ஜனாதிபதி வேட்பாளர் பசில்;கோட்டா தெரிவிப்பு

கூட்டு எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவையே தான் பிரேரிப்பதாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.
டி.ஏ. ராஜபக்ஷ அருங்காட்சியக நிர்மாணத்தின் போது அரச நிதியை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கோத்தாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 7 பேருக்கு எதிராக வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதில் கலந்துகொள்வதற்காக நீதிமன்றத்துக்கு வருகை தந்த பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறினார்.
எனக்கும் பசில் ராஜபக்ஷவுக்கும் இடையில் பிரச்சினையை ஏற்படுத்துவதற்கே சிலர் முயற்சி செய்கின்றனர். அதனாலேயே ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் எமக்குள் பிரச்சினை இருப்பதாக கதைகளை கட்டி வருகின்றனர்.
எமக்குள் எந்தப் போட்டியும் கிடையாது. என்னிடம் யாராவது ஜனாதிபதி வேட்பாளர் யார் என்று கேட்டால் பசில் ராஜபக்ஷதான் பொருத்தமானவர் என்றே கூறுகின்றேன் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
There are no comments at the moment, do you want to add one?
Write a comment