ilakkiyainfo

ilakkiyainfo

தனக்கு தாக்குதல் குறித்து அறிவிக்கப்படவில்லையென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிராகரித்துள்ளார்.

தனக்கு தாக்குதல் குறித்து அறிவிக்கப்படவில்லையென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிராகரித்துள்ளார்.
May 30
14:05 2019

கடந்த 19 ஆம் திகதி ஏப்ரல் மாதம் இடம்பெற்ற பொலிஸ் அதிகாரிகள் கூட்டத்தில் 21 ஆம் திகதி உயிர்ப்பு ஞாயிறு தினத்தாக்குதல் குறித்து தனக்கு அறிவிக்கப்பட்டதாக கூறப்படுவதை ஜனாதிபதி நிராகரித்துள்ளார்.

இந்நிலையில், பயங்­க­ர­வாத தாக்­குதல் குறித்து அப்­போ­தைய பாது­காப்பு செயலாள­ருக்கு தெரி­வித்தும், தாக்­குதல் குறித்த தக­வல்கள் புல­னாய்வு மீளாய்­வுக்­கு­ழுவில் முன்­வைக்­கப்­பட்டும் பாது­காப்பு பிர­தா­னியும் பாது­காப்பு அமைச்­ச­ரு­மான ஜனா­தி­பதி வேடிக்­கையா பார்த்­துக்­கொண்­டி­ருந்தார் என பாரா­ளு­மன்ற விசேட தெரி­வுக்­குழு உறுப்­பி­னர்கள் பாது­காப்பு செய­லாளர், புல­னாய்வு பிர­தானி ஆகி­யோ­ரிடம் கேள்வி எழுப்­பினர்.

உயிர்த்த ஞாயிறு அன்று இடம் பெற்ற தாக்­குதல் குறித்து ஆராய்ந்து பாரா­ளு­மன்­றத்­திற்கு அறிக்கை சமர்ப்­பிக்க நிய­மிக்­கப்­பட்ட பாரா­ளு­மன்ற விசேட தெரி­வுக்­குழு நேற்று முதல் தட­வை­யாக கூடி­யது.

நேற்­றைய விசா­ர­ணைக்­காக பாது­காப்பு செய­லாளர் சாந்த கோட்­டே­கொட மற்றும் தேசிய புல­னாய்வு பிர­தானி சிசிர மென்டிஸ் ஆகியோர் வர­வ­ழைக்­கப்­பட்­டி­ருந்­தனர்.

அதேபோல் பிரதி சபா­நா­யகர் நேற்று குழு­விற்கு வராத நிலையில் கலா­நிதி ஜயம்­பதி விக்கிர­ம­ரத்ன தலை­மையில் உறுப்­பி­னர்­க­ளான நளிந்த ஜய­திஸ்ஸ, ஆசு மார­சிங்க, சரத் பொன்­சேகா, ரவி கரு­ணா­நா­யக்க, ரவூப் ஹகீம் ஆகி­யோரும் தெரி­வுக்­கு­ழுவின் செய­லாளர் டிகிரி ஜய­தி­லக மற்றும் அதி­கா­ரிகள் சிலரும் கலந்­து­கொண்­டனர்.

Maithripala-Srisena-4 தனக்கு தாக்குதல் குறித்து அறிவிக்கப்படவில்லையென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிராகரித்துள்ளார். தனக்கு தாக்குதல் குறித்து அறிவிக்கப்படவில்லையென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிராகரித்துள்ளார். Maithripala Srisena 4 e1559225091266பாது­காப்பு செய­லாளர், புல­னாய்வு பிர­தானி இரு­வ­ரி­டமும் தெரி­வுக்­குழு உறுப்­பி­னர்கள் பல கேள்­வி­களை எழுப்­பினர். கடந்த கால செயற்­பா­டுகள், பாது­காப்புக் குழுக்­கூட்ட கலந்­து­ரை­யா­டல்கள் மற்றும் தேசிய புல­னாய்வுத் துறையின் கடந்த கால செயற்­பா­டுகள் என்ற பல விட­யங்கள் குறித்து உறுப்­பி­னர்கள் கேள்­வி­களை எழுப்­பினர். எனினும் தக­வல்கள் சரி­யாக பரி­மா­றப்­ப­ட­வில்லை. பாது­காப்பு குழுக்­கூட்டம் முறை­யாக கூட்­டப்­ப­டவில்லை.

பாது­காப்புச் செய­லா­ள­ருக்கும் பொலிஸ்மா அதி­ப­ருக்கும் தக­வல்கள் அறி­விக்கப்­பட்டும் அவர்கள் ­தக்க நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்­க­வில்லை எனவும் தேசிய புல­னாய்­வுத்­து­றைக்கும் ஏனைய பாது­காப்பு துறைக்கும் இடையில் முறை­யான தொடர்பு இருக்­க­வில்லை என்ற பல­வீ­னங்­களை பாது­காப்புச் செய­லாளர், புல­னாய்வு பிர­தானி இரு­வரும் விசா­ரணைகுழு முன்­னி­லையில் தெரி­வித்­தனர்.

தெரி­வுக்­கு­ழுவில் இருந்த உறுப்­பி­னர்­க­ளான நலிந்த ஜய­திஸ்ஸ, ஆசு மார­சிங்க மற்றும் சரத் பொன்­சேகா ஆகியோர் இரு­வ­ரி­டமும், பாது­காப்பு குழுக்கூட்­டங்­களில், வாராந்த மீளாய்வுக்குழுக் கூட்­டங்­களில், ஏனைய கூட்­டங்­களில் எல்லாம் நீங்கள் கார­ணி­களை கூறிய போதிலும் பாது­காப்பு பிர­தா­னி­யா­கவும், பாது­காப்பு அமைச்­ச­ரா­கவும் செயற்­படும் ஜனா­தி­பதி என்ன செய்­து­கொண்­டி­ருந்தார். வேடிக்கை பார்த்­தாரா. மிகவும் மோச­மான சம்­பவம் ஒன்று இடம்­பெற இதுவா காரணம். அப்­ப­டி­யென்றால் இந்த கூட்­டங்கள் எதற்­காக நடத்­தப்­ப­டு­கின்­றன என விரக்­தி­யுடன் கேள்வி எழுப்­பினர். எனினும் அதி­கா­ரிகள் இரு­வரும் மௌன­மாக இருந்­தனர்.

நேற்று விசா­ர­ணை­களை பொது­மக்கள் பார்க்க வேண்டும் என்­ப­தற்­காக தேசிய ரூப­வா­ஹினி கூட்­டுத்­தா­பன அலை­வ­ரி­சையில் நேர­டி­யாக ஒலி­ப­ரப்புச் செய்ய பாரா­ளு­மன்றம் அங்­கீ­காரம் வழங்கியிருந்­தது. அதற்­க­மைய ஆரம்பம் தொடக்கம் சிறிது நேரம் இந்த விசா­ர­ணைகள் ஒளி­ப­ரப்­பப்­பட்ட போதிலும் இடை நடுவே நேரடி ஒளி­ப­ரப்பு நிறுத்­தப்­பட்­டது. இது குறித்து தெரி­வுக்­குழு உறுப்­பி­னர்கள் கேள்வி எழுப்­பி­ய­துடன் பாரா­ளு­மன்ற சிறப்­பு­ரிமை தடுக்­கப்­பட்­டுள்­ளது என்­பது சுட்­டிக்­காட்­டினர்.

ஆகவே இது குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டும் எனவும் செயற்குழுவை தலைமை தாங்கிய கலாநிதி ஜயம்பதி விக்ரமரத்னவிடம் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து கவனம் செலுத்தப்படுவதுடன் அடுத்த அமர்வுகளின்போது நேரடி ஒளிபரப்பை வழங்க சகல நடவடிக் கைகளும் முன்னெடுக்கப்பட வேண் டும் என செயலாளர் டிகிரி ஜயதில கவிடம் அவர் குறிப்பிட்டார்

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

August 2019
M T W T F S S
« Jul    
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

Latest Comments

மிகப் பெரும் விஞ்ஞானிகள் , இவர்கள் நாசாவின் பணியாற்ற வேண்டியவர்கள் , ஆறறிவு அல்ல 12 அறிவு உடையவர்கள் , [...]

துப்பாக்கி உனக்கு ஏன் உன் சொந்த சகாக்களை கொல்லவா ? 1988 - 1996 வரை நீ செய்த [...]

50 வருடங்களுக்கு பின் தான் இந்தியாவுக்கு முடிந்திருக்கு. சீன எப்பவோ சாதித்து விட்ட்து. [...]

My vote for Mr. Gotabhaya Rajapaksa, he can only save our country. [...]

இறைவனின் துணையோடு நிலவை பிளந்த நபிக்கு அதே இறைவனின் துணையோடு ஒட்டவைக்க முடியாதா? ?? இந்த உலகத்தையே நாம்தான் படைத்தோம்னு சொல்லும் [...]

இலங்கை பத்திரிகைகள்

English News