ilakkiyainfo

ilakkiyainfo

தங்கக் கழிவறையை தருகிறோம், இதை கேட்காதீர்கள்: டிரம்புக்கு மறுப்பு தெரிவித்த அருங்காட்சியகம்

தங்கக் கழிவறையை தருகிறோம், இதை கேட்காதீர்கள்: டிரம்புக்கு மறுப்பு தெரிவித்த அருங்காட்சியகம்
January 30
22:03 2018

ஓர் அமெரிக்க அதிபரோ அவரது மனைவியோ வெள்ளை மாளிகையின் அறைகளை அலங்கரிக்க அருங்காட்சியகங்களில் ஓவியங்களை கடனாகக் கேட்பது பொதுவான விஷயம்.

ஆனால், தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப். அப்படி ஒரு ஓவியத்தைக் கடன் கேட்டபோது நியூயார்க் அருங்காட்சியகம் சொன்ன பதில் திரும்பிப் பார்க்க வைப்பதுடன், அந்த ஓவியத்தை அந்த அருங்காட்சியகம் எவ்வளவு மதிக்கிறது என்பதைக் காட்டியது.

நியூயார்க்கின் குகென்ஹெய்ம் அருங்காட்சியகத்தில் உள்ள ‘வான் கோஹ்’ என்னும் ஓவியரின் ‘பனி படர்ந்த நிலம்’ ஒன்றைக் காட்டும் ஓவியத்தை கடனாக தரும்படி கோரிக்கை விடுத்திருந்தார் டிரம்ப். இந்தக் கோரிக்கையை அந்த அருங்காட்சியகம் நிராகரித்துவிட்டதாக செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

‘வாஷிங்டன் போஸ்ட்’ வெளியிட்டுள்ள செய்தியில் வான் கோஹ் வரைந்த ‘பனி படர்ந்த நிலம்’ ஓவியத்தை கொண்டு வெள்ளைமாளிகையை அலங்கரிக்க முடியாமல் போனதற்கு அருங்காட்சியகம் மன்னிப்பு தெரிவித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

ஆனால் குகென்ஹெய்ம் அருங்காட்சியகம், வேண்டுமானால் ”இத்தாலிய ஓவியர் மௌரிசியோ கேட்டலன் செய்த 18 கேரட் தங்கத்தாலான கழிவறையை வெள்ளை மாளிகைக்கு தரத் தயாராக இருக்கிறோம்” என தெரிவித்துள்ளது.

_99762088_trumptoilet  தங்கக் கழிவறையை தருகிறோம், இதை கேட்காதீர்கள்: டிரம்புக்கு மறுப்பு தெரிவித்த அருங்காட்சியகம் 99762088 trumptoiletவெள்ளை மாளிகை இது குறித்து கருத்து தெரிவிக்கவில்லை.

வாஷிங்டன் போஸ்ட் கருத்துப்படி, கடந்த செப்டம்பர் மாதம் வெள்ளை மாளிகை விடுத்த வேண்டுகோளுக்கு அருங்காட்சியக காப்பாட்சியர் நான்சி ஸ்பெக்டர் பதிலளித்தார்.

” இந்த ஓவியமானது அருங்காட்சியகத்தின் தான்ஹவுசர் சேகரிப்பின் ஒரு பகுதியாக இருப்பதாலும் மிக அரிதான நிகழ்வைத் தவிர மற்ற இடங்களுக்கு எடுத்துச் செல்ல தடை இருப்பதாலும் இதனை வெள்ளை மாளிகைக்கு கடனாக தரமுடியாது” என அவர் எழுதியுள்ள மின்னஞ்சலில் தெரிவித்துள்ளார்.

_99755807_84.3239_ph_web  தங்கக் கழிவறையை தருகிறோம், இதை கேட்காதீர்கள்: டிரம்புக்கு மறுப்பு தெரிவித்த அருங்காட்சியகம் 99755807 84வான் கோஹ் வரைந்த ஓவியம்

இந்த 1888 ஆம் ஆண்டைச் சேர்ந்த வான் கோஹ் ஓவியமானது உரிமையாளர்களின் அனுமதியுடன் அருங்காட்சியகத்தின் துணை நிறுவனங்களில் காட்சிப்படுத்தப்படும் என அந்த மின்னஞ்சலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

”மௌரிசியோ கேட்டலன் செய்த தங்கக் கழிவறையானது மிகவும் மதிப்புமிக்கது. உடையக்கூடியது. இருப்பினும் இதனை நிறுவுவது மற்றும் பத்திரமாக உபயோகப்படுத்துவது குறித்து அனைத்து விதமான வழிகாட்டுதல்களையும் நாங்கள் வழங்குவோம்” என நான்சி ஸ்பெக்டர் எழுதியுள்ளார்.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

November 2018
M T W T F S S
« Oct    
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

Latest Comments

சில நாடுகளில் தேச நலனை கருத்தில் கொண்டு ராணுவம் அரசை கைப்பற்றி அடுத்த தேர்தல் வரை ஆடசி [...]

இந்த அலோலோயா மதமாற்றுக்கார CIA ஏஜென்ட் , உடனடியாக கைது செய்ய பட வேண்டும் [...]

தமிழ் தேசியம் என்பது ஒரு " சாக்கடை " என்பது மீண்டும் மீண்டும் நிரூபணமாகி உள்ளது, தமிழ் தேசியம் பேசுபவர்கள் [...]

மிக சரியான நடவடிக்கை , பாசிச மேற்கு நாடுகளை விளக்கி வைக்க வேண்டும். [...]

சுவிட்சர்லாந்தின் தேசிய அணியின் சார்பில் இலங்கை தமிழரான சோமசுந்தரம் சுகந்தன் என்பவர் கலந்து கொண்டுள்ளார்.what means it ? has [...]

இலங்கை பத்திரிகைகள்

English News