ilakkiyainfo

ilakkiyainfo

தனியாக வரும் பெண்ணை பாலியல் பலாத்கார முயற்சி!! (SHOCKING CCTV வீடியோ இணைப்பு)

தனியாக வரும் பெண்ணை பாலியல் பலாத்கார முயற்சி!!  (SHOCKING CCTV  வீடியோ இணைப்பு)
January 04
11:09 2017

 

இந்தியா: பெங்களூர் நகரின் கிழக்கு பகுதியான கம்மனஹள்ளி என்ற குடியிருப்பு பகுதியின் ஐந்தாவது தெருவில் கடந்த 2-ம் தேதி இரவு சுமார் 10.40 மணியளவில்  ஒரு இளம்பெண் ஆட்டோ ரிக்‌ஷாவில் இருந்து இறங்கி, அருகாமையில் உள்ள தனது வீட்டை நோக்கி தன்னந்தனியாக நடந்து வந்து கொண்டிருக்கிறார்.

அவ்வழியாக, இருசக்கர வாகனத்தில் வந்த இரு நண்பர்கள் அவரை கடந்து செல்கின்றனர்.

சற்று தூரம் சென்ற பின்னர், அந்த வாகனம் ஒரு வீட்டின் முன்னர் திரும்பி நிற்கிறது. அதற்குள் நடந்துவந்த பெண் அந்த வாகனத்தை நெருங்கும்போது ஓடிச் செல்லும் ஒரு காமுகன், அந்தப் பெண்ணை பலவந்தமாக கட்டிப்பிடித்து, முத்தம் கொடுத்து பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட முயல்கிறான்.

இதற்கு இணங்காமல் போராடும் பெண்ணின் கன்னத்தில் அறைந்து, வாகனத்தில் அமர்ந்திருக்கும் தனது நண்பனுக்கும் அவரை விருந்தாக்கும் முயற்சியில் இழுத்துச் செல்கிறான்.

இருசக்கர வாகனத்தில் அமர்ந்திருக்கும் மற்றொருவனும் அந்தப் பெண்ணை உடல்ரீதியாக இம்சைப்படுத்துகிறான்.

அவனிடம் இருந்து தப்பியோட முயலும்  அந்த இளம்பெண்ணை முழுபலத்தோடு எட்டி உதைக்கும் முதல் காமுகன், வாகனத்தில் ஏறி தனது நண்பனுடன் தப்பிச் சென்று விடுகிறான்.

சுற்றிலும் வீடுகள் நிறைந்துள்ள அந்த தெருவில் அமைக்கப்பட்டுள்ள ஒரு கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ள இந்தக் காட்சிகள் தற்போது சமூக ஊடகங்களின் வாயிலாக வைரலாக பரவி வருகிறது.

நள்ளிரவிலும் ஒரு பெண் தனியாக வெளியே சென்று பத்திரமாக எப்போது வீடு திரும்புகிறாளோ.., அப்போதுதான் இந்த நாடு முழுமையான சுதந்திரம் பெற்றதாக கூற முடியும் என மகாத்மா காந்தி முன்னர், தெரிவித்திருந்த கருத்தை வைத்து பார்க்கும்போது, நாம் இருட்டில் இருந்து இன்னும்  வெளியே வரவில்லை  என்பதையே  நவநாகரிக நகரம் என்றழைக்கப்படும் பெங்களூரில் நடந்துள்ள இந்த அவலச் சம்பவம் உலகுக்கு உணர்த்தும்.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

July 2017
M T W T F S S
« Jun    
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

Latest Comments

இது தான் நல்ல பம்மாத்து , இவர் நீதி பத்தி என்றால் உடனே தான் நினைத்தவர்களை தத்து [...]

புலி வாலுகளின் சந்தோசம் ஒரே நாளில் தூளாச்சு , இந்த ஐரோப்பிய நீதி மன்றம் கொடுத்த [...]

நீதிபதி தமது முதல் பேட்டியில் தம்மை நோக்கி அந்த நபர் சுட்ட்தாகவும் , தமது பாது [...]

எனக்கு மற்றைய எல்லாத்தையும் விட விஷத்தை தான் பிடித்திருக்கு , ஏனெனில் நானும் ஒரு கொடிய விஷம். [...]

வித்தியாவின் படுகொலையில் முக்கியமான சந்தேக நபரான சுவிஸ் குமார் பற்றி, ஆறாவது சாட்சியாளரான முகமட் இவ்லார் என்பவர் [...]

இலங்கை பத்திரிகைகள்

English News