ilakkiyainfo

ilakkiyainfo

‘தமிழீழத்தை எதிர்க்கின்றோம், இதில் மற்ற நாடுகள் தலையிடுவதையும் எதிர்க்கிறோம், இலங்கை எதிரி நாடுகிடையாது’: இதுதான் பா.ஜ.க-வின் கொள்கை!!

‘தமிழீழத்தை எதிர்க்கின்றோம், இதில் மற்ற நாடுகள் தலையிடுவதையும் எதிர்க்கிறோம், இலங்கை எதிரி நாடுகிடையாது’: இதுதான் பா.ஜ.க-வின் கொள்கை!!
May 26
15:16 2014

இந்தியா – இலங்கையின் உறவு  என்பது தமிழர்கள் பிரச்சினையால் பகையாகிவிடக் கூடாது. தமிழர்களின் பிரச்சினைகளை கொழும்பு, உண்மையாகவும் சுமுகமாகவும் தீர்க்கும் என நாம் கருதுகின்றோம். இலங்கையில் பிரிவினையை  எதிர்க்கிறோம், இதில்  மற்ற  நாடுகள்  தலையிடுவதையும்  எதிர்க்கிறோம்  என்று  பாரதீய ஜனதா கட்சி தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அதிகாரபூர்வ ஆங்கில இதழான ‘ஆர்கனைசர்’ இன் முன்னாள் ஆசிரியரும். பா.ஜ.க-வின் தேசிய செயற்குழு உறுப்பினராக இருக்கும் மும்பைவாழ் தமிழருமான சேஷாத்ரி சாரி தி இந்து வுக்கு அளித்துள்ள பேட்டியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அந்த பேட்டியில் இலங்கை தொடர்பில் அவர் தெரிவித்துள்ளதாவது;

கே: நடக்கவிருப்பது தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியா? பாரதீய ஜனதா கட்சியின் ஆட்சியா?

பா.ஜ.க. எண்ணுவதுபோல், அது தனியாக ஆட்சி அமைக்கும் வாய்ப்பு இருக்கும்போதும், தே.ஜ.கூ. ஆட்சியாக இருக்க வேண்டுமென்று அது விரும்புவதையே ஆர்.எஸ்.எஸ். வரவேற்கிறது.

இதில், பா.ஜ.க. நல்லாட்சிக்காகப் பத்து அடிகள் எடுத்து வைத்தால், அதனுடன் கூட்டணிக் கட்சிகளும் பத்து அடிகள் எடுக்க வேண்டும். அப்போதுதான் இந்த நாட்டின் பிரச்சினைகளை நாம் தீர்க்க முடியும்.

கே. இது தே.ஜ.கூ. ஆட்சி எனில், மோடி பதவியேற்புக்கு சார்க் நாட்டு ஆட்சித் தலைவர்களை அழைக்க பா.ஜ.க. தனித்து முடிவெடுத்தது ஏன்?

இது பா.ஜ.க-வின் தன்னிச்சையான முடிவு அல்ல. அடுத்து, இனிவரும் நாட்களில் வெளியுறவு விவகாரங்கள் எப்படி இருக்க வேண்டும் எனவும், இந்த நாட்டின் சக்தியை எப்படி உபயோகப்படுத்த முடியும் என்பதற்கும் ஆதாரமாக விடுக்கப்பட்டதுதான் இந்த அழைப்பு.

இந்த விஷயத்தை, தமிழகத்தில் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வரவை எதிர்க்கும் அரசியல் கட்சிகளுக்கு மெல்லமெல்லப் புரியவைப்போம். அவர்கள் புரிந்துகொண்டால் நாட்டுக்கு நல்லது.

கே. மஹிந்த ராஜபக்ஷவைத் தவிர்த்திருக்க முடியாதா?

எப்படி முடியும்? சார்க் நாடுகளை அழைக்கும்போது இலங்கை அல்லது பாகிஸ்தானை மட்டும் வர வேண்டாம் என்று கூற முடியுமா? இந்தியாவுக்கு எதிரி நாடு கிடையாது என்பது எங்கள் கருத்து. அனைவரிடமும் நேசக்கரம் நீட்டவே இந்தியா விரும்புகிறது.

கே. இலங்கைத் தமிழர்கள் பிரச்சினைகளை அணுகுவதில் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க-வுக்கு இடையே உள்ள பெரிய வித்தியாசம் என்ன?

இந்தியா-இலங்கையின் உறவு என்பது தமிழர்கள் பிரச்சினையால் பகையாகிவிடக் கூடாது. தமிழர்களின் பிரச்சினைகளை கொழும்பு, உண்மையாகவும் சுமுகமாகவும் தீர்க்கும் என பா.ஜ.க. கருதுகிறது. மேலும், இதற்காக அந்த அரசு முயற்சிப்பதாகவும் நம்புகிறது.

இதற்கு கொழும்பு மற்றும் புதுடெல்லிக்கு, தமிழர்களுடன் இலங்கை அரசு பேச்சுவார்த்தை நடத்த நாம் கால அவகாசம் தருவது அவசியம். ஆனால், எதிர்பாராதவிதமாக ஐ.நா. சபையில் இலங்கைக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தில், ஐக்கிய முற்போக்கு கூட்டணி  அரசு இலங்கையிலிருந்து வெளிநாட்டில் புலம் பெயர்ந்து வாழும் சில குழுக்களின் வலையில் விழுந்து, தவறாக வழிகாட்டப்பட்டுவிட்டது. இதன் விளைவாக, புதுடெல்லிக்கும் கொழும்புக்கும் இடையே இடைவெளி அதிகரித்துவிட்டது.

கே. அப்படியெனில், ஐ.நா-வில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தில் இந்தியா நடுநிலைமை வகித்திருக்கக் கூடாது என்கிறீர்களா?

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே, அந்தத் தீர்மானத்தில் இந்தியா நடுநிலை என்ற நிலைப்பாட்டை எடுத்திருக்க வேண்டும். அதேசமயத்தில், இலங்கைக்குச் சாதகமாக வாக்களிக்க வேண்டிய அவசியமும் இல்லை. இந்த நடவடிக்கைகள் மூலம், அந்தப் பிரச்சினை   கொழும்பு-புதுடெல்லி-இலங்கைத் தமிழர்கள் ஆகிய தரப்புக்கு  இடையில் மட்டும் இருந்திருக்கும்.

இப்போது, அந்தப் பிரச்சினையில்  மற்ற உலக நாடுகளும் தலையிட வாய்ப்பாகிவிட்டது. இந்தத் தீர்மானத்தால், தமிழர்களின் பிரச்சினை உலகமயமாகிவிட்டது. இனி இதில், அநாவசியமாகப் பிரச்சினைகள் வருமே ஒழிய அவற்றைத் தீர்ப்பது கடினம்.

இதைத்தான், வடமாகாணத்தின் முதலமைச்சரான   விக்னேஸ்வரனும், இந்தப் பிரச்சினை என்பது வட மாகாணத்துக்கும், இலங்கை அரசுக்கும்   உட்பட்ட தாகும் எனவும், இதில், தமிழக அரசியல் கட்சிகள் தலையீடு இருக்கக் கூடாது எனவும் கூறியிருக்கிறார். இப்போது, உலக நாடுகளும்  தலையிடுவதற்குக் காரணமாக ஐ.மு.கூ. அரசு இருந்துவிட்டது. இந்த அணுகுமுறைதான் அவர்களுக்கும் எங்களுக்கும் இடையிலான வித்தியாசம்.

கே. ஐ.நா. தீர்மானத்துக்கு முன்பாகத் தமிழகத்தின் பா.ஜ.க. தலைவர்கள் தம் தலைமையிடம் கேட்டபோது, அதன் தேசியத் தலைவர்கள் வெளிப்படையாக வந்து கருத்து சொல்லாதது ஏன்?

கருத்து கூறினார்கள். அது பரவலாகச் செய்திகளில் வரவில்லை. இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு காஷ்மீர் ஒரு பெரிய உதாரணம், பலஸ்தீனமும் ஒரு நல்ல உதாரணம். இதுபோல், பல பிரச்சினைகள் இந்த உலகத்தில் உலகமயமாக்கப்பட்டு அவை, தீர்க்கப்படாமலேயே உள்ளன.

எனவே, இந்தப் பிரச்சினை இலங்கைத் தமிழர், இலங்கை அரசு மற்றும் இந்திய அரசுகளுக்கு இடையே தீர்க்கப்படுவதுதான் சிறப்பாக இருக்கும். இலங்கைத் தமிழர்கள் பிரச்சினை அவர்களின் முக்கியமான விருப்பங்களின் பேரில் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டுத் தீர்க்கப்பட வேண்டும் என்பதில் இந்தியா மிகவும் நம்பிக்கை வைத்திருக்கிறது. நாம் இலங்கையில் பிரிவினையை எதிர்க்கிறோம், இதில் மற்ற நாடுகள் தலையிடுவதையும் எதிர்க்கிறோம்.

கே. இந்த விளக்கத்தைத் தேர்தலுக்கு முன்பாக அளித்திருக்கலாமே?

எங்கள் விளக்கத்தைப் பொதுமக்கள் கவனத்துக்குக் கொண்டுசெல்வதைத் தமிழகத்தின் அரசியல் சாதுர்யவான்கள் தடுத்துவிட்டனர். இது நம் அரசியல் அமைப்பின் ஒரு குறைபாடு.

கே. சார்க் நாடுகளின் ஆட்சித் தலைவர்களுக்கான அழைப்பு மூலம் பா.ஜ.க. சொல்லும் செய்தி என்ன? இந்தியா ஒரு வல்லரசு என்கிறீர்களா? மோடி அதன் முடிசூடா சக்ரவர்த்தி என்கிறீர்களா?

இது உலகின் எந்த நாடுகளுக்கும் கிடைக்காத ஜனநாயகத் தின் வெற்றி. இதில், அதிக அளவில் வாக்களிப்பு நடைபெற்று ஒரே கட்சிக்கு மாபெரும் வெற்றி கிடைத்துள்ளது. இதை, இந்தியாவின் அண்டை நாடுகளுக்கும் உலகத்துக்கும் எடுத்துக்காட்ட விரும்புகிறோம். இந்த ஜனநாயகத்துக்கு வெற்றி கிடைக்கும் எனவும், அதுதான் நாட்டுக்கான சிறந்த வளர்ச்சி என்பதையும் உலகத்துக்கு உணர்த்த சார்க் நாடுகள் அழைக்கப்பட்டிருக்கின்றன.

மோடிக்கு விசா அளிக்க மறுத்த அமெரிக்கா இப்போது முன்வந்திருப்பது குறித்து உங்கள் கருத்து?

2002 அல்லது அயோத்தி விஷயங்கள் என்பவை நம் உள்நாட்டு விவகாரங்கள் ஆகும். தனிப்பட்ட சிலர் மற்றும் என்.ஜி.ஓ-க்கள் இந்த பிரச்சினைகளை அமெரிக்காவிடம் எடுத்துச்சென்றது தவறு. இதை ஏற்று அமெரிக்காவும் அப்படிச் செய்திருக்கக் கூடாது. அதை அப்போதும் கூறினோம், இப்போதும் கூறுகிறோம். இதை அவர்கள் உணர்ந்து நம்மிடம் நட்புக்கரம் நீட்டினால் அதை ஏற்க நாம் தயாராக இருக்கிறோம். அதேபோல், தேவயானி வழக்கிலும் அமெரிக்கா நடத்திய விசாரணை தவறானது . எனவே, மோடி மற்றும் தேவயானி விஷயங்களில் அமெரிக்கா செய்தது தவறு என்பதை எழுத்துபூர்வமாகப் பதிவுசெய்ய வேண்டும் என்பது எங்கள் கோரிக்கை.

பாகிஸ்தானில் உள்ள தாவூதை இந்தியா பிடிப்பது சாத்தியமா?

கண்டிப்பாக சாத்தியம், தாவூது இந்தியாவால் மட்டு மல்லாமல், பல நாடுகளின் புலனாய்வு அமைப்புகளாலும் தேடப்படும் குற்றவாளி. அவர், சர்வதேசத் தீவிரவாதிகள் பட்டியலில் இருக்கிறார். அவருக்குச் சர்வதேசத் தீவிரவாத நிதியளிப்பில் முக்கியப் பங்கு உள்ளது. தாவூதைப் பிடிக்க உலக நாடுகளின் ஒருமித்த முயற்சி தேவை.

முக்கிய  குறிப்பு: ‘தமிழீழத்தை  எதிர்க்கிறோம், இதில்  மற்ற  நாடுகள்  தலையிடுவதையும்  எதிர்க்கிறோம், இலங்கை எதிரி நாடுகிடையாது’.   இதுதான்  பா.ஜ.க-வின் கொள்கை!.  இது  பா.ஜ.க-வின் கொள்கை  மட்டுமல்ல  இந்தியாவில்  எந்த  அரசு வந்தாலும்   இது தான்  இந்தியாவின்    வௌயுறவு கொள்கையாகும்.

ஆனால்..  எவ்வளவு  தான்  இந்தியா  தமிழர்களுக்கு  எதிராக  செயல்பட்டாலும், கருத்து  கூறினாலும்   கூட்டமைப்பினர்கள்   இந்தியாவிடம்  கையேந்தும்  கொள்கையை    கைவிடப்போவதில்லை.  ஆகவே .. கூட்டமைப்பினர்கள்  இந்தியாவை  நம்பியிருக்கும் வரை  தமிழர்களுக்கு  எதுவுமே  கிடைக்கபோவதில்லை  என்பதை  அறியத்தருகிறோம்.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

March 2019
M T W T F S S
« Feb    
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

விறுவிறுப்பு தொடர்கள்

    பிரபாகரன்,  அன்ரன் பாலசிங்கத்துடன்  மகிழ்ச்சியாக  உரையாடிக்கொண்டிருந்த   இடம் தேடி  பெரும் பதற்றத்தோடு  ஓடி வந்த கடற்புலிகளின் சிறப்புத் தளபதி சூசை …காரணம் என்ன?  (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -20)

பிரபாகரன், அன்ரன் பாலசிங்கத்துடன் மகிழ்ச்சியாக உரையாடிக்கொண்டிருந்த இடம் தேடி பெரும் பதற்றத்தோடு ஓடி வந்த கடற்புலிகளின் சிறப்புத் தளபதி சூசை …காரணம் என்ன? (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -20)

0 comment Read Full Article
    “ராஜிவ் காந்தி  ஸ்ரீபெரும்புதூர் வருவது உறுதி செய்யப்பட்டது: அச்சுறுத்தல்  பட்டியலில்  விடுதலைப் புலிகளின் பெயர் மட்டும் இல்லை!!  (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: –12)

“ராஜிவ் காந்தி ஸ்ரீபெரும்புதூர் வருவது உறுதி செய்யப்பட்டது: அச்சுறுத்தல் பட்டியலில் விடுதலைப் புலிகளின் பெயர் மட்டும் இல்லை!! (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: –12)

0 comment Read Full Article
    ஐந்து லட்ச ரூபாய் தேர்தல் நிதி கொடுத்த  ‘பொதுக்கூட்டத்தில்  ராஜிவுக்கு மாலை போட  வாய்ப்பு’ பெற்ற  புலிகள்!! : (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: –11)

ஐந்து லட்ச ரூபாய் தேர்தல் நிதி கொடுத்த ‘பொதுக்கூட்டத்தில் ராஜிவுக்கு மாலை போட வாய்ப்பு’ பெற்ற புலிகள்!! : (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: –11)

0 comment Read Full Article

Latest Comments

எவ்வளவு வளம் இருந்தாலும் நெஞ்சில் வீரமும் , ஆண்மையும் இருக்க வேண்டும், இலங்கையில் மிக சிறு புலி [...]

நாங்கள் கடவுளுககும் மேலாக நேசிககும் மகிந்த ராஜபக்சேவை பதவி நீக்க 2015 சதி செய்த இந்தியா நல்லா [...]

இனி விண் வெளியிலும் பயங்கரவாதிகளா ??? பொறுக்க முடியவில்லை , பல கொடூர தட் கொலை [...]

புலிகளால் கடத்த பட்டு கொடூர மான சித்திரவதை செய்து கொல்ல [...]

புலி வாழ பிடித்தவர் போல் இவரின் பின்னணி தெரிகின்றது, நல்ல பிள்ளையாக நடப்பர் என [...]

இலங்கை பத்திரிகைகள்

English News