ilakkiyainfo

ilakkiyainfo

ஜெருசெலம் இஸ்ரேலின் தலைநகராகுமா? பலஸ்த்தீன தீவிரவாதம் தீவிரமடையுமா? -வேல் தர்மா (கட்டுரை)

ஜெருசெலம் இஸ்ரேலின் தலைநகராகுமா? பலஸ்த்தீன தீவிரவாதம் தீவிரமடையுமா? -வேல் தர்மா (கட்டுரை)
January 09
23:48 2017

அமெரிக்காவின் அதிபர் டொனால்ட் டிரம்ப் ஜெருசலத்தை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரிப்பேன் எனக் கருத்து வெளியிட்டது பலஸ்த்தீனியப் பிரச்சனைக்கு ஈர் அரசுத் தீர்வு என்ற அமெரிக்காவின் கொள்கையைக் கேள்விக் குறியாக்கியுள்ளது.

தேர்தல் பரப்புரையின் போது டொனால்ட் டிரம்ப் இஸ்ரேலுக்கான அமெரிக்கத் தூதுவரகத்தை டெல் அவிவ்வில் இருந்து ஜெருசெலம் நகருக்கு மாற்றுவேன் எனத் தன்னைச் சந்தித்த இஸ்ரேலியத் தலைமை அமைச்சர் பெஞ்சமின் நெத்தன்யாஹூவிடம் தெரிவித்திருந்தார்.

அன்று நடக்காதது இன்று நடக்குமா?

ஜோர்ஜ் புஷ், பில் கிளிண்டன் ஆகிய முன்னை அமெரிக்க அதிபர்களும் தமது தேர்தல் பரப்புரையின் போது ஜெருசெலத்திற்கு அமெரிக்க தூதுவரகத்தை மாற்றப் போவதாகச் சொல்லியிருந்தனர்.

ஆனால் தேர்தலில் வென்ற பின்னர் அப்படிச் செய்யவில்லை. ஆனால் டிரம்ப் வித்தியாசமானவர்.

அத்துடன் டிரம்ப்பின் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த சில மூதவை உறுப்பினர்கள் ஜெருசெலத்தை இஸ்ரேலியத் தலைநகராக ஏற்றுக் கொள்ளும் சட்ட மூலத்தை அமெரிக்கப் பாராளமன்றதின் மூதவையில் 2017-01-03-ம் திகதி சமர்ப்பித்துள்ளனர்.

பலஸ்த்தீனியர்கள் தமது அரசின் தலைநகர் கிழக்கு ஜெருசெலம் என நம்புகின்றனர். ஜெருசெலத்தின் கிழக்கையும் மேற்கையும் இணைத்து அதை இஸ்ரேலின் தலைநகராக்கினால் மேற்குக் கரையில் அமைதி குலையும் என பலஸ்த்தீனியர்கள் எச்சரிக்கின்றனர்.

அரபு நாடுகள் அமெரிக்காவிற்கு எதிராகத்திரும்புமா?

புதிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் ஜெருசெலத்திற்கு அமெரிக்கத் தூதுவரகத்தை நகர்த்தும் எண்ணம் தொடர்பாகக் கருத்து வெளியிட்ட ஜோர்தானியத் தகவற்துறை அமைச்சர் அதனால் அமெரிக்காவுடன் நட்பைப் பேணும் அரபு நாடுகளுக்கும் அமெரிக்காவிற்கு இடையிலான உறவில் பாதிப்பு ஏற்படும் என்றார்.

ஜோர்தானைப் பொறுத்தவரை  தூதுவரகத்தை நகர்த்துவது  செங்கோட்டைத் தாண்டியது போலாகும் என்றார் மேலும் அவர்.

மேலும் இந்த நகர்வு அரபுத் தீவிரவாதிகளுக்கு ஒரு கொடையாக அமைந்து அரபு நாட்டு வீதிகளெங்கும் கலவரம் உண்டாகும் என்றார். அரபு நாடுகளிலேயே அமெரிக்காவுடன் அதிக நெருக்கமான உறவைப் பேணும் நாடு ஜோர்தான் ஆகும்.

ஜோர்தான் வெளியிட்ட கருத்தைத் தொடர்ந்து மற்ற அரபுநாடுகளும் இதே போன்ற ஆட்சேபனையைத் தெரிவிக்கும் என எதிர் பார்க்கப் படுகின்றது. 1967-ம் ஆண்டுப் போரின் போது ஜோர்தானிடமிருந்தே இஸ்ரேல் கிழக்கு ஜெருசெலத்தைக் கைப்பற்றியது.

israel_2145194f  ஜெருசெலம் இஸ்ரேலின் தலைநகராகுமா? பலஸ்த்தீன தீவிரவாதம் தீவிரமடையுமா? -வேல் தர்மா (கட்டுரை) israel 2145194f

ஐநா தீர்மானம் – 181

ஐக்கிய நாடுகள் சபை ஜெருசலம்  எந்த நாட்டுக்கும் சொந்தமில்லை அது ஒரு பன்னாட்டு நகரம் என்ற நிலைப்பாட்டில் உள்ளது.

1947-ம் ஆண்டு ஜெருசெலம் நகர் தொடர்பாக ஐநா சபையில் தீர்மானம் -181 நிறைவேற்றப்பட்டது.  அதன்படி அது ஐநாவால் நிர்வகிக்கப்படும் தனி நிலப்பரப்பாகப் பிரகடனப் படுத்தப்பட்டது. அதை யூதர்கள் ஏற்றுக் கொண்டனர்.

அரபுக்கள் எதிர்த்தனர். பல பன்னாட்டு அமைப்புக்கள் ஜெருசெலம் இஸ்ரேலுக்குச் சொந்தம் என்பதை ஏற்றுக் கொள்ளவில்லை. டிரம்ப் இஸ்ரேலுக்கான அமெரிக்கத் தூதுவராக நியமிக்கவிருக்கும் டேவிட் ஃபிரீட்மன் தான் ஜெருசெலத்தில் கடமையாற்றக் காத்திருப்பதாகச் சொல்லியுள்ளார்.

இரு போர்கள்

1948இல் நடந்த  அரபு  இஸ்ரேலியப் போரின் பின்னர் 1949-ம் ஆண்டு செய்யப்பட்ட ஆர்மிஸ்றிஸ் உடன்படிக்கைகளின் படி வரையபட்ட  ஆர்மிஸ்றிஸ்  கோடுகளின்படி மேற்கு ஜெருசெலம் இஸ்ரேலினுடைய பகுதியாக்கப்பட்டது.

1967-ம் ஆண்டு நடந்த அரபு இஸ்ரேலியப் போரின் போது கிழக்கு ஜெருசெலம், மேற்குக் கரை, காசா நிலப்பரப்பு, சினாய் பாலைவனக் கோலான் குன்றுகள் ஆகியவற்றை இஸ்ரேல் ஆக்கிரமித்துக் கொண்டது.

கிழக்கும் மேற்கும் வேறா ஒன்றா?

பலஸ்த்தீனியர்களுக்கும் இஸ்ரேலியர்களுக்கும் இடையிலான பேச்சு வார்த்தையில் பெரும் முள்ளாக இருப்பது ஜெருசலம் நகர்.

இரு தரப்பினரும் அது தமக்குச் சொந்தம் என அடம் பிடித்துக் கொண்டிருக்கின்றனர். மேற்கு ஜெருசெலத்தில் இஸ்ரேலின் இருப்பை பல நாடுகள் ஏற்றுக் கொண்டுள்ளன.

ஆனால் கிழக்கு ஜெருசெலத்தை ஒட்டியே பெரும் முரண்பாடு நிலவுகின்றது.

1967-ம் ஆண்டு நடந்த ஆறுநாட் போரில் இஸ்ரேல் கிழக்கு ஜெருசெலத்தை ஆக்கிரமித்துக் கொண்டது.

அதன் பின்னர் 1980-ம் ஆண்டு  இஸ்ரேல் ஜெருசெலம் சட்டம் 1980ஐ தனது பராளமன்றத்தில் நிறைவேற்றி முழு ஜெருசெலமும் தனது என்ற நிலைப்பாட்டை எடுத்தது.

இதற்கு எதிராக ஐநா சபையில் தீர்மானம்-478 நிறைவேற்றப்பட்டது. இஸ்ரேலில் நிறைவேற்றப்பட்ட சட்டம் பன்னாட்டு சட்டங்களுக்கு முரணானது எனத் தெரிவித்தது தீர்மானம்-478.

அத்துடன் ஐநா உறுப்பு நாடுகள் இஸ்ரேலுக்கான தூதுவரகத்தை ஜெருசெலத்தில் அமைக்கக் கூடாது எனவும் அந்தத் தீர்மானம்-478 சொல்கின்றது.

இதைத் தொடர்ந்து அமெரிக்கா வாழ் யூதர்களின் முயற்ச்சியால் அமெரிக்கப் பாராளமன்றம் 1996-ம் ஆண்டு ஜெருசெலம் தூதுவரகம் சட்டத்தை நிறைவேற்றியது.

அச்சட்டத்தில் ஜெருசெலம் இஸ்ரேலின் தலைநகர் என்பதுடன் அமெரிக்காவின் இஸ்ரேலுக்கான தூதுவரகம் டெல் அவிவ்வில் இருந்து ஜெருசெலத்திற்கு மாற்றப்பட வேண்டும் எனச் சொல்லியது.

அந்தச் சட்டத்தை நிறைவேற்றும் அதிகாரம் அமெரிக்க அதிபருக்கு வழங்கப்பட்டது. அதை 2016-ம் ஆண்டு வரை எந்த ஒரு அமெரிக்க அதிபரும் செயற்படுத்தவில்லை.

தற்போது டொனால்ட் டிரம்ப் தான் அதனை நிறைவேற்றுவேன் என்கின்றார். அதற்கு ஏற்ற வகையில் இஸ்ரேல் ஜெருசெலம் நகரில் யூதர்களைக் குடியேற்றுவதை அதிகரித்துள்ளது.

அன்று கதை வேறு

இஸ்ரேல் என்ற நாடு உருவாகிய முதல் மூன்று ஆண்டுகளில் அது பல தத்துக்களைச் சந்திக்க வேண்டியிருந்தது. சுற்றிவர எதிர்ப்புணர்வு மிக்க அரபு நாடுகளின் மத்தியில் இஸ்ரேலின் தொடர்ச்சியான இருப்புப் பற்றி பல ஐயங்கள் நிலவின.

அரபுக்களின் ஆக்கிரமிப்பு ஆபத்தின் மத்தியில் பல முயற்ச்சிக்கு மத்தியில் இஸ்ரேலை பல நாடுகள் அங்கிகரித்தன. முதலில் அமெரிக்க ஒரு சட்டபூர்வ நாடாக அங்கீகரிக்கவில்லை. ஒரு உண்மை சார் நாடாகவே அங்கீகரித்தது. இஸ்ரேலை முதலில் அங்கீகரித்த நாடுகளில் சோவியத் ஒன்றியமும் ஒன்று.

அமெரிக்க கடவுட்சீட்டுச் சட்டம்
2002-ம் ஆண்டு அமெரிக்கப் பாராளமன்றம் ஜெருசலத்தில் பிறந்த அமெரிக்கர்களின் கடவுட்சீட்டில் அவர்கள் விரும்புமிடத்து அவர்களின் பிறப்பிடம் இஸ்ரேல் எனக் குறிப்பிடலாம் எனக் கடவுட்சீட்டுச் சட்டத்தை இயற்றி இருந்தது.

ஆனால் இது ஐநாவின் நிலைப்பாடான ஜெருசெலம் ஒரு தனிப் பிராந்தியம் என்ற நிலைப்பாட்டிறு முரணாக இருந்தது. அத்துடன் பல அரபு நாடுகளின் ஆத்திரத்தையும் கிளறியிருந்தது.

இதனால் அப்போது அமெரிக்க அதிபராக இருந்த ஜோர்ஜ் புஷ் அந்தச் சட்டத்தை நடைமுறைப் படுத்தப் போவதில்லை என அறிவித்திருந்தார்.

அவரைத் தொடர்ந்து வந்த எல்லா அதிபர்களும் அதையே கடைப்பிடித்தார்கள். அமெரிக்காவில் வதிபவர்களும் அமெரிக்கக் குடியுரிமை பெற்றவர்களுமான ஒரு யூதத் தம்பதிகளுக்குப் ஜெருசலம் நகரில் பிறந்த மெனக்கெம் ஜிவொடொஃப்ஸ்கி (Menachem Zivotofsky) என்னும் மகனின் கடவுட் சீட்டில் அவர் பிறந்த நாடு இஸ்ரேல் எனக்குறிப்பிட வேண்டும் என்ற கோரிக்கை அமெரிக்க அரசால் நிராகரிக்கப்பட்டது.

அதை எதிர்த்து பெற்றோர்கள் தொடுத்த வழக்கு அமெரிக்காவின் உச்ச நீதிமன்றம் வரை சென்றது. அதில் 2012-ம் ஆண்டு தீர்ப்பளித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜெருசலம் இஸ்ரேலுக்குச் சொந்தமானது அல்ல என குடியரசுத் தலைவர் சொல்வதில் தலையிடும் அதிகாரம் அமெரிக்கப் பாராளமன்றத்திற்கு இல்லை எனத் தீர்பளித்தது.

yemen-resolution-unsc-houthis-si_  ஜெருசெலம் இஸ்ரேலின் தலைநகராகுமா? பலஸ்த்தீன தீவிரவாதம் தீவிரமடையுமா? -வேல் தர்மா (கட்டுரை) yemen resolution unsc houthis

இன்னும் ஒரு தீர்மானம்

2016 டிசம்பர் 23-ம் திகதி ஐநா பாதுகாப்புச் சபையில் மேலும் ஒரு தீர்மானம் இஸ்ரேலுக்கு எதிராக நிறைவேற்றப்பட்டது.

கிழக்கு ஜெருசெலத்தில் செய்யப்படும்  யூதக் குடியேற்றங்களைக் கண்டித்ததுடன் அவை சட்டபூர்வமானதல்ல என்கின்றது அந்தத் தீர்மானம்-2334.

இந்தத்   தீர்மானம் பலஸ்த்தீனியர்களாலோ அல்லது அதை முன் மொழிந்த  எகிப்தியராலோ வரையப்பட்டது அல்ல ஒரு மேற்கு நாட்டு வல்லரசுதான் அதை வரைந்தது என அதன் வாசகங்களை வாசிக்கும் போது தெரிகின்றது என்றார் ஐநாவிற்கான இஸ்ரேலியப் பிரதிநிதி.

அதை வரைவதில் மட்டுமல்ல அதை நிறைவேற்றுவதற்கான ஆதரவு தேடுதலிலும் பிரித்தானியா பெரும் பங்கு வகித்தது.

இது இஸ்ரேல் தொடர்பாக டொனால்ட் டிரம்பின் நிர்வாகத்திற்கும் பிரித்தானியாவிற்கும் இடையில் தோன்றப் போகும் முரண்பாட்டிற்கு கட்டியம் கூறுகின்றது.

தீர்மானம்-2334ஐ அமெரிக்கா தனது இரத்து (வீட்டோ) அதிகாரத்தைப் பாவித்து இரத்துச் செய்ய வேண்டும் என புதிய அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிபர் பராக் ஒபாமாவிடம் விடுத்த வேண்டு கோளையும் புறக்கணித்து ஐநா பொதுச்சபையில் அமெரிக்க தீர்மானம்-2334 தொடர்பான வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.

பல இஸ்ரேலியர்கள் ஐநா தீர்மானங்கள் தம்மை ஏதும் செய்யாது என மார் தட்டிக் கொண்டிருக்கையில் இஸ்ரேலிய வர்த்தக நிறுவனங்களை கறுப்புப் பட்டியலில் இட்டு அவற்றுக்கு எதிரான தடைகளை விதிப்பதை இட்டு ஐநாவில் நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

கிறிஸ்த்தவர்களின் வாதம்
1944-ம் ஆண்டு லெபனானில் பிறந்த மரோனைற் கிறிஸ்த்தவரான சரித்திரவியலாளர் பிலிப் ஹிற்றி என்பவர் அமெரிக்க அரசுக்குச் சாட்சியமளிக்கையில் பலஸ்த்தீனத்தில் யூதர்களுக்கு என்று ஒரு அரசு இருந்திருக்கவில்லை எனத் தெரிவித்திருந்தார்.

அவரது கருத்து ஊடகங்களில் வெளிவந்த போது விஞ்ஞானி அல்பேர்ட் ஐன்ஸ்டைன் உட்படப் பல யூதர்கள் ஆட்சேபனை தெரிவித்து தமது தரப்பு விவாதங்களை முன்வைத்தனர்.

வரலாறு எங்கு ஆரம்பமானது – அரபு வாதம்

அரபுக்கள் பலஸ்த்தீனியத்தின்  வரலாறு 1948இல் இருந்து  பார்க்க விரும்புகின்றார்கள் 1948இல் ஐரோப்பாவில் இருந்து கொண்டு வந்து குடியேற்றபட்ட யூதர்களால் இஸ்ரேல் உருவானது என்கின்றார்கள் அவர்கள்.

இஸ்ரேல் என்ற ஒரு நாடு உலக வரைபடத்தில் இருக்க கூடாது என்ற நிலைப்பாட்டில் பல அரபு நாடுகள் இருந்தன. இன்றும் சில நாடுகள் வாயளவில் மட்டும் சொல்லிக் கொண்டிருக்கின்றன.

ஈரான் மட்டுமே அதை ஓரளவிற்கு செயலிலும் காட்டுகின்றது. சவுதி அரேபியா உட்படப் பல நாடுகள் இஸ்ரேலுடன் இரகசியமாக உறவுகளை வைத்திருக்கின்றன.

%e0%ae%ae%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be  ஜெருசெலம் இஸ்ரேலின் தலைநகராகுமா? பலஸ்த்தீன தீவிரவாதம் தீவிரமடையுமா? -வேல் தர்மா (கட்டுரை)

மக்கா, மதீனா ஆகிய இரு பெரும் புனித நகர்களைப் போலவே ஜெருசெலமும் இஸ்லாமியர்களின் புனித நகராகும். அங்குள்ள மலைக் கோவிலில் இருந்தே இறை தூதுவரான அல்லா சொர்க்கத்திற்கு பறந்து சென்றார் என்கின்றனர் அரபுக்கள்.

வரலாறு எப்போது ஆரம்பித்தது – யூதர்களின் வாதம்
இஸ்லாம் தோன்ற முன்னர் கிறிஸ்த்தவம் தோன்றியது. கிறிஸ்த்தவம் தோன்ற முன்னர் யூதர்களின் மதம் தோன்றியது.

மற்ற இரு மதங்களுக்கு முன்னரே யூத மதம் ஜெருசலத்தைப் புனித நகராகக் கொண்டுவிட்டது என்பது யூதர்களின் வாதம்.

இற்றைக்கு 3286 ஆண்டுகளுக்கு முன்னர். மோசஸ் எகிப்தில் அடிமைகளாக இருந்த இஸ்ரேலியர்களை மீட்டுக் கொண்டு ஜோர்தானிய நதியைக் கடந்து அதன் மேற்குப் புறமாக ஜோர்தான் நதிக்கும் மத்திய தரைக்கடலுக்கும் இடையில் உள்ள நிலப்பரப்பை இஸ்ரேலியர்களின் நாடாக்கினார்.

இப் பிரதேசம் இப்போது இஸ்ரேல் என்றும் மேற்குக் கரை என்றும் காஸா நிலப்பரப்பு என்றும் ஜோர்தான் நாடு என்றும் நான்கு பகுதிகளாக இருப்பதே தமது தாயகம் என்கின்றனர் யூதர்கள்.

அங்கிருந்து பல படையெடுப்புக்களால் தாம் விரட்டப்பட்டு உலகின் பல்வேறு பகுதிகளில் குடியேறினோம் என்பது யூதர்களின் கருத்து.

இஸ்ரேலியர்களின் அரசு கிறிஸ்த்துவிற்கு முன்னர் 796ம் ஆண்டில் இரண்டாகப் பிளவு பட்டது. அதன் வடபகுதியை கி.மு 55-ம் ஆண்டு அசிரியப் பேரரசு கைப்பற்றியது.

கி மு 422-ம் ஆண்டு பபிலோனியர்கள் இஸ்ரேலைக் கைப்பற்றி அவர்களின் புனித ஆலயத்தை அழித்தனர். இஸ்ரேலியர்கள் பலர் அவர்களது மண்ணில் இருந்து விரட்டப்பட்டனர்.

கி மூ 352-ல் மீண்டும் இஸ்ரேலியர்கள் தமது நாட்டிற்கு வந்து மீண்டும் தமது ஆலயத்தைக் கட்டி எழுப்பினர். ஆனால் நாற்பது ஆண்டுகளின்  பின்னர் கிரேக்கர்  இஸ்ரேலைக் கைப்பற்றினர்.

பின்னர் கி. மு 63-ம் ஆண்டு ரோமப் பேரரசு இஸ்ரேலை ஆக்கிரமித்தது. மீண்டும் இஸ்ரேலியர்களின் புனித ஆலயம் இடிக்கப்பட்டது. கி. பி 638-ம் ஆண்டு இஸ்லாமியர்கள் கலிஃபா ஒமரின் தலைமையில் இஸ்ரேலைக் கைப்பற்றினர்.

1299-ம் ஆண்டு உதுமானியப் பேரரசு இஸ்ரேலைக் கைப்பற்றியது. பலஸ்த்தீனம் என்பது ஒரு நாடல்ல அது ஒரு பிரதேசத்தின் பெயர் என்கின்றனர் யூதர்கள்.

பைபிளில் பல இடங்களில் Peleshet எனச் சொல்லப்படுவது ஆங்கிலத்தில் Philistine எனத் திரிபுபட்டு பலஸ்த்தீனம் ஆனது என்கின்றனர் எனத் கிறிஸ்த்தவர்கள்.

1920-ம் ஆண்டு உதுமானியப் பேரரசிடமிருந்து கைப்பற்றப் பட்ட மத்திய தரைக்கடலை ஒட்டிய ஒரு பிரதேசத்திற்கு பிரித்தானியப் பேரரசு பலஸ்த்தீன ஆணையகம் எனப் பெயரிட்டத்தில் இருந்தே பலஸ்த்தீனம் என்ற ஒரு நாடு உருவாக்கப்பட்டது

மலைக்கோவில் வாசலில்

ஜெருசலத்தின் முதலாவது யூத வழிபாட்டுத் தலம் கிறிஸ்துவிற்கு 957 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டுப்பட்டுவிட்டது.

அதாவது இஸ்லாமிய மதம் தோன்றுவதற்கு 1579 ஆண்டுகளுக்கு முன்னர் யூதர்களின் வழிபாட்டுத்தலம் ஜெருசலத்தில் கட்டப்பட்டுவிட்டது.  மேலும் பலஸ்த்தீனம் என ஒரு நாடோ அரசோ ஒரு போதும் இருந்ததில்லை என்பது யூதர்களின் வாதம்.

அதே வேளை  ஜெருசலம்  என்பது எப்போதும் குழப்பத்தின் உறைவிடமாகவே இருந்து வருகின்றது.

பத்தொன்பதாம் நூற்றாண்டில் 0.9 சதுர மைல்களும் 1967-ம் ஆண்டு 2.5 சதுர மைல்களும் 2012-ம் ஆண்டு 49 சதுர மைல்களும் கொண்ட பிரதேசம் ஜெருசலம் நகராக இருக்கின்றது.

புனித குரானில் ஒரு இடத்தில் கூட ஜெருசலம் நகர் பற்றிக் குறிப்பிடப்படவில்லை. பைபிளில் அறுநூற்றிற்கு மேற்பட்ட இடங்களில் ஜெருசலம் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது.

showimage-ashx  ஜெருசெலம் இஸ்ரேலின் தலைநகராகுமா? பலஸ்த்தீன தீவிரவாதம் தீவிரமடையுமா? -வேல் தர்மா (கட்டுரை) ShowImageTemple Mount எ

ஜெருசலம் நகரில் உள்ள் Temple Mount என்பது யூதர்களால் கட்டபப்ட்டது. பின்னர் உதுமானியப் பேரரசு ஜெருசலத்தைக் கைப்பற்றி அங்கு சுவர்களை எழுப்பி மூன்று மதத்தினரும் வழிபடக் கூடிய ஏற்பாடு செய்யப்பட்டது.

உதுமானியப் பேரரசு 4.5 கிலோ மீட்டர் நீள சுவரை ஒரு சதுர கிலோ மீட்டர் பிரதேசத்தில் எழுப்பியது முதலாம் உலகப் போரின் பின்னர் ஜெருசலத்தைப் பிரித்தானியப் பேரரசு கைப்பற்றி அதை விரிவாக்கியது.

சிலுவைப் போரின் பின்னர் ஜெருசலத்தைக் கைப்பற்றிய கிறிஸ்த்தவர்கள் அங்கிருந்து யூதர்களையும் இஸ்லாமியர்களையும் விரட்டினர். ஆனால் 1187-ம் அதை மீளக் கைப்பற்றிய இஸ்லாமியர் அங்கு யூதர்களை மீளக் குடியேற அனுமதித்தனர்.

படைத்துறை, தொழில்நுட்பம், பொருளாதாரம் ஆகியவற்றில் இஸ்ரேல் அடைந்து வரும் வளர்ச்சி அபரிமிதமானது. அதேவேளை அரபு நாடுகளிடையேயான ஒற்றுமையின்மையும் உள்நாட்டுக் குழப்பங்களும் பலஸ்த்தீனியர்களுக்கு சாதகமாக இல்லை.

ஐ எஸ் அமைப்பு பலஸ்த்தீனியர்களுக்கு ஆதரவாகவோ இஸ்ரேலுக்கு எதிராகவோ செயற்பட்டதில்லை. இஸ்ரேலால் தான் நினைத்ததை நடத்தி முடிக்கக் கூடிய நிலை உருவாகியுள்ளது.

-வேல் தர்மா-

ஜெருசலம் யாருக்குச் சொந்தம்?- வேல் தர்மா (கட்டுரை)

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *


*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

January 2017
M T W T F S S
« Dec    
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

Latest Comments

Good question, girls are a object for Islam and Arabs [...]

அந்த நாயை சுட்டு தள்ளுவதை விட்டு விட்டு இப்படி போராடி கைது செய்யவா வேண்டும்.உடனடியாக நாடு [...]

இந்தப் பெண்ணோடு ஒப்பிடும்போது வயித்துப் பிழைப்பிற்காக விபச்சாரம் செய்யும் பெண்கள் எவ்வளவோ மேல். பிரபாகரன் உயிருடன் இருக்கும்வரை இவளால் வன்னியில் கால் [...]

நோர்வேயில் இருந்து சென்று தாயையும் மகழையும் கற்களித்த புலி முக்கியஸ்தர் Joshep joy கைது நோர்வேயில் இருந்து வவுனியாவுக்கு சென்ற 28 [...]

Jeyalalitha is a keep (setup) of Womanized bad actor MGR, she danced half naked in [...]

இலங்கை பத்திரிகைகள்

English News