ilakkiyainfo

ilakkiyainfo

“சென்னையில் மாயமான பூனைகளைத் தேடியதில் கிடைத்த பகீர் தகவல்!”

“சென்னையில் மாயமான பூனைகளைத் தேடியதில் கிடைத்த பகீர் தகவல்!”
February 12
14:50 2018

சென்னை: சென்னையில் கடந்த சில மாதங்களாக ஏராளமான வளர்ப்புப் பூனைகள் மாயமானதற்கும், சாலையோர பிரியாணி கடைகளில் மட்டன் பிரியாணி சுடச்சுட விற்பனையானதற்கும் சம்பந்தம் இருக்கும் என்று யாரும் எதிர்பார்த்திருக்க வாய்ப்பில்லை.

சாலையோர பிரியாணி கடைகளில் சிக்கன் பிரியாணிக்கு பதிலாக காக்கா பிரியாணி விற்கப்படுவதாக சினிமாவில் நகைச்சுவை காட்சிகள் இடம்பெற்றன. ஆனால் உண்மையிலேயே மட்டன் பிரியாணிக்கு பதிலாக சில சாலையோரக் கடைகளில் பூனைக் கறி பரிமாறப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.

சென்னையில் கடந்த சில மாதங்களாக பல வீடுகளில் வளர்க்கப்பட்டு வந்த பூனைகள் காணாமல் போனதாக விலங்குகள் நல அமைப்புக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. இது குறித்து விசாரிக்கத் தொடங்கியது.

xbiryani891-600-1518256244.jpg.pagespeed.ic_._RmL3DUx76  "சென்னையில் மாயமான பூனைகளைத் தேடியதில் கிடைத்த பகீர் தகவல்!" xbiryani891 600 1518256244

அப்போதுதான், வீடுகளில் வளர்க்கப்படும் பூனைகளை, நரிக்குறவ இனத்தவர்கள் பிடித்து கொடூரமாகக் கொண்டு அதனை இறைச்சியாக்கி, ஆட்டிறைச்சி என்று கூறி சாலையோர பிரியாணி கடைகளுக்கு குறைந்த விலையில் விற்று வந்தது தெரிய வந்துள்ளது.

காவல்துறையினரின் உதவியோடு நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில், பூனைகளைப் பிடித்து பிரியாணி கடைகளுக்கு இறைச்சி விற்கும் கும்பலிடம் இருந்து சுமார் 40 பூனைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

29-1514559607-police-car-front-5600-1518256578  "சென்னையில் மாயமான பூனைகளைத் தேடியதில் கிடைத்த பகீர் தகவல்!" 29 1514559607 police car front 5600 1518256578இது குறித்து காவல்துறை மூத்த அதிகாரி கூறுகையில், பூனைகளை பிடித்து பிரியாணி கடைகளுக்கு விற்பனை செய்வோருக்கு எதிராக நடவடிக்கை தொடரும் என்று கூறியுள்ளார்.  நரிக்குறவர்கள் பல பகுதிகளுக்கு நள்ளிரவில் சென்று வலைகளைப் போட்டு பூனைகளைப் பிடிக்கின்றனர்.

பூனைகளை கொதிக்கும் நீரில் போடுவது உட்பட மிக மோசமாக அவற்றைக் கொன்று அந்த இறைச்சியை சாலையோர உணவகங்களுக்கு விற்று விடுகிறார்கள் என்றும் கூறப்படுகிறது.

இதுபோன்று பூனை இறைச்சியைப் பயன்படுத்தி பிரியாணி தயாரிக்கும் சாலையோரக் கடைகள் பொதுவாக டாஸ்மாக் கடைகளுக்கு அருகில் அமைந்திருப்பதால், வாடிக்கையாளர்களிடம் இருந்து எந்த புகாரும் எழுவதில்லை என்றும் கூறுகிறார்கள்.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

September 2018
M T W T F S S
« Aug    
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930

Latest Comments

சிவா முருகுப்பிள்ளை சொல்கிறார். “பல இடங்களில் திலீபனின் கொலை வெறி செயற்பாடுகளை பதிவு செய்து வந்திருக்கின்றேன். மீண்டும் பதிவு செய்கின்றேன். ரெலோவை [...]

ஆனந்திக்கு விசா கொடுத்து தானே உள்ளார்கள் , காதலர்களை பிரித்த பாவம் இந்தியாவை சும்மா விடாது. [...]

Traitor Mano Kanesan , since when have new job as Chicks Broker ? didnt he [...]

தற் போது உள்ள அரசு நாட்டுக்கு மட்டுமல்ல முழு ஆசியாவுக்கே துரோகம் செய்கின்றது , [...]

தேச துரோகம் ( முன்னைய அரசை கவிழ்க்க சாதி செய்தது ) , செய்து வந்த இவன் இப்ப [...]

இலங்கை பத்திரிகைகள்

English News