ilakkiyainfo

ilakkiyainfo

ஜனாதிபதியின் இல்லத்தில் புத்தாண்டு கொண்டாட்டம்!- (படங்கள்)

ஜனாதிபதியின் இல்லத்தில் புத்தாண்டு கொண்டாட்டம்!- (படங்கள்)
April 14
23:46 2019

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் ஜயந்தி சிறிசேன உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் இணைந்து சுபநேரத்தில் அடுப்பு மூட்டி புத்தாண்டு பாரம்பரியங்களை நிறைவேற்றினர்.

பணிகளை ஆரம்பிக்கும் பாரம்பரியத்தின் படி ஜனாதிபதி அவர்கள் தனது உத்தியோகபூர்வ வளாகத்தில் மரக்கன்றொன்றை நாட்டினார். அதனைத்தொடர்ந்து கை விசேட பாரம்பரியத்திலும் இணைந்து கொண்டார்.

மலர்ந்திருக்கும் சிங்கள, தமிழ் புத்தாண்டில்  ஜனாதிபதிக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதற்காக மக்கள் பிரதிநிதிகள், கலைஞர்கள் மற்றும் பெரும் எண்ணிக்கையான பொதுமக்களும் ஜனாதிபதி அவர்களின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு வருகைதந்திருந்ததுடன், அவர்கள் அனைவரையும் சுமூகமாக வரவேற்ற ஜனாதிபதி, உணவு உட்கொள்ளும் சுபநேரத்தில் அனைவரையும் இணைத்துக்கொண்டு அவர்களுக்கு விருந்துபசாரங்களையும் வழங்கினார்.

மலர்ந்திருக்கும் சிங்கள, தமிழ் புத்தாண்டை முன்னிட்டு அனைத்து இலங்கையர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ள ஜனாதிபதி அவர்கள், அனைவரும் ஒன்றிணைந்து தாய்நாட்டுக்கான பொறுப்பை நிறைவேற்றுவதற்கு இப்புத்தாண்டில் உறுதிபூண வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

இதேநேரம் ஜனாதிபதியின்   எண்ணக்கருவிற்கேற்ப மரம் நடும் நிகழ்ச்சித் திட்டம்   நாளைய (150 தினம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இதனை முன்னிட்டு முக்கொத்து சுபநேரமான மு.ப 11.17க்கு வெள்ளை நிற ஆடைகளில் கிழக்குத் திசையை நோக்கி மரக்கன்றினை நடுவது சிறந்ததாகும்.

இந்த சுப நேரத்தில் மரக்கன்றொன்றை நட்டு எதிர்கால தலைமுறைக்கும் சுற்றாடலுக்கும் பிரஜைகள் என்ற தமது பொறுப்பினை நிறைவேற்ற ஒன்றிணையுமாறு ஜனாதிபதி  அனைத்து இலங்கையர்களிடமும் கேட்டுக்கொண்டுள்ளார்.(ஜனாதிபதி ஊடகப் பிரிவு இணையத்தளம்)

Maithri-2  ஜனாதிபதியின் இல்லத்தில் புத்தாண்டு கொண்டாட்டம்!- (படங்கள்) Maithri 2

Maithri-1  ஜனாதிபதியின் இல்லத்தில் புத்தாண்டு கொண்டாட்டம்!- (படங்கள்) Maithri 1

Maithri_4  ஜனாதிபதியின் இல்லத்தில் புத்தாண்டு கொண்டாட்டம்!- (படங்கள்) Maithri 4

Maithri-3  ஜனாதிபதியின் இல்லத்தில் புத்தாண்டு கொண்டாட்டம்!- (படங்கள்) Maithri 3

Maithri  ஜனாதிபதியின் இல்லத்தில் புத்தாண்டு கொண்டாட்டம்!- (படங்கள்) Maithri

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

April 2019
M T W T F S S
« Mar    
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

Latest Comments

Wellcome our future President , we need you for our country. [...]

வலிகள் வரிகளாக எனக்குள் அதை கவிதையாக [...]

இது எல்லாம் நாம் எதிர்பார்த்தது தான் , ரவி கருணாநாயகே நிதியமைச்சராக இருந்த பொது , [...]

எவ்வளவு வளம் இருந்தாலும் நெஞ்சில் வீரமும் , ஆண்மையும் இருக்க வேண்டும், இலங்கையில் மிக சிறு புலி [...]

நாங்கள் கடவுளுககும் மேலாக நேசிககும் மகிந்த ராஜபக்சேவை பதவி நீக்க 2015 சதி செய்த இந்தியா நல்லா [...]

இலங்கை பத்திரிகைகள்

English News