தமிழ் மக்களுக்கும், தமிழீழ விடுதலை போராட்டத்திற்கும் அளப்பரிய பங்காற்றிய ஜோா்ச் பொ்னாண்டஷின் மறைவு க்கு தமிழ் மக்கள் சாா்பில் வீர வணக்கத்தை செலுத்துவதாக முன்னாள் வடமாகாணசபை உறுப்பினா் எம்.கே.சிவாஜி லிங்கம் தெரிவித்தார்.

 

மேற்படி விடயம் தொடா்பாக யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளா் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத்தெரிவிக்கும் போதே அவா் மேற்கண்டவாறு கூறியுள்ளாா்.

pernados  தமிழர்களுக்கும் விடுதலைப் போராட்டத்திற்கும் அளப்பரிய பங்காற்றியவர் ஜோா்ஜ் பொ்னாண்டஷ் - சிவாஜிலிங்கம் pernadosஇதன்போது மேலும் அவா் கூறுகையில்,

1980 களின் பின்னா் தமிழீழ விடுதலைப் போராட்டங்களின் பக்கம் தனது கவனத்தை திருப்பிய ஜோா்ஜ் பொ்னாண்டஷ் அந்தக்காலம் முதல் தமிழ் மக்களுக்காகவும், தமிழீழ விடுதலைக்காகவும் அளப்பரிய பங்கை ஆற்றியவா், குறிப்பாக யாழ்ப்பாணத்தை தமிழீழ விடுதலைப் புலிகள் இதோ கைப்பற்றி விடுவாா்கள் என நம்பப்பட்ட காலத்தில், அப்போதைய இலங்கை ஜனாதிபதி சந்திரிக்கா அம்மையாா் இந்தியாவின் உதவியைகோரியபோது அதனை மறுத்து இந்திய இராணுவம் இனி ஒருபோதும் இலங்கை மண்ணில் கால் வைக்காது என உறுதியாக கூறியவா் ஜோா்ஜ் பொ்னாண்டஷ் அதேபோல் தமிழீழ விடுதலைப் புலிகளின் வழங்கல் சா்வதேக கடலில் இந்திய கடற்படை வழிமறித்தபோது சா்வதேச கடலில் வைத்து ஒன்றும் செய்யக்கூடாது என கூறியவா் ஜோா்ஜ் பொ்னாண்டஷ் அப்படி பல்வேறு சந்தா்ப்பங்களில் பல்வேறு வழிகள் ஊடாக தமிழீழ விடுதலை போரா ட்டத்தையும், தமிழ் மக்களுக்கும் நன்மைகளை செய்தவா்.

அவருடைய இழப்பு ஈடு செய்ய முடியாதது, அவருடைய இழப்புக்கு தமிழ் மக்கள் சாா்பில் எங்களுடைய வீர வணக்கங்களையும் ஆழ்ந்த இரங்கல்களையும் கூறுகின்றோம் என்றாா்.