ilakkiyainfo

ilakkiyainfo

50 டொலர்களை திருடியதால் 36 வருடங்கள் சிறையிலிருந்த நபரை விடுவிக்குமாறு அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு

50 டொலர்களை திருடியதால் 36 வருடங்கள் சிறையிலிருந்த நபரை விடுவிக்குமாறு அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு
September 03
10:07 2019

அமெ­ரிக்­காவின் அல­பாமா மாநி­லத்தைச் சேர்ந்த அலவின் கென்னார்ட் எனும் இந்­நபர் 1983 ஆம் ஆண்டு 22 வயது இளை­ஞ­ராக இருந்­த­போது ஆயுள் தண்­டனை விதிக்­கப்­பட்டு சிறையில் அடைக்­கப்­பட்டார்.

பேக்­கரி ஒன்றில் 50.75 டொலர்கள் கொள்­ளை­ய­டித்­த­மையே இதற்குக் காரணம்.

இவர் அதற்கு முன்­னரும் 3 தட­வைகள் நீதி­மன்­றத்தால் குற்­ற­வா­ளி­யாக காணப்­பட்­டி­ருந்தார்.

1979 ஆம் ஆண்டு அவர் 3 ஆவது கொள்ளைச் சம்­ப­வ­மொன்றில் குற்­ற­வா­ளி­யாக காணப்­பட்­டதால் அவர் 3 வருட கண்­கா­ணிப்பில் இருக்க வேண்டும் என உத்­த­ர­வி­டப்­பட்­டி­ருந்­தது.

alvin-kennard-via  50 டொலர்களை திருடியதால் 36 வருடங்கள் சிறையிலிருந்த நபரை விடுவிக்குமாறு அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு alvin kennard via e1567505144676

பேக்­க­ரி­யொன்றில் 50.75 டொலர் கொள்­ளை­ய­டித்து, 1983 ஆம் ஆண்டு 4 ஆவது தட­வை­யாக நீதி­மன்றில் நிறுத்­தப்­பட்­ட­தை­ய­டுத்து, அல­ப­மாவின் பழைய தண்­டனைக் கொவையின் கீழ் அல்வின் கென்­னார்ட்­டுக்கு 1983 ஆம் ஆண்டு, பரோலில் வெளி­வர முடி­யாத ஆயுள் தண்­டனை விதிக்­கப்­பட்­டது.

இதனால் 36 வரு­டங்­க­ளாக அல்வின் கென்னார்ட் சிறையில் அடைக்­கப்­பட்­டுள்ளார். தற்­போது அவ­ருக்கு 58 வய­தா­கு­கி­றது.

சட்­டத்­த­ரணி ஒருவர் இல்­லா­ததால் இது போன்ற சிறு குற்­றங்­க­ளுக்கு நீண்ட காலத் தண்­டனை அனு­ப­விக்கும் கைதி­களின் விடயம் அதி­கா­ரி­களின் கவ­னத்­துக்கு வந்­தது.

அதை­ய­டுத்து, அல்வின் கென்­னார்ட்­டுக்­காக வாதா­டு­வ­தற்­காக கார்லா க்ரவ்டர் எனும் சட்­டத்­த­ரணி நிய­மிக்­கப்­பட்டார்.

அல்வின் கென்­னார்ட்­டுக்கு விதிக்­கப்­பட்ட தண்­டனை அள­வுக்கு அதி­க­மா­னது என நீதி­பதி டேவிட் கார்­பென்­டரை சட்­டத்­த­ரணி கார்லா க்ரவ்டர் ஏற்கச் செய்தார்.

தற்­போ­தைய சட்­டங்­களின் படி, மேற்­படி குற்­றத்­துக்கு அதி­க­பட்­ச­மாக 20 வருட சிறைத்­தண்­ட­னையே விதிக்­கப்­படும் என அவர் சுட்­டிக்­காட்­டினார்.

அதன்பின் அல்வின் கென்­னார்ட்டை சிறை­யி­லி­ருந்து விடுவிக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

தனது குற்றச்செயல்களுக்காக தான் வருந்துவதாக அல்வின் கென்னார்ட் நீதிமன்றத்தில் மீள் தீர்ப்புக்கு முன்னர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

September 2019
M T W T F S S
« Aug    
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

Latest Comments

காலம் கடந்து சொல்ல படும் எல்லோருக்கும் அறிந்த ரகசியம் , உலக பயங்கரவாதிகளின் தலைவன் அமெரிக்கா [...]

Jey

Losliya is 23 yrs old. Not a kid anymore. She has the right to live [...]

ராஜபக்சேக்கள் சொன்னால் அதை செய்யும் தீரர்கள், 2007ல் ஒரு ஐரோப்பிய நாட்டில் அவர்களை சந்தித்த போது [...]

இது தான் யாழ்ப்பாணிகள், வன்னி காட்டு மிராண்டிகளின் கலாச்சாரம் , முன்பு மறைமுகமாக செய்தார்கள் , [...]

மிகப் பெரும் விஞ்ஞானிகள் , இவர்கள் நாசாவின் பணியாற்ற வேண்டியவர்கள் , ஆறறிவு அல்ல 12 அறிவு உடையவர்கள் , [...]

இலங்கை பத்திரிகைகள்

English News