக்கு உரிமை கோருகின்றவர்களுக்கு செஞ்சோலை காணிகளுக்கு பதிலாக மாற்று அரச காணி வழங்கப்பட்டு அரச வீட்டுத்திட்டங்களும் வழங்கப்பட்டுள்ளன.

இலங்கையின் பிறிதொரு காணிச் சட்டத்தின் படி காணியற்ற ஒருவருக்கு இலங்கையில் எப்பகுதிலாவது ஒரு ஒரு அரச காணி மாத்திரமே வழங்க முடியும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே செஞ்சோலை காணிகளுக்கு உரிமை கோருகின்றவர்களுக்கு அரச காணி வழங்கப்பட்டுள்ள நிலையில் மீண்டும் செஞ்சோலை காணிகள் வழங்கப்படுவது எந்த வகையில் நியாயம் என அங்கு குடியிருக்கும் செஞ்சோலை பிள்ளைகள் கேள்வி எழுப்புகின்றனனர்.

Vacating-Notice-to-Sencholai-Model-Village-Children-1  செஞ்சோலை காணியில் குடியிருப்போரை 15 ஆம் திகதிக்கு முன் வெளியேற உத்தரவு: செஞ்சோலைப் பிள்ளைகள் செய்வதறியாது நிர்க்கதி Vacating Notice to Sencholai Model Village Children 1 e1570338540365

தற்போது செஞ்சோலை காணியில் செஞ்சோலை மற்றும் காந்தரூபன் அறிவுச்சோலை சிறுவர் இல்லங்களில் இருந்த 54 பேர் குடும்பங்களாக பதிவு செய்துள்ளனர் அவற்றில் பலர் அந்தக் காணியில் தற்காலிக கொட்டகை அமைத்து குடியிருந்தும் வருகின்றனர்.

அத்தோடு கடந்த ஏப்ரல் மாதம் 11ஆம் திகதி கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்திக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சி. சிறிதரன், செஞ்சோலை காணிகள் செஞ்சோலைப் பிள்ளைகளுக்கே பகிர்ந்தளிக்கப்படல் வேண்டும் என்ற தீர்மானத்தை எடுத்திருந்தார் ஆனால் அதற்கு பின் எதுவும் நடக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

November 2019
M T W T F S S
« Oct    
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  

Latest Comments

இந்த கோமாளி சர்வ தேசத்துக்கு எதோ செய்தி சொல்வதாக கூறி இந்த தேர்தலில் போட்டியிடடான் , ஆனால் வடகிழக்கு [...]

காஷ்மீர் மக்களை உரிமையுடன் இந்த மோடி ( மோசடி ) நடத்த வேண்டும் , இலங்கை தமிழர்கள் கருணை காட்ட [...]

எந்த தை பொங்கலுக்கு , எந்த தீபாவளிக்கு தீர்வு வரும் அதை முதலில் சொல்லுங்க ? புலிகள் [...]

17ம் திகதிக்கு பின் இங்கு , பணம் காயும் , வாழைப்பழ குலையும் சேமிக்கும் இடமாக மாற்றப்பட [...]

இங்கு வேலை செய்யும் தமிழர்கள் நவீன கால அடிமைகள் , இந்த உணவகத்தை புறக்கணிப்பதுடன் [...]

இலங்கை பத்திரிகைகள்

English News