ilakkiyainfo

ilakkiyainfo

“ஜெயலலிதாவுக்கு இரண்டு மூன்று முறை திருமண ஏற்பாடுகள் நடந்தன” ஜெயலலிதா தோழிகளின் நினைவலைகள்!

“ஜெயலலிதாவுக்கு இரண்டு மூன்று முறை திருமண ஏற்பாடுகள் நடந்தன” ஜெயலலிதா தோழிகளின் நினைவலைகள்!
December 05
14:49 2017

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்து ஒரு வருடம் ஆகிறது. நாம் அறிந்த அவரின் சினிமா மற்றும் அரசியல் வாழ்க்கையைத் தாண்டி, ஜெயலலிதாவின் நடனத்திறமை, புத்தக வாசிப்பு, சுயமரியாதை என அவர் வாழ்க்கையின் அதிகம் வாசிக்கப்படாத பக்கங்களைப் புரட்டுகிறார்கள் அவருடைய நெருங்கிய தோழிகள்.

சச்சு, திரைப்பட நடிகை.

“சிங்கம்போல் வாழ்ந்தவரை அவதூறாகப் பேசுவதைப் பார்க்கும்போது வேதனையாக இருக்கிறது!”

Sachu_12450  “ஜெயலலிதாவுக்கு இரண்டு மூன்று முறை திருமண ஏற்பாடுகள் நடந்தன” ஜெயலலிதா தோழிகளின் நினைவலைகள்! Sachu 12450

ம்முவைப் பற்றிப் பேசுறதுக்கு எவ்வளவோ இருக்கு. அவங்க தன் வாழ்க்கையில சந்திக்கிற எல்லாரையும், அவ்வளவு சீக்கிரத்துல மறந்துடமாட்டாங்க.

அவங்ககூட படத்துல நடிச்சவங்களா இருக்கட்டும், கூடப் பழகினவங்களா இருக்கட்டும், ஒரே ஒருமுறைதான் பார்த்திருப்பாங்க என்றாலும்கூட அவங்களை எப்போதும் மனசுல வெச்சிருப்பாங்க.

எந்த அளவுக்குன்னா, டி.டி சுந்தரம்னு ஒரு மேக்-அப் மேன் இருந்தாரு. ரொம்ப நல்ல மனிதர்.

சிவாஜிகணேசன், எம்.ஜி.ஆர் எல்லாருக்கும் மேக்-அப் மேனாக இருந்தவரு. கடைசியா என்கிட்டதான் வேலை பார்த்துட்டு இருந்தாரு.

நானும் ஜெயா அம்மாவும் ஒண்ணா நடிச்சிட்டு இருந்தப்போ, அவங்க சுந்தரம் அண்ணாவை மேக்-அப் ரூம்ல பார்த்திருக்காங்க.

அதுக்கப்புறம் அவங்க முதலமைச்சரா ஆனதுக்குப் பிறகு சுந்தரம் அண்ணா பென்ஷனுக்கு அப்ளை பண்ணியிருந்திருப்பாருபோல.

அந்த பென்ஷன் தொகையை முதலமைச்சரே தன்னோட கையால கொடுக்க நிகழ்ச்சி ஏற்பாடாகியிருந்தது.

அப்போ தலைமைச் செயலகத்துல சுந்தரம் அண்ணாவைப் பார்த்ததும், ‘நீங்க சுந்தரம்தானே, எப்படி இருக்கீங்க? உங்களுக்கு ஏதாவது உதவி வேணுமா?’ன்னு கேட்டுருக்காங்க.

ஜெயா அம்மா இப்படி எல்லார் முன்னேயும் சுந்தரம் அண்ணாவைக் கூப்பிட்டுப் பேசினதும் அவருக்கு சந்தோஷம் தாங்கலையாம். இதை அவர் என்கிட்ட வந்து சொன்னதும், ரொம்பப் பெருமையாயிருந்தது. அவங்களோட ஞாபகத்திறன், அபாரம்.

ஜெயா அம்மாவும் நானும் சேர்ந்து நிறையப் படங்களில் நடிச்சிருக்கோம். அவங்க முதலமைச்சரா ஆகுறதுக்கு முன்புவரை நான் அவங்களை ‘அம்மு’ன்னுதான் கூப்பிட்டுட்டு இருந்தேன்.

ஆனா, முதல்வரான பிறகு ‘ஜெயா மேடம்’னு கூப்பிட்டேன். “சச்சு அம்மா, நீங்க ஏன் அப்படியெல்லாம் கூப்பிடுறீங்க?”ன்னு அவங்க கேட்டப்போ, ”நம்மகூட பிறந்தவங்களாகவே இருந்தாலும் முதலமைச்சர் பதவிக்கான மரியாதையைக் கொடுக்கணும்மா”ன்னு சொன்னேன். அவங்க நெகிழ்ந்துட்டாங்க.

2012 ல அவங்க வீட்டுல ஒரு மீட்டிங்கிற்கு ஏற்பாடு பண்ணியிருந்தாங்க. நான், சோ உள்பட ஒன்பது பேர் அதுல கலந்துக்கிட்டோம்.

போயஸ் கார்டன்ல உள்ள பழமையான ஒரு டைனிங் டேபிள்லதான் விருந்து நடந்துச்சு. சந்தியா அம்மா இருக்கும்போது அந்த டைனிங் ஹால் எப்படி இருந்துச்சோ அப்படியேதான் அந்த ஹால் இருந்துச்சு.

அதை மட்டும் புதுப்பிக்கவே இல்ல. அம்மாவோட ஞாபகமா அதை அப்படியே வெச்சிருந்தாங்க. அம்மான்னா அவங்களுக்கு அவ்வளவு பிரியம்.

அந்த ஹால்ல நாங்க எல்லோரும் சந்திச்சிக்கிட்டபோது ரொம்ப நெகிழ்ச்சியா இருந்தது. ஒவ்வொருத்தருக்கும் என்ன வேணும்னு பார்த்துப் பார்த்து அம்மு கவனிச்சிக்கிட்டாங்க.

கூடப்பழகினவங்க மேல அம்மு வெச்சிருந்த பிரியத்தைப் பார்த்து நாங்க எல்லோரும் பூரிச்சிப்போயிட்டோம்.

வீட்டுக்குள்ளேயும் சரி, ஷுட்டிங் ஸ்பாட்லேயும் சரி, அவங்க யாரைப் பத்தியும் அநாவசியமா ஒரு வார்த்தை பேசமாட்டாங்க.

எப்போதுமே அவங்க கையில ஒரு புக் இருக்கும். படிச்சிட்டே இருப்பாங்க. யாராவது அவங்களைக் கடந்து போகும்போது ‘ஹாய், ஹலோ’ மட்டும்தான் சொல்லுவாங்க.

அப்படி வாழ்ந்த மனுஷியை இன்னைக்கு பலரும் அவதூறு பேசுறதைப் பார்க்குறப்ப மனசுக்கு ரொம்பக் கஷ்டமா இருக்கு. வாழும்போது சிங்கம்போல வாழ்ந்த ஒரு பெண்ணை இறந்த பிறகு அவதூறாக பேசுறதை சகிச்சுக்க முடியலை” என ஆதங்கப்பட்டவரிடம், ஜெயலலிதா ஏன் திருமணமே செய்துகொள்ளவில்லை என்ற கேள்வியை முன்வைத்தோம்.

“நான்கூடத்தான் திருமணம் செய்துகொள்ளவில்லை. ஏன், விளையாட்டுத்துறையில் இருக்கும் பல வீராங்கனைகள்கூடத்தான் திருமணம் செய்துகொள்வதில்லை.

அதெல்லாம் அவங்கவங்க தனிப்பட்ட விஷயம். சொல்லப்போனா, குறிப்பிட்ட வயசுக்கு மேல சுயமா யோசிகக்கூடிய மெச்சூரிட்டி வந்துடும். அப்போ அவங்க யோசிச்சுப் பார்க்கும்போது அது சரின்னு தோணும். அவங்களுக்குத் துணை வேணும்னு நினைச்சதில்லை. அது அவங்களோட விருப்பம். அவங்க எப்பவோ எடுத்த முடிவை இப்போவரை விவாதத்துக்கு உட்படுத்துறது சரியில்லையே” என்கிறார் சச்சு.

சிவசங்கரி, எழுத்தாளர்

“தனக்கு சான்ஸ் வேணும்ங்கிறதுக்காகவெல்லாம், ஒருத்தரை தேடிப்போய் பார்க்கிறவங்க இல்ல அம்மு!”

SivaSankari2_12458  “ஜெயலலிதாவுக்கு இரண்டு மூன்று முறை திருமண ஏற்பாடுகள் நடந்தன” ஜெயலலிதா தோழிகளின் நினைவலைகள்! SivaSankari2 12458

ஜெயலலிதா என்னை, என் ஃபேமிலியில இருக்கிறவங்க கூப்பிடுற மாதிரி ‘ஜிபு’னுதான் கூப்பிடுவாங்க.

நான் அவங்களை ‘அம்மு’ன்னு கூப்பிடுவேன். அம்முவை நான் மொத மொதல்ல சந்திச்சப்போ எனக்கு 13 வயசு, அவங்களுக்கு 9 வயசு.

எங்க ரெண்டு பேருக்கும் நாலு வயசுதான் வித்தியாசம். நான் டான்ஸ் கத்துக்கிட்ட கே.ஜே. சரசா டீச்சர்கிட்ட அவங்களும் டான்ஸ் கத்துக்க வந்தப்போதான் எங்க ரெண்டு பேருக்கும் பழக்கம் ஏற்பட்டது.

என்னவோ தெரியல, முதல் நாள்லேருந்தே எங்க ரெண்டு பேருக்கும் ஒருத்தரை ஒருத்தை ரொம்பப் பிடிச்சுப்போச்சு.

அப்போ என் பிறந்தநாளைக்கெல்லாம் அவங்க என் வீட்டுக்கு வருவாங்க. எனக்கு நல்லா நினைவுல இருக்கு, நாங்க ஃப்ரெண்ட்ஸாப் பழகின பிறகு வந்த என்னோட பிறந்தநாளைக்குக் கையில கிஃப்டோட பிங்க் பாவாடை, சட்டை போட்டுக்கிட்டு கார்ல வந்து இறங்கினாங்க. பெரிய ரோஜாப்பூ ஒண்ணு நடந்து வந்த மாதிரி இருந்துச்சு அவங்களைப் பார்த்தப்போ.

எங்க டான்ஸ் மாஸ்டர் ‘அந்த ராம செளந்தர்யம்’னு நாட்டியத்துல ஒரு பதம் ஒண்ணு சொல்லித் தருவாங்க. ஜெயலலிதா அதை ரொம்ப அழகா ஆடுவாங்க. அந்த நளினத்தை வார்த்தைகளால விளக்க முடியாது.

அவங்க சினிமாவுல நடிக்கப் போனதுக்கப்புறம், எனக்குக் கல்யாணம் ஆகி போபால் போயிட்டேன்.

அதனால், கொஞ்ச காலம் நாங்க சந்திக்கவே இல்லை. நான் திருப்பி 1966-ல சென்னைக்குத் திரும்பி வந்ததுக்கு அப்புறம் மறுபடியும் எங்க நட்பு தொடர்ந்துச்சு.

அப்ப நான் ஜெமினி ஸ்டுடியோவுக்குப் பின்னால இருக்கிற கதீட்ரல் கார்டன்ல இருந்தேன். ஷூட்டிங்ல ஒரு கேப் கிடைச்சா உடனே என் வீட்டுக்கு வந்துடுவாங்க. அவங்க, சமையல்கட்டு மேடையில உட்கார்ந்திருக்க, நான் சுடச்சுட தோசை வார்த்துத் தருவேன்.

‘உடம்பு சூடு பிடிச்சுக்கிச்சு’னு சொன்னாங்கன்னா அவங்க தலையில எண்ணெய் தேய்ச்சிவிட்டிருக்கேன். அந்தக் காலக்கட்டத்துல நாங்க அக்கா, தங்கை மாதிரிதான் இருந்தோம்.

அவங்களும் நானும் பல இடங்களுக்குப் போயிருக்கிறோம். ஒரு தடவை, கோல்டன் பீச்சுக்குப் போயிருந்தோம்.

அப்போ, அங்க ஒரு ஷூட்டிங் நடந்துக்கிட்டிருந்தது. அதுல இருந்து ஒருத்தர் அம்முகிட்ட வந்து, ஒரு டைரக்டரோட பேரைச் சொல்லி, ‘அவரு வந்திருக்காரும்மா’ என்றார். இப்படி ரெண்டு தடவை வந்து சொல்லிப்பார்த்தார்.

அவரு ரொம்ப பெரிய டைரக்டர். ஆனா, அம்மு போகலையே. தனக்கு சான்ஸ் வேணும்ங்கிறதுக்காகவெல்லாம், ஒருத்தரைத் தேடிப் போய் பார்க்கிறவங்க இல்ல அம்மு.

கொஞ்ச நேரத்துல அந்த டைரக்டரே நேர்ல வந்தது தனிக்கதை. அந்தளவுக்கு சுயமரியாதை உள்ளவங்க அவங்க. தமிழ்ல ‘செம்மொழி’னு சொல்றோம் இல்லையா? அந்த மாதிரி அவங்க ஆங்கிலத்துல படிப்பாங்க. அவங்க ரசனை எப்பவுமே உயர்வாதான் இருக்கும்” என்கிற சிவசங்கரியின் வார்த்தைகளில் ஜெயலலிதா மீதான அபரிதமான மரியாதை தெரிகிறது.

இந்துமதி, எழுத்தாளர்.

“ஜெயலலிதாவுக்காக தேவலோகப் பதவிகள் எல்லாம் காத்திருந்ததாம்!”

Indhumathy_2_12592  “ஜெயலலிதாவுக்கு இரண்டு மூன்று முறை திருமண ஏற்பாடுகள் நடந்தன” ஜெயலலிதா தோழிகளின் நினைவலைகள்! Indhumathy 2 12592ஜெயாவை எனக்கு 1978 ஆம் வருஷத்திலேருந்தே இருந்தே தெரியும். நாங்கள் இருவரும் எம்.ஜி.ஆரின் அறிவுரையின் பேரில் பத்திரிகை ஒன்றை நடத்துவதாக இருந்தது.

ஆக, 80 -களின் தொடக்கத்தில் பத்திரிகை ஆரம்பிப்பதற்கான அனைத்துக்கட்ட வேலைகளும் நடந்துகொண்டிருந்தபோது ‘காவிரி தந்த கலைச்செல்வி’ நாடகத்தை நடத்துவதில் மும்மரமாக இருந்த ஜெயா, அதை அரங்கேற்றிவிட்டு அப்படியே அரசியல் பக்கம் திரும்பிவிட்டார்.

ஆனாலும், எங்கள் நட்பு எப்போதும்போல தொடர்ந்தது. என்னுடைய வீடு உட்லான்ஸ் ஹோட்டல் பக்கத்தில்தான் இருந்தது.

நான் தினமும் காலையும் மாலையும் போயஸ் கார்டன் சென்று அவரைச் சந்திப்பேன். இப்போது மீடியாவில், ‘ஜெயலலிதாவுக்குக் குழந்தை பிறந்தது’ என்ற செய்திகளைப் பார்க்கும்போது மிகவும் வேதனையாக இருக்கிறது.

இது அபத்தமானது. ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது அவரை இரும்பு மனுஷி என்றவர்கள் அப்போதே இதைப்பற்றி தைரியமாக முன்வந்து சொல்லியிருக்க வேண்டும்.

ஜெயலலிதாவுக்கு உண்மையிலேயே குழந்தை இருந்திருந்தால் அந்தக் குழந்தையை ஏன் அவர் பிரிந்து வாழ்ந்திருக்க வேண்டும்? ஒரு குழந்தை தன் தாயோடுதான் இருக்க வேண்டும் என்று நினைப்பவர் அவர்.

தாயின் அன்பிற்காக ஏங்கியவர். குடும்ப வாழ்க்கை வாழ வேண்டும் என்று விரும்பியவர்.

இப்போது மீடியாவில் வரும் செய்திபோல உண்மையாகவே அவருக்குக் குழந்தை இருந்திருந்தால் நிச்சயமாக அந்தக் குழந்தையை அவர் தன்னோடுதான் வைத்து வளர்த்தெடுத்திருப்பார்.

எனக்குத் தெரிந்த வரையில், அவருக்குக் குழந்தை இருப்பதாகச் சொல்லப்படும் செய்திகள் அனைத்துமே அபத்தமானவை.

நான் அவரை எப்போதும் வீரமான, கம்பீரமான பெண்ணாகவே பார்த்திருக்கிறேன். தன் முன் இருந்த அனைத்துச் சவால்களையும் மன தைரியத்தால் எதிர்கொண்டவர்.

குடும்ப அமைப்பில் வாழ வேண்டும் என்றுதான் அவர் பல முறை விரும்பியிருக்கிறார். அவருக்கு இரண்டு, மூன்று முறை திருமண ஏற்பாடுகள்கூட நடந்தன.

ஆனால், கடைசி நேரத்தில் அவை தடைபட்டுவிட்டன. கடைசி ஒரு மணி நேரத்தில்கூட அவர் திருமணம் நின்றிருக்கிறது. அப்போதெல்லாம் அவர் தவிப்பார். கண்ணீர்விட்டு அழுது துடிப்பார்.

அதுதான் அவருக்கு ஆண்கள் மீதான ஒருவித வெறுப்பை ஏற்படுத்தியது. அதுதான் ஆக்ரோஷமாக வெடித்தது. அதற்காக அவர் தன்னைத் தானே சிறைப்படுத்திக்கொண்டார் என்றெல்லாம் சொல்ல முடியாது. நல்ல நண்பர்களாலும் உறவினர்களாலும்கூட அவரை நெருங்க விடாமல் அவரைச் சிறைப்பிடித்தது எது என்றுதான் தெரியவில்லை.

ஜெயலலிதா முதல்வரானதும் நான் அவரைத் தொலைபேசியில் அழைத்து, ‘ஜெயலலிதாவின் ஆட்சி பொற்காலம்னு மக்கள் சொல்லணும்’ என்றேன். அவருக்கும் அப்படி ஒரு சாதனை ஆட்சி நடத்த வேண்டும் என்று ஆசை இருந்தது.

மிகவும் மென்மையான அவருக்கும், எனக்கும் ஜோசியத்தின் மீது நம்பிக்கை இருந்தது. அவர் ஜாதத்தை என்னிடம் கொடுத்து பார்த்துட்டு வரச் சொல்வார். நானும் பலமுறை அப்படிப் பார்த்து வந்திருக்கிறேன்.

ஒருமுறை மேல்மருவத்தூர் பங்காரு அடிகளாரைப் போய் பார்த்தேன். அவர் ஒரு வேப்பிலையைக் கிள்ளிப்போட்டு அதைச் சுருட்டாக மாற்றிக் கொடுத்தார். ‘எனக்கு எதற்காக சுருட்டு கொடுக்க வேண்டும்?’ என்று கேட்டதற்கு, ‘சுருட்டைப் பிடித்தவன் கடைசிவரை கீழே விடமாட்டான். அதேபோலதான் நீயும் என்னை விடக்கூடாது’ என்றார்.

இதை என் வீட்டின் டிராயிங் ஹாலில் வைத்து, தொலைப்பேசியில் ஜெயாவிடம் சொன்னபோது, ‘அடுத்த முறை வேப்பிலையை பூசணிக்காயாய் மாற்றச் சொல்லேன் பார்ப்போம்’ என்றார் நகைச்சுவையாக.

அடுத்த முறை பங்காரு அடிகளார், வேப்பிலையைக் கிள்ளிப்போட்டு தாமரைப் பூவாக மாற்றிவிட்டு, ஜெயா என்னிடம் சொன்னதை அவர் அப்படியே சொன்னதும் எனக்கு ஆச்சர்யமாகிவிட்டது.

அதோடு, ‘ஜெயாவுக்கே தேவலோக தெய்வீகப் பதவிகள் எல்லாம் காத்துக்கொண்டிருக்கிறது’ என்றும் சொன்னார். அதுமட்டுமல்ல, அவருக்கு நாட்டின் பிரதமராகக்கூடிய வாய்ப்பு இருக்கிறது என்றெல்லாம் ஜோதிடம் சொன்னது. எனக்கும் அவர் பிரதமர் ஆவார் என்ற நம்பிக்கை இருந்தது. அதற்குள் எல்லாம் கடந்துவிட்டது” என்கிறார் இந்துமதி.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

August 2018
M T W T F S S
« Jul    
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

Latest Comments

ஐரோப்பாவில் இப்படி ஒரு காட்டு மிராண்டி மக்களா ? இது தடை செய்யப்பட வேண்டும். ஜப்பானியர்கள் [...]

அன்று மேற்குலகின் ( அமெரிக்கா ) வாலை அன்டன் பாலசிங்கம் மூலம் பிடித்த இந்த பிரபாகரன், [...]

சீனர் என்ற படியால் பணம் கொடுத்தார் இதுவே ஒரு மேற்கு நாடடவராக இருந்தால் " Thank You [...]

பெரும் மதிப்புக்குரிய திரு. கோட்டாபய அவர்கள் பாதுகாப்பு செயலராக இருக்கும் போது இப்படி [...]

போதை வஸ்துக்களின் கேந்திர மையமாக ஆசியாவில் இப்போது விளங்குவது யாழ்ப்பாணமும் இலங்கையும் ஆகும் [...]

இலங்கை பத்திரிகைகள்

English News