ilakkiyainfo

ilakkiyainfo

ஜெயலலிதாவுக்கு திடீர் மாரடைப்பு : அப்போலோவில் பரபரப்பு!!

ஜெயலலிதாவுக்கு திடீர் மாரடைப்பு : அப்போலோவில் பரபரப்பு!!
December 04
18:12 2016

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவரும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, இன்று மாலையில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

அவருக்கு தொடர்ந்து சிகிச்சையளிக்கப்பட்டுவருவதாகவும் இருதயவியல் நிபுணர்கள், நுரையீரல் நிபுணர்கள், தீவிர சிகிச்சை நிபுணர்கள் அவரது உடல் நிலையைக் கண்காணித்துவருவதாகவும் அப்பல்லோ மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

ஜெயலலிதா கடந்த செப்டம்பர் 22-ஆம் தேதியன்று உடல் நலக் குறைவின் காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரது உடல் நிலையில் தொடர்ந்து முன்னேற்றம் ஏற்பட்டுவந்ததாக தெரிவிக்கப்பட்ட நிலையில், இந்தப் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

ஜெயலலிதா உடல்நிலை: மருத்துவமனையில் ஆளுநர் வித்யாசாகர் ராவ்

_92827708_gettyimages-544391112  ஜெயலலிதாவுக்கு திடீர் மாரடைப்பு : அப்போலோவில் பரபரப்பு!! 92827708 gettyimages 544391112

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு இன்று மாலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ள நிலையில், அவரது உடல்நிலை குறித்து தெரிந்து கொள்வதற்காக தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் அப்போலோ மருத்துவமனைக்கு வருகைத்தந்துள்ளார்.

உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மும்பையில் இருந்த தமிழகத்தின் பொறுப்பு ஆளுநர் வித்யாசாகரிடம் ஜெயலலிதா உடல்நிலை குறித்து பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்ந்து, மும்பையிலிருந்து புறப்பட்டு தமிழகம் திரும்பினார் ஆளுநர் வித்யாசாகர் ராவ்.

இச்சூழலில், குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தனது ட்விட்டர் பக்கத்தில், முதல்வர் ஜெயலலிதாவிற்கு மாரடைப்பு ஏற்பட்ட செய்தி குறித்து கவலை அடைந்தேன். அவர் விரைவில் குணம்பெற பிரார்த்திக்கிறேன் என்று பதிவு செய்துள்ளார்.

அப்போலோவில் என்ன நடக்கிறது?

உடல்நலக்குறைவு காரணமாக தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த செப்டம்பர் மாதம் 22-ஆம் தேதி அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) இருந்து, சிறப்பு வார்டுக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில் இன்று மாலை முதல் அப்போலோ வளாகம் பரபரப்படைந்துள்ளது.

apollo_21202  ஜெயலலிதாவுக்கு திடீர் மாரடைப்பு : அப்போலோவில் பரபரப்பு!! apollo 21202மாலை 7.30 மணி

குறிப்பாக அனைத்து துறை செயலாளர்கள் மற்றும் அனைத்து உயர் போலீஸார்களும் அப்போலோ விரைந்துள்ளதாக தகவல்கள் வருகின்றன.

நீண்ட நாட்களுக்கு பின்னர், அரசுத்துறை உயர் அதிகாரிகள் அப்போலோ விரைந்துள்ளதால், மருத்துவமனை வளாகம் பரபரப்பாக காணப்படுகிறது. சென்னையில் இருக்கும் காவல் நிலையங்களுக்கு சூழ்நிலைக்கு ஏற்ப செயல்பட உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறதாம்.

மருத்துவர்கள், ஜெயலலிதாவின் இதய செயல்பாடுகளை உற்று நோக்கி வருகிறார்களாம்

இதனால் கிரீம்ஸ் சாலையில் இருக்கும் அப்போலோவில் பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது

இரவு 8.30 மணி

மதுசூதனன்,சைதை துரைசாமி, பா. வளர்மதி ஆகியோர் தற்போது அப்போலோ மருத்துவமனை வந்துள்ளார்கள். அப்போலோ மருத்துவமனையின் வாயிலில் அதிமுகவினர் குவிந்த வண்ணம் இருக்கிறார்கள்.

ஏறத்தாழ அனைத்து தமிழக அரசு உயர் அதிகாரிகள், காவல் துறையினர் அப்போலோவிற்கு வந்து இருக்கிறார்கள். அப்போலோவில் பரபரப்பான சூழலில் நிலவுகிறது

இரவு 9.30 மணி

அப்போலோ மருத்துவமனை வளாகம் மீண்டும் பரபரப்படைந்துள்ளது இந்நிலையில் அப்போலோ மருத்துவமனை சற்றுமுன் அறிக்கை அனுப்பியுள்ளது. அதில், ஜெயலிலதாவுக்கு மாலை இதய துடிப்பு முடக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

இதற்காக இதய மற்றும் நுரையீரல் துறை நிபுணர்கள் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும், அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர் என்றும் அப்போலா தெரிவித்துள்ளது.

496bcdca-939e-4470-aff9-31ecc1bf64b0_21369_22176  ஜெயலலிதாவுக்கு திடீர் மாரடைப்பு : அப்போலோவில் பரபரப்பு!! 496bcdca 939e 4470 aff9 31ecc1bf64b0 21369 22176

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

March 2017
M T W T F S S
« Feb    
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

Latest Comments

Onb

Masha allah arumauyana pathiladi...senkodi pontra moolai illathavarkal satru sinthika vendum [...]

யூத பயங்கரவாதிகளின் இரகசிய அறிக்கை பதிப்புரிமை பெற்றது. அனுமதியின்றி பகிர்துவது,. நகலெடுப்பது இந்திய பதிப்புரிமை சட்டப்படி குற்றம். எனவே இந்த [...]

எனக்கு இந்த வேண்டும்பு, த்தகம் எங்கு கிடைக்கும். [...]

Sumathiran M.P is a traitor, he want only all tamils convert to Christian. that also [...]

கிறுக்கு பயலே , தோற்று போனவர்களின் சீருடை போட்டு பந்தா காட்டாதே , உனக்கு உண்மையில் ஆண்மை இருந்தால் [...]

இலங்கை பத்திரிகைகள்

English News